சென்னை சூப்பர் கிங்க்ஸ் ரசிகன்!!

சென்னை அடுத்து பஞ்சாப்பை மொஹலியில் எதிர் கொள்ளப் போகிறது.

மொஹலி வேகப்பந்து வீச்சுக்கு உதவும் களம். அதே சமயம் சென்ற அரையிறுதியில் உமர்குல் சேவக்கிடம் வாங்கிய அடியையும் மறக்க இயலாது.

மூன்று வேகப்பந்து இரண்டு ஸ்பின்னர்கள் என்பது வியூகமாக் இருக்கும் என்பதிலோ அந்த இரு ஸ்பின்னர்கள் அஸ்வின் மற்றும் ஜகாதி என்பதிலோ சந்தேகம் இல்லை.

அல்பி மோர்கல், சௌத்தி போக இன்னொரு வேகப்பந்து வீச்சாளர் யார் என்பது தெரியவில்லை. ரண்தீவிற்கு பதிலாக ஒரு வேகப்பந்து வீச்சாளர் களமிறங்கலாம். அது யார்?

குலசேகரா / தியாகி / யோ மஹேஷ்..

இவர்களில் ஒருவர் களமிறங்குவார் என எதிர்பார்க்கலாம்.

ஸ்காட் ஸ்டைரிஸ் களமிறங்கலாம். டு-பிளாஸிற்கு வாய்ப்பு கிடைக்காது என்றே நம்புகிறேன்.

பஞ்சாப்போட முக்கிய மட்டை வீரர்கள் கில்கிறிஸ்ட், ஷான் மார்ஸ், ரையான் மெக்லாரன், தினேஷ் கார்த்திக், அபிஷேக் நாயர், சன்னிசிங் டேவிட் ஹஸ்ஸி - என்ன ஆனார் இவர்னு புரியலையே.. பங்களாதேஷிலும் இல்லை.


பந்து வீச்சாளர்கள்,

ரையான் மெக் லாரன், பிரவீண் குமார், ரெமிங்டன், ரையான் ஹாரிஸ், சல்லப் ஸ்ரீவத்ஸவா, அபிஷேக் நாயர். டேவிட் ஹஸ்ஸி

பந்து வீச்சு கொஞ்சம் பலவீனமாக இருக்கிறது. பேட்டிங் கூட 160 ரன் எடுக்க வேணும்னா கில்லியும் ஷானும் ஆடணும். இவர்கள் இருவரை வீழ்த்தினாலே வெற்றிதான்.
 
தியாகி அல்லது யோ மஹேஷ் உள்ளே வந்தால் குலசேகராவிற்கு இடமில்லை, அதனால் அங்கே ஒரு வெளிநாட்டு தடுப்பாட்டக்காரர் உள்ளே வரலாம். அவர் டூ பிளாஸுஸாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.
 
தியாகி அல்லது யோ மஹேஷ் உள்ளே வந்தால் குலசேகராவிற்கு இடமில்லை, அதனால் அங்கே ஒரு வெளிநாட்டு தடுப்பாட்டக்காரர் உள்ளே வரலாம். அவர் டூ பிளாஸுஸாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

தடுப்பாட்டக்காரர் என்றால் பத்ரிநாத் நாத்.:D:D:D
துடுப்பாட்டக்காரர் என்றால் டு-பிளாசிஸ்:lachen001::lachen001::lachen001:
 
ஆஹா நேதன் மெக்கலம் வேகப்பந்தும் வீசுவாரா...??? :cool:


விடமாட்டமிலே...!! :D

ஆமாம்.. அவர் பந்து வீசினா பாதி உடைஞ்சிருமாம்...:lachen001::aetsch013:
ஹாஃப் பிரேக்!!!:lachen001::lachen001:
 
Last edited:
மும்பை பற்றி உங்கள் பார்வை என்ன?:)

மும்பை அணி மிகப் பரிச்சயமான அணி. முதல் ஆட்டத்திற்கு முன்பே மும்பையின் வலிமை எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்.

அது சென்னையோடு போரிடும் முன்பு அதைப் பற்றி எழுதுகிறேன்.
 
இலங்கை கிரிக்கெட் வாரியம் இன்று வெளியிட்ட அறிவிப்பு..

மே 14 ஆம் தேதி நடக்க இருக்கும் இங்கிலாந்து ஸ்ரீலங்கா அணிகளுக்கிடையேயான போட்டிகளுக்காக மே 5 ஆம் தேதி இலங்கை வீரர்கள் நாடு திரும்ப இலங்கை கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதனால் இலங்கை வீரர்களை நம்பி உள்ள டெக்கான் சார்ஜர்ஸ், கொச்சின் கொம்பர்கள், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்ஜர்ஸ், சென்னை சூப்பர்கிங்க்ஸ் போன்ற அணிகளுக்கு இதனால் பாதிப்பு உண்டு..

மும்பை, கொச்சி, டெக்கான் அணிகள் மிக அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகும்.
 
இந்திய கிரிக்கெட் வாரியம் இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் பேசி இலங்கை வீரர்களை 10 தேதிக்கு மேல் அனுப்ப பர்மிஷன் வாங்கிவிடும் என்றே நம்புகிறேன். அதனால் பாதிப்பு அதிகம் இருக்காது என்றே நினைக்கிறேன்.
 
Kieron Pollard will miss the five-match series to play for Mumbai Indians in the IPL, while Bravo, who, like Pollard, had opted out of a retainer contract with the West Indies Cricket Board, will skip the two-match Test series that follows the ODIs to join Chennai Super Kings.
///

SO POLLARD WILL PLAY FULLY...
 
அடுத்துவரும் மாட்சிகளிலாவது நல்ல பந்து வீச்சாளர்களை எடுக்கவேண்டும்.
 
நேற்று மழையால் தடுக்கிய போட்டியில், ரன்களாலும் தடுக்கி சென்னை கொச்சி அணியிடம் வீழ்ந்தது...

அஸ்வினுக்கு உறுதுணையாக இருக்க வேண்டிய ரண்டீவ்வை விளையாட அனுமதிக்காது போனது தவறு போல் தெரிகிறதே...
 
ஒரு மாதிரி நல்ல பீல்டிங் செய்து வரியர்ஸை வென்றாயிற்று, இந்த வெற்றி தொடரணும், ஆனால் ரெய்னா தொடர்ந்தும் பேட்டிங்கில் சொதப்புகிறார். ரெய்னாவுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்து மீள ஆட விடலாமோ..??
 
அபினவ் முகுந்தை எப்போ ஆடவிடப்போகிறார்கள். ரெயினாவிற்கு பதில் அவரை 3ஆம் இடத்தில் ஆட இறக்கலாம் என்பது என் கருத்து.

ஓவியன் சொல்வதுபோல் ரெய்னாவிற்கு ஓய்வு கொடுக்கலாம் ஆனால் அவர் ஃபீல்டிங்கில் நன்றாக உதவுகிறாரே, அது போய்விடுமே என்ற பயமும் இருக்கிறது.

ரந்தீவிற்கு பதில் சவுதியை உள்ளே கொண்டு வரலாம்.

டூ ப்ளீஸை எப்போ உள்ளே கொண்டு வருவார்கள் என்று தெரியவில்லையே. தோனிக்கு அவர் மேல் நம்பிக்கையில்லை என்று தெரிகிறது.
 
அரையிறுதிக்கு முன்பாக நான்கு ஆட்டங்கள் மீதமிருக்கிறது. அரையிறுதிக்கு தகுதி பெற கண்டிப்பாக அதில் இரண்டிலாவது சென்னை வெற்றி பெற்றாக வேண்டும். எதிரணியில் உள்ள ஏதாவது ஒரு பேட்ஸ்மேன் ஃபார்ம் ஆகி விட்டாலும் சென்னையின் பாடு படுதிண்டாட்டம்தான்....! அதிலும் முக்கியமாக,

1. 09.05.2011 - ராஜஸ்தான் ராயல்ஸ் - ஷேர்ன் வாட்ஸன்
2. 12.05.2011 - டெல்லி - ஷேவாக்
3. 18.05.2011 - கொச்சி - ப்ரென்டன் மெக்குலம்
4. 22.05.2011 - பெங்களூரு - கிரிஸ் கெய்ல்

இவர்களின் அதிரடியிலிருந்து சென்னை தப்புமா....? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
ஷேவாக் தோள்வலியால் இந்த வருட ஐபிஎல் போட்டியில் இனிமேல் ஆடமாட்டார் என்று செய்தியில் படித்தேன். அதனால் டெல்லியை வெல்வது கொஞ்சம் எளிது. கொச்சியையும் வென்றுவிடலாம். பெங்களூரும் ராஜத்தானும்தான் கொஞ்சம் கஷ்டம். ஆனால் நம்மிடம் பெங்களூர் ஆடும்போது கெய்ல் அடிக்கமாட்டார் என்றே நினைக்கிறேன்.
 
09.05.2011 - இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் விளையாடி 63 ரன்கள் வித்தியாசத்தில் அமோகமாக வெற்றி பெற்று தற்போது இரண்டாம் இடத்துக்கும் முன்னேறி விட்டது சென்னை அணி....! நல்ல ஒரு ஆல்ரவுண்டரான வெஸ்ட் இண்டீஸ் வீரர் ப்ராவோவின் வருகை அணியை மேலும் பலப்படுத்தி விட்டது என்றே சொல்லலாம்.

இன்று விளையாடியது போலவே அடுத்து வரும் போட்டிகளிலும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்களேயானால் இந்த முறையும் சென்னைக்கே கோப்பை என்பதில் எந்தவித ஐயமுமில்லை.....!
 
இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்...என்னுடைய அணி......தோற்கும் நிலையிலிருந்து.......மகத்தான வெற்றியைப் பெற்றது. கர்நாடக அணியினர் தோற்றார்கள். சென்னை சிங்கங்கள் வென்றார்கள்.

ஜெயிக்கவேக்கூடாது என நினைத்த அணி தோற்றதில் மிக்க மகிழ்ச்சி.

வெல்டன் சென்னை.....!!!!
 
Last edited by a moderator:
Back
Top