கணினி வினா(டி) விடை.

நவம்பர் 15,2010

கேள்வி: நான் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டம் வைத்து இயக்குகையில், அதன் ஸ்டார்ட் மெனுவில் ரன் என்று ஒரு பிரிவு இருக்கும். இப்போது விஸ்டாவில் இல்லை. ஏன்? இதனைப் பெற என்ன செய்திட வேண்டும்?

–ஆ. சங்கரலிங்கம், திண்டுக்கல்

பதில்: இந்த கேள்வியை அனுப்பிய சங்கரலிங்கத்திற்கு நன்றி. நிச்சயமாய் இது பலரின் மனதை அரித்துக் கொண்டிருந்த கேள்வி என எங்களுக்குத் தெரியும். உங்களின் நீண்ட கடிதம் பதிலை எழுதியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தினைத் தந்தது. சரி, விஷயத்திற்கு வருவோம்!

விஸ்டா ரன் பிரிவை விட்டுவிடவில்லை. எப்போது இது வேண்டும் என்றாலும் Win + R கீகளைத் தட்டுங்கள். அதெல்லாம் தெரியாது, எனக்கு ஸ்டார்ட் மெனுவில் தான் வேண்டும் என நீங்கள் ஒரு மாதிரியாக எழுதி பயமுறுத்தி உள்ளீர்கள் – ஜஸ்ட் பார் எ ஜோக். இதனையும் கொண்டு வந்துவிடலாம்.

முதலில், ஸ்டார்ட் பட்டையில் ரைட் கிளிக் செய்திடவும். பின் ப்ராப்பர்ட்டீஸ் என்னும் பிரிவில் இடது கிளிக் செய்திடுங்கள். ஒரு கட்டம் பாப் அப் ஆகி திரையில் காட்டப்படும். இதுதான் உங்கள் டாஸ்க் பார் மற்றும் ஸ்டார்ட் மெனு ப்ராப்பர்ட்டீஸ் (Taskbar and Start menu Properties) பாக்ஸ். இதில் நான்கு டேப்கள் இருப்பதனைப் பார்க்கலாம்.

ஸ்டார்ட் மெனு (Start Menu) டேப்பில் இடது கிளிக் செய்திடவும். பின்னர் ஸ்டார்ட் மெனு பட்டன் கிளிக் இடவும். இதில் கஸ்டமைஸ் (Customize) என்பதில் மீண்டும் இடது கிளிக் செய்திடவும். இன்னொரு பெட்டி பாப் அப் ஆகும். இதன் தலையில் கஸ்டமைஸ் ஸ்டார்ட் மெனு (Customize Start Menu) என இருக்கும்.

இந்த டயலாக் பாக்ஸில் பல ஆப்ஷன்கள் தரப்பட்டி ருக்கும். இதில் ஸ்குரோல் செய்து கீழாகச் செல்லவும். அங்கு என்று தரப்பட்டுள்ள இடத்தில் கர்சரை நிறுத்தி, அதன் அருகே உள்ள பாக்ஸில் டிக் அடையாளத் தினை ஏற்படுத்தவும். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறினால், டாஸ்க் பார் அண்ட் ஸ்டார்ட் மெனு ப்ராப்பர்ட்டீஸ் பாக்ஸ் இன்னும் இருப்பதனைப் பார்க்கலாம்.

இதில் அப்ளை (Apply) என்னும் பட்டனில் கிளிக் செய்திடவும். பின்னர் இங்கே ஓகேயில் இடது கிளிக் செய்து வெளியேறவும். இனி ரன் கட்டளை, உங்கள் ஸ்டார்ட் மெனுவில் உங்கள் முன்னால், உங்களால் பயன்படுத்தப் பட தயாராக இருக்கும். சரியா சங்கரலிங்கம். இந்த தகவல்களைத் தரும் வகையில் நீண்ட கடிதம் எழுதியதற்கு மீண்டும் நன்றி.

கேள்வி: நான் இரண்டு புரோகிராம்களை அடிக்கடி பயன்படுத்தி வருகிறேன். இவற்றிற்கான கீ போர்ட் ஷார்ட்கட் கீகளை நானே அமைக்க முடியுமா?

–தெ. மாறன், பழநி.

பதில்: நீங்கள் பயன்படுத்தும் எந்த ஒரு அப்ளிகேஷன் புரோகிராமிற்கும் ஷார்ட்கட் கீகளை அமைக்கலாம். உங்களுக்கான எடுத்துக்காட்டாக WinRAR புரோகி ராமினை இங்கு பார்ப்போம். இதற்கான ஷார்ட்கட் கீ அமைக்க, முதலில் ஸ்டார்ட் பட்டன் சென்று, அதன் மீது இடது கிளிக் செய்திடவும்.

அடுத்து ஆல் புரோகிராம்ஸ் (All Programs) கிளிக் செய்திடவும். இப்போது ஸ்டார்ட் மெனு திறக்கப்படும். இங்கு WinRAR சென்று அதன் மீது ரைட் கிளிக் செய்திடலாம். இங்கு திறக்கப்படும் பாப் அப் பெட்டியில் ப்ராப்பர்ட்டீஸ் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். இங்கும் ஒரு பாக்ஸ் பாப் அப் ஆகும்.

இதில் பாதியில் ஒரு வரி இருக்கும். அதில் Shortcut key எனத் தரப்பட்டு, அருகே None என இருக்கும். இதன் வலது பக்கம், ஒரு நெட்டுக் கோடு மின்னிடும். உங்கள் ஷார்ட்கட் கீக்கு ஒரு சொல் அல்லது ஒரு எழுத்தைக் கொடுக்கவும்.

இங்கு WinRAR புரோகிராமிற்கு W எனத் தரலாமா! இதை அமைத்தவுடன் கம்ப்யூட்டர் தானாக Ctrl + Alt என்ற கீகளை அமைக்கும். அடுத்து மின்னிக் கொண்டிருந்த கோடு, நீங்கள் டைப் செய்த சொல்லின் வலது பக்கம் இருக்கும்.

இதன் பின்னர் Apply என்பதில் இடது கிளிக் செய்து, அதன் பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். அடுத்து நீங்கள் WinRAR புரோகிராம் தேவைப்படும்போதெல்லாம், Ctrl + Alt+W அழுத்தினால் போதும்.

கேள்வி: நான் சென்ற வாரம் ஒரு எக்ஸ்டர்னல் ஹார்ட் டிஸ்க் வாங்கியுள்ளேன். இதனைப் பயன்படுத்தி, என் கம்ப்யூட்டரின் சி ட்ரைவில் உள்ளதை அப்படியே காப்பி எடுக்க விரும்புகிறேன். இதற்கான வழிகளைச் சொல்லவும்.

–என்.கண்மணி ராஜன், திருப்பூர்

பதில்: நீங்கள் கேட்பது ஒரு டிஸ்க்கின் இமேஜ் அல்லது மிர்ரர் தயார் செய்வது ஆகும். பொதுவாக விண்டோஸ் இயக்கத்தில் ஏதேனும் ஒரு சிக்கல் ஏற்பட்டு, ட்ரைவ் எதனையும் அணுக முடியாத நிலையில் பயன்படுத்த இது போல டிஸ்க்கின் மொத்த பைல்களையும் அப்படியே காப்பி எடுப்பது உண்டு.

நீங்கள் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துவதாக எழுதி உள்ளீர்கள். அதில் ஹோம் எடிஷனா அல்லது புரபஷனல் எடிஷனா என்று குறிப்பிடவில்லை. ஏனென்றால், ஹோம் எடிஷனில் பேக் அப் சாப்ட்வேர் எதுவும் தரப்படவில்லை.

எனவே ஹோஸ்ட் (Ghost) போன்ற பேக் அப் சாப்ட்வேர் புரோகிராமினைப் பயன்படுத்த வேண்டும். புரபஷனல் எனில், கீழ்க்காணும் வழிகளைப் பின்பற்றவும்.
முதலில் Start>All Programs>System Tools எனச் செல்லவும். இங்கிருந்து உங்கள் பேக் அப் எங்கு ஸ்டோர் ஆக வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

அடுத்து Backup and Restore திறக்கப்படும். இங்கு பேக் அப் திரை காட்டப்படும். இதில் Back up Computer என்பதில் கிளிக் செய்திடவும். பாதுகாப்பிற்கென கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் சொல்லிவிட்டு, உங்கள் தகவல்களை எங்கு ஸ்டோர் செய்திட வேண்டும் என்பதனைத் தரவும்.

அடுத்து தரப்படும் கேள்விகளுக்கான பதில்களைத் தந்த பின், டிஸ்க் முழுமையாக, நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் ஸ்டோர் ஆகும். இடத்தினை எக்ஸ்டர்னல் ஹார்ட் டிரைவாகக் கொள்ளலாம். அல்லது கம்ப்யூட்டரின் இன்னொரு ட்ரைவில் ஸ்டோர் செய்து பின் மாற்றிக் கொள்ளலாம்.

விஸ்டா சிஸ்டத்தில் குறிப்பிட்ட கால அவகாசத்தில் பைல்கள் பேக் அப் ஆகும்படி செட் செய்திடலாம். ஆனால் சிஸ்டம் பைல்கள் ஆகாது. விண்டோஸ் 7 எந்த பைல்களையும் பேக் அப் செய்திடும் வசதியைக் கொண்டுள்ளது.

கேள்வி: யு ட்யூப் விடீயோ பைல்களை டவுண்லோட் செய்திடும் வசதி கொண்ட பல புரோகிராம்கள் குறித்து எழுதியுள்ளீர்கள். டவுண்லோட் செய்திடுகையில், நமக்கு ஏற்ற பார்மட்டில் பதியும் வசதிக்கு என்ன செய்வது?

– ஆ.ஸ்நேகா ஸ்டாலின், சென்னை.

பதில்: அண்மையில் நான் பார்த்த இணைய தளம் ஒன்றில் இந்த வசதி தரப்பட்டுள்ளது. www.downloadtube.org என்ற முகவரி யில் உள்ளது இந்த தளம்.

சிறந்த வசதிகளைத் தருவதாக இது உள்ளது. சில தளங்களில் தேவையற்ற பிரிவுகள் தரப்பட்டு, டவுண்லோட் செய்திடும் ஆசையே விட்டுப் போகும் அளவிற்கு இருக்கும். இதில் நாம் விரும்பும் வசதிகள் மட்டும் தரப்பட்டுள்ளன. செயல்முறை மிக எளிது.

நீங்கள் டவுண்லோட் செய்திட விரும்பும், இணைய பக்கத்தின் முகவரியினை காப்பி செய்து, இந்த தளத்தில் இட வேண்டும்.

அடுத்த வசதி தான் கேக் மீது இடப்படும் சாக்லேட் கோலம் போல. இங்கு நீங்கள் விரும்பும் பார்மட்டில் அதனை டவுண்லோட் செய்திடலாம். வழக்கமாக யு–ட்யூப் தளத்தில் வீடியோ பைல்கள் எப்.எல்.வி.(‘FLV’ பார்மட்டில் அமைக்கப் பட்டிருக்கும்.

இவற்றை டவுண்லோட் செய்தவுடன், எப்.எல்.வி. பிளேயர் ஒன்றில் தான் இயக்க முடியும். ஆனால் இந்த தளத்தில் எம்பி4, உங்கள் போன், ஐ பாட் போன்றவற்றில் இயங்கும் வண்ணம் டவுண்லோட் செய்திடுகை யிலேயே மாற்றிப் பதிந்து கொள்ளலாம். முகவரி அமைத்து, தேவையான பார்மட் அமைத்தவுடன் Convert and Download என்பதில் கிளிக் செய்திடவும்.

அடுத்து ஈணிதீணடூணிச்ஞீ என்ற பட்டனில் கிளிக் செய்தவுடன், நீங்கள் விரும்பிய வீடியோ கிளிப்பிங் நிமிடங்களில் உங்கள் கம்ப்யூட்டரில் இருக்கும்.

கேள்வி: இணையப் பக்கம் அல்லது இமெயில் லிங்க் ஒன்றில் கிளிக் செய்திடுகையில், அந்த தளம் சில வேளைகளில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரிலும் சில வேளைகளில் பயர்பாக்ஸிலும் திறக்கப்படுகிறது. பயர்பாக்ஸ் பிரவுசரில் எப்போதும் திறக்கப்படும்படி எப்படி அமைப்பது?

–கா. ஞானப்பிரகாசம், காரைக்கால்

பதில்: இது மிக எளிது. எந்த பிரவுசரில் அது திறக்கப்பட வேண்டும் என்பதனை, நீங்கள் உங்கள் கம்ப்யூட்டருக்குச் சொல்ல வேண்டும். அது எப்படி என்று இங்கு பார்ப்போம். பயர்பாக்ஸ் பிரவுசரை மாறா நிலையில் உள்ள பிரவுசராக மாற்ற:பயர்பாக்ஸ் திறந்து டூல்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ் கிளிக் செய்திடவும்.

கிடைக்கும் பாப் அப் மெனுவில் அட்வான்ஸ்டு டேப் திறக்கவும். அடுத்து செக் நியூ பட்டன் கிளிக் செய்து பயர்பாக்ஸ் உங்கள் மாறா நிலை பிரவுசராக ஏற்கனவே அமைக்கப் பட்டுள்ளதா எனப் பார்க்கவும். அமைக்கப்படவில்லை எனில், பயர்பாக்ஸ் பிரவுசரை அமைக்க உங்களுக்கு ஆப்ஷன் தரப்படும்.

இன்னொரு வழியும் உள்ளது. Control Panel செல்லவும். அங்கு Add/Remove Programs என்பதில் கிளிக் செய்திடவும். இந்த விண்டோவின் இடது பக்கத்தில் Set Program Access and Defaults என்று இருக்கும்.

இங்கு Custom என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்க வும். இங்கு வலது பக்கம் உள்ள இரண்டு அம்புக் குறி அடையாளத்தில் கிளிக் செய்திடவும். Choose a default Web browser என்ற தலைப்பின் கீழ் Mozilla Firefox என்பதில் கிளிக் செய்திடவும்.

பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி பயர்பாக்ஸ் உங்கள் மாறா நிலையில் உள்ள( Default) பிரவுசராக இருக்கும். எந்த இணைய லிங்க்குகளில் கிளிக் செய்தாலும், அது பயர்பாக்ஸ் பிரவுசரில் திறக்கப்படும்.

நன்றி.தினமலர்
 
E_1290444489.jpeg


நவம்பர் 22,2010

கேள்வி: நான் டெக்னிக்கல் டாகுமெண்ட்ஸ் அதிகம் எழுதுபவன். வழக்கமாக, வாக்கியங்களின் முதல் எழுத்துத் தானாக, கேப்பிடல் எழுத்தில் அமைவதை நிறுத்திவிடுவேன். வேர்ட் 2010 தொகுப்பில் இதனை எப்படி மேற்கொள்வது என்று விளக்கவும்.

–பழ. செல்லப்பன், காரைக்குடி

பதில்: முன்பு நீங்கள் எப்படி மற்ற வேர்ட் தொகுப்புகளில் இந்த தடையை உருவாக்கினீர்களோ, அதே போல இப்போதும் அமைக்கலாம்.

1. ரிப்பனில் “File” என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.

2. மைக்ரோசாப்ட் ஆபீஸ் பேக் ஸ்டேஜ் வியூ தோன்றும். இதில் “Options” என்னும் பட்டனில் கிளிக் செய்திடவும். (அல்லது மேலே குறிப்பிட்ட 1 மற்றும் 2ல் உள்ள செயல்பாட்டிற்குப் பதிலாக Alt + T அழுத்திப் பின் எழுத்து கீ O அழுத்தவும்.

3. இனி, “Word Options” என்ற டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இடது புறம் உள்ள “Proofing” என்பதில் கிளிக் செய்திடவும்.

4. வலதுபுறம் உள்ள பிரிவில் “AutoCorrect options” என்பதன் கீழாக உள்ள “AutoCorrect options” பட்டனில் கிளிக் செய்திடவும்.

5. நிறைய டேப்கள் கொண்ட “AutoCorrect” டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.

6. “AutoCorrect” என்ற டேப்பில் கிளிக் செய்திடவும்.

7. இதில் “Capitalize first letter of sentences” என்ற வரியின் முன் உள்ள செக் பாக்ஸில் ஏற்கனவே உள்ள டிக் அடையாளத்தின் மீது கிளிக் செய்து, அதனை நீக்கவும். பின்னர் கிடைக்கும் அனைத்து ஓகே பட்டன்களிலும் கிளிக் செய்து வெளியேறவும். இனி, மீண்டும் வேர்ட் 2010 திறந்து இயக்குகையில்,

உங்கள் டெக்னிக்கல் டாகுமெண்ட் மட்டுமின்றி, வேறு எந்த டாகுமெண்ட்டிலும், வேர்ட் தானாக, வாக்கியத்தின் முதல் எழுத்தினைக் கேப்பிடல் எழுத்தாக மாற்றி அமைக்காது.

கேள்வி: என் கம்ப்யூட்டரை நான் இல்லாதபோது வேறு யாரேனும் பயன்படுத்தி இருக்கிறார்களா என்பதை எப்படி அறிவது?

– என். லஷ்மி பிரபா, மதுரை

பதில்: நல்ல கேள்வி. பலரின் மனதில் அரித்துக் கொண்டிருக்கும் சந்தேகம் நீக்கும் கேள்வி. அலுவலகங்களில், வீடுகளில் நம் பயன்பாட்டிற்கென உள்ள கம்ப்யூட்டர்களை, நாம் அங்கு இல்லாத போது, மற்றவர் பயன்படுத்தும் நிகழ்வுகள் நிச்சயம் ஏற்படலாம். இதனை எப்படி அறிவது?

இதற்கு விண்டோஸ் இயக்கத்தில் வழி தரப்பட்டுள்ளது. இதனை நமக்குக் காட்டும் வசதியின் பெயர் Event Viewer ஆகும். எக்ஸ்பி முதல் இன்றைய விண்டோஸ் 7 வரை இது தரப்பட்டுள்ளது. எக்ஸ்பியில் ஸ்டார்ட், ரன் அழுத்தி, eventvwr.msc என டைப் செய்திடவும்.

விஸ்டாவிலும், விண்டோஸ் 7லும், சர்ச் பாக்ஸில் டைப் செய்திடவும். உடன், எப்போது எந்த நேரத்தில் கம்ப்யூட்டர் பயன்படுத்தப்பட்டது என்ற தகவல்கள் காட்டப்படும். இதில் முதலில் தரப்படும் விஷயங்கள் நமக்குப் புரியாது. இறுதியாகப் பயன்படுத்தியவர் பெயர், கம்ப்யூட்டர் பெயர் காட்டப்படும். அதனைக் கொண்டு அறிந்து கொள்ளலாம்.

விண்டோஸ் எக்ஸ்பி, கம்ப்யூட்டரில் நடக்கும் நிகழ்வுகளை, Application, Security,, மற்றும் System என மூன்று லாக் பைல்களில் அமைத்து வைத்துக் கொள்கிறது.

விஸ்டாவில் இவை அனைத்தும் Windows Logs என்ற பிரிவில் வைக்கப்படுகின்றன. விண்டோஸ் 7 சிஸ்டம் Setupமற்றும் Forwarded Events எனவும் இவற்றைக் கொள்கிறது. உங்களுடைய நோக்கத்திற்கு System log என்பதுதான் தேவை. இடது புறம் உள்ள System என்பதில் கிளிக் செய்தால்,

கம்ப்யூட்டரில் ஏற்பட்ட நிகழ்வுகளின் பட்டியல் கிடைக்கும். இங்கு நீங்கள் கம்ப்யூட்டரை விட்டு நகன்ற தேதி, நேரம் அடிப்படையில் உள்ள நிகழ்வுகளைக் கண்டு, யார் பயன்படுத்தி இருப்பார்கள் எனப் பார்க்கலாம். அத்துடன் யார் அதிக நேரம் பயன்படுத்தினார்கள் என்றும் கவனிக்கலாம்.

கேள்வி: என் கம்ப்யூட்டரில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரைப் பயன்படுத்தி வருகிறேன். வெப்சைட்டுக்கான பெயர் டைப் செய்கையில், ஒவ்வொரு எழுத்திற்கும், ஒரு குரூப் வெப்சைட் பெயர் கிடைக்கும். இப்போது முழுவதும் டைப் செய்த பின்னரே, தளம் கிடைக்கிறது. இதற்கென்ன காரணம்? மீண்டும் எப்படி பழைய முறையில் இணைய தளப் பெயர்களைப் பெறலாம்?

–டி. காமராஜ் கார்த்தி, சிவகாசி

பதில்: உங்கள் பிரவுசரில் ஆட்டோ கம்ப்ளீட் (Auto Complete) என்ற வசதி எப்படியோ நிறுத்தப் பட்டுள்ளது என்று நினைக்கிறேன். இந்த வசதிதான், நீங்கள் அட்ரஸ் பாரில், இணைய தள முகவரியினை டைப் செய்கையில், எழுத்துக்களை வாங்கிக் கொண்டு தன் நினைவகத்தில் உள்ள, நீங்கள் ஏற்கனவே பார்த்த இணைய தள முகவரிகளுடன் ஒப்பிட்டு, இணையாக உள்ளவற்றைப் பட்டியலிடுகிறது. இந்த வசதியினை மீண்டும் எப்படி ஏற்படுத்துவது என்று பார்ப்போம்.

மேலாக, பிரவுசரின் வலது மூலையில் உள்ள Tools என்பதில் கிளிக் செய்திடவும். பின் அங்கிருந்து, Internet Options என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் விண்டோவில் உள்ள டேப்களில், Content என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும்.

இங்கு Auto Complete என்னும் பிரேம் கிடைக்கும். இதில் Settings என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு Use Auto complete for என்று தலைப்பிட்டு, கீழாக இணைய முகவரி, படிவம், யூசர் பெயர் ஆகிய பிரிவுகள் இருக்கும்.

எந்த வகைகளில் உங்களுக்கு ஆட்டோ கம்ப்ளீட் வசதி வேண்டுமோ, அவற்றைத் தேர்ந்தெடுத்து அமைத்து வெளியேறவும். மீண்டும் இன்டர்நெட் எக்ஸ்புளோரரைத் திறந்து இயக்கினால், நீங்கள் இணைய தள முகவரிகளை அமைக்கையில், முன்பு அமைத்த தள முகவரிகள் பட்டியலாகக் காட்டப்படும். அதிலிருந்து உங்களுக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

கேள்வி: பயர்பாக்ஸ் பிரவுசரைத் திறக்கும்போது, ஹோம் பேஜ் வெப்சைட்டுக்குப் பதிலாக, நான் இறுதியாகப் பார்த்த வெப்சைட் திறக்கப்பட வேண்டும். இதற்கு என்ன செட்டிங்ஸ் மேற்கொள்ள வேண்டும்.

–சி. சம்பந்த மூர்த்தி, திண்டுக்கல்

பதில்: உங்கள் கேள்வியைப் படித்தவுடன் ஆஹா! இது ஒரு அருமையான ஏற்பாடே என்று வியக்கத் தோன்றியது. உங்கள் கேள்விக்கு நன்றி. பயர்பாக்ஸ் பிரவுசர்

திறக்கும்போது, மூன்று விஷயங்களைக் காட்டுவதற்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. உங்களுடைய ஹோம் பேஜ், காலியாக இருக்கும் தளம் அல்லது இறுதியாக மூடுகையில் இருந்த தளம் கொண்ட ஒரு டேப் (அல்லது டேப்கள்). இது எப்படி என்று பார்ப்போம்.


உங்கள் பிரவுசரின் மேல் பகுதிக்குச் செல்லுங்கள். திரையின் குறுக்கே செல்லும் பட்டையில் பைல், எடிட் எனப் பல மெனுக்களுக்கான தலைப்புகள் உள்ளனவா!

இதில் Tools என்பதில் கிளிக் செய்திடவும். கீழ் விரி பட்டியலில் Options என்பதில் கிளிக் செய்க. இங்கு ஒரு பாக்ஸ் பாப் அப் ஆகும். இதில் குறுக்காக, ஏழு டேப்கள் கிடைக்கும். முதலில் உள்ள General என்ற டேப்பில் கிளிக்கிடவும்.

கீழாக When Firefox starts என்று இருக்கும் இடம் வரை செல்லவும். மேலும் கீழுமாக உள்ள அம்புக் குறிகளில் ஒன்றில் கிளிக் செய்திடவும். இதில் மூன்று ஆப்ஷன்ஸ் கிடைக்கும். இவற்றில் Show my windows and tabs from last time என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அதன்பின் ஓகே கிளிக் செய்திடவும். அவ்வளவுதாங்க!

அடுத்த முறை நீங்கள் பயர்பாக்ஸ் பிரவுசர் திறக்கையில், மூடும்போது இருந்த தளம் அல்லது தளங்களுடன் பயர்பாக்ஸ் உங்களை வரவேற்கும். மறந்துறாதீங்க! உங்க கம்ப்யூட்டர் இணைய இணைப்பில் இருக்க வேண்டும். இதைச் சொல்ல வாய்ப்பளித்தற்கு நன்றி.

கேள்வி: சீனாவில் மொபைல் போன்களில் ஒரு வைரஸ் பரவி, இன்னும் கண்டறியப்படாமல் உள்ளது எனக் கேள்விப் பட்டேன். இது இந்தியாவிற்கும் வருமா?

–இராச. இளங்கோவன், கோவை

பதில்: ஏறத்தாழ பத்து லட்சம் மொபைல் போன்களுக்கு மேல் ஒருவித வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதாக, ஷாங்காய் டெய்லி என்னும் சீன நாளிதழ் செய்தி வெளி யிட்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், இதே போன்ற ஒரு மால்வேர் வைரஸ் ரஷ்யாவில் மொபைல் போன்களைத் தாக்கியது.

ஏறத்தாழ அதே போன்ற தாக்குதலை, இந்த வைரஸ் சீனாவில் ஏற்படுத்தியுள்ளது. போனில் போலியான ஒரு ஆண்ட்டி வைரஸ் புரோகிராமிற்கான லிங்க் தரப்படுகிறது. இதில் கிளிக் செய்தவுடன், வைரஸ் போனில் செயல்பட்டு, சிம் குறித்த தனிநபர் தகவல்களை, ஹேக்கர்களின் சர்வருக்கு அனுப்புகிறது.

இந்த தகவல்கள் கிடைத்தவுடன், அதில் உள்ள அட்ரஸ் புக்கில் உள்ள முகவரிகளுக்கு, பணம் பறிக்கும் வகையிலான எஸ்.எம்.எஸ். செய்திகள் அனுப்பப்படுகின்றன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 2 கோடி யுவான் சீனப் பணம் ஹேக்கர்களின் வெப்சைட்டுக்குச் செல்கிறது எனக் கண்டறியப்பட்டுள்ளது.

சீன அரசு இந்த வைரஸ் எங்கிருந்து வருகிறது என்பதை அறிய படாத பாடு பட்டுக் கொண்டி ருக்கிறது. ஆனால் அனைத்து முயற்சி களையும் இந்த வைரஸ் ஏமாற்றிக் கொண்டு பணம் சம்பாதித்துக் கொண்டுள்ளது. அடுத்த படியாக அதிகம் மொபைல் பயன்படுத்தும் நம் நாட்டிற்கும் இது வரலாம் என அஞ்சப்படுகிறது.

நன்றி.தினமலர்
 
E_1290937843.jpeg


நவம்பர் 29,2010

கேள்வி: நீங்கள் எழுதும்போதும், மொபைல் போன் விளம்பரங்களிலும் 3ஜி என்று சொல்கின்றனர். நீங்கள் எழுதிய கட்டுரையிலும் பல தகவல்கள் இருந்தன. இந்த 3ஜி என்பதன் விளக்கம் என்ன? 4ஜி உள்ளதா? அன்பு கூர்ந்து தெளிவாக விளக்கவும்.

-நீ. ஷண்முகப் பிரியா, மதுரை

பதில்: நல்ல கேள்வி தான். தொலை தொடர்பு பிரிவில், போன்கள் வடிவமைக்கப்பட்டதில், அவற்றின் செயல்பாட்டின் அடிப்படையில், முதல் (Generation) தலைமுறை, இரண்டாம் தலைமுறை என அழைக்கப்பட்டன. இப்போது நான்காம் தலைமுறை போன்கள் வந்துவிட்டன.

இந்தியாவிற்கு மூன்றாம் தலைமுறை போன்கள் வரத் தொடங்கி விட்டன.முதல் தலைமுறை போன்கள் 1980ல் வந்தன. இவை ஏ.எம். மற்றும் எப்.எம். ரேடியோ அலைவரிசைகளைப் பயன்படுத்தின.

டிஜிட்டல் வழி தொடர்புகள் இவை மூலம் ஏற்படவில்லை. 1991ல் இரண்டாம் தலைமுறை போன்கள், முதலில் பின்லாந்தில் வந்தன. இவை டிஜிட்டல் தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தின. டெக்ஸ்ட் மெசேஜ் மற்றும் இணைய இணைப்பு இருந்தாலும், வேகம் மிக மெதுவாகவே இருந்தது. ஜப்பானில் முதன் முதலாக,

2001ஆம் ஆண்டில் 3ஜி போன் வெளிவந்தது. நெட்வொர்க் செயல்பாட்டின் வேகம் அதிகமானது. இன்டர்நெட் இணைப்பில் இருக்கையிலேயே, போன் வழி பேசவும்

முடிந்தது. 4ஜி போன்கள் அண்மைக் காலத்தில் வெளியாகி, மிக அதிகமான வேகத்தில் இயங்கி வருகின்றன. பிராட்பேண்ட் இணைப்பைக் காட்டிலும் அதிகமான வேகத்தில், இன்டர்நெட் இணைப்பைத் தந்து வருகின்றன.

கேள்வி: என் நண்பர் இடது கைப் பழக்கம் உள்ளவர். அவருக்கு மவுஸை இடம் மாற்றிக் கொடுத்திருக்கிறோம். அதே போல பட்டன் இயங்கும் நிலையையும் மாற்றிக் கொடுக்க முடியுமா? அல்லது இடது கைப் பழக்கம் உள்ளவர்களுக்கென தனி மவுஸ் விற்பனை செய்கிறார்களா?

-நி. முத்துஸ்வாமி, ராஜபாளையம்

பதில்:மவுஸின் பட்டன்கள் இயக்கத்தினை மாற்றி அமைத்து செட் செய்திடலாம். இதற்கென தனியான மவுஸ் இல்லை. விண்டோஸ் இயக்கத்தில், இடது மவுஸ் பட்டன் தேர்ந்தெடுப்பதற்கும், இருமுறை கிளிக் செய்தால் புரோகிராமினை இயக்குவதற்கும் பயன்படுகிறது.

இது இடது கைப் பழக்கம் உள்ளவர் களுக்குச் சற்று ஏமாற்றமாகவும், எரிச்சலாகவும் இருக்கும். இவர்கள் விரும்பும் வகையில், பட்டன்களின் இயக்கத்தினை மாற்றி அமைக்கலாம். அதாவது, இடது மவுஸ் பட்டன் இயக்கத்தினை வலது மவுஸ் பட்டனுக்கும், வலதை இடதிற்கும் மாற்றி அமைக்கலாம்.

1. முதலில் கண்ட்ரோல் பேனலில், மவுஸ் ஐகான் கிளிக் செய்து திறந்து கொள்ளுங்கள். பல டேப்கள் கொண்ட விண்டோ கிடைக்கும். “Mouse Properties” என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும். இதில் “Buttons” என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும்.

“Switch primary and secondary buttons” என்று இருப்பதில் செக் செய்திடவும். பின்னர், ஓகே கிளிக் செய்து விண்டோக்களை மூடவும். இனி, உங்கள் நண்பருக்கேற்ற வகையில் மவுஸ் இயங்கும்.

கேள்வி: விண்டோஸ் சிஸ்டம் வரத் தொடங்கி 25 ஆண்டுகள் ஆகிவிட்டன என்று படித்தேன். இந்த சிஸ்டம் வரத் தொடங்கிய நாள்முதல், தன் உருவாக்கத்தில், ஏற்படுத்திய சாதனைகள் என்ன என்று சுருக்கமாக விளக்குங்கள்.

-கா. சிவஞானம், திருத்தணி

பதில்: விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்ட வரலாற்றில், சாதனை படைத்தது சில மட்டுமே. விண்டோஸ் பதிப்பு 1 மற்றும் 2 அவ்வளவாகப் பிரபலமாகவில்லை.

ஆனால் பதிப்பு 3, அனைத்து நாடுகளிலும், மக்களைச் சென்றடைந்து பயன்படுத்தப் பட்டது. விண்டோஸ் மீது மக்களுக்கு ஒரு மோகத்தினை ஏற்படுத்தியது. ஒரே நேரத்தில் பல வேலைகள், விஜிஏ கிராபிக்ஸ், ட்ரூ டைப் பாண்ட்ஸ் என அதிசயப்படத் தக்கவைக்கும் விஷயங்கள் கிடைத்தன.


அடுத்த சாதனை விண்டோஸ் 95. டாஸ் மீது தன் இயக்கத்தினை மேற்கொள்ளாமல், டாஸ் மற்றும் விண்டோஸ் இணைந்ததாக உருவாக்கப்பட்டு இயங்கியது. ஸ்டார்ட் மெனு, டாஸ்க் பார், ப்ளக் அண்ட் பிளே போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டு

கம்ப்யூட்டர் பயன்பாட்டில் புதுவித செயல்பாட்டினைத் தந்தன. அடுத்த தொகுப்பு விண்டோஸ் எக்ஸ்பி. இன்றும் பெரும்பான்மையான மக்களால் பயன்படுத்தப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டம்.

டாஸ் இல்லாமல், தன் இயக்கத்திற்கு டாஸ் துணை இல்லாமல் வெளிவந்த சிஸ்டம். முன் வந்த சிஸ்டங்களுடன் ஒப்பிடுகையில் நிலையானதாகவும், சற்று பாதுகாப்பானதாகவும் இருந்தது.


விண்டாஸ் 7 தொகுப்பு அடுத்த சாதனை. விஸ்டா கொடுத்த அடியிலிருந்து, சரியான பயனுடன் எழ வேண்டும் என்ற வேகத்துடன் உருவாக்கப்பட்டு, தற்போது மெல்ல மெல்ல அனைத்து மக்களும் விரும்பும் தொகுப்பாக உருவாகி வருகிறது.


இந்த வரிசையில் அடுத்த சாதனையாக, மொபைல் போனுக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டமான விண்டோஸ் போன் 7 தொகுப்பினைக் கூறலாம். மைக்ரோசாப்ட், மொபைல் போனுக்கென வடிவமைத்த முந்தைய சிஸ்டங்களின் தோல்வியை முழுவதுமாக மறக்கச் செய்து மக்கள் விரும்பும் சிஸ்டமாக இது உருவாகி வருகிறது.

கேள்வி: நான் விண் ஆர்.ஏ.ஆர். அன்ஸிப் பயன்படுத்துகிறேன். சில வேளைகளில் இதன் மூலம் ஸிப் செய்த பைல்களை அன்ஸிப் செய்வதில் பிரச்னை ஏற்படுகிறது. கூடுதலாக இன்னொரு அன்ஸிப் புரோகிராமினைப் பயன்படுத்தலாமா? எதனை நீங்கள் பரிந்துரை செய்வீர்கள்?

-எஸ். கே. பத்மா ஜெயராஜ், சென்னை.

பதில்: ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினைப் போல, ஒரு கம்ப்யூட்டரில் இரண்டு அன்ஸிப் சாப்ட்வேர் தொகுப்புகள் இருப்பது தவறில்லை. அது நல்லதும் கூட.

ஆர்.ஏ.ஆர். புரோகிராம் நன்றாகச் செயல்படும் புரோகிராம் தான். இதனைப் போலவே பிரபலமான இன்னொரு புரோகிராம், அனைவரும் அறிந்த விண் ஸிப் (Winzip) புரோகிராம் ஆகும். புதிதாக ஒன்றை உங்களுக்குச் சொல்வதென்றால்,

7zip புரோகிராமினைப் பரிந்துரைக்கலாம். இதனை http://www.7zip.org/ என்ற முகவரியில் உள்ள இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம். இது பல பார்மட்டுகளில் ஸிப் செய்யப்பட்ட பைல்களைப் பிரித்துத் தருகிறது. zip, gzip, tar, 7z, rar, iso, msi, cab or dmg போன்ற பார்மட்டுகளில் உள்ளவற்றைப் பிரித்துத் தருகிறது.

இந்த புரோகிராம், விண்டோஸ் எக்ஸ்புளோரருடன் இணைந்து செயல்படுவதால், எளிதாக இதனை இயக்கலாம். அதாவது பைல் ஒன்றைத் தேர்ந்தெடுக்கையில் கிடைக்கும் மெனுவில் இந்த புரோகிராம் பிரிவு ஒன்று இருக்கும். அதில் கிளிக் செய்து ஸிப் மற்றும் அன்ஸிப் செயல்பாட்டினை மேற்கொள்ளலாம்.

மிக அதிகமான எண்ணிக்கையில் ஸிப் பைல்களைப் பிரித்து, பைல்களைப் பெற வேண்டும் எனில், ExtractNow என்னும் புரோகிராமினைப் பயன்படுத்தலாம். இதனை http://www.extractnow.com/ என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாகப் பெறலாம்.

கேள்வி: வேர்ட் பயன்படுத்துகையில், ஏற்கனவே செட் செய்யப்பட்ட மார்ஜின் நமக்குக் கிடைக்கிறது. இதனை மாற்ற வேண்டும் எனில் என்ன செய்திட வேண்டும். நான் விண்டோஸ் எக்ஸ்பியில்,வேர்ட் 2003 பயன்படுத்துகிறேன்.

-கா. சிவப்பிரகாசம், தேனி.

பதில்:வேர்ட் தொகுப்பு, டாகுமெண்ட்டிற்கான மார்ஜின்களை மாற்றுவதற்கு மிக எளிய வழிகளைத் தருகிறது. (இங்கு தரப்படும் குறிப்பு வேர்ட் 97 தொடங்கி, வேர்ட் 2003 வரை உள்ள தொகுப்புகளில் பயன்படுத்தலாம்.)


1. முதலில் டாகுமெண்ட்டினைத் திறந்து கொள்ளுங்கள். பின்னர் File மெனு சென்று Page Setup ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். உடன் வேர்ட், Page Setup டயலாக் பாக்ஸினைக் காட்டும்.

2. இதில் உள்ள Margin டேப்பினைத் தேர்ந்தெடுங்கள்.

3. Top, Bottom, Left, மற்றும் Right என உள்ள மார்ஜின்களை மாற்றவும். மாற்றுகையில் வலது கீழாகக் காட்டப்படும் கட்டத்தில் உங்கள் ஆவணத்தில் என்ன வகையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என சிறிய படம் காட்டப்படும்.

4. பின்னர் Apply To என்ற கீழ்விரி பட்டியலில் Whole Document என்பது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். இல்லை எனில் நீங்கள் குறிப்பிட்ட பாரா அல்லது பிரிவினை மட்டும் தேர்ந்தெடுத்து, மார்ஜினை அதற்கு மட்டும் மாற்றிக் கொள்ளலாம். இதன் மூலம் உங்களுடைய ஆவணத்தில், ஒவ்வொரு பகுதிக்கும், அதன் தனித்துவத்தினைக் காட்ட வெவ்வேறு மார்ஜின் வைத்துக் கொள்ளலாம்.

கேள்வி: வேர்டில் பிரிண்ட் எடுக்கையில், குறிப்பிட்ட பைலின் சம்மரி இன்பர்மேஷனை பிரிண்ட் செய்திட முடியுமா? வழி காட்டவும்.

-வி.எம். ராஜேந்திரன், மதுரை

பதில்: வேர்ட் டாகுமெண்ட் களுக்கான சம்மரி இன்பர்மேஷன் குறித்து அறிந்து வைப்பதில் மிகவும் மகிழ்ச்சி. டாகுமெண்ட் ஒன்றை, வேர்ட் சேவ் செய்திடுகை யில், டாகுமெண்ட் டை சேவ் செய்வது டன், டாகுமெண்ட் குறித்த தகவல்களையும் சேவ் செய்கிறது.

டாகுமெண்ட் பிரிண்ட் செய்யப் படுகையில், இந்த தகவல்கள் அச்சிடப் படுவதில்லை. இதனையும் அச்சிட வேண்டும் எனில், கீழ்க்காணும் கட்டளைகளைத் தர வேண்டும்.

File மெனுவிலிருந்து Print தேர்ந்தெடுக்கவும். இப்போது பிரிண்ட் டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.

இங்கு Print What என்ற கீழ்விரி பெட்டி கிடைக்கும். இதில் Document Properties என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் ஓகே கிளிக் செய்து அச்செடுக்கவும்.

நன்றி.தினமலர்.
 
நண்பர்களே, என்னிடம் சில movie clips உண்டு, அதை delete பண்ணும்போது delete ஆகவில்லை
access is denied என்று வருகிறது, clips மஞ்சள் கலரில் உள்ளது மட்டும் delete ஆகவில்லை,
அதை எப்படி delete பண்ணுவது.
 
Back
Top