திரு அப்துல் கலாம் அவர்களின் அக்னி சிறகுகள் நூலிலிருந்து சில வரிகளை இங்கே நினைவு கூர்கிறேன்.
யாருமே தங்களை அற்பமானவர்கள் என்றோ நிராதவனவர்கள் என்றோ எப்போதும் நினைக்க கூடாது
நாம் அனைவருமே நமக்குள்ளே ஒரு தெய்வீக அக்னியுடன் பிறந்திருக்கிறோம். இந்த அக்னியை கொழுந்து விட வைத்து
அதன் பொன்னொளியை இந்த உலகத்தில் பரப்புவதற்காக முனைவது நமது கடமை
.........வெற்றி பெறவேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் இருப்பது தான் வெற்றிக்கான சிறந்த வழி....
நீண்ட நாள் முழுவதும்
கணத்திற்கு கணம்
நேர்மையாய், துணிவாய்,
உண்மையாய் உழைக்கிறவன்
கரங்களே அழகிய கரங்கள்
பொருள் ஆதாயங்களுக்காகவும், பரிசு, பாராட்டுகளுக்காகவும் பணியாற்றும் கலாச்சாரத்தை வேரறுத்து விடவேண்டும்
உலக வழக்கப்படி எனக்கு எந்த பரம்பரை சொத்தும் இல்லை. நான் எதையும் சம்பாதிக்கவில்லை. எதையும் கட்டி வைக்கவில்லை. என்னிடம் எதுவும் கிடையாது.
குடும்பம் மகன்கள் மகள்கள் யாருமே எனக்கு கிடையாது.
இந்த மாபெரும் நாட்டில்
நான் நன்றாகவே இருக்கிறேன்
இதன் கோடிக்கணக்கான
சிறுவர் சிறுமிகளை பார்க்கிறேன்
எனக்குள்ளிருந்து அவர்கள்
வற்றாத புனிதத்தை முகந்து
இறைவனின் அருளை
எங்கும் பரப்ப வேண்டும்
ஒரு கிணற்றிலிருந்து
நீர் இறைக்கிற மாதிரி