இதோ தமிழ் கைபேசி புத்தகம் செய்யும் முறை.
அன்பு நண்பர்களே !
மீண்டும் ஒரு வெற்றியுடன் உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
தமிழ் கைபேசி புத்தகம் உருவாக்கும் முறையினை இங்கே கொடுத்துள்ளேன். பயன்படுத்தி உங்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளியுங்கள்.
இராமருக்கு பாலம் கட்ட உதவிய சிறு அணில் போல தமிழ் வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருக்கும் தமிழ்மன்றத்திற்கு என் சிறு பஙகளிப்பு.
இதைப்பயன்படுத்தி தமிழ்கைபேசி புத்தகங்கள் நம் தமிழ்மன்றத்தில் வர ஆரம்பித்தால் மிகவும் மகிழ்ச்சியடைவேன்.
இந்த முயற்சியில் என்னை ஊக்குவித்த நண்பர் பாரதிக்கு எனது சிறப்பு வணக்கங்கள் மற்றும் நன்றிகள்.
இங்கே சரியாக பார்க்க/படிக்க முடியாதவர்கள் எனக்கு தனி மடலிட்டால் இந்த முறையின் PDF கோப்பினை அனுப்புகிறேன்.
இதோ தமிழ் புத்தகம் செய்யும் முறை.
=========================================================
அன்பு நண்பர்களே !
ஓரளவு இதில் இப்போது வெற்றி கண்டு உள்ளேன். இதோ தமிழ் கைபேசி புத்தகம் செய்ய நான் பின்பற்றிய முறை :-
தேவையான மென்பொருள்கள் :- (என்னங்க சமையல் குறிப்பு போல இருக்கா? செஞ்சு பாருங்க சமையலைவிட சூப்பரா இருக்கும் தமிழ்ன்னா சும்மாவா? )
1) Readmaniac மென்பொருளை பதிவிறக்கி உங்கள் கணிணியில் நிறுவிக்கொள்ளுங்கள். அதன் சுட்டி இதோ
http://www.deep-shadows.com/hax/ReadManiac/download.htm
2) இந்த மென்பொருள் TSCII எழுத்துரு (font) கொண்டு இயங்கும் என்பதால் அதில் டைப் செய்ய வசதியாக இருக்கும் மற்றொரு மென்பொருளான சுவடி என்ற மென்பொருளையும் பதிவிறக்கிக் கொள்ளுங்கள். அதன் சுட்டி இதோ
http://www.tamilnation.org/fonts/Suvadi.zip
சுவடி மென்பொருளுக்கு பதிலாக மைரோசாப்ட் வேர்ட் கோப்பில் யூனிகோட் முறையில் (NHM ரைட்டர் கொண்டு) டைப் செய்து கீழ்கண்ட சுட்டி மூலம்
http://www.suratha.com/uni2tsc.htm
அதை TSC எழுத்தாகவும் மாற்றிக்கொள்ளலாம். உங்களுக்கு சுலபமான முறையை பின்பற்றிக்கொள்ளுங்கள்.
முதலில் நம் கைபேசியில் தமிழைப்படிக்க எழுத்துரு உருவாக்க வேண்டும். அதை எப்படி செய்வது என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.
கீழ் கண்ட முறையை பின் பற்றுங்கள் :-
Start -> Programs -> Readmaniac -> Font Creation Utility
இதில் ஒரு விண்டோ திறக்கும் அதில் System Fonts என்பதில் Mylai TSC எழுத்துறுவை தேர்ந்தெடுங்கள். எழுத்துருவின் அளவு (font size) 12 என தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். பிறகு Create Button இ அழுத்துங்கள்.
File save as என்று கேட்கும்போது உங்கள் Desktop இல் சேமித்துக்கொள்ளுங்கள். நம் சோதனைக்காக Tamil என்று வைத்துக்கொள்வோம்.
இப்போது தமிழ் கைபேசி எழுத்துறு உருவாக்கியாகிவிட்டது. இனி தமிழ் புத்தகம் எப்படி உருவாக்குவது என்று பார்ப்போம்.
உங்களுக்கு தேவையான விவரங்களை யூனிகோட் முறையில் (நான் NHM writer கொண்டு மைக்ரோசாப்ட் வேர்ல் கொண்டு செய்தேன்) தட்டச்சு செய்துகொள்ளவும். நான் எடுத்துக்கொண்ட சில வரிகள் இதோ :-
தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.
அஸ்தமனம் எல்லாம் நிரந்தரம் அல்ல
மேற்கினில் விதைத்தால் கிழக்கினில் முளைக்கும்.
இந்த வரிகளை மவுஸ் கொண்டு செலெக்ட் select செய்து Copy செய்யவும்
இப்போது
http://www.suratha.com/uni2tsc.htm இணைய தளத்திற்கு சென்று பிரதி (copy) எடுத்த வரிகளை மேலே உள்ள பெட்டியில் பேஸ்ட் (Paste) செய்து உங்கள் மவுஸ்ஸில் ஒரு கிளிக் செய்யவும்.
கீழே உள்ள பெட்டியில் திஸ்கி எழுத்துக்கள் கிடைக்கும். அதை பிரதி (copy) செய்துகொண்டு உங்கள் கணிணியில் டெஸ்க்டாப் (desktop) இல் ஒரு text document உருவாக்கி அதில் பேஸ்ட் செய்துகொள்ளவும். உங்கள் txt கோப்பில் தமிழ் எழுத்துக்கள் சரியாக தெரியவில்லையெனில் கவலையடைய வேண்டாம். அதை அப்படியே விட்டுவிடலாம்.
இந்த text கோப்பினை tamil.txt என பெயரிட்டு Desktop ல் சேமித்துக்கொள்வோம்.
புத்தகம் உருவாக்குவதில் 75 சதவீதம் முடித்துவிட்டோம். இன்னும் சில படிகளே உள்ளன. அதையும் இப்போது செய்து முடித்துவிடுவோம்.
இப்போது
Start -> Program files -> Readmaniac -> Readmaniac Building wizard என்பதை தேர்வு செய்து ஒரு கிளிக் செய்யவும்.
இப்போது Wizard Language Selection என்று ஒரு விண்டோ திறக்கும். அதில் English செலக்ட் செய்து Next அழுத்தவும்
அடுத்த விண்டோவிலும் Next அழுத்தவும்.
அடுத்த விண்டோவில் இரண்டாவது option ஆன Build midlet with embedded book(readmaniac lite) என்பதை தேர்வு செய்துகொள்ளவும். Next அழுத்தவும்.
இதில் Select Phone model என்று ஒரு கேள்வி வரும் உங்கள் போன் மாடலை தேர்வு செய்து கொள்ளவும். Jar size limit என்பதை மாற்றவேண்டாம். பிறகு Next கிளிக் செய்யவும்.
அடுத்து வரும் Select Keys configuration என்பதிலும் உங்கள் போன் மாடலை தேர்வு செய்து Next கிளிக் செய்யவும். அடுத்து Select Interface Language for midlet என்பதிலும் English – Central Europe என்பதை கிளிக் செய்து Next கிளிக் செய்யவும்.
இப்போதுதான் முக்கிய கட்டத்திற்க்கு வந்திருக்கிறோம். அடுத்து embedded fonts என்று ஒரு விண்டோ திறக்கும். அதில் 2 , 4 மற்றும் 5 மட்டும் தெரிவு செய்யத்தக்க வகையில் இருக்கும். அதில் முதலில் 2 ஆம் எண்ணுள்ள மெனுவை தெரிவு செய்து அதில் Custom என்றொரு option யை தெரிவு செய்யவும். இப்போது நாம் முதலிலேயே உருவாக்கிய tamil.fnt கோப்பினை தெரிவு செய்து கொள்ளவேண்டும். இதே முறையினை 4 மற்றும் 5 ஆகிய மெனுக்களிலும் செய்து Next கிளிக் செய்யவும்
இப்போது Select Book to Embed என்றொரு விண்டோ வரும். அதில் +Add என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
அடுத்து வரும் Open என்ற விண்டோவில் நாம் ஏற்கனவே உருவாக்கிவைத்துள்ள tamil.txt என்ற கோப்பினை select செய்யவும்.
பின் Next இனை கிளிக் செய்யவும். பின் வரும் இரண்டு மெனுக்களிலும் Next என்பதை கிளிக் செய்யவும். கடைசியாக Save As என்று கேட்கும்போது உங்கள் புத்தக கோப்பிற்கு ஒரு பெயரினை தெரிவு செய்து Save பட்டனை அழுத்தவும். நம் உதாரணத்திற்கு tamilbook என நான் பெயரிட்டுள்ளேன்.
இப்போது நம் தமிழ் கைபேசி புத்தகங்கள் தயார். நீங்கள் save செய்த இடத்தில் tamilbook.jad மற்றும் tamilbook.jar என இரண்டு கோப்புகள் இருக்கும். அவை இரண்டையும் உங்கள் கைபேசியில் copy செய்து Install செய்துகொள்ளுங்கள். தமிழ் புத்தகத்தை உங்கள் கைபேசியில் படித்து மகிழுங்கள்