அச்சு
இந்த கதையின் முக்கியமான கரு குழந்தை, அதனுடைய வால்தனங்கள், சிரிப்பு, கோபம், அழுகை எல்லாம் தான் காரணம்.
என்னுடைய மாமாவின் பேத்தி பெயர் பாலா, அதாவது அந்த குழந்தைக்கு நான் சித்தப்பா. என்னை படிக்க வைத்து எல்லாம் என்னுடைய தாய் மாமா தான். அவருடைய மகள் (என்னைவிட 5 வயது மூத்தவள்) எனக்கு ரொம்ப பிடிக்கும். அவளுக்கு திருமணம் நடந்து கற்பமுற்றால், நான் அவர்கள் வீட்டில் இருந்து தான் படித்தேன். பாலா வயிற்றில் வளருவதில் இருந்தே அவள் மீது பெரும் பாசம் கொண்டு இருந்தேன். பிறந்த புதிதில் பல நாட்கள் இரவில் தூங்காமல் ஊரே குலுங்குவது போல அழுவாள், பல நாட்கள் அவளை கையில் வைத்துக் கொண்டே நான் தூங்கி இருக்கிறேன். பிறந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது, வாய் என்றால் வங்காள விரிகுடா மாதிரி வாய் அடிப்பாள், கோபம் வந்தால் சும்மா விஜய்சாந்தி மாதிரி, Mr&Mrs. Simth படத்தில் வரும் ஏஞ்லினா ஜூலி மாதிரி பச்சாதாபமே பார்க்காமல் கையில் இருப்பதை தூக்கி அடிப்பாள், அவளாலே ஒரு சுற்று நான் இளைத்து விட்டேன். நான் எப்பொழுதும் அவளை நோண்டிக் கொண்டு இருப்பேன். அவளுக்கு அளவு கடந்த கோபம் வரும், சந்தேக கேஸில் திருடர்களை அடிப்பது போல என்னை பிரித்து மேய்வாள், அவள் அடிக்கும் பொழுது வேறு நான் தெரியாமல் சிரித்து விடுவேன். அவ்வளவு தான் பத்ரகாளியாக மாறிவிடுவாள்.
அவள் என்னை “த்தித்தப்பா” என்று கூப்பிடும் அழகுக்காகவே காலம் பூரா அவளிடம் நான் அடிவாங்குவேன்.
ஒருமுறை ஊருக்கு போய் இருந்தாள், நான் அவளுக்கு போன் செய்தேன் என்னிடம் போனில் அவள் பேசவில்லை, போனை தன்னுடைய அம்மாவிடம் இருந்து வாங்கி விட்டு
“அலோ யாரா இய்ந்தாலும் அப்பறமாஆ பேச்சுங்க, நான்னு வேலையாஆ இக்கேன்”
“ஏய் நாதாண்டி சித்தப்பா பேசறேன்”
போனை வைத்து விட்டாள்.
எனக்கு ஆத்திரம், கோபம், அழுகை, அவமானம் எல்லாம் முட்டிக்கொண்டு வந்தது. இது நடக்கும் பொழுது எனக்கு வயது 24, எருமை மாடு வயதில் நானும் குழந்தையாக மாறினேன். அப்புறம் தான் யோசித்தேன் குழந்தைகளுடன் இருக்கும் பொழுது நாமும் குழந்தையாக மாறி விடுகிறோம் என்று.
அப்பொழுது உருவான கதை தான் அச்சு. பெயர் அச்சு என்ற காரணம், ஒருமுறை நான் பஸ்ஸில் சென்றுக் கொண்டு இருக்கும் பொழுது ஒரு தாய், தூங்கிக் கொண்டு இருந்த தன்னுடைய மூன்று வயது மகனை
“அச்சு செல்லம், எழுந்து சாப்பிடுங்க, பசிக்கலையா அச்சு செல்லத்திற்கு” என்று
கொஞ்சினால் அதற்கு அந்த குழந்தை ஒரு சிணுங்கு சிணுங்கியது. அவ்வளவு அழகாக இருந்தது அந்த காட்சி. அந்த தாயின் கொஞ்சலா, அல்லது அந்த குழந்தையின் சிணுங்களா என்று தெரியவில்லை. ஆனால் அந்த பெயர் எனக்கு ரொம்ப பிடித்து விட்டது அதான்
அச்சு,
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=18513
கீழே அவளும் நானும் சண்டை இட்டுக்கொள்ளும் வீடியோவை கொடுக்கிறேன் பாருங்கள்
[media]http://in.youtube.com/watch?v=-qxb-so__Xc&feature=channel_page[/media]