கதைகள் உருவான கதை

வணக்கம் நண்பர்களே
நம் மன்றத்தில் என்னுடைய மன்ற அக்கவுண்டு பக்கம் சும்மா போனேன், இதுவரை எத்தனை கதைகள் நான் எழுதி இருக்கிறேன் என்று சும்மா பாக்கப்போனேன், அப்படி இப்படி என்று 25 கதையை எழுதி ஒப்பேத்தி விட்டேன். நான் பகிர்ந்து கொள்ள வந்த விஷயம் இதுவல்ல,

நான் மற்றவருடைய சிறுகதைகளை படித்து முடித்தவுடன் எனக்கு தோன்றும் முதல் சிந்தனை இந்த கருவை எப்படி யோசித்து இருப்பார்கள், இந்த கரு உதிக்க காரணமாக இருந்த நிகழ்ச்சி எதுவாக இருக்கும்? எப்பது தான்.

எப்பொழுதுமே ஒரு சிறுகதையோ, கவிதையோ, திரைப்படமோ அல்லது நாவலோ எதுவாக இருந்தாலும், இவை அனைத்து அந்த படைப்பாளியின் மூளையில் ஒரு சின்ன பொறியாக தான் உதிக்கும். ஆனால் அவை டேவலப் ஆனப்பின் தான் முழு வடிவம் பெரும். அப்படி பெற்றவுடன் அதற்கு காரணமான அந்த சின்ன பொறியை நாம் நினைவில் வைத்துக் கொள்வதில்லை.

நான் எழுதிய கதைகளின் கருக்களும் அப்படி தான் உதித்தவை அவைகளை இங்கு நான் பகிர்ந்துக் கொள்ள உள்ளேன். அதே போல நம் மன்றத்தில் அருமையான எழுத்தாளர்கள் எழுதிய கதைகள் பல இருக்கின்றன, அவைகள் சம்பந்தப்பட்டவர்களின் மூளையில் எப்படி உதித்தது என்ற கதையை இந்த திரியில் பகிர்ந்தால் சுவையாகவும், அதேப்போல கதைகள் எப்படி வடிவம் பெறுகிறது என்ற ஒரு பாடமாகவும் இருக்கும். அதனால் நண்பர்களே உங்களின் கதைகள் உருவான கதையை சொல்லுங்கள்.

நன்றி

முயற்சியின் முதல்படியாக நானே என்னுடைய ஒரு கதையின் கதையை துவங்குகிறேன்.
 
Last edited by a moderator:
ஒரு படம் பார்ப்பதிலும் அவை உருவான விதம் பார்ப்பதில் உள்ள சுவையே தனி... ஜக்கிசான் படத்தின் இறுதியில் அவற்றை காட்டுவார்கள். (அது தவறுகள் பற்றி)

சிவாஜி உருவான விதம் என்று ஒரு ஒளித்தொகுப்பு வெளியிட்டிருந்தார்கள். அந்த அனுபவத்தினை தரப்போகிறது உங்கள் பகிர்வு. பகிருங்கள். வேடிக்கை பார்க்க நான் ரெடி.............. :D
 
தீயில் ஒரு பனித்துளி

எப்பொழுதும் நான் கதைகளை எழுதுவதற்கு முன்பு முதலில் யோசித்துக் கொள்வது, என்ன கதையில் சொல்லப் போறோம், அப்புறம் அதில் வரும் கதாபாத்திரங்கள்.
ஆனால் இந்த கதை எனக்கு முற்றிலும் புதிய அனுபவம். காரணம் இதில் நான் முதலில் யோசித்து வைத்தது இதில் வரும் முடிவு.

அதற்க்கு காரணம் இந்த கதையின் கருவை நான் யோசிக்க துவங்கியதே அந்த முடிவில் இருந்து தான்

“தந்தையும் மகனும் சிகரெட்டை பிடித்துக் கொண்டு நடந்தனர்”.

நான் வசிப்பது அடுக்கு மாடி குடியிருப்பில், அப்பொழுது இரவு நேரங்களில் சில சமயம் வாக்கிங் போவதுண்டு. ஒரு நாள் அந்த மாதிரி போகும் பொழுது நான் ஒரு காட்சியை பார்த்தேன். ஒரு வயதானவர் (வயது 65) ஸ்டையில கண்ணாடி போட்டுக் கொண்டு, அவரின் தோள் மீது கையைப் போட்ட படி ஒரு வாலிபன் (வயது 27) இருவரும் நடந்து சென்றனர். நான் அதை பார்த்தவுடன் ”என்ன தான் அப்பாவை நண்பனாக நினைத்தாலும், நடுதெருவில் தோள் மீது கையைப் போட்டுக் கொண்டு போவதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான்” என்று நினைத்தேன். அதில் மகன் அடிக்கடி அப்பாவின் காதில் எதோ சொல்லிக் கொண்டே சென்றான். சிறிது தூரம் போனவர்கள் நின்றார்கள், பாக்கெட்டில் இருந்த சிகரெட்டை மகன் எடுத்து அப்பாவின் வாயில் வைத்து பற்ற வைத்தான், அவனும் அதேப் போல ஒன்றை பற்ற வைத்துக் கொண்டான். இருவரும் எதோ சிரித்துக் கொண்டார்கள். வந்த வேலை முடித்தவுடன் மறுபடியும் தோள் மீது கையை போட்டபடி மகன் அழைத்து வந்தான். நான் அதை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தேன். என்னை கடந்து போகும் பொழுது அந்த மகன் அப்பாவிடம் சொன்னான்.

“அப்பா கீழே ஒரு கல் இருக்கு பார்த்து வாங்க”

அப்போ தோன்றியது தான் இந்த கதை, இந்த கதையின் போக்கு வேறு மாதிரியாக சென்றாலும், இந்த முடிவை வைக்க வேண்டும் என்று தான் இந்த கதையை எழுதினேன்.

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=18077

இனி நம் உறவுகள் தொடரலாம்.
 
Last edited:
தக்ஸின் மனதில் உதித்த புதிய சிந்தனைக்கு பாராட்டுக்கள். கதை உருவான கதையை அறிந்துகொள்ள அனைவருக்கும் ஆவலாகவே இருக்கும். உங்கள் தீயில் ஒரு பனித்துளி உருவான கதையைப் படித்து நீங்கள் சுற்றியுள்ளோரை எத்தனை உன்னிப்பாக கவனிக்கிறீர்கள் என்பது தெரிகிறது.

இது ஒவ்வொரு எழுத்தாளருக்கும் மிக அவசியமான ஒன்று. தொடருங்கள் தக்ஸ். நானும் கலந்துகொள்கிறேன்.
 
25 கதைகளா..? வாழ்த்துக்கள் மூர்த்தி.

தங்கள் கதை புனையும் திறனையும் கடின உழைப்பையும் எண்ணி வியக்கிறேன்.

இந்த கதைகள் எல்லாமே ஏற்கனவே யோசித்து தயாரித்திருந்த கதைகளா? அல்லது சமீபத்தில்தான் யோசித்து எழுதினீர்களா?

அநேகமாய் நம் மன்றத்தில் மிக குறைந்த கால கட்டத்துக்குள் அதிகமான கதைகளை பதித்தவர் நீங்களாகத்தான் இருப்பீர்கள் என நினைக்கிறேன். பாராட்டுக்கள்.:icon_b:
 
தக்ஸின் மனதில் உதித்த புதிய சிந்தனைக்கு பாராட்டுக்கள். கதை உருவான கதையை அறிந்துகொள்ள அனைவருக்கும் ஆவலாகவே இருக்கும். உங்கள் தீயில் ஒரு பனித்துளி உருவான கதையைப் படித்து நீங்கள் சுற்றியுள்ளோரை எத்தனை உன்னிப்பாக கவனிக்கிறீர்கள் என்பது தெரிகிறது.

இது ஒவ்வொரு எழுத்தாளருக்கும் மிக அவசியமான ஒன்று. தொடருங்கள் தக்ஸ். நானும் கலந்துகொள்கிறேன்.

நன்றி சிவாஜி அண்ணா
நானும் உங்களின் கதைகளின் கதையை படிக்க ஆவலாக இருக்கிறேன்.
 
25 கதைகளா..? வாழ்த்துக்கள் மூர்த்தி.

தங்கள் கதை புனையும் திறனையும் கடின உழைப்பையும் எண்ணி வியக்கிறேன்.

இந்த கதைகள் எல்லாமே ஏற்கனவே யோசித்து தயாரித்திருந்த கதைகளா? அல்லது சமீபத்தில்தான் யோசித்து எழுதினீர்களா?

அநேகமாய் நம் மன்றத்தில் மிக குறைந்த கால கட்டத்துக்குள் அதிகமான கதைகளை பதித்தவர் நீங்களாகத்தான் இருப்பீர்கள் என நினைக்கிறேன். பாராட்டுக்கள்.:icon_b:

நன்றி கீழை
நான் கதை எழுத ஆரம்பித்ததே மன்றம் சேர்ந்த பின் தான், அதாவது oct 22 / 2008. எழுதிய அத்தனை கதைகளும் இங்கு வந்து தான் எழுதினேன். நான் என்றும் கதை எழுத வேண்டும் என்று உக்கார்ந்தது இல்லை, அப்படி உக்கார்ந்தால் ஒரு வார்த்தை கூட எனக்கு வராது. ஆனால் மனதை பாதித்த ஒரு காட்சி, (அல்லது) செய்தி (அல்லது) நிகழ்ச்சி நடந்த அடுத்த வினாடி கதை தயாராகி விடும். அநேகமாக மன்ற படைப்பாளிகள் அனைவருக்கும் இந்த நிலை தான் என்று நினைகிறேன். எந்த படைப்பையும் நாம் படைப்பது கிடையாது, அவை தான் நம்மை படைக்க வைக்கின்றன.

நன்றி.
 
விதைகள்

என்னுடைய சமீபத்திய சிறுகதை இது. இந்த கதையின் கரு எனக்கு கிடைத்த கதை இது.

ஒரு நாள் பத்திரிக்கையை பார்த்துக் கொண்டு இருந்தேன், அதில் இஸ்ரேலில் மனித வெடிகுண்டால் பலர் காயம் அடைந்தார்கள் என்று போட்டு இருந்தார்கள். எனக்கு பல நாட்களாக இந்த மனித வெடிகுண்டு நபர்களை பற்றி பல சிந்தனைகள் இருந்தது. மனிதர்களுக்கு அவர்கள் மரணம் எப்பொழுது என்று தெரியாததினால் தான் வாழ்க்கை சந்தோஷமாக போகிறது, ஆனால் மனித வெடிகுண்டாக மாறுபவர்கள் மட்டும் விதி விலக்கு, அவர்களின் சாவை அவர்களே தீர்மானிக்கீறார்கள் (கடவுளைப் போல). அவர்களின் மனதில் கடைசி நிமிடத்தில் என்ன எண்ணங்கள் ஓடும், யாரைப்பற்றி ஓடும், குடும்பமா? குழந்தைகளா?, இயக்கமா? நாடா? எது?. புரியாத புதிராக இருக்கிறது. அப்படி குழம்பி நான் யூ டியுபில் (youtube) மனித வெடி குண்டுகளின் வீடியோகளை பார்த்துக் கொண்டு இருந்தேன், அவர்களின் கடைசி நிமிட முகபாவம் என்ன என்று பார்த்துக் கொண்டு இருந்தேன். அப்பொழுது எனக்கு ஒரு வீடியோ சிக்கியது.

ஒரு பெண் அதாவது 15 வயது இருக்கும், அவள் ஒரு மனித வெடிகுண்டு உடல் முழுவதும் வெடிகுண்டுகளுடன் வந்தாள். என்ன நினைத்தாளோ தெரியவில்லை கடைசி நேரத்தில் தன் முடிவை மாற்றி விட்டாள், சாக பிடிக்கவில்லையா?, அல்லது உயிர்களை கொல்லவதை பாவம் என்று நினைத்தாளோ. ராணுவத்திடம் சரண் அடைந்து விட்டாள். அந்த காட்சி தான் இருந்தது. எனக்கு அதை பார்த்ததும் அன்பே சிவம் படத்தின் கடைசி காட்சியில் கமல்ஹாசன் பேசிய வசனம் தான் ஞாபகம் வந்தது.

“ஒருத்தனை கொல்ல வந்துட்டு, அப்புறம் முடிவை மாத்திகிட்டு மன்னிப்பு கேட்கற மனசு இருக்கே அது தான் கடவுள்”

அப்படி தான் இருந்தது அந்த பெண்ணின் நடவடிக்கை, அவளை ஏமாற்றி வெடிகுண்டு கட்டினார்களா? என்று தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் அந்த பெண் நினைத்து இருந்தால் அன்று பல உயிர்கள் போய் இருக்கும்.

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=19025

ஆக அந்த காட்சி தான் விதைகள் கதையின் கரு, கதைக்கு தகுந்தார் போல மாற்றி அமைத்து இருந்தேன்.
அந்த வீடியோ
[media]http://in.youtube.com/watch?v=_Fw1x1p_kfM[/media]
 
Last edited:
ஒருவேளை நீ இருந்திருந்தா, அவ பண்ணியிருப்பா..... தற்கொலை... :D
 
புரியவில்லை

ஒருவேளை நீ இஸ்ரேல்ல இருந்திருந்தா, உன்னைப் பார்த்ததும் அந்தப் பெண் தற்கொலையே செய்திருப்பா.... அப்படின்னு சொல்லவந்தேன்...

இப்பவாச்சும் புரிஞ்சதா?
 
ஒருவேளை நீ இஸ்ரேல்ல இருந்திருந்தா, உன்னைப் பார்த்ததும் அந்தப் பெண் தற்கொலையே செய்திருப்பா.... அப்படின்னு சொல்லவந்தேன்...

இப்பவாச்சும் புரிஞ்சதா?

புரிஞ்சிதுங்க அரவிந்தசாமி
 
25 கதைகளா தொடர்கதையா இல்லை சிறுகதைகளா இல்லை சற்றே பெரிய சிறுகதைகளா?? :)

நல்ல திரி நீங்கள் சொன்னது போல ஏதாவது ஒரு சின்ன விஷயம் ,காட்சி,படித்த துணுக்கு ஒரு சிறுகதைக்கு காரணமாயிருக்கும் என்னை கேட்டால் கற்பனை கதைகளை விட இந்த மாதிரி எழுத படும் கதைகள் சிறப்பாக இருக்கும் என்ன சொல்றீங்க ?
 
25 கதைகளா தொடர்கதையா இல்லை சிறுகதைகளா இல்லை சற்றே பெரிய சிறுகதைகளா?? :)

நல்ல திரி நீங்கள் சொன்னது போல ஏதாவது ஒரு சின்ன விஷயம் ,காட்சி,படித்த துணுக்கு ஒரு சிறுகதைக்கு காரணமாயிருக்கும் என்னை கேட்டால் கற்பனை கதைகளை விட இந்த மாதிரி எழுத படும் கதைகள் சிறப்பாக இருக்கும் என்ன சொல்றீங்க ?

நன்றி கார்த்திக்
எல்லாமே சிறுகதைகள் தான், நீங்கள் கூறுவது போல 100% கற்பனை கதைகளையும் எழுத முடியாது ,அதே போல 100 % உண்மை கதைகளையும் எழுத முடியாது. கொஞ்சம் கலவையுடன் தான் எழுத முடியும், அந்த கலவையின் விழுக்காடு (%) தான் கதையின் வெற்றியை தீர்மானிக்கின்றன. நன்றி
 
சக்களத்தி

இந்த கதை எழுத காரணமாக இருந்தது அந்த கதையின் நாயகியே தான். எனக்கு தெரிந்த ஒரு அக்கா அவள், ஏழை அக்கா. எங்க ஊரில் தான் இருக்காங்க (தெரிந்த குடும்ப). அவங்க கதை தான் இது. ஒரு முறை அவங்களை நான் கடற்கரையில் பார்த்தேன் வேறு ஆளுடன். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது, காரணம் கதையில் வருவது போல ஒரு பணக்கார முதியவருக்கு கட்டாய திருமணம் முடிக்கப்பட்டவள் அவள். என்னை பார்த்தவுடன் அவளுக்கு இன்னும் அதிர்ச்சி, இருவரும் வெளிக் காட்டிக் கொள்ளவில்லை. நான் அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன், சிறிது நேரம் நான் கடல் அலைகளை பார்த்த படி அமர்ந்து இருந்தேன். அந்த அக்கா என்னை நோக்கி வந்தாள், நான் அவளை பார்த்து சிநேகமாக புன்னகித்தேன், அதை எதிர்பார்க்காத அவள், என் பக்கத்தில் வந்து அமர்ந்தாள். இருவரும் கொஞ்ச நேரம் எதுவுமே பேசாமல் கடலையே பார்த்துக் கொண்டு இருந்தோம். (நான் தனியாக தான் கடற்கரை சென்று இருந்தேன், நான் எங்கு போனாலும் தனியாக தான் போவேன் கூட்டத்துடன் சென்றாலே எனக்கு அலர்ஜீ). கொஞ்ச நேரம்
பிறகு அவளே பேச ஆரம்பித்தாள். (எங்களுக்குள் 100% உண்மையாக நடந்த உரையாடல் இது, என்னால் மறக்கவே முடியாது)

“தச்சன் (என் பெயரை அப்படி தான் அழைப்பாள்), அது யாரு கேட்கவே இல்லையே”

“(நான் சிரித்துக் கொண்டு) ஃப்ரண்டு-னு சொல்வீங்க”

“அவள் இல்லை அவர் என்னுடைய காதலர்”

“..........”

“நாங்க எப்பவுமே இங்க தான் வாரத்தில் ஒரு நாள் சந்திப்போம்”

“.........”

“இதை எல்லாம் எதுக்கு என்கிட்ட சொல்றீங்க”

“நீ போய் என்ன நடந்தது-னு உங்க வீட்டுல சரியா சொல்லனும் இல்ல”

“எனக்கு வேறு வேலை இல்லையா”

“..........”

சிறிது நேரம் கழித்து அவளே “எனக்கு அந்த ஆளுடன் வாழவே பிடிக்கலை, 65 வயசு கிழவன், இரண்டாந்தாரம்”

“இப்ப வருத்தப்பட்டு என்னக்கா செய்றது, எல்லாம் முடிஞ்சி போச்சு”

“என்னால அப்படி விட முடியாது, என்னுடைய வாழ்க்கையை நான் தான் வாழனும். உங்களுக்கு எல்லாம் இது ஒரு சுவாரஸ்யமான கதை அவ்வளவு தான், எனக்கு தான் இது வாழ்க்கை”

“என்னக்கா இப்ப நான் என்ன சொன்னேன்னு நீ கோபப்படுற, சரி நான் வரேன் (என்று எழுந்தேன்)”

“சாரிடா எதோ நியாபகத்தில் பேசிவிட்டேன், கொஞ்ச நேரம் இருடா”

சிறிது நேரம் மெளனம்.

“(நான் தயக்கத்துடன்) அக்கா இது எல்லாம் தப்பு இல்லையா”

”புரியல”

“இல்ல கல்யாணம் ஆகிட்டு இப்படி செய்ற......”

“அப்ப இரண்டாம் கல்யாணம் மட்டும் சரியா, என் வாழ்க்கையை அழிச்சது சரியா, என் அப்பாவை விட வயசானவருக்கு என்னை கட்டி வச்சது சரியா”

சிறிது மெளனம், அவளே தொடந்தாள் ”நீ இப்ப பார்த்தியே அவர் தான் என்னுடைய காதலர், கல்யாணதிற்கு முன்பே நாங்கள் காதலித்தோம்”

“ஆனா இப்ப அதன் பேரே வேறனு சொல்லுவாங்கக்கா”

சட் என்று என்னை முறைத்தாள். நான் மெளனமாக மண்னை விரலால் கிளறிக் கொண்டு இருந்தேன். நானே ஆரம்பித்தேன்

“உன்னுடைய புருஷனுக்கு தெரிந்தால் பிரச்சனை ஆயிடும் க்கா”

“(அவள் சிரித்துக் கொண்டு) அந்தாளுக்கு தெரியும், சீக்கிரம் இருட்டுரதுக்குள் திரும்ப வந்துடுனு சொல்லி அனுப்பினார்”

நான் திகைத்து நின்றேன்.

யாரை குறை சொல்வது, உண்மையில் ethical life, moral life என்பதெல்லாம் என்ன?, யாருக்கு எத்தீக்கலா? மாரலா? இருக்கனும். நமக்கா? இல்ல ஊருக்கா?. ஒன்றுக்கு இருந்தால் இன்னொன்றுக்கு குறை வரும். வாழ்க்கையின் சூச்சமங்கள் நிறைய இருக்கிறது. இந்த அக்காவை போல எத்தனையோ பெண்களின் வாழ்க்கைகள் கேள்விக்குறியாக இருக்கிறது?. மனத்துக்குள் தினமும் எவ்வளவு புழுங்குவாள் அவள், விருப்பம் இல்லாத ஒருவன் அவளை தொடும் பொழுது அவளின் உடல் எப்படி கூசி போய் இருக்கும், அவளின் மனநிலை எப்படி இருக்கும்.

ஆண்கள் தடுமாறினால் அது அவனின் உரிமையாக்கப்படுகிறது. ஆனால் அதுவே ஒரு பெண் செய்தாள் அவள் வேசியாக்கப்படுகிறாள். ஓரவஞ்சனையான உலகம் இது.

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=18186

நன்றி
 
Last edited:
இனிய தக்ஸ் அவர்களுக்கு, உங்களின் கதைக்கான கரு உருவாகும் கதை என்ற புதிய சிந்தனை என்னை லெகுவாய் ஈர்த்தது.
நேரில் பார்க்கும் சிறு சம்பவங்களுடன் கொஞ்சம் கற்பனையை கலந்து எழுதினால் கதை தயாராகி விடுகிறது. எனது கதைகளின் ஆரம்பமும் அதுதான். ஒருநாள் ஆள் நடமாட்டமில்லாத தெருவழியாக இருசக்கரவாகனத்தில் போய்க்கொண்டிருந்தேன், ஒரு முதியவர் தெருவில் விழுந்து எழுந்திருக்கமுடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தார் எனக்கு அவரை கடந்து போக மனமின்றி வண்டியை நிறுத்திவிட்டு அவரை தூக்கி அமர வைத்து பக்கத்து வீட்டிலிருந்தவர்களை அழைத்தேன். அவரகள் வந்து கேட்டார்கள் '' உன் வண்டியல தான் பெரியவர் அடிபட்டு விழுந்தாரா’’ எனக்கு பகீரென்றிருந்தது. உதவி செய்யப்போய் என்னை சந்தேகப்பட்டார்களே என்று வருத்தத்தோடு அலுவலகம் சென்றேன். இரண்டு நாள் கழித்து நடந்த சம்பவத்தை கொஞ்சம் கற்பனையை சேர்த்து ஒரு பக்க கதையாக்கி குமுதம் வார இதழுக்கு அனுப்ப அப்படி போடு என்ற தலைப்பில் கதை வெளிவந்தது. அந்த கதை இதோ உங்களின் பார்வைக்கு.
அப்படி போடு

அந்த தெருவின் குறுக்குச் சந்து வழியாக நானும் நண்பர் குமாரும் டூ-வீலரில் சென்று கொண்டிருந்தோம்.
ஆள் நடமாட்டம் இல்லாத அந்த குறுக்குச் சந்துக்குள் நுழைந்த போது எண்பது வயது முதியவர் கீழே விழுந்து எழுந்திருக்க முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தார்.

தூரத்தில் பார்த்ததும் வண்டியை நிறுத்திவிட்டு ’’ யாராச்சும் ஓடி வாங்களேன், பெரியவர் கீழே விழுந்துட்டாரு!’’ என்று உரக்க சத்தமிட்டான் குமர்ர். அவனின் சத்தம் கேட்டு சிலர் வேகமாய் சென்று அந்த முதியவரை தூக்கி முகத்தில் தண்ணீர் தெழித்து ஆசுவாசப்படுத்தினார்கள். நண்பன் குமார் மீது கடுப்பாகிப்போனது எனக்கு.

‘’ அந்த பெரியவர நாம ரெண்டு பேரும் நெனச்சா தூக்கி உதவி பண்ணியிருக்க முடியாதா? மனிதாபிமானமே இல்லாம நடந்துகிட்டியே!’’ என்றேன்.

குமார் மெல்லியதாய் புன்னகைத்துவிட்டுச் சொன்னான்.

’’ நாம டூவீலர அவர் பக்கத்துல நிறுத்தி அந்த முதியவர தூக்கி உதவி பண்ணியிருந்தா அத பார்க்கிறவங்க நாம தான் அவர்மேல வண்டிய மோத விட்டோமோன்னு சந்தேகமா பார்ப்பாங்க, மனிதாபிமானத்துல உதவி பண்ணப்போயி பழி நம்ம மேல விழுந்திடக்கூடாதுன்னுதான் அப்படி கூப்பிட்டேன்.
 
நன்றி ராசய்யா
உங்களின் பதிப்புக்கு மிக்க நன்றி, இன்னும் உங்கள் கதையின் கதைகளை இங்கு நீங்கள் பதியுங்கள், தெரிந்துக் கொள்ள ஆவலாக இருக்கிறோம்.

அப்புறம் ரொம்ப நாளாய் உங்களிடம் ஒண்ணு கேட்கனும்-னு இருந்தேன். அதெப்படி உங்கள் கதைகள் எல்லாம் தொடர்ச்சியாக பிரபல வார இதழ்களில் வருது, எனக்கு மிகுந்த ஆச்சர்யம் தரும் விஷயம் இது, அதிர்ஷ்டகாரர் தான் நீங்கள், வாழ்த்துக்கள்..........
 
இனிய நண்பருக்கு
வாரம்தோறும் குமுதம், குங்குமம், ஆகிய இதழ்களுக்கு தலா மூன்று கதைகள் எழுதி அனுப்புகிறேன், மெசேஜ் மற்றும் தரம் இருப்பவை மட்டுமே பிரசுரிக்கப்படுகின்றன. இதற்கு அதிர்ஷ்டம் எதுவுமில்லை.குமுதத்தில் மூன்று மாதங்களுக்குப்பிறகு இந்த வாரம் ஒரு கதை வெளிவந்துள்ளது. எழுதிய கதைகள் வெளிவரவில்லையே என்று எழுதுவதை நிறுத்தவில்லை அது தான் காரணமாக இருக்கலாம் என்பது எனது எண்ணம். நன்றி. எனது தனி பிளாக் பார்க்கவும்

ஐரேனிபுரம் பால்ராசய்யா
idaivelikal.blogspot.com
 
ஒவ்வொரு அசைவிலும் ஓராயிரமும் அர்த்தம் இருக்கும்.
அசைவே இல்லா விட்டாலும் அதிலாயிரம் அர்த்தம் இருக்கும்.
அந்த அர்த்தங்கள் கூர்மையான பார்வைக்கே எத்துப்படும்.
அர்த்தங்களால் வியக்கத் தெரிந்தவர்கள் கர்த்தாக்கள் ஆகிறார்கள்.
படைப்பாளிகளும் ஒருவகையில் குழந்தைகளே!
வியக்க மட்டுமன்றி இப்படி உண்மையைச் சொல்லவும் தயங்குவதில்லையே.
 
ஒவ்வொரு அசைவிலும் ஓராயிரமும் அர்த்தம் இருக்கும்.
அசைவே இல்லா விட்டாலும் அதிலாயிரம் அர்த்தம் இருக்கும்.
அந்த அர்த்தங்கள் கூர்மையான பார்வைக்கே எத்துப்படும்.
அர்த்தங்களால் வியக்கத் தெரிந்தவர்கள் கர்த்தாக்கள் ஆகிறார்கள்.
படைப்பாளிகளும் ஒருவகையில் குழந்தைகளே!
வியக்க மட்டுமன்றி இப்படி உண்மையைச் சொல்லவும் தயங்குவதில்லையே.


அன்பு அமரன்
முன்பெல்லாம் உங்கள் பின்னூட்டங்கள் கொஞ்சமாவது புரியும், ஆனால் வர வர கொஞ்சம் கூட புரிவதில்லை. எனக்கு இந்த அளவுக்கு தமிழ் தெரியாது, நீங்கள் திட்டுகிறீர்களா?, புகழ்கிறீர்களா?, கிண்டல் பண்ணிறீங்களா? இல்லை தப்பை சுட்டிகாட்டிறீங்களா? சத்தியமா ஒண்ணுமே எனக்கு புரிவதில்லை. தேங்காயை உடைப்பது போல உடையுங்கள் கருத்தை அப்பொழுது தான் தவறு இருந்தால் என்னால் திருத்திக் கொள்ள முடியும்.
 
Back
Top