டிமேட் அக்கவுண்ட் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பற்றி

anna

New member
டிமேட் அக்கவுண்ட் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பற்றி தெரிந்தவர்கள் தயவு செய்து விளக்கமாக சொல்லுங்களேன்.

எனக்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பேங்கில் அக்கவுண்ட் உள்ளது. அங்கு இப்போது அக்கவுண்ட் ஹோல்டர்களுக்கு டிமேட் அக்கவுண்ட் இலவசமாக ஆரம்பிக்கலாம் என விளம்பரம் தருகின்றனர். இதை ஆரம்பிப்பதால் நமக்கு ஏதும் நன்மைகள் உள்ளதா. இதில் எனக்கு சுத்தமாக அனுபவம் கிடையாது.

இது பற்றி வங்கியிலும் கேட்டேன் அவர்கள் சொல்வது என்னை போன்ற மரமண்டை ஆட்களுக்கு சுத்தமாக புரியவில்லை. எனவே தான் அனுபவசாலிகள் விளக்கமாக எனக்கு புரியும்படி தயவு செய்து சொல்லுங்களேன்.அல்லது இது பற்றி நமது தளத்திலே இருந்தாலும் அதன் சுட்டியை கொடுங்களேன்.
 
டிமேட் அக்கவுண்ட் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பற்றி தெரிந்தவர்கள் தயவு செய்து விளக்கமாக சொல்லுங்களேன்.

எனக்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பேங்கில் அக்கவுண்ட் உள்ளது. அங்கு இப்போது அக்கவுண்ட் ஹோல்டர்களுக்கு டிமேட் அக்கவுண்ட் இலவசமாக ஆரம்பிக்கலாம் என விளம்பரம் தருகின்றனர். இதை ஆரம்பிப்பதால் நமக்கு ஏதும் நன்மைகள் உள்ளதா. இதில் எனக்கு சுத்தமாக அனுபவம் கிடையாது.

இது பற்றி வங்கியிலும் கேட்டேன் அவர்கள் சொல்வது என்னை போன்ற மரமண்டை ஆட்களுக்கு சுத்தமாக புரியவில்லை. எனவே தான் அனுபவசாலிகள் விளக்கமாக எனக்கு புரியும்படி தயவு செய்து சொல்லுங்களேன்.அல்லது இது பற்றி நமது தளத்திலே இருந்தாலும் அதன் சுட்டியை கொடுங்களேன்.

டீ மேட் என்றால் என்ன என்பதை தெரிந்துகொள்வதற்கு முன் டீமேட் அக்கவுண்ட் வருவதற்க்கு முன் (90களுக்கு முன்னால்) எப்படி பங்கு வர்த்தகம் எப்படி நடைபெற்றது என்பதை தெரிந்துகொள்வோம்.

1) பங்குகள் அனைத்தும் காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட சான்றிதழ்களில் இருந்தது. (Certificate)

2) நீங்கள் உங்கள் பங்கினை விற்க / வாங்க வேண்டும் என்றால் தரகரை முழுமையாக நம்பி இருக்க வேண்டும்.

3) பங்குகளை பரிமாற்றம் செய்ய கால அவகாசம் அதிகமாக இருந்தது. (14 நாட்கள்)

4) வெளிப்படையான நடவடிக்கைகள் சாத்தியம் இல்லாமல் இருந்தது. (Transperancy)

5) வேறு பல குறைகளும் இருந்தன. (தபால் செலவு , தபால் குறிப்பிட்ட நேரத்தில் சேராமை , பங்குதாரரின் கையெழுத்து மாற்றம் , போலி பத்திரங்கள் , ........)

இவை அனைத்திற்க்கும் தீர்வுதான் டீமேட் அக்கவுண்ட்.

டீ மேட் என்பது ஒரு வங்கி கணக்கு போன்றதுதான்.

  • உங்கள் கையில் ரொக்கமாக இருக்கும் பணத்தை வங்கியில் போட்டு வைப்பது போலத்தான் டீமேட் கணக்கும். உங்களிடம் காகிதத்தில் உள்ள பங்குகளை டீ மேட் கணக்கில் போட்டு வைக்கிறீர்கள்.
  • உங்கள் வங்கியில் உள்ள உங்கள் பணத்தை இன்னொருவருக்கு கொடுக்க விரும்பினால் காசோலை அந்த நபரின் பெயரில் எழுதி கொடுத்தால் அந்த நபரின் கணக்கிற்கு சென்றுவிடும் அல்லவா? அதேபோல் உங்களின் டீமேட் கணக்கில் உள்ள பங்குகளை இன்னொருவருக்கு கொடுக்க Delivery Instruction Slip பயன்படுத்தி அடுத்த நபரின் டீமேட் கணக்கு எண்ணை எழுதி உங்கள் டீமெட் கம்பெனியிடம் கொடுத்தால் உடனே அடுத்த நபரின் கணக்கிற்கு குறிப்பிட்ட பங்கினை மாற்றிவிடுவார்கள்.
  • டீமேட் கணக்கு வைக்க டீமேட் கம்பெனிகள் ஆண்டு கட்டணங்கள் வசூலிக்கின்றன. சில கம்பெனிகள் அதை இலவசமாக வழங்குகின்றன. நீங்கள் குறிப்பிட்டுள்ளது இதைத்தான். ஆனால் பங்கு மாற்றத்திற்கு (Transfers) கட்டணம் செலுத்த வேண்டியது இருக்கும்.
டி மேட் கணக்கு விஷயத்தில் கவனத்தில் கொள்ள வேண்டியது இவற்றைத்தான்.:-

1) டீமேட் கணக்கு துவங்கும் முன் கணக்கின் சட்டதிட்டங்கள் , செலுத்தவேண்டிய கட்டணங்கள் பற்றி தெளிவாக தெரிந்துகொள்ளுங்கள்.

2) வருமான வரி நிரந்தர கணக்கு எண் (PAN Card) நிச்சயமாக தேவை.

3) இருப்பிட சான்று (Address Proof) , புகைப்பட சான்று (Identity Prrof) மற்றும் வங்கி கணக்கும் முக்கியமான தேவை.

4) இப்பொழுதெல்லாம் பங்கு தரகர்களே டீமேட் கணக்கு துவக்கி தருகிறார்கள். நீங்கள் பங்கு வர்த்தக கணக்கு (Share Trading Account) வைத்திருக்கும் தரகரிடமே டீமேட் கணக்கு துவக்கினால் உங்களுக்கு செலவு குறைவு நேரமும் மிச்சம்.

5) எக்காரணம் கொண்டும் நிரப்பப்படாத Delivery Instruction Slip யை கையெழுத்திட்டு யாருக்கும் தராதீர்கள் (உங்கள் பங்கு தரகர் உள்பட). அப்படி கொடுக்கும் பட்சத்தில் அது கையெழுத்திட்ட நிரப்பப்படாத காசோலை போன்றதுதான். அது பல சிக்கல்களுக்கு வழி வகுக்கும்.

6) குறிப்பிட்ட கால இடைவெளியில் டீமேட் கணக்கு Statement அனுப்புவார்கள். அதில் நீங்கள் உங்கள் கணக்கில் வாங்கிய / விற்ற பங்குகள் சரியாக உள்ளனவா என்பதை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

7) உங்கள் டீமேட் கட்டணங்களை சரியாக செலுத்திவாருங்கள். இல்லையெனில் கணக்குகள் முடக்கப்படும் அபாயம் உள்ளது.
 
டீமேட் பற்றி எனக்கும் சில சந்தேகம் இருந்தது. விபரமாக விளக்கம் அளித்த திரு.ஸ்ரீதர் அவர்களுக்கு நன்றி,
 
மிக்க நன்றி ஸ்ரீதர் அவர்களே அருமையான விளக்கம் அளித்துள்ளீர்கள். நீங்கள் சொன்னத வைத்துப்பார்க்கும் போது அதற்கும் நமக்கும் ரொம்ப தூரம் என தெரிகிறது.
 
மிகவும் பயனுள்ள தகவல் இது... இந்த விசயத்தில் நண்பர் மொக்கைசாமி கில்லாடி, அவர் இந்த பக்கம் வருவாரா?
 
எனக்கும் இந்த சந்தேகங்கள் இருந்தன,முழுமையான விளக்கத்துக்கு நன்றிகள்.
 
டீமேட் என்பது ஒன்னும் பெரிய கம்பசூத்திரமான வார்த்தை அல்ல..
உங்கள் பங்குகள் எலெக்ரானிக் முறையில் (அதாவது ஈ-அக்கொண்டில்) இருக்கும்..
நீங்கள் பிசிக்கலாக ஏதும் பேப்பர் முறையில் வைத்து இருக்க வேண்டாம்...அவ்வளவு தான்
பங்கு வர்த்தகம் செய்ய இது மிக அவசியமாகிறது
உங்கள் பங்கு சந்தை முதலீடு ஆனாது கண்ணாடி போல் அரசாங்கத்துக்கு தெரியும்..
அடிக்கடி வாங்கி விற்றால் பூல் (pool)அக்கெண்ட் முறையில் வைத்துக்கொள்ளலாம்
100% ஐந்து அல்லது ஏழு வருடம் வைத்து இருக்கப்போகிறீகள் எனில் உங்களிடம் உள்ள அனைத்து பங்குகளையும் டீமேட் ஆக்கி விடுங்கள் (இந்த முறையில் உங்கள் கையெப்பம் இன்றி உங்கள் பங்கு தரகு கம்பெனி விற்ற இயலாது...)
 
Last edited:
ரொம்ப எளிமையாக புரியும் படி சொன்ன நண்பர் மொக்கச்சாமிக்கு நன்றி
 
டீமேட். ஏன்? எதற்கு?

உங்களிடம் இருக்கும் பணத்தை வீண் அடிப்பதற்கு,

(சும்மா காமெடி செய்தேன், விரிவான தகவல்களுக்கு மொக்கைச்சாமியின் பதிவை படியுங்கள்.)
 
நல்ல விவரமாகவே சொல்லியிருக்கிறீர்கள். அனைவரும் புரிந்துகொள்வார்கள் என்றே தெரிகிறது. இதன்மூலம் இன்னும் பலர் பங்குச் சந்தையில் முதலீடு செய்வார்கள் என்றே நான் நினைக்கிறேன்.

முதலீடு செய்யும் பொழுது எதில் முதலீடு செய்கிறீர்கள்;
எதற்காக அந்த பங்கில் முதலீடு செய்கிறீர்கள்;
உங்களுடைய நோக்கம் என்ன;
குறுகிய கால முதலீடா அல்லது நீண்டகால முதலீடா;
அப்படியென்றால் எந்த பங்கு சிறப்பாக இருக்கும் என்று நினைத்து அந்தப் பங்குகளில் முதலீடு செய்யுங்கள்.

நீங்கள் செலக்ட் செய்யும் உங்கள் ஏஜண்ட் எப்படி என்று முதலில் தெரிந்துகொள்ளுங்கள். உங்களுக்கு வெற்றி நிச்சயம்
 
டிமேட் விளக்கம் கேட்டதற்கு விரிவுரையே கொடுத்து விட்டீர்கள். யாருக்குத்தான் புரியாமல் இருந்திருக்கும் . தமிழ் மன்றம் மென்மேலும் வளர நல் வாழ்த்துக்கள்.
 
கீழே உள்ள இணைப்பில் "டிமேட் கணக்கை எப்படிப் பயன்படுத்துவது?" என்ற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரையை படித்தால் தங்களுக்கு பயனாக இருக்கலாம்.

http://www.revmuthal.com/2013/12/5.html
 
டிமேட் கணக்கை எப்படிப் பயன்படுத்துவது?

கீழே உள்ள இணைப்பில் "டிமேட் கணக்கை எப்படிப் பயன்படுத்துவது?" என்ற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரையை படித்தால் தங்களுக்கு பயனாக இருக்கலாம்.

http://www.revmuthal.com/2013/12/5.html
 
Back
Top