உள்ளம் உருக்கிய பாடல்கள்

வணக்கம் நண்பர்களே
இந்த திரியை மனதை பாதித்த பாடல்களை பதிவு செய்யலாம் என்று இருக்கிறேன், உங்களின் மேலான ஆதரவை எதிர்நோக்கி நன்றி.


இரண்டு நாளை முன் யதர்ச்சியாக ஒரு பாடலைக் கேட்க நேரிட்டது, முதல் முறையாக அந்த பாடலை அப்பொழுது தான் கேட்கிறேன். அதை தேடி கண்டுபிடித்து இறக்கிவிட்டேன். அரண் படத்தில் காஷ்மீரை பற்றி ஒரு பாடல், அருமையான வரிகள், அருமையான ராகம், அருமையான குரல். காஷ்மீரின் நிலையை சோகத்தோடு உணர்த்தும் பாடல், நீங்களும் கேளுங்கள், சுட்டி கீழே உள்ளது, அதில் முதல் பாடல்



http://www.oosai.com/tamilsongs/aran_songs.cfm
 
Last edited:
இந்தப்பாடலை படத்தில் பார்த்தபோதே என்னையும் இந்த பாடல் கவர்ந்தது! மிக அருமையான பாடல்
 
எனக்கு இளையராஜா பாடல்கள் தவிர வேறெதுவும் தற்சமயம் உருக்கிய பாடலாக இருந்ததில்லை இது தமிழ் சினிமாவைப் பொறுத்தமட்டில்..

இன்றும் மனதைக் கரைக்கும்

"உன் பார்வையில் ஓராயிரம் கவிதை"
"விழியில் விழுந்து இதயம் நுழைந்து"
"இதயம் ஒரு கோவில்"
"கொடியிலே மல்லிகைப்பூ"
"வா வெண்ணிலா"
"நிலாவே வா"
"மன்றம் வந்த தென்றலுக்கு"
"பூங்காற்று திரும்புமா?"
"வெட்டி வேரு வாசம்"
"என்ன சத்தம் இந்த நேரம்"
"பூ மாலை வாங்கி வந்தான்"

இன்னும் பல உண்டு.

கொஞ்சம் புதிய பாடல் என்றால் உயிரே படத்திலிருந்து சில பாடல்கள்.... மற்றபடி வேறு எதுவும் கரைக்கவில்லை.. இசையில் உருகி வழியவில்லை..

வெஸ்டர்ன் கொஞ்சம் உண்டு.....

சமீபத்தில் வந்த If I were a boy - beyonce, என்னை மயக்கத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்ற பாடல்......

இங்கே சென்று பாருங்கள்... எனக்குப் பிடித்த ஆங்கிலப்பாடல்களில் சிலவற்றினைப் பற்றிய குறிப்பொன்று எழுதியிருக்கிறேன்..

http://tamilmantram.com/vb/showthread.php?t=8220

அன்புடன்
ஆதவன்
 
எனக்கு இளையராஜா பாடல்கள் தவிர வேறெதுவும் தற்சமயம் உருக்கிய பாடலாக இருந்ததில்லை இது தமிழ் சினிமாவைப் பொறுத்தமட்டில்..

மூர்த்தி சொன்னது (பிர)தேசபக்திப்பாடல்(????) ஆதவா.........

உங்க வயசுக்கும்........
அனுபவத்துக்கும்........
காதல் பாட்டுக்கள்தான் பிடிக்கும் என்று எங்களுக்கும் தெரியும்!!!!

நாராயணா!!!!! :lachen001:
 
ஆழமான பாடல்

ஜோஸ்வா சிறீதர்
இசையில்
மாணிக்கம் விநாயகம் ,
சயித்

குரல்கள் உருக்குகின்றன.

அல்லாவே! எங்களின் தாய் பூமி
பூவனம் போர்க்களம் ஆனதேனோ?
பனிமலையில் பலிகள் ஏனோ?

பெண்கள் முகம் சிவந்தது அன்று நாணத்தில். -
மரணம் கண்டு. இன்று
மண்ணில் குண்டுவைத்து ஓலம்....

ஈழம் எரிவதும் இதுபோன்றே!

வேதனைகள் என்று தீரும்.
மனிதங்கள் என்று உயிர் பெறும்.??????

பாடல் கேட்க வழி செய்த murthyd99 அன்பருக்கு வணக்கம்.
 
அன்பரே!

'உள்ளம்(உருகுதே) உருக்கிய(உருக்கும்)பாடல்கள்'

ஏதாவது?
என்றால் நல்லா இருக்காதா?
 
அன்பரே!

'உள்ளம்(உருகுதே) உருக்கிய(உருக்கும்)பாடல்கள்'

ஏதாவது?
என்றால் நல்லா இருக்காதா?

நன்றி தமிழ்தாசன்
உங்களின் பெயருக்காகவே உங்களின் அறிவுரையை ஏற்று தலைப்பை நீங்கள் சொன்ன மாதிரி மாற்றி இருக்கேன். நன்றி
 
நண்பர்கள் அவர்களின் உள்ளத்தை உருக்கிய பாடல்களை பற்றி இங்கு பதியலாம் மற்றவர்களின் உள்ளமும் கொஞ்சம் உருகட்டும்
 
சின்ன வயதில் இருந்தே சினிமா என்றால் எனக்கு ஒரு ஈர்ப்பு, (எல்லாருக்கும் இருப்பது தான்), பெரியவன் ஆனதும் அந்த ஈர்ப்பு இன்னும் அதிகம் ஆனது. கமல்ஹாசன் என்ற கலைஞனின் தீரா ஆர்வத்தை பார்த்து பிரமித்து, எத்தனையோ நாட்கள் இரவில் தூங்காமல் இருந்து இருக்கிறேன். அதில் என்னை மிகவும் பாதித்த படம் ஹேராம், என்னை பொறுத்த வரை உலகத்திலே மிகச் சிறந்த படம் ஹேராம். ஒரு மனிதனின் வாழ்க்கையை சொல்வது சுலபமான விஷயம் அல்ல, அதுவும் ஒரு கனமான கருவை எடுத்துக் கொண்டு, தான் வாழ்ந்து பார்க்காத வாழ்க்கையை பற்றி சுவாரஸ்யமாக கூற வேண்டும் என்றால் அது மிக மிக மிக கடினமான வேலை, வாழ்க்கையின் மிகக் கடினமான சவால். அதுவும் கதையாசிரியராக, இயக்குனராக, நடிகராக, வசனகர்த்தாவாக அனைத்திலும் ஜொலித்தார் கமல், ஆனால் தயாரிப்பாளராக ஜொலிக்க முடியவில்லை. காரணம் மக்களுக்கு தான் தெரியும். ஒரு பேட்டியில் கமல்ஹாசனை நோக்கி ஹேராம் பற்றி கேள்வி கேட்கப்பட்டது.

நிருபர் : ஹேராம் படம் சரியாக போகவில்லை, ஒருவேளை இந்த படம் கொஞ்ச ஆண்டுகள் கழித்து வந்து இருந்தால் மக்களை போய் சேர்ந்து இருக்குமோ?

கமல் : (சிரித்துக்கொண்டு) ஏங்க நான் 1946-ல் நடந்த கதையை 2000 ஆண்டு படம் எடுத்தேன், என்னை பொறுத்த வரை இதுவே லேட்டு. நீங்கள் இன்னும் கொஞ்ச நாள் கழித்து எடுக்க சொல்றீங்களே நியாயமா?. என்ன செய்வது no gain without pain என்று சிரித்தார்.

அந்த படத்தில் வரும் இரண்டு பாடல்கள் உள்ளத்தை நிஜமாகவே உருக்கும்.

1. இசையில் தொடங்குதம்மா (அருமையான பாடல், BGM சூப்பர், பாடலை பாடிய அஜேய் சக்கரவர்த்தி உருகி இருப்பார். அதுவும் அவர் பாடலில் வரும் ராகங்களை இழுக்கும் பொழுது நம்மை அறியாமல் நாமும் அவருடன் சென்று விடுவோம்.

2. நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி (காதலின் வலியை, காதலி இல்லாத வலியை மிக அருமையாக உணர்த்தும் பாடல்.

பாடலின் சூட்டி கீழே

http://www.oosai.com/tamilsongs/heyram_songs.cfm
 
நன்றி தமிழ்தாசன்
உங்களின் பெயருக்காகவே உங்களின் அறிவுரையை ஏற்று தலைப்பை நீங்கள் சொன்ன மாதிரி மாற்றி இருக்கேன். நன்றி

அன்பர் தக்ஸ் அவர்களே!

உங்கள் ஏற்புக்கு மகிழ்ச்சி!

நீங்கள் தொட்ட இத் திரைப்படம் என்னையும் ஒரு வகையில் ஈர்த்தது.
நீங்கள் குறித்த பாடல்களும் உள்ளம் உருக்கி (என்னைக்)கவர்ந்தவையே!
உங்கள் பாடல் இரசனைகள் நன்றாகவே உள்ளது.

இதேபடத்தில் இராமன் ஆண்டாலும்...
அந்தப்பாடலும் மிகவும் சிறந்தபாடல்.

நேரம் கிடைக்கும்போது நானும்
உள்ளம் உருக்கிய பாடல்களைத் தருவேன்.
 
இதேபடத்தில் இராமன் ஆண்டாலும்...
அந்தப்பாடலும் மிகவும் சிறந்தபாடல்.

நேரம் கிடைக்கும்போது நானும்
உள்ளம் உருக்கிய பாடல்களைத் தருவேன்.

நன்றி தமிழ்
நீங்கள் கூறிய பாடலும் சிறந்த பாடல் தான், எழுத்தின் வடிவத்தில் சிறந்த பாடல். இந்த திரியில் நான் பகிர்ந்து கொள்ள ஆசைப்படும் பாடல்கள், இசை வடிவத்திலும், எழுத்து வடிவத்திலும், ராகத்திலும், பாடப்பட்ட சூழ்நிலையிலும் சிறந்து விளங்கும் படி இருக்க வேண்டும்
 
நான் கமல் ரசிகன் அல்ல என்றாலும் ஹேராம், மஹாநதி, நாயகன் போன்ற அவறது படங்க்ளை எத்த்னை முறை வேண்டுமானாலும் பார்ப்பேன்..... ஏன் நேற்றுக்கூட நாயகன் பார்த்தேன் ( ரித்தீஷ் நடித்ததல்லப்பா :D )...

நீபார்த்த பார்வைக்கொரு நன்றி பாடல்
அதுபோல தெனாலியில் வரும் போர்க்களம் அங்கே பாடலும் என் மனதை கவர்ந்தவை........
 
அடுத்து நான் பகிர்ந்து கொள்ள இருக்கும் பாடல், மிக மிக அருமையான ஒரு சூழ்நிலையில் பாடப்படும் பாடல். ஜூலி கணபதி படத்தில் இருந்து

”எனக்கு பிடித்த பாடல் உனக்கும் பிடிக்குமே” என்ற பாடல்.

சின்ன குயில் சித்ரா வை அடுத்து குரலில் தேன் கலந்து பாடும் வரம் பெற்ற பாடகி ஸ்ரேயா கோஷல் தான். இளவயது பாடகி 14 மொழியில் பாடல்கள் பாடியவர். இவருக்கு தமிழ் சுத்தமாக தெரியாது என்றால் நம்பவே முடியாது, ஏனென்றால் பாடலின் வார்த்தைகள் அவ்வளவு அழகாக உச்சரிப்பார்.

காரை ஓட்டிக் கொண்டு ஜெயராம் மலைப்பகுதியில் செல்லும் பொழுது, அந்த பசுமையான சூழ்நிலையில், மிதமான குளிரில், லேசான மழை தூரலின் நடுவே காரில் போய் கொண்டு இருக்கும் பொழுது கசியும் பாடல். ஒவ்வொரு ஆணும் தன்னை இப்படி ஒரு பெண் உருகி காதலிக்க மாட்டாளா? என்று ஏங்க வைக்கும் பாடல். இதே பாடல் ஆண் குரலில் விஜய் ஜேசுதாஸ் பாடி இருப்பார். ஆனால் பெண் குரலில் இருக்கும் ஜீவன் ஆண் குரலில் மிஸ்ஸிங்.

http://www.oosai.com/tamilsongs/julie_ganapathy_songs.cfm
 
Back
Top