அயல்பு நடவடிக்கை (18+)

உறுதி செய்தமைக்கு நன்றிகள் ஆதவா..

ஆனால் அயல்பு என்பது சரியான வார்த்தையாக ஏற்க மனம் ஒப்பவில்லை..

paranormal - unexplainable things

இந்த para என்பதற்கு பல பொருள் உண்டு, இந்த வார்த்தையின் வேரானது கிரேகம் மற்றும் லத்தின் மொழியில் இருந்து உயிர்ப்பு கொண்டது..

அயல்பு - அந்நியம் என்று பொருள் கொள்ளலாம், ஆனால் அதற்கு ஆங்கிலத்தில் சரியான ஈடு இருக்கிறது alienation

அயல்பு *- தொடர்ப்பறுந்த/தூரமான என்று பொருள் கொள்ளவே இயல்கிறது

abnormal - இயல்பு பிறழ்ந்த

//அதன் மூலம் தேசிய இனப் பிரச்சினையில் தீர்வுக்கு வழி சமைத்து சமாதானத்தையும் அயல்பு வாழ்க்கையினையும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தோற்றுவிக்க முடியும். இப்பாரிய பணியினை சகல தடைகளையும் மீறி புதிய ஜனாதிபதியும் பொதுசன முன்னணியும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதையே எமது புதிய ஜனநாயகக் கட்சி வேண்டுகின்றது.

//

இந்த வரிகளை கவனிக்கவும், அயல்பு வாழ்க்கை என்பது சுதந்திரமான வாழ்க்கை என்பதை குறிப்பதாய் இங்கு பயன்படுத்த பட்டிருக்கிறது..

paranormal - அயல்பு என்பது சரியான தமிழீடல்ல..

இப்போதைக்கு அமானுஷ்யம் என்று சொல்லிக் கொள்ளலாம் ஆனால் இதுவும் தமிழல்லாததால் சரியான வார்த்தையை தேடிக் கொண்டிருக்கிறேன்
 
Last edited:
ஆதன்..
இப்போது தான் கவனித்தேன். இங்கு எழுத்துப்பிழை என்றே நினைக்கிறேன்.
காரணம்

“அதன் மூலம் தேசிய இனப் பிரச்சினையில் தீர்வுக்கு வழி சமைத்து சமாதானத்தையும் அயல்பு வாழ்க்கையினையும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தோற்றுவிக்க முடியும்.”

என்ற வாக்கியத்தில் இயல்பு வாழ்க்கை என்ற ஒரு பதம் தான் பொருந்தும். அயல்பு என்பதற்கு சுதந்திரம் என்ற பொருள் எப்படிப்பார்த்தாலும் பொருந்தவில்லை. விடுதலைப்புலிகளின் சமாதான பேச்சுக்களில் மக்களின் இயல்புவாழ்க்கைக்கு திருப்பவேண்டும் என்ற கோரிக்கை இருந்தது...

(நம்மவர்கள் பாமினி எழுத்துருவில் தான் அநேகமாக பதிபவர்கள். அ என்ற எழுத்துக்கு m உம் இ என்ற எழுத்துக்கு , (comma) உம் அதற்கான உள்ளீட்டு எழுத்துக்கள். (அருகருகே உள்ளவை)


அயல்பு என்ற சொல் இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை.
paranormal ற்கு supernatural, magic, miraculous போன்ற வார்த்தைப்பிரயோகம் உள்ளன. நீங்கள் சொன்னது போல் அமானுஷ்யம் சரியாகும்.
 
நன்றி ஆதன்.

தமிழில் அயல்பு என்ற வார்த்தை இருக்கிறதா என்றே எனக்குத் தெரியாது. நான் எங்கும் தேடவுமில்லை.

Normal - இயல்பான, சாதாரணமான, வழக்கமான, இயற்கையான
Abnormal - இயல்பிறந்த, அசாதாரணமான,
Paranormal - அயல்பான,

என்று எடுத்துக் கொண்டேன். அயல் என்ற வார்த்தையை மட்டும் கவனிக்காமல் அயல்பு என்று படித்தால் கிட்டத்தட்ட வருவதாக எண்ணினேன். திரியைப் பார்த்ததும் தாமரை அண்ணா கூப்பிட்டு அயல்புனு எதுக்கு போட்டிருக்கே என்றார். யாராவது கவனிப்பார்கள் என்று பேசி விட்டோம்! நீங்கள் கேட்டுவிட்டீர்கள்!!!

அமானுஷ்யம் தமிழல்ல... ஆனால் தமிழில் அதற்கு ஒற்றை வார்த்தை கண்டுபிடித்தே ஆகவேண்டும்!!!
முயற்சிப்போம்!!
 
Back
Top