வழக்கு எண் : 18/9

சாருவின் மனநிலையில் இப்படம் அவருக்கு நல்ல படமாகத் தெரியவில்லை போலும். சாருவின் விமர்சனத்தால் எந்த வித பலனும் ஏற்படப்போவதில்லை.

சரியா சொன்னீங்க தங்கவேல் அண்ணா
 
நானும் அவருடைய வலைத்தளத்தில் அவர் எழுதியிருந்த விமர்சனத்தை படித்தேன்..


பாதியிலேயே எழுந்து வந்து விட்டதாக எழுதியிருந்தார். பாதியிலேயே எழுந்து வந்ததற்கான வலுவான காரணம் எதுவும் அவர் குறிப்பிடவில்லை. எதார்த்தம் என்பதை இந்த இயக்குனர் கையாண்ட விதத்தையும் சாடி இருக்கிறார்.


மேலும் இப்படத்தின் தயாரிப்பாளர் லிங்குசாமி அவர்களின் இயக்கத்தில் வந்த ரன் படத்தை சிலாகித்து எழுதியிருந்தார். அந்த படம் அளவுக்கு இந்தப்படம் விறுவிறுப்பாக இல்லையாம்.. அதனால் இந்தப்படம் குப்பை என்றும் விமர்சித்திருக்கிறார்.


ரன் படத்தை நான் குறை சொல்ல விரும்பவில்லை. அதே சமயம், அந்த மசாலா கதையை எடுத்த விதத்தையும், இந்த இயல்பான படத்தை எடுத்த விதத்தையும் ஒப்பிட்டு எழுதுவது தன்னை ஒரு படைப்பாளி என்று கூறிக்கொள்பவருக்கு அழகல்ல. இந்த படத்தை வேறெப்படி எடுக்க முடியும் ??


எந்த ஒரு வலுவான காரணம் இல்லாமல் ஒரு தரமான படத்தை விமர்சிப்பதை , விளம்பரத்திற்காக இல்லாமல் வேறு எதற்காக என்று எடுத்துக்கொள்வது??


ஒன்று செய்வோம்... இந்த படத்தை எப்படி எடுப்பது என்பதை அவரே சொல்லட்டும் அல்லது எடுத்துக்காட்டடும்..


படத்தை பார்க்கும்போதோ அல்லது விமர்சனம் எழுதும்போதோ நிலையில் இல்லாமல் இருந்திருப்பாரோ என்ற சந்தேகம் வருகிறது...

வலுவான காரணம் அங்காடி தெரு விமர்சனத்தில் இருக்கும் என்று நினைக்கிறேன் அது மட்டும் அல்லாமல் அவர் எழுதிவரும் கட்டுரையில் தொடரும் போட்டிருக்கிறார், பார்ப்போம்


விளம்பரம் செய்து கொண்டு வாழ வேண்டுமானல் கூட கொஞ்சம் மிக பெரிய மனிதர்களின் உதவி தேவைப்படும், சாரு அப்படியும் கூட யாரிடமும் ஆதாயம் தேடுவதாக தெரியவில்லை, தன் வாசகர்களை கூட சில நேரம் திட்டிவிடுகிறார்
 
சாருவின் எழுத்தையெல்லாம் மதித்துப் பேசுவது நமக்கு தேவையற்றது. அவர் எப்போதுமே ஏறுக்கு மாறாகத்தான் எழுதுவார்.
 
Last edited:
பொதுவாகவே நாலுபேர் படம் நல்லாயிருக்குன்னு சொன்னபிறகுதான் ஒரு படத்தை பார்ப்பது நமது வழக்கம்… பாலாஜி சக்திவேல் அவர்களின் படங்களுக்கு அந்த ஆராய்ச்சியெல்லாம் அவசியமில்லை என்று அறிந்திருந்தாலும் நேற்றுதான் எனக்கு இந்தபடத்தை காணும் வாய்ப்பு கிட்டியது…!!

இந்த படத்தில் சமூகத்தின் இருவேறு தளங்களை ஒரே கதையில் பிரதிபலிக்கும் வகையில் திரைக்கதை அமைத்திருப்பது தமிழ்திரைக்கு உயிரோட்டம் கொடுப்பதுபோல் உள்ளது. கந்துவட்டி கொடுமை, சிறுவர் கொத்தடிமைதனம், பெண்கள் மீதான பாலியல் வன்முறை/வக்கிரம், அப்பாவிகள் மீதான அதிகார துஷ்பிரயோகம் இப்படி சமூகத்தின் மனிதாபிமானமற்ற செயல்களை தோலுரித்துகாட்டிய அதே சமயம் பசிமயக்கத்தில் கிடக்கும் வேலுவுக்கு உணவூட்டும் திருநங்கை, அதே திருநங்கையை திருந்திவாழ சொல்லி கெஞ்சும் வேலு, வேலுவுக்காக வீராப்பாகபேசி வேலையைவிட்டு போகும் கூத்தாடி சிறுவன், மனநலம் குன்றிய சிறுவனிடம் ஜோதி காட்டும் அன்பு, குற்ற உணர்வால் தானாக முன்வந்து போலிசிடம் உண்மையை ஒப்புவிக்கும் ஆர்த்தியின் செயல் இப்படி படம் நெடுக மனிதாபிமானம் இன்னும் மரித்துபோய்விடவில்லை என்பதை அழகாக காட்சிபடுத்தியிருக்கும் பாலாஜி சார் அவர்களை எப்படி பாராட்டினாலும் தகும்.

அதிலும் திருநங்கையை திருந்தசொல்லி கெஞ்சும்போது பிண்ணனியில் “ஆறாத மனபுண்ணை ஆற்றிடுவாள்.. அன்னை தீராத துயர்தன்னை தீர்த்திடுவாள்..” என்ற பாடல் வானொலியில் ஒலிப்பது காட்சியமைப்பில் இயக்குனரின் நேர்த்தியை வெளிபடுத்துகிறது…!! அதேபோல் பார்டிக்கு போக அனுமதி மறுக்கபடும் இடத்தில் தன் இயலாமையையும் தந்தையின் மீதான கோபத்தையும் முகத்தில் வெளிபடுத்தும்போது ஆர்த்தியின் நடிப்பில் அத்தனை யதார்த்தம்..!! தான் ஏமாற்றபட்டோம் என்றுணர்ந்த கணத்தில் திருந்தி சூழ்நிலையை லாவகமாக எதிர்கொள்ள முயலும் ஆர்த்தியின் பாத்திரபடைப்பு இன்றைய பெண்கள்மீது நம்பிக்கையூட்டும் வகையில் அமைந்திருக்கிறது..!! அறிவியல் வளர்ந்த அளவுக்கு நம் சந்ததிக்கு இன்னும் அறிவும் மனமும் வளரவில்லை என்பதை தினேஷ் பாத்திரம்மூலம் தெளிவாக எடுத்துகாட்டியிருக்கிறார் இயக்குனர்..!!

இப்படத்தில் இயக்குனர் பிரச்சார நெடியேதுமின்றி பல நல்ல கருத்துகளை படம்நெடுக ஊன்றியிருந்தாலும் அதில் பிரதானமாக இருப்பது இன்றைய நவீனயுகத்தில் பெண்கள்மீதான பாலியல் தொந்தரவு/வன்முறை எந்தவகையில் எவ்வளவு நேர்த்தியாக தொடுக்கபடுகிறது என்பதையும், மனம் பக்குவபடாத பெண்கள் எப்படியெல்லாம் நெகிழ்வுக்குள்ளாகி பகட்டுக்கு பலியாகி விட்டில்பூச்சியாய் வீழ்ச்சியடைகிறார்கள் என்பதையும் சமூகத்திற்க்கு தெளிவாக எடுத்துகாட்டி எச்சரிப்பதுதான்..!!

ஜோதிக்காக பொய்வழக்கில் சிறைசெல்லும் வேலுவின் பாத்திரம் காதலுக்கு இலக்கணம் வகுக்கிறது..!! உண்மையறிந்து வெகுண்டெழுந்து வேலுவை மீட்டு நீதியை நிலைநாட்டும் இடத்தில் ஜோதியின் பாத்திரம் நவயுக கண்ணகியாகவே காட்சி அளிக்கிறது..!!

மேலாண்மை பொன்னுசாமி அவர்களுடைய “ராசாத்திகள்” சிறுகதையில் கடைசியாக இப்படி முடித்திருப்பார்…

”சமூகம் என்பது…
பலமானவர்களுக்கு சிம்மாசனம்..
பலவீனர்களுக்கு பலிபீடம்….
துணிந்தவர்களுக்கு போர்களம்…!!”


அந்த உண்மையை, யதார்த்ததை அழுத்தம் திருத்தமாக திரையில் பதிவுசெய்திருக்கும் இயக்குனர் பாலாஜி சக்திவேல் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல..!!
 
அன்புள்ள ஆதனுக்கு….,
நீ சொன்ன சாரு சார் விமர்சனத்தை படித்தேன்… படிக்க படிக்க இதழோரம் புன்னகைதான் அரும்புகிறது..!! அவர் எங்கே படத்தை பற்றி விமர்சித்திருக்கிறார்… முழுக்க முழுக்க தன்னை பற்றியே அல்லவா சிலாகித்திருக்கிறார்…!! அந்த தகவலை நீ இங்கே மன்றத்தில் பகிர்ந்திருப்பது அவருக்கு ஒரு விளம்பர முகவராக நீ செயல்படுவது போன்ற தோற்றத்தைதான் ஏற்படுத்துகிறது… இதுபற்றி சற்று சிந்தித்தால் நலம் நண்பனே..!!
 
நானும் தியேட்டர் சென்று இந்தப் படத்தைப் பார்க்கவேண்டும் என்று நினைத்திருக்கிறேன். படம் நன்றாக வந்திருப்பதுகுறித்து மிகவும் மகிழ்ச்சி.
 
அன்புள்ள ஆதனுக்கு….,
நீ சொன்ன சாரு சார் விமர்சனத்தை படித்தேன்… படிக்க படிக்க இதழோரம் புன்னகைதான் அரும்புகிறது..!! அவர் எங்கே படத்தை பற்றி விமர்சித்திருக்கிறார்… முழுக்க முழுக்க தன்னை பற்றியே அல்லவா சிலாகித்திருக்கிறார்…!! அந்த தகவலை நீ இங்கே மன்றத்தில் பகிர்ந்திருப்பது அவருக்கு ஒரு விளம்பர முகவராக நீ செயல்படுவது போன்ற தோற்றத்தைதான் ஏற்படுத்துகிறது… இதுபற்றி சற்று சிந்தித்தால் நலம் நண்பனே..!!

அவருக்கு விளம்பரம் எல்லாம் தேடல சுபி

மன்றத்தில் அவரின் எதிர்மரை விமர்சனம் குறித்த* குறிப்பிட்ட*மைக்கு கார*ண*ம் இர*ண்டு

1) ஆதவாவும் அவரின் வலைமனைக்கு அதிகமாக போய் வருவார் அந்த முறையில் சொன்னேன், பொதுவில் சொன்னதால், விவாதம் வளர ஆரம்பித்துவிட்டது

2) தமிழ் திரையுலகில் உலகத்தரம் என்று குறி வைத்து எடுக்கப்படும் படங்கள் அனைத்தும், வன்முறையும், கூலிப்படைகளின் கதையும், ஏழைகள், இருட்டு தொழில் செய்பவர்கள் என்று திரும்ப திரும்ப ஒரே கதையை எடுக்கும் விதமாகவே இருக்கிறது, மண் சார்ந்த கதைகளை ஏன் நம்மால் எடுக்க இயல்வதே இல்லை, சமூகம் வெறும் வக்கிரத்தாலும், அடிமைகளாலும், அதிகாரவர்கத்தின் பிடியிலும் மட்டுமே இருக்கிறது என்பதை போன்ற மாயையை ஏன் இது போன்ற திரைப்படங்கள் உருவாக்க முயல்கின்றன. இந்த சமூகம் முழுமையும் புனரமைக்க வேண்டியதாய் இல்லை, இந்த சமூகம் முழுமையும் கறை படிந்ததாய் இல்லை, இந்த சமூகம் முழுமையும் இருள் படர்ந்ததாய் இல்லை, ஆனால் அப்படித்தான் நாம் பாவணை செய்ய முயல்கிறோம். ஒரு படம் என்றால் பரவா இல்லை சுபி, தொடர்ந்து இது போன்ற படங்கள், மக்களை அவநம்பிக்கைக்கும், விரக்திக்கும், அச்சத்திற்கும், தனித்தியங்க முடியாது எனுன்ம் நிலைக்கும், முழுமுற்றாய் கெட்டுப் போன ஒரு சமூகத்தில் வாழ்கிறோம் எனும் தீர்மானதுக்கும் கொண்டு செல்வதாய் இருக்கிறது. இது போன்ற படங்கள் பாராட்டுக்கள் எவ்வளவு அவசியமோ, எதிர்ப்பு அவ்வளவும் அவசியம் என்று கருத வேண்டியிருக்கிறது.

சாரு பெரும்பாலும் தன்னுடைய எல்லா கட்டுரைகளிலும் தன்னை பற்றி பேசுவது வழக்கம், இது சாரு மட்டுமல்ல சுபி பல எழுத்தாளர்களும் செய்வதுதான்
 
Last edited:
இன்னும் இத்திரைப்படத்தை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.................
DVD யில் பார்க்க கூடாது என்ற முடிவோடு இருப்பதால்,
இரண்டாம் சுற்றில் திரையரங்குக்கு படம் வரும் வரை காத்திருக்கின்றேன்
 
ஒரு படத்தை காட்சிக்கு காட்சி எவ்வளவு அழகாக செதுக்க வேண்டுமோ அப்படி அழகாக செதுக்கி இருக்கிறார்கள். அதற்காக தமிழ் படத்தை அடுத்த தரத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார் என்று சொல்லுவதெல்லாம் கொஞ்சம் அதிகம்.

சம்பந்தமே இல்லாத இரு கதைகள். ஒன்று கீழ் மட்டக் காதல். மற்றொன்று மாணவப் பருவத்து மோகம். மாணவியின் வீட்டில் வேலை செய்கிறாள் என்பதை தவிர இரண்டு கதைக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. கதாநாயகனின் இளமை காலம், அவனது பெற்றோர், அவன் முறுக்கு சுடுவது, கூத்து பட்டரை நண்பன், உதவி செய்யும் விலை மகள் - இதற்கும் கதைக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. கடைசி 30 நிமிடம் தான் கதை.
என்னமோ தெரியவில்லை... வசதியானவர்கள் எல்லொருமே போலியாக இருக்கிறார்கள். பிளாட்பாரதில் இருப்பவர்கள் உண்மையாக இருக்கிறார்கள் என்று சொல்லும் தமிழ் பட மனப் பாண்மை இன்னும் எத்தனை வருஷத்துக்கு செல்லுமோ. மாணிக்கம் MGR முதல் வழக்கு எண் வேலு வரை அதே நிலை தான்.

சரி எதார்தத்தை காண்பிக்கிறேன் என்று சொல்லிவிட்டு, கடைசியில் நாயகி ஆசிட் ஊத்துவது மாதிரி காட்டுவது எப்படி எதார்த்தம் ஆகும்? பழிக்கு பழி வாங்கும் வழக்கமான கதையா? இல்லை பயந்து பயந்து வாழும் நாயகனின் கதை சொல்லும் வழக்கமான கதையா? இல்லை மேல் மட்ட மக்களின் போலி வாழ்க்கை கதை சொல்லும் வழக்கமான கதையா? இப்படி எல்லா வழக்கமான கதைகளையும் சொல்லும் கலந்த வழக்கமான கதையா?

குதிரை பயணம் போல சம்பந்தம் இல்லாத ஒவ்வொரு ஊராக செல்கிறது கதை.
 
Last edited:
மனுஷ்யபுத்ரன் இந்த படத்தைப் பற்றி தவறாக எழுதிவிட்டதால் அவரை திட்டி அறிவுமதியும் எடிட்டர் மோகனும் பேசியதாக செய்தியில் படித்தேன். ஒரு படம் திரைக்கு வந்தாலே அதைப் பற்றி இரண்டு விதமான விமர்சனங்கள் வரும். ஆகையால் அதை அப்படியே எடுத்துக்கொள்ளவேண்டுமேஒழிய அதை விமர்சித்து எழுதியவர்மேல் கோபப்படக்கூடாது.

படம் நன்றாக வந்திருப்பது குறித்து மிகவும் சந்தோஷம். படத்தை எப்படியும் பார்க்கவேண்டும் என்ற முடிவோடவே நான் இருக்கிறேன். நிச்சயம் பார்த்துவிடுவேன்.
 
பொதுவாக அதிகம் படம் பார்ப்பதில்லை. நேற்று தான் இந்த படம் பார்த்தேன்.
நம் தமிழ் சினிமாவின் அம்சங்களான காமெடி இல்லை, டூயட் பாடல் இல்லை, சண்டை இல்லை.
ஆனால் படம் முழுவதும் நம் பக்கத்து வீட்டில் நடப்பதை பார்ப்பது போல் இருந்தது.

விவசாய குடும்பமும், சேரிப்புற குடும்பமும், மேல்த்தட்டு குடும்பமும், காவல் துறையும் யதார்த்தமாய் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த இன்ஸ்பெக்டரை மட்டும் வேறு ஏதோ ஒரு படத்தில் பார்த்த நினைவு. பூ படத்தில் பேனாக்காரராக வருவாரே அவரா? வெகு இயல்பானநடிப்பு.

கதையின் படி யோசித்தால் அந்த பணக்கார பெண்ணும் அந்த பையனும் எப்படியும் படித்து ஒரு வெளிநாட்டில் போய் செட்டிலாகி விடுவார்கள்.
வேலைக்கார பெண்ணும் அந்த பையனும் ஜெயிலுக்கு போய் வந்தவர்கள் என்ற அவப்பெயருடன் காலத்தை ஓட்ட வேண்டும். இது தான் இன்றைய யதார்த்தமும் கூட.

நீதி மன்றம் யதார்த்தமாய் காட்டப்பட்டிருந்தது. பல படங்களில் வக்கீல்கள் அருமையாய் வாதிடுவர். நீதிபதி குற்றம் சாட்டப்பட்டவரிடம் நிதானமாய் விசாரித்து விட்டு பெரும் யோசனைக்கு பின் தீர்ப்பு வழங்குவார். ஆனால் இந்த படத்தில் தான் நிஜ நீதிமன்றம் போல் நீதிபதிக்கும் குற்றம் சாட்டப்பட்டவருக்கும் இடையில் சாதாரணமாய் மெதுவாய் பேசினால் கேட்க முடியாத படி தூரத்தை காட்டியிருக்கிறார்கள்.

படத்தின் படி செலவு செய்ய வசதி இல்லாதவர்கள் கூடுமான வரை காவல் துறையிடம் விசாரணைக்காக கூட மாட்டாமல் இருப்பது நல்லது என காட்டியிருக்கிறார் இயக்குனர். இது நிஜம்.
 
மன்றத்தில் இந்த படத்தின் விமரிசனத்தை படித்துவிட்டு இதை தரவிறக்கம் செய்து பார்த்தேன். பில்லா 2 படத்தை பார்த்து நொந்து போயிருந்த எனக்கு இந்த படம் தமிழ் படங்களில் நல்ல படங்களை எதிர்பார்க்கும் ஆவலை தூண்டியிருக்கிறது. இயக்குனர் பாலாஜி சக்திவேலுக்கும் இந்த படக் கலைஞர்களுக்கும் என் பாராட்டுக்கள். படம் மனதை தொட்டுவிட்டது.
 
நானும் மன்ற விமர்சனம் படித்தே தரவிறக்கிப் பார்த்தேன். கொஞ்சம் யதார்த்தம் கொஞ்சம் சினிமாத்தனம். கொஞ்சம் மேதாவித்தனம் என எல்லாம் கலந்த கலவைதான் இந்த பதார்த்தம். பில்லா ஒஸ்தி போன்ற படங்களுக்கு இந்த படம் 1000 மடங்கு தேவலாம்.

ஆனால் எதார்த்தத்தைக் காட்டுவதாகச்சொல்லி மக்களை வசியப்படுத்தி பின் சினிமாத்தனமாகத்தான் முடிப்பது என்னும் கட்டாயத்துக்கு ஆளான சக்திவேல் பாலாஜியையும் குறை சொல்ல இயலவில்லை.

மிக அழகான யதார்த்தத்தைக் காட்டிய ‘’ பயணம் ‘’ ‘’ எங்கேயும் எப்போதும் ‘’ போன்ற படங்கள் தோல்வியைத்தழுவியதால் ஏற்பட்ட ஞானமோ என்னவோ..

மொத்தத்தில் சிலாகிக்கும் படிதான் இந்த படம் இருக்கிறது என்பதில் ஐயமில்லை.
 
இங்கு நடந்த விவாதத்தினை வாசித்த பிறகு சாருவின் விமர்சனம் பார்த்தேன். குமட்டிக்கொண்டுதான் வந்தது.

மேனியாக் சினிக் சைக்கோ ஃபோபியா போன்ற வரிசையில் அவரை எப்போதோ சேர்த்துவிட்டேன். அது மீண்டும் மீண்டும் நிரூபனமாகிறது. அவ்வளவுதான்.

இப்போதெல்லாம் இலக்கிய உலகில் மனுஷ்யபுத்திரன் ஜெயமோகன் சாரு யுவா கிருஷ்ணா போன்ற கொசுத்தொல்லை கொஞ்சம் அதிகம் தான்.

தம்மை கனமான மேதாவிகளாகக் காட்டிக்கொள்ள அவர்கள் படும் பாடு இருக்கிறதே.. தமாஷ் தான் போங்க..!
 
கீழை நாடானின் கருத்துரை, கனக்கச்சிதம்..!

மிகவும் நன்றி.
சந்தித்து நீண்ட நாட்களாகி விட்டது. மீண்டும் சந்தித்தமையில் மிக மகிழ்ச்சி.
 
Back
Top