வழக்கு எண் : 18/9

ஆதவா

New member
வழக்கு எண் : 18/9

ஒரு தமிழ் சினிமா அதன் உறுப்புகளின் உச்சத்தைத் தொட்டு நின்றால் எப்படி இருந்திருக்கும்?? அப்படித்தான் “வழக்கு எண் : 18/9 படம்!

சமூகத்தில் இரண்டு நிலையிலான காதலும், அதிகாரமும், செல்வாக்கும், பணமும், ஒரு ஏழை அநாதை இளைஞனை எப்படியெல்லாம் பாதிப்படையச் செய்கிறது என்பதை வலிமையான உணர்வோடு சொல்லுகிறது வழக்கு எண் 18/9.

மிக மிக இயல்பான நடிப்பு, வசனம், கூர்மையான நுண்ணுணர்வுடன் கூடிய காட்சிகள், அட்டகாசமான அல்லது உலகத்தரமான திரைக்கதையமைப்பு, சிறிதும் பிழையேதுமற்ற இயக்கம்..... தமிழ் சினிமாவின் உண்மையான உலக நாயகன் இயக்குனர் திரு பாலாஜி சக்திவேல்.!!

வேலைக்காரிக்கு ஆசிட் கிடைப்பது எப்படி என்ற ஒற்றை பிழையோடு படம் முடிந்தாலும் படத்தைப் பாராட்டாமல் வெளியேறுபவர்கள் வெகு குறைவு!!!

மிக முக்கியமான, அனைவரும் அவசியம் பார்க்கக் கூடிய, உலகளாவிய தரத்துடன் கூடிய இயக்கமுள்ள, சமூக விளிம்பு நிலை மக்களின் அன்றாட நிலையை பிரதிபலிக்கக் கூடிய படம்!!

ஒருமுறையேனும் பார்க்காதவர்களுக்கு அது மிகப்பெரிய இழப்பாக இருக்கக் கூடும்!!
அவ்வளவுதான் சொல்லுவேன்,
 
நேற்றுதான் இந்தப்படத்தை முழுவதுமாய் பார்த்தேன். தியேட்டரில் சென்று பார்க்காத குற்ற உணர்வுடன் பார்த்தேன். மனசு பாதித்தது. யோசிக்கவும் திராணியில்லாமல் அசந்து அமர்ந்துவிட்டேன். தமிழில் உலகத்தரமுள்ள இப்படியோர் படமா....வாழ்த்துக்கள் பாலாஜி சக்திவேல். உண்மையிலேயே மிக மிக நல்ல திரைப்படம் ஆதவா. மனசு நெகிழ்ந்துவிட்டது.

ஒரேயொரு குறைதான்....இதில் நடிக்க ஏன் தமிழ் நடிகர்கள் கிடைக்கவில்லையா....

இருந்தாலும் மிக நல்லப் படைப்பைக் கொடுத்ததால்....மகிழ்ச்சி. நன்றி ஆதவா.
 
Last edited:
ஒரு வழக்கின் விசாரணையே முழுக்கதையும்

ஒரு இளைஞன் விசாரிக்கப்படுகிறான்

ஒரு இளம்பெண் சாட்சியம் சொல்கிறாள்

அந்த பையன் தன் கதையையும், தன்னுடைய காதலையும் சொல்கிறான்

அந்த பெண் அந்த பையன் சொன்ன கதையில் விடுப்பட்ட இடங்களை நிரப்புகிறாள்

பாலாஜி சக்திவேல் ஒரு சிறந்த கதைசொல்லியாகவும் தென்படுகிறார் எனக்கு

விளிம்புநிலை காதல் மேல்வர்க்க பையன்களுக்கு சுலபாமாக கிடைத்துவிடும் சில வசதிகள் அவர்களை அலைத்து செல்லும் தவறான பாதை, பெண்கள் மீது அவர்கள் வைத்திருக்கும் அசிங்கமான அனுமானம்

பணம் என்ன எல்லாம் செய்கிறது என்னும் மிக சாதாரண விடயங்கள், ஆனால் சொன்ன விதம் கதையை நகர்த்திய விதம் மிக மிக புதிது

ரோசி அக்கா பாத்திரம் மிக சிறப்பு ஆனால் யாரும் அதைப்பற்றி பேச மாட்ராங்க, இன்ஸ் எல்லாத்தையும் அள்ளிக்கிட்டு போய்டுறார்

எங்க ஊர்காரர் என்று சொல்லி மார்த்திட்டி பெருமைப்பட வைத்துவிட்டார் பாலாஜி சக்திவேல்
 
Last edited:
இன்னும் எத்தனைமுறை பாராட்டினாலும் தகும். ஆனால் நமது மன்றத்து மக்களின் ரசிப்புத்தன்மையின்மேல் சற்றே சந்தேகம் வருகிறது. ஆதவன் ஆரம்பித்த திரிக்கு...இதுவரை இரண்டே பதிலுரைதான் வந்திருக்கிறது. குத்தாட்டம்தான் வெற்றிபெறுமா....? இப்படத்தை ரசிக்கும் அளவுக்கு....இவர்களின் ரசிப்புத்தன்மை வளரவில்லையென்பதே உண்மை.!

வாழ்த்துக்கள் பாலாஜி சக்திவேல். தமிழனென்று பெருமைப்பட வைத்தமைக்கு...நன்றிகள்.
 
நேற்று இந்த படத்தை திரையரங்கில் சென்று பார்த்தேன்....

சினிமாத்தனம் சிறிதும் இல்லாத, இயல்பான, மனதை தொடும் விதத்தில், நேர்த்தியாக இருக்கிறது படம்.

இந்தக்கால இளசுகளை அப்படியே படமாக்கி இருக்கும் பாலாஜி சக்திவேலை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

ஒரு நல்ல படத்திற்கு நட்சத்திர அந்தஸ்துள்ள நடிகர்களோ,மசாலாத்தனமோ சிறிதும் வேண்டாம் என்பதை நிரூபித்துள்ளார்..

தியேட்டரை விட்டு வந்தபிறகும் மிக நீண்ட நேரம் மனதை ஏதோ செய்து கொண்டே இருந்தது..

தமிழ்நாட்டிலும் சத்யஜித்ரே போன்ற ஒரு கலைஞன் இருக்கிறான் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் இயக்குனர் பாலாஜி சக்திவேல்..

ஒரு திரைப்படம் முடிந்த பிறகு நிறைய பேர் எழுந்து நின்று கைதட்டியதை பார்க்கும்போது தமிழர்கள் நல்ல திரைப்படங்களை வரவேற்க தயங்குவதில்லை என்பது விளங்கியது. இது போன்ற கைதட்டல்களை நான் இதுவரை பார்த்ததில்லை.

இதைப்போன்ற படங்கள் மீண்டும் மீண்டும் வர, இப்படத்தை நிச்சயம் வெற்றிப்படமாக்க வேண்டும். அதற்காக இந்த திரைப்படத்தை நிச்சயம் திரையரங்கில் சென்று பாருங்கள்....
 
பாலாஜி சக்திவேல் ஒரு சிறந்த கதைசொல்லியாகவும் தென்படுகிறார் எனக்கு

ரோசி அக்கா பாத்திரம் மிக சிறப்பு ஆனால் யாரும் அதைப்பற்றி பேச மாட்ராங்க, இன்ஸ் எல்லாத்தையும் அள்ளிக்கிட்டு போய்டுறார்

எங்க ஊர்காரர் என்று சொல்லி மார்த்திட்டி பெருமைப்பட வைத்துவிட்டார் பாலாஜி சக்திவேல்

அவரை காதல் படத்திலிருந்தே பார்த்து வருகிறேன். தவிர எனக்கு தமன்னாவை முதன்முதலாகப் பிடிக்கக் காரணம் பாலாஜியின் கல்லூரி படத்தில் தமன்னா.. ஹிஹி//

ரோஸி அக்கா மாத்திரமல்ல, கூத்துக்கலை சிறுவன், இன்ஸ்பெக்டர், முகம்தெரியாத அமைச்சர், அவரது கீப்பு, கான்வெண்ட் கதாநாயகியின் கூர்மூக்கு தோழி, வேலைக்கார கதாநாயகியின் அம்மா, தள்ளுவண்டி கடைக்காரர்...... ஒவ்வொரு பாத்திரமும் சிறப்பானவையே!!

கல்லூரிக்குப்பிறகு வெகுநாட்களாக எதிர்பார்த்துக் கிடந்தேன். இனி மீண்டும்!!
 
இப்படி ஒரு விடயம் இருக்கா :)

ரோஸி அக்காவை குறிப்பாக சொன்னத்ற்கு காரணம் பலரும் அவரை பற்ரி மட்டும் பேசாமல் விட்டதால் தான் ஆதவா
 
காதல் பார்த்து வெளி வந்த போது ஒரு பிரமிப்பு இருந்தது. ..
அதைப்போல் 10 மடங்கு அதிக பிரம்மிப்பு தந்தது வ.எ 18/9
சான்ஸே இல்லை.. 2.30 மணி நேர சினிமாவில் இயக்குனர் சொல்லி இருப்பது கிட்டத்தட்ட 2 வருட நானா ? நீயா ? 3 வருடம் மெகா சீரியல் 5.
இதிகாசங்களிலும் புராணங்களிலும் கையாளப்பட்ட கதை சொல்லும் நேர்த்தி

அடேங்கப்பா...

ஆனால் கதை நெடுகிலும் வரும் மையக்க்ருவான சமுதாய அவலம் / கொடுமை படம் பார்த்து இத்தனை நாள் ஆகியும் கொஞ்சம் கூட மனம் விட்டு அகல மறுக்கிறது

படத்தின் நடிகர்கள் அனைவருக்கு நான் தலா ஒரு ஆஸ்கார் தர ஆசைப்படுகிறேன் ...
 
சாரு இந்த படத்தை பயங்கரமா திட்டி வச்சிருக்கார்
 
சாரு இந்த படத்தை பயங்கரமா திட்டி வச்சிருக்கார்

விளம்பரம் தேடிக்கொள்ள இது ஒரு வழி..

வேறென்ன சொல்ல ?

என்னன்னு திட்டி இருக்கார்? அதையும் பகிருஙளேன். பார்ப்போம்
 
அப்படி யாரையும் ஒரேய*டியாய் புறக்கணித்துவிட முடியாது, எனக்கு சாருவின் விமர்சனத்தில் உடன்பாடு கிடையாது, அதற்காக அவரின் விமர்சனம் தப்பு என்று சொல்ல மாட்டேன், அது அவரின் அனுபவம் அவ்வளவுதான், அதை ஏற்கவும் நிராகரிக்கவும் எனக்கு உரிமை உண்டு, அது போல அந்த படத்தை ஆக சிறந்தப்படம் என்றும், நல்லப்படமில்லை என்றும் சொல்ல அவருக்கு உரிமை உண்டு.
 
இந்த படம் நான் வெகு நாட்களாகவே பார்க்கவேண்டும் என்று காத்திருந்து பார்த்தேன்...

இயல்பான கதை... சினிமாவுக்கே உண்டான செயற்கைத்தனம் சிறிதும் இல்லை.. கதாநாயகனின் காரைப்படிந்த பற்களுடனான வெள்ளந்தி சிரிப்பும், நேர்மை குணமும்...

கூத்துக்கலை சிறுவனின் அசால்டான சிரிப்பும் நடிப்பும்....

வில்லனாக அறிமுகமாகி ஆசிட் ஊற்றிய பையன், மொபைல் மூலமாக எல்லோருக்கும் விருந்தாக்கியதை காணும்போது அவனை அடிக்க எனக்கே கை பரபரத்தது உண்மை...

ரோஸ் அக்காவின் நல்ல குணத்தை படத்தில் இட்லி வாங்கிக்கொடுத்து குடிக்க நீரும் வாங்கிக்கொடுத்து பிழைக்க வேலையும் வாங்கிக்கொடுத்ததை பார்த்தபோது இப்படியும் நல்லவர்கள் இருக்கிறார்கள் சேற்றில் செந்தாமரையாக என்று அறிய முடிந்தது.

கதாநாயகியாக வரும் வேலைக்கார சிறுமியின் களங்கமில்லா முகம் சிதைக்கப்பட்டது கண்டு மனம் வேதனையானது...

போலிசுக்கு கதாநாயகன் தவறு செய்யவில்லை என்று தெரிந்தும் பணத்துக்கு ஆசைப்பட்டு அடி அடி என்று அடித்ததை பார்க்கும்போது போலிசுகள் மேல் வெறுப்பு தோன்றியது...

படம் ரொம்ப அருமை... எல்லோரின் பங்கும் இதில் பெஸ்ட்டாக இருந்தது என்றால் மிகையில்லை. இவர்களை எல்லாம் அந்த அந்த கதாப்பாத்திரமாகவே உலவவிட்ட பாலாஜி சக்திவேல் அவர்களுக்கு என் சல்யூட்....

விமர்சனம் பகிர்ந்த ஆதவாக்கு என் அன்பு நன்றிகள்...
 
இன்னும் எத்தனைமுறை பாராட்டினாலும் தகும். ஆனால் நமது மன்றத்து மக்களின் ரசிப்புத்தன்மையின்மேல் சற்றே சந்தேகம் வருகிறது. ஆதவன் ஆரம்பித்த திரிக்கு...இதுவரை இரண்டே பதிலுரைதான் வந்திருக்கிறது. குத்தாட்டம்தான் வெற்றிபெறுமா....? இப்படத்தை ரசிக்கும் அளவுக்கு....இவர்களின் ரசிப்புத்தன்மை வளரவில்லையென்பதே உண்மை.!

வாழ்த்துக்கள் பாலாஜி சக்திவேல். தமிழனென்று பெருமைப்பட வைத்தமைக்கு...நன்றிகள்.

கோபப்படும் ஐக்கான்...

@##$%%&**(()&%#@#@@### = இதெல்லாம் நான் உங்களைத்திட்டியது
:sport-smiley-002: = டிஷ்ஷும் டிஷ்ஷும் இது உங்களை அடிச்சது...
:icon_dance: ஹைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா இது எதுக்குன்னு நான் சொல்லனுமா சிவா? இன்னைக்கு எப்டியும் கால் வருமே எனக்கு உங்கக்கிட்ட இருந்து அதுக்கு தான் :)
 
சாரு இந்த படத்தை பயங்கரமா திட்டி வச்சிருக்கார்

முதல்ல அவர படத்த முழுக்க பார்க்கச் சொல்லுங்க ஆதி!! இடைவேளையிலயே ஓடி வந்துட்டாராம்!
 
முதல்ல அவர படத்த முழுக்க பார்க்கச் சொல்லுங்க ஆதி!! இடைவேளையிலயே ஓடி வந்துட்டாராம்!

அதுவும் அவர் உரிமை தானே ஆதவா, அவருக்கு ஒரு மடல் எழுதலாம் என்றிருந்தேன், இப்போது இருக்கும் மனநிலையில் அதற்கெல்லாம் நேரமில்லை
 
அதுவும் அவர் உரிமை தானே ஆதவா, அவருக்கு ஒரு மடல் எழுதலாம் என்றிருந்தேன், இப்போது இருக்கும் மனநிலையில் அதற்கெல்லாம் நேரமில்லை

ஒரு படத்தை பார்ப்பதும், பார்க்காததும், இடைவேளையிலேயே காறித்துப்பி எழுந்து வருவதும் அவரவர் உரிமைதான். ஆனால் முழுதாகப் பார்க்காத ஒரு படத்தைப் பற்றிப் பேசுவது மிகவும் தவறான விமர்சன முறையல்லவா? இது எப்படி இருக்கிறது என்றால் பாதி கவிதையைப் படித்துவிட்டு கவிதை ஒரு குப்பை என்று சொல்லுவதைப் போல இருக்கிறது. சரி படத்தில் என்ன கோளாறு அதாவது, படமே பார்க்க முடியாத அளவுக்கு என்ன பிரச்சனை என்று சொல்வாரென்று பார்த்தால் அதையும் சொல்லக் காணோம்...
 
அவரு என்னைக்கு நேரடியா விசயத்துக்கு வந்திருக்கார் ? படைப்பாளியையும் அல்லவா வஞ்சுக்கிட்டு இருக்கார், நாட்டியக்காரி வேறு நாட்டியம் வேறு என்று கட்டுடைத்த தெரிதாவை கொண்டாடிக் கொண்டு, நாட்டியத்தை குறை சொல்லாமல் நாட்டியக்காரியை விமர்சிப்பது சரியில்லை தானே ?

இப்படி நிறைய சுட்டிக் காட்டலாம், ஆனால் என்னையும் என் குடும்பதையும் அதுக்காக திட்டினாலும் ஆட்சர்யப்படுவதற்கு இல்லை, அது ஏதாவது நிகழ்ந்தால் ஒரு நல்லப்படைப்பாளியை வெறுக்க வேண்டிய சூழல் உருவாகிவிடும், அப்படி வெறுத்துவிட கூடாது என்பதன் முன்னெச்சரிக்கையாலேயே எழுதவில்லை
 
அப்படி யாரையும் ஒரேய*டியாய் புறக்கணித்துவிட முடியாது, எனக்கு சாருவின் விமர்சனத்தில் உடன்பாடு கிடையாது, அதற்காக அவரின் விமர்சனம் தப்பு என்று சொல்ல மாட்டேன், அது அவரின் அனுபவம் அவ்வளவுதான், அதை ஏற்கவும் நிராகரிக்கவும் எனக்கு உரிமை உண்டு, அது போல அந்த படத்தை ஆக சிறந்தப்படம் என்றும், நல்லப்படமில்லை என்றும் சொல்ல அவருக்கு உரிமை உண்டு.

நானும் அவருடைய வலைத்தளத்தில் அவர் எழுதியிருந்த விமர்சனத்தை படித்தேன்..

பாதியிலேயே எழுந்து வந்து விட்டதாக எழுதியிருந்தார். பாதியிலேயே எழுந்து வந்ததற்கான வலுவான காரணம் எதுவும் அவர் குறிப்பிடவில்லை. எதார்த்தம் என்பதை இந்த இயக்குனர் கையாண்ட விதத்தையும் சாடி இருக்கிறார்.

மேலும் இப்படத்தின் தயாரிப்பாளர் லிங்குசாமி அவர்களின் இயக்கத்தில் வந்த ரன் படத்தை சிலாகித்து எழுதியிருந்தார். அந்த படம் அளவுக்கு இந்தப்படம் விறுவிறுப்பாக இல்லையாம்.. அதனால் இந்தப்படம் குப்பை என்றும் விமர்சித்திருக்கிறார்.

ரன் படத்தை நான் குறை சொல்ல விரும்பவில்லை. அதே சமயம், அந்த மசாலா கதையை எடுத்த விதத்தையும், இந்த இயல்பான படத்தை எடுத்த விதத்தையும் ஒப்பிட்டு எழுதுவது தன்னை ஒரு படைப்பாளி என்று கூறிக்கொள்பவருக்கு அழகல்ல. இந்த படத்தை வேறெப்படி எடுக்க முடியும் ??

எந்த ஒரு வலுவான காரணம் இல்லாமல் ஒரு தரமான படத்தை விமர்சிப்பதை , விளம்பரத்திற்காக இல்லாமல் வேறு எதற்காக என்று எடுத்துக்கொள்வது??

ஒன்று செய்வோம்... இந்த படத்தை எப்படி எடுப்பது என்பதை அவரே சொல்லட்டும் அல்லது எடுத்துக்காட்டடும்..

படத்தை பார்க்கும்போதோ அல்லது விமர்சனம் எழுதும்போதோ நிலையில் இல்லாமல் இருந்திருப்பாரோ என்ற சந்தேகம் வருகிறது...
 
சாருவின் மனநிலையில் இப்படம் அவருக்கு நல்ல படமாகத் தெரியவில்லை போலும். சாருவின் விமர்சனத்தால் எந்த வித பலனும் ஏற்படப்போவதில்லை.
 
Back
Top