நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சுயசரிதை (இறுதி பகுதி)

நடிகர் திலகத்தின் சுயசரிதை(92):1990 - 2000 வெளியான படங்கள்


தேவர் மகன் படத்தில் கமல ஹாசனுடன்


ஒரு யாத்ர மொழி (1996) என்ற மலையாள படத்தில் மோஹன்லாலுடன்


பசும் பொன் படத்தில் ராதிகாவுடன்​

தொடரும்...
 
மலையாளத்தில் மோகன்லாலுடன் நடிகர் திலகம் நடித்த செய்தி எனக்குப் புதிது. தொடரும் புகைப்படப் பகிர்வுகளுக்கு மிகவும் நன்றி மதுரை மைந்தன் அண்ணா.
 
மலையாளத்தில் மோகன்லாலுடன் நடிகர் திலகம் நடித்த செய்தி எனக்குப் புதிது. தொடரும் புகைப்படப் பகிர்வுகளுக்கு மிகவும் நன்றி மதுரை மைந்தன் அண்ணா.

நன்றி சகோதரி!
 
நடிகர் திலகத்தின் சுயசரிதை(93):டாக்டர் பட்டம்

டி.எஸ்.என்.: 1984ல் இந்திய அரசு உங்களுக்கு பதமபூஷண் விருதை வழங்கி கவுரவித்தது. அதற்கு பிறகு அண்ணாமலை பல்கலைகழகம் உங்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. இவற்றைப் பற்றி...?

சிவாஜி: நான் அந்த இரு சமயங்களிலும் மகிழ்ச்சி அடைந்தேன். பத்ம பூஷண் விருது எனக்கு நான் ஒரு நல்ல குடிமகன் என்பதற்காக வழங்கப்பட்டது. நான் அதை ஜனாதிபதி ஜாஹீர் ஹுசேன் கையில் பெறப்பெற்றேன். பலர் டாக்டர் பட்டம் பெறுவதைப் பற்றி பேசுவார்கள். ஆனால் எனக்கு அந்த* பட்டத்தைப் பற்றி ஒன்றும் தெரியாது. வெகு நாட்களுக்கு பிறகு தான் அந்த பட்டம் ஒருவர் தான் பணியாற்றும் துறையில் சிறந்து விள*ங்கினால் வழங்கப்படும் என்று அறிந்தேன்.

அண்ணாமலை பல்கலை கழகம் நான் ஒரு நல்ல நடிகன் என்று நினைத்திருப்பார்கள். எனது நல்ல நண்பர் எம்.ஏ.எம். ராமசாமி நான் இதற்கு தகுதியானவன் என்று எண்ணி எனக்கு இந்த பட்டம் கிடைக்க முயற்சிகள் எடுத்துக் கொண்டார். அவரின் முயற்சியால் எனக்கு இந்த பட்டம் கிடைத்தது. எனக்கு இந்த கவுரவம் அளிக்கப்பட்டதை பெருமையாக கருதுகிறேன்.

தொட*ரும்
 
நடிகர் திலகத்தின் சுயசரிதை(94): எம்.ஜி.ஆர் என்றைக்கும் நண்பர்

நடிகர் திலகத்தின் சுயசரிதை(94): எம்.ஜி.ஆர் என்றைக்கும் நண்பர்

டி.எஸ்.என்.: உங்கள் வாழ்க்கை வரலாற்றை புரட்டி பார்த்தால் ஒவ்வொரு மகிழ்ச்சியான நிகழ்ச்சிக்கு பின் ஒரு சோகமான் நிகழ்வு இருக்கிறது என எண்ணுகிறேன். உங்களுக்கு டாக்டர் பட்டம் கிடைத்த மறு ஆண்டு எம்.ஜி.ஆர். காலமானார். இது உங்களை வெகுவாக பாதித்திருக்குமா?

சிவாஜி: எம்.ஜி.ஆரும் நானும் சிறு வயதிலிருந்தே நண்பர்கள். எங்களுடைய வீடுகளுக்கு நாங்கள் அடிக்கடி விசிட் செய்வோம். அச்சமயங்களில் எங்களுடைய தாயார்கள் சமித்த சாப்பாட்டை சாப்பிடுவோம். எங்களுடைய நட்பின் கதையை நான் விவரிக்கிறேன்.

இரண்டாம் உலகப் போரின் முடிவிற்கு பின் 1943 1944ல் நான் சென்னையில் மத்திய ரயில் நிலயத்திற்கு அருகே வசித்து வந்தேன். அந்த சமயத்தில் தான் லஷ்மிகாந்தன் போன்ற நாடகங்களை அரங்கேற்றினோம். எம்.ஜி.ஆருடைய அன்னையும் மூத்த சகோதரர் எம்.ஜி.சக்ரபாணியும் எனது பக்கத்து வீட்டுக்காரர்கள். எம்.ஜி.ஆர் அப்பொழுது தான் படங்களில் நடிக்க தொடங்கியிருந்தார்.

நானும் எனது நண்பர் காக்கா ராதாகிருஷ்ணனும் அவர்கள் வீட்டுக்கு அடிக்கடி போய் வருவோம். நான் சாப்பாட்டு வேளைக்காக காத்திருப்பேன். எம்.ஜி.ஆர் தனக்கு பசிக்கிறது சாப்படு வேண்டும் என்றாலும் அவரது அன்னை நான் வரும் வரை பொறுத்திருக்க சொல்வார். அத்தனை அன்பு என்னிடம் அவருக்கு.



இரவு நேரங்களில் எம்.ஜி.ஆர். என்னையும் எனது நண்பர் காக்கா ராதாகிருஷ்ணனையும் சினிமாவுக்கு அழைத்து செல்வார். சினிமா விட்டு வரும் வழியில் எங்களுக்கு டின்னர் வாங்கி கொடுப்பார். எங்களுக்காக செலவு செய்வதில் அவர் தயங்க மாட்டார். நாளடைவில் எங்கள் நட்பு வளர்ந்தது, நான் காஞ்சீபுரம் சென்று அண்ணாவிடம் இணையும் வரை.

முதலில் எம்.ஜி.ஆர் நடிக்கவிருந்த சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் நாடகத்தில் நான் அவருக்கு பதிலாக நடித்தேன். என்ன காரணத்தாலோ அவர் அந்த பாத்திரத்தில் நடிக்க மறுத்தார். நான் நடித்தேன் அந்த பாத்திரத்தில். அது எங்களை பிரித்திருக்க கூடும். சில வருடங்களுக்கு பிறகு நான் சினிமாவில் சேர்ந்த போது எம்.ஜி.ஆரை சந்தித்தேன். நாங்கள் சினிமாவில் சமகாலத்தவர்கள். எங்களுக்கு அர்சியலில் ஈடுபாடும் இருந்தது.


ஒரே உறையில் இரண்டு கத்திகள் இருக்க முடியுமா? இருவருக்கும் நடிப்பில் ஒரே பாணி இருந்திருந்தால் எங்கள் ரசிகர்கள் ஒன்றாக இருந்திருப்பார்கள். ஆனால் நாங்கள் எங்களுடைய தனித்தனி பாதையில் இயங்கியதால் எங்களுடைய ரசிகர்களும் வேறுபட்டிருந்தார்கள். தனிப்பட்ட விரோதம் இல்லாத அரசியல் இது. பலர் இதை சீரியஸாக எடுத்துக் கொண்டு நாங்கள் எதிரிகள் என்று முடிவு கட்டினர். ஆனால் நாங்கள் அதை பொருட்படுத்தவில்லை.


தொடரும்
 
எம் ஜி ஆர் அவர்களுக்கும் சிவாஜி அவர்களுக்கும் இடையிலான ஆரம்பகால நட்பு பற்றி இப்போதுதான் அறிகிறேன். இரு வேறு பட்ட நடிப்பின் மூலம் ஒரு சமயத்தில் இருவேறுபட்ட ரசனையுள்ள ரசிகர்களைத் திருப்திப் படுத்தினார்கள் என்று நடிகர் திலகம் சொல்வதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். மாபெரும் அளவுக்கு அக்காலத்தில் திரைத்துறையை ஆக்கிரமித்திருந்தது அவர்களது ராஜாங்கம். கருத்தாழமிக்கப் பாடல்கள், அற்புதமானப் பின்னணிப் பாடகர்கள், வசீகரிக்கும் திரை இசை, தேர்ந்த திரைக்கதை, அபாரமான நடிப்பு என்று பலவகையிலும் திரைத்துறை கோலோச்சிய நாட்கள் அல்லவா அவை!

படங்களுடன் அருமையானத் தகவல்களைப் பதிவிடுவதற்கு நன்றி மதுரை மைந்தன் அண்ணா.
 
எம் ஜி ஆர் அவர்களுக்கும் சிவாஜி அவர்களுக்கும் இடையிலான ஆரம்பகால நட்பு பற்றி இப்போதுதான் அறிகிறேன். இரு வேறு பட்ட நடிப்பின் மூலம் ஒரு சமயத்தில் இருவேறுபட்ட ரசனையுள்ள ரசிகர்களைத் திருப்திப் படுத்தினார்கள் என்று நடிகர் திலகம் சொல்வதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். மாபெரும் அளவுக்கு அக்காலத்தில் திரைத்துறையை ஆக்கிரமித்திருந்தது அவர்களது ராஜாங்கம். கருத்தாழமிக்கப் பாடல்கள், அற்புதமானப் பின்னணிப் பாடகர்கள், வசீகரிக்கும் திரை இசை, தேர்ந்த திரைக்கதை, அபாரமான நடிப்பு என்று பலவகையிலும் திரைத்துறை கோலோச்சிய நாட்கள் அல்லவா அவை!

படங்களுடன் அருமையானத் தகவல்களைப் பதிவிடுவதற்கு நன்றி மதுரை மைந்தன் அண்ணா.

இந்த திரிக்கு நீங்கள் அளித்து வரும் தொடர்ந்த ஆதரவுக்கு மிக்க நன்றி சகோதரி!
 
நடிகர் திலகத்தின் சுயசரிதை(95): எம்.ஜி.ஆர் என்றைக்கும் நண்பர் (தொடர்ச்சி)

நடிகர் திலகத்தின் சுயசரிதை(95): எம்.ஜி.ஆர் என்றைக்கும் நண்பர் (தொடர்ச்சி)


சிவாஜி: பல வருடங்களுக்கு பிறகு எம்.ஜி.ஆர் தமிழக முதல்வரானார். அவருடைய பதவிக் காலத்தில் நான் அவரை பல முறை சந்திதிருக்கிறேன். அவரும் என்னுடன் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறார். அவரிடமிருந்து பல விருதுகள் எனக்கு கிடைத்திருக்கின்றன. எங்களுடைய நட்பு மாறாதிருந்தது.

எனக்கு சென்னையில் எம்.ஜி.ஆரின் சொந்தமான இடங்களுக்கு அருகில் எனக்கும் நிலங்கள் இருந்தன. எனது அன்னையின் மறைவுக்கு பிறகு அவருடைய சிலையை திறந்து வைக்க எம்.ஜி.ஆரை அழைத்தேன். அவர் உடனே ஒப்புக்கொண்டு எனது அன்னையை தனது அன்னையாக அவர் நினைத்ததால் மகிழ்ச்சியுடன் தனது துணைவியாருடன் வந்தார்.



இதே போல் மற்றொரு நிகழ்வு நடந்தது. நான் தஞ்சாவூரில் சாந்தி கமலா என்ற தியேட்டரை கட்டினேன். எம்.ஜி.ஆர் தானே வலிய வந்து தியேட்டரை துவக்கி வைக்க விருப்பம் தெரிவித்து, சொன்ன மாதிரி தஞ்சாவூர் வந்து துவக்கி வைத்தார். எங்களுக்குள் இத்தகைய பிணைப்பு இல்லாவிட்டால் இது சாத்தியமா?

அவருக்கு உடல் நலம் குன்றிய போது நான் இந்திராகாந்தியுடன் சென்று அவரை பார்த்தேன். அதன் பின் எம்.ஜி.ஆர் தில்லியிலிருந்து எனக்கு ஒரு மடல் எழுதினார். அதில் அவர் அமெரிக்கா செல்வதாகவும் என்னை அங்கு வந்து சந்திக்குமாறு வேண்டிக் கொண்டார். கமலாவும் நானும் உடனே நியூ ஜெர்சிக்கு சென்று அங்கிருந்து பால்டிமோர் சென்றோம். பயனத்தின் போது நான் கமலாவிடம் நாம் பால்டிமோருக்கு சென்று கொண்டிருந்தாலும் ஏர்போர்டில் யாராவது காத்திருந்து அண்ணன் எம்.ஜி.ஆரிடம் அழைத்து சென்றால் நாம் முதலில் அங்கு செல்வோம். அதற்கு பிறகு நாம் வீடு (பால்டிமோர்) திரும்புவோம்.

எனது கவலை அனாவசியமானதாயிற்று. எம்.ஜி.ஆர் என்னை சந்திக்க ஏர்போர்டுக்கு 50 பேரை அனுப்பி இருந்தார். பழனி ஜி. பெரியசாமி, டாக்டர் பி. ராமமூர்த்தி அவர்களில் இருந்தனர். அவர்கள் என்னை நேரடியாக மருத்துவமனைக்கு கூட்டி சென்றார்கள். எம்.ஜி.ஆர் அங்கு ஒரு போர்வை போத்தப்பட்டு படுத்திருந்தார் அவருடைய தொப்பியும் கறுப்பு கண்னாடியும் இல்லாமல். நான் நுழைந்தவுடன் அவர் எழுந்து தன் கரத்தை என்னிடன் நீட்டினார். எனக்கு ராமாயணத்தில் பரதனை ராமர் சந்திக்கும் காட்சியை போல் இருந்தது. அவர் ராமச்சந்திரன் நான் பரதன். அந்த பொழுது உணர்ச்சி வயமானது. நான் விரைந்து சென்று அவரை கட்டிக் கொண்டு அழுதேன். எம்.ஜி.ஆருடைய மனைவி ஜானகிக்கும் பை பாஸ் சர்ஜரி நடந்து அவரும் அந்த அறையில் இருந்தார்.

ஜானகி அம்மா கமலாவை கட்டிக் கொண்டு அழுதார். நான் எம்.ஜி.ஆரைக் கட்டிக் கொண்டு அழுதேன். ஜானகி அம்மா அழுகையை நிறுத்தி கண்களை துடைத்துக் கொண்டு குழந்தைகளைப் போல் அழுது கொண்டிருக்கும் எங்களை கடிந்து கொண்டார். " கொஞ்ச நேரம் தான் இருக்கிறது. சிவாஜி அவங்க வீட்டுக்கு போக வேண்டாமா. அவர் இங்கிருக்கும் வரை அவரிடம் ஏதாவது பேசுங்கள்" என்று ஜானகி அம்மா எம்.ஜி.ஆரிடம் கூறினார்.

அதன் பின் நாங்கள் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தோம். நாட்டைப் பற்றியும் மக்களின் நலத்தைப் பற்றியும் பேசினோம். நான் அவரிடம் சொன்னேன் " அண்ணா, எனக்கு ஒரே ஒரு விஷயம் தெரிஞ்சாகணும். என்னிடம் உண்மையை கூறுங்கள். உங்கள் உடல் நலம் எப்படி இருக்கிறது? டாக்டர்கள் என்ன சொல்லுகிறார்கள்?". அதற்கு அவர் வெறுமனே தலையை ஆட்டினார்.

அவர் தான் குணமடையப் போவதில்லை என்று தெரிந்திருந்தது. எனக்கு பொறுக்க முடியாமல் அழுது கொன்டே அறையை விட்டு ஓடினேன். ராமமூர்த்தி போன்றவர்கள் தான் என்னை தேற்றினார்கள். கமலா அறையை விட்டு வெளியே கிளம்பும் போது அவர் அவள் கைகளை பிடித்து தன் பக்கத்தில் அமருமாறு சொன்னார். அவர் அவளிடம் கஷ்டப்பட்டு ஏதோ சொல்ல விரும்பினார் ஆனால் அவருடைய குரல் பழுதடைந்திருந்தது.



தொடரும்
 
மிகவும் நெகிழவைக்கும் சம்பவங்கள். பகிர்வுக்கு நன்றி அண்ணா.
 
நடிகர் திலகத்தின் சுயசரிதை(96): எம்.ஜி.ஆர் நண்பர்(மீண்டும் தொடர்கிறது)

நடிகர் திலகத்தின் சுயசரிதை(96): எம்.ஜி.ஆர் நண்பர்(மீண்டும் தொடர்கிறது)

டி.எஸ்.என்.: மிகவும் நோய் வாய்பட்ட நிலையிலும் எப்படி எம்.ஜி.ஆரால் பேச முடிந்தது?

சிவாஜி: அவரால் நன்றாக பேச முடியவில்லை. கொஞ்சம் வார்த்தைகள பேசிவிட்டு சைகை காட்டினார். அவர் கமலாவிடம் கூறினார் " இந்த பையன் என்னை மாதிரி முன் கொபம் கொண்டவன். அவனை கோபம் கொள்ள செய்யாதீர்கள். நல்ல சாப்பாடு அவனுக்கு ஒரு வீக்னஸ். சப்பட்டில் அதிகம் உப்பை சேர்க்கதீர்க்ள். உண்மையை சொல்லப் போனால் அவனைப் போலவே எனக்கும் அப்பமும் சால்ட் பிஷ் கறி ரொம்ப பிடிக்கும். அடிக்கடி அதை அவனுக்கு கொடுக்காதீர்கள். அந்த மாதிரி உணவை அதிகம் சாப்பிட்டதால் தான் என் உடல் நலம் குன்றியது. ".

" கணேசனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் அனுப்புகிறேன்.' என்று கமலாவிடம் அவர் சொன்னார். நானும் கமலாவும் மருத்துவமனையை விட்டு கிளம்பி ஒரு நண்பருடன் சாப்பிட்டு விட்டு விமானம் ஏறி இந்தியா திரும்பினோம். அவர் வாக்கு கொடுத்த படியே எம்.ஜி.ஆர் எனக்கு பிறந்த நாள் வாழ்த்து அனுப்பினார்.

முற்றிலும் குணமடைந்த பிறகு எம்.ஜி.ஆர் இந்தியா திரும்பினார். இங்கு நான் ஒரு நிகழ்ச்சியை குறிப்பிட விரும்புகிறேன். அச்சமயம் ஆர். வெங்கட்ராமன் ஜனாதிபதியாக இருந்தார். நான் ஆர்.வியுடன் பல நாட்கள் டெல்லியில் கழித்திருக்கிறேன். சென்னையில் ஒர் நிகழ்ச்சிக்காக ஜனாதிபதி வந்திருதார். முதன் மந்திரி எம்.ஜி.ஆரும் அங்கு அழைக்கப்பட்டிருந்தார். நானும் அதில் பங்கேற்றேன்.



எம்.ஜி.ஆர் கவர்னருக்கருகில் அமர்ந்திருந்தார். எம்.ஜி.ஆர் என்னை கவனித்து தன்னருகே வந்து அமருமாறு அழைத்தார். நான் தயங்கினேன். ஆனால் அவர் என் கைகளைப் பிடித்து இழுத்து அவருக்கருகே அமரச் செய்தார். அச்சமயம் அங்கு குளிராக இருந்ததால் ஒரு போலீஸ் அதிகாரி அவரை ஒரு ஷாலைக் கொண்டு போர்த்த முயற்சி செய்தார்.

எம்.ஜி.ஆர் அவரை தடுத்து கோபித்துக் கொண்டார். அவர் என்னுடன் பேசிக்கொண்டிருக்கையில் இடையூறாக அந்த அதிகாரி செய்வதாக அவர் நினைத்திருக்க கூடும். நான் அந்த ஷாலை எடுத்து " எனக்கே குளிருது என்றால் உங்களுக்கு எவ்வளவு குளிரும்?" என்று சொல்லி போர்த்தினேன். அந்த கணத்தில் அவர் என்னிடம் இதை கூறினார் இது உண்மை. " ஜனாதிபதி இன்னும் பத்து நாட்களில் மீண்டும் சென்னைக்கு வந்து ஒரு மருத்துவ மனையை திறந்து வைக்க போகிறார். அவர் வந்து போனபின் நீ என்னை வந்து பார். நான் உன்னிடம் ஒரு பெரிய பொறுப்பை ஒப்படைக்கப் போகிறேன்.". நான் வீட்டிற்கு சென்று கமலாவிடம் எம்.ஜி.ஆர் என்னிடம் சொன்னதை பகிர்ந்து கொண்டேன்.

நங்கள் இருவரும் சென்று அவரை பார்க்கவிருந்தோம். ஆனால், ஜனதிபதி சென்னைக்கு வந்து மருத்துவ மனையை திறந்து வைப்பதற்கு முன்பாக எம்.ஜி.ஆர் இறைவனடி சேர்ந்தார். என்னுடன் பேசிய மூன்று நான்கு நாட்களில் அவர் மறைந்தார். நாம் என்ன செய்ய முடியும்? எல்லாம் கடவுள் கையில். அவருடைய ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்.

சம்பிரதாயப்படி நானும் கமலாவும் அவருடைய குடும்பத்தினருக்கு எங்கள் இரங்கலை தெரிவித்தோம்.

நாங்கள் ஜானகி அம்மாவை பார்த்த போது அவர் " என்னுடைய தம்பி கணேசன் நம்ம வீட்டுக்கு வரப் போறான் என்று சொன்னார் அவர். அவர் உங்களிடம் ஏதோ முக்கியமான விஷயத்தை சொல்லப் போவதாக கூறினார்" என்றார் சோகத்துடன்.

" உங்களுக்காக அப்பமும் பிஷ் கறியும் செய்து வைக்க சொன்னார். ஆனால் உங்களிடம் பேசாமலேயே அவர் போய் சேர்ந்து விட்டார்' என்றார் அவர்.

எம்.ஜி.ஆர் ஒரு உன்னதமான வாழ்க்கையை வாழ்ந்தார். நான் அவரைப் பற்றி பேசுவதில் பெருமை அடைகிறேன். அவர் என்னை உண்மையில் நேசித்தார். நானும் அவரை நேசித்தேன்.


டி.எஸ்.என்.: உங்களுடைய உன்னத நட்பை விவரித்தீர்கள். அவருடைய கடைசி ஆசையில் நீங்களும் ஜானகி அம்மாவும் இணைந்து தேர்தலில் நின்றீர்களா?

சிவாஜி: நாங்கள் ஒன்றாக இணந்தோம். ஆனால் வெற்றியடையவில்லை. தேர்தல் சமயத்தில் கூட்டணிக்கு ஒரு வரையறை இருந்தது. என்னுடைய கட்சி அச்சமயம் வளரவில்லை. ஜானகி அம்மாள் 20 நாட்களே முதலமைச்சராக இருந்தாலும் எம்.ஜி.ஆரின் மனைவி என்ற முறையில் ஒரு தலைவருக்கான தகுதி அவருக்கிருந்தது. நாங்கள் இணைந்து தேர்தலில் நின்றோம். நாங்கள் புதிதானவர்கள் ஆதலால் ஆளத்தகுதியற்றவர்கள் என மக்கள் நினைத்திருக்கலாம்.


தொடரும்
 
நடிகர் திலகத்தின் சுயசரிதை(97):சிஙக்ப்பூரில் மறு ஜென்மம்

நடிகர் திலகத்தின் சுயசரிதை(97):சிஙக்ப்பூரில் மறு ஜென்மம்

டி.எஸ்.என்.: 1987ல் எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பிறகு, தேர்தல் தோல்விக்கும் பிறகு உங்கள் உடல் நலம் குன்றியது. மேடையில் நீங்கள் மயங்கி விழுந்தீர்கள். சிகிச்சைக்கு பிறகு நீங்கள் உடல் தேறினீர்கள். இது உங்களுக்கு மறு பிறவி இல்லையா?

சிவாஜி: நீங்கள் சொல்வது சரி. துக்கமும் தோல்வியும் என்னை பாதித்தன. நான் ஒரு சாதாரண மனிதன் சூப்பர் மேன் இல்லை! தேர்தல் வேலைகளின் பளுவினால் நான் இந்தியாவிலேயே நோய் வாய் பட்டேன். நான் ஒரு மாதத்திற்கு படுத்த படுக்கையாக் இருந்தேன். சிங்கப்பூருக்கு சென்ற முறை விஜயம் செய்த போது அங்கு மீண்டும் வருவதாக கூறியிருந்தேன்.

குறித்த நாள் வந்தது. நான் நோயில் படுக்கையில் இருந்தேன். எனது நிலமை எப்படி இருந்தாலும் நான் கண்டிப்பாக சிங்கப்பூருக்கு செல்ல வேண்டும் என்று டாக்டரிடம் கூறினேன். டாக்டர் நான் போகக்கூடாது என்று என்னை தடுத்தார். " நான் ஒரு இந்தியன். மேலும் நான் சொன்ன வார்த்தையை காப்பாத்தரவன். நான் என் சிங்கப்பூர் ரசிகர்களுக்கு நான் திரும்பி வந்து அவர்களை சந்திப்பதாக் வாக்கு கொடுத்திருக்கிறேன். நான் அங்கு குறிப்பிடா நாளில் வரவில்லை என்றால் இந்தியர்கள் கொடுத்த வாக்கை காப்பாற்றமாட்டார்கஓள் என்று அவர்கள் நினைப்பார்கள். தயவு செய்து என்ன குணப்படுத்தி அங்கு அனுப்பி வையுங்கள்" என்று டாக்டர்களிடம் வேண்டினேன். அவர்கள் என்னை அனுமதித்தார்கள். ஆனால் சிங்கப்பூருக்கு குறுகிய காலமே சென்று உடன் திரும்ப வேண்டும் என்றார்கள்.

நான் உடனே சிங்கப்பூருக்கு கிளம்பினேன். செல்லும் வழியில் மயங்கி விழுந்தேன். ம்றுபடியும் டாக்டர்கள் என்னை தூக்கி செல வேண்டியதாயிற்று. மறு நாள் சிங்கப்பூரில் நான் ஒரு மாபெரும் கலை விழாவில் பங்கேற்க விருந்தேன். கங்கை அமரன் குழுவினர் மேடையில் பாட இருந்தனர். நமது தமிழ் திரையுலக கலைஞர்கள் அங்கு குழுமியிருந்தனர். நானும் அங்கே இருந்தேன்.என்னை மேடைக்கு கடைசியில் இரவு பத்து மணிக்கு அழைத்தார்கள். அவர்கள் என்னை நடக்க அனுமதிக்கவில்லை. மேடைக்கு பின்புறமாக என்னை ஒரு தள்ளு நாற்காலியில் அழைத்து சென்றனர். சிங்கப்பூருக்கான இந்திய தூதர் என் கைகளைப் பிடித்து மேடயில் இருந்த நாற்காலி ஒன்றில் அமரச் செய்தார். நன் சொற்பொழிவாற்றினேன்.

" எனது உடல் நலம் சரியில்லை. நடப்பதற்கு என்னிடம் சக்தியில்லை. என்னை மன்னியுங்கள். மற்றொரு சமயத்தில் நான் உங்களுடன் பல ம்ணி நேரம் செலவழிப்பேன். நான் பேசவோ, பாடவோ நடனம் ஆடவோ உங்கள் விருப்பத்திற்கிணங்க செய்வேன். ஆனால் இம்முறை என்னை மன்னியுங்கள்" என்று சொல்லி மயங்கி சாய்ந்தேன்.

எனக்கு ஹார்ட் அட்டாக் வந்து மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் போது எனக்கு நினைவில்லை. மூன்று நாட்கள் கழித்து தான் என் நினைவு திரும்பியது. சிங்கப்பூரில் உள்ள திரு. டி.டி.துரை என்பவர் எங்கள் குடும்ப நண்பர் மாதிரி. அவர் தேசிய கிட்னி பவுண்டேஷனுக்கு தலைவர். எனது அருகில் காவல் தெய்வம் மாதிரி இருந்து என்னை நார்மல் நிலைக்கு கொண்டுவந்தார். நான் அவரை மறக்க முடியாது.


இதற்கப்புறம் நான் சிங்கப்பூரில் மேலும் பிரபலமடந்தேன். பாதுகாப்பு போலீசை தள்ளிக் கொண்டு நமது மக்கள் திரளாக வந்து என்னை மருத்துவ மனையில் சந்தித்தார்கள். தமிழர்கள் எனக்காக பிரார்த்தனைகள் செய்து அறை முழுவதும் பிரசாதங்களால் நிரப்பினர். நான் வெளியே வந்த போது வெளியே மலர் செண்டுகள், மாலைகள், தேங்காய்கள் குவித்து வைக்கப் பட்டிருந்ததை பார்த்தேன். மருத்துவமனைக்கு என்னால் கஷ்டம் எற்பட்டது. சிங்கப்பூர் அரசாங்கம் என்னை உடனே இந்தியா செல்லுமாறு வேண்ட்க் கொண்டது அன்றிரவே விமானம் மூலம் நான் சென்னைக்கு திரும்பினேன். பின்பு ஒரு முறை நான் வாக்கு கொடுத்த மாதிரி சிங்கப்பூருக்கு சென்றேன்.

நான் அங்கு மக்களிடம் சொன்னேன் " பல வருடங்களுக்கு முன்பு, நான் இங்கு மயங்கி விழுந்தேன். உங்கள் பிரார்த்தனைகளும் என் மனைவியின் பிரார்த்தனைகளும் இல்லாவிட்டால் அன்று நான் இறந்திருப்பேன். நான் வாக்கு கொடுத்த மாதிரி இங்கு திரும்ப வந்துள்ளேன்". அனைவரும் எழுந்து நின்று கரவொல்லி செய்தார்கள்.


தொடரும்
 
நடிகர் திலகம் அவர்களில் வாழ்வில் நடந்த நிகழ்வுகள் என்னில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன ..சிவாஜி அவர்களின் வாக்கு சொல் தவறாமை இன்று எத்தனை பேரிடம் உள்ளது என்பதை நினைக்கையில் அவர் உயர்ந்து நிற்கிறார்...
 
திரைபடத்தில் பேச்சுக் கலையை வளர்த்த சிங்கத் தமிழன் சிவாஜி கணேசன், நடிப்புக்கு இவன்தான் இலக்கணம் இன்றும் என்றும் உலகம் அனைத்துக்கும் என்றால் அதில் மிகையேது.
 
நடிகர் திலகத்தின் சுயசரிதை: (1990 2000) படங்களிலிருந்து

நடிகர் திலகத்தின் சுயசரிதை: (1990 2000) படங்களிலிருந்து


சுவர்ணலட்சுமியுடன் என் ஆசை ராசாவே (1998) படத்தில்​


சிம்ரன், விஜய் உடன் ஒன்ஸ் மோர் படத்தில்​



அர்ஜுன், சவுந்தர்யா இவர்களுடன் மன்னவரு சின்னவரு (1999) படத்தில்


ரஜனிகாந்த், சித்தாரா இவர்களுடன் படையப்பா படத்தில்

தொடரும்....
 
அபூர்வமான படங்கள். ....
நெகிழவைக்கும் சம்பவங்கள்.....
பகிர்வுக்கு மிக நன்றி.
 
நடிகர் திலகத்தின் சுயசரிதை(99): செவாலியர் விருது

நடிகர் திலகத்தின் சுயசரிதை: விருதுகளும் மரியாதைகளும்

டி.எஸ்.என்: நீங்கள் கிட்ட தட்ட 300 படங்களில் நடித்திருக்கிறீர்கள். பல படங்களுக்கு தேசிய விருதுகள் கிடைத்திருக்கின்றன. ஆனால் நாடு ஏன் உங்களை பாராட்டி விருது தரவில்லை?

சிவாஜி: நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்றால் மற்றவர்களுக்கு விருதுகள் தரப்படும்போது எனக்கு ஏன் தரப்படவில்லை?. அரசியலாக இருந்தாலும் சரி கலைத்துறையாக இருந்தாலும் சரி ஒருவருக்கு அங்கீகாரம் கிடைக்க ஒருவர் போராட வேண்டிய துர்பாக்கிய நிலமையில் நாடு இன்று இருக்கிறது. எனக்கு மற்றவர்களிடம் எனக்கு ஆதரவு தேடும் பழக்கம் கிடையாது. அரசாங்கம் தானே முன் வந்து அலிக்கும் விருதுகளைத்தான் நான் ஏற்றுக்கொள்வேன். மக்கள் எனக்களிக்கும் பாராட்டுக்களும் மரியாதைகளும் இருப்பதால் நான் விருதுகளைப் பற்றி கவலைப்படவில்லை.

டி.எஸ்.என்: முற்றிலும் எதிர்பாராமல் பிரான்சு நாடு 1995 ல் உலக பிரசித்தி பெற்ற செவாலியர் விருதி உங்களுக்கு வழங்கியது. அந்த அனுபவங்களை பற்றி கூற முடியுமா?

சிவாஜி: பிரான்சு நாட்டில் சிறந்த நடிகர்களுக்கு செவாலியர் விருது ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. இது ஒரு மிக உயர்ந்த விருதாக கருதப்படுகிறது. நான் நடித்த 30 படங்களை 6 நீதிபதிகள் பார்த்து எனக்கு இந்த விருதிற்கு நான் தகுதியானவன் என்று தீர்மானித்தனர். அவர்கள் பாண்டிச்சேரி மானிலத்துடன் தொடர்பு கொண்டு என்னைப் பற்றிய மேலதிக தகவல்களை அறிந்தனர். பாண்டிச்சேரி மானில அரசு தேவையான தகவல்களை தராததால் அந்த விஷயத்தை கைவிட்டனர்.

செவாலியர் விருது​

பிரான்சு நாட்டு அரசாங்கம் அதன் பின் டில்லியில் உள்ள மத்திய அரசை அணுகியது. டில்லியில் என்னைப் பற்றிய விவரங்களை கூற யாரும் இல்லை. இந்த குறைபாடு பிரான்சில் இருந்த இந்திய கலாச்சார அமைப்பிற்கு தெரிய வந்தது. அந்த அமைப்பில் எனது இரு நண்பர்கள் பாஸ்கல், ஜமால் என்பவர்கள் பணியாற்றி வந்தார்கள். அவர்கள் பிரான்சு நாட்டு அரசாங்கத்திற்கு என்னைப் பற்றிய முழு விவரங்களையும் தந்தார்கள்.

பிரான்சு நாட்டு அரசாங்கம் எனக்கு அனுப்பிய கடிதத்தில் " நாங்கள் உங்களுக்கு செவாலியர் பட்டத்தை வழங்குகிறோம். இது ஒரு உயர்ந்த விருது. இதை பெற்றுக் கொள்ல நீங்கள் பிரான்சு நாட்டுக்கு வரவேண்டும்" என்று கூறியது. நான் இந்த விருதை பெற்றுக் கொள்ள பிரான்சு நாடு செல்வதா என்று யோசித்துக் கொண்டிருக்கையில் செய்தி தாள்களில் எனக்கு செவாலியர் விருதுக்கு தெரிவு செய்யப்பட்டதாக செய்திகள் வெளி வந்தன. இந்தியாவில் பலருக்கு இந்த விருது பற்றிய விவரங்கள் தெரியாது.

எம்.ஆர். ராதாவின் மகள் ராதிகா நானும் அவருடைய தந்தையும் நெருங்கி பழகியதை அறிந்தவர். அவர் என்னிடம் மரியாதையும் அன்பும் கொண்டவர். ராதிகாவின் ஐரோப்பிய கணவருக்கு இந்த விருதைப் பற்றியும் அது எளிதில் அளிக்கப்படக்கூடியதில்லை என்றும் அறிந்திருந்தார். " நம்ம சிவாஜி கணேசனுக்கு இந்த விருது கிடைத்திருக்கிறது. நீ அதற்கு ஒன்றும் செய்யாமலிருக்கிறாய். நீங்கள் ஏன் இப்படி மவுனம் சாதிக்கிறீர்கள்? " என்று அவர் ராதிகாவிடம் கேட்டார்.

ராதிகா உடன் செயல் படத்துவங்கி கமல ஹாஸன், ரஜனிகாந்த், விஜயகாந்த் அவர்களை சந்தித்து " நமது சிவாஜி அண்ணனுக்கு உலகப்புகழ் வாய்ந்த செவாலியர் விருது கிடைத்திருக்கிறது. நாம் இதை பெரிய அளவில் கொண்டாடவேண்டும்" என்றார். எல்லோருமொன்று சேர்ந்து தயாரிப்பாளர்கள் ஏ.வி.எம். சரவணன், கே.ஆர்.ஜி ஆகியோருடன் பேசினார்கள். கலை உலகை சேர்ந்த அனைத்து கலைஞர்களும் ஒன்று சேர்ந்து இதை கொண்டாட வேண்டும் என்று தீர்மானம் செய்தார்கள். தமிழக அரசும் இதற்கு ஆதரவு தெரிவித்தது.

இரண்டு லட்சம் பேர்கள் விழாவிற்கு அழைக்கப்பட்டார்கள். தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா விழாவிற்கு தலைமை தாங்கினார். ஒரு நடிகனுக்கு விருது கிடைக்கிறது என்றால் அது கலை உலகிற்கே பெருமை இல்லையா?



ஒரு பிரஞ்சு தூதர் குழு மெடல்களையும் சான்றிதழ்களையும் டில்லியில் உள்ள பிரான்சு நாட்டு தூதரகத்தில் அளித்தார்கள். பிரான்சு நாட்டின் இந்திய அம்பாஸிடர் மரியாதைக்குரிய பிலிப் பெட்டி சென்னையில் இந்த விருதை எனக்களித்தார். இந்த விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர், நடக நடிகையர் மற்றும் அனைத்து மக்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தொடரும்
 
சரியான தகவல்கள் கிட்டாத நிலையிலும் தொடர்முயற்சி செய்து, ஒரு மாபெரும் கலைஞனுக்குரிய மரியாதையை சிறப்பாக அளித்து கௌரவித்த பிரெஞ்சு அரசின் பெருந்தன்மையை வியக்கிறேன். முற்றிலும் தகுதியானவரைத் தேர்ந்தெடுத்து அளித்தமை சிறப்பு. செவாலியே விருதுக்குப் பின்னாலிருந்த பல தகவல்களை அறியச் செய்தமைக்கு நன்றி அண்ணா.
 
நடிகர் திலகத்தின் சுயசரிதை(100): தாதா சாகேப் பால்கே விருது

நடிகர் திலகத்தின் சுயசரிதை(100): தாதா சாகேப் பால்கே விருது

டி.எஸ்.என்.: தாதா சாகேப் பால்கே விருது இந்திய திரையுலக கலைஞர்களுக்கு வழங்கப்படும் முதன்மையான விருதாக கருத்ப்படுகிறது. ஆனால் இந்த விருதை உங்களுக்கு மிக தாமதமாக வழங்கினார்கள். உங்கள் கருத்து?

தாதா சாகேப் பால்கே விருது​

சிவாஜி: பால்கே விருது கலைஞர்களுக்கு அளிக்கப்படும் தலை சிறந்த விருது. தாதா சாகேப் பால்கே மும்பையை சேர்ந்த ஒரு ஒப்பற்ற கலைஞர். அவர் நாடக உலகிற்கும் திரையுலகிற்கும் சிறந்த சேவை செய்தவர். அவர் பெயரில் அந்த விருது நிறுவப்பட்டது. பத்திரிகைகளும் சரி மற்ற கலைஞர்களும் சரி இந்த விருது எனக்கு முன்னரே அளிக்கப்பட்டிருக்க வேண்டும் என நினைத்தனர். சமுதாயத்தின் மிக முக்கிய பிரமுகர்கள் சிவாஜி கணெசனுக்கு இந்த விருது ஏன் முன்னரே வழங்கப்படவில்லை என வியந்தனர்.

புகழ் வாய்ந்த பாடகி லதா மங்கேஷ்கர் என்னை திரைப்படத்துறையின் உயர்ந்த அதிகாரிகளுக்கு சிபாரிசு செய்தார். அவர்கள் எனக்கு இந்த விருதை அளிக்க தீர்மானித்தனர். ஆனால் அதை இப்போது தான் வழங்கினார்கள். கிடைக்காமலே இருப்பதை விட தாமதமானது நல்லதுதானே. நான் இந்த விருதை 1997ம் ஆண்டு குடியரசு தலைவர் ஷங்கர் தயாள் சர்மாவிடமிருந்து பெற்றுக் கொண்டேன். கலைஞர்களும் மற்ற பிரமுகர்களும் விழாவில் கலந்து கொண்டார்கள். தொலைபேசி மூலமாகவும் பத்திரிகைகள் வாயிலாகவும் அவர்கள் எனக்கு புகழ் ஆரங்கள்சூட்டினார்கள்.



மற்ற மானிலங்களிலும் என்னை கவுரப்படுத்த விழாக்கள் நடத்தினார்கள். கர்னாடக மானிலத்திலிருந்து எனக்கு முதலில் அழைப்பு வந்தது. ஆனால் என்னால் விழாவில் கலந்து கொள்ள இயலவில்லை. ஆகவே அவர்கள் சென்னைக்கு வந்து என்னை கவுரவித்தார்கள். இதே போல் என்னை கவுரவிக்க ஆந்திர மானிலம், இலங்கை, கேரளா ஆகிய இடங்களிலும் விழாக்கள் நடத்தினார்கள்.

கேரளத்தில் அனைத்து கலைஞர்களும் மேடையில் தோன்றினார்கள். அரசியல் தலைவர்கள் கூட நின்று கொண்டிருந்த போது நான் ஒருவன் மட்டும் அமர்ந்திருந்தேன். அனைவரும் எனக்கு எழுந்து நின்று கைதட்டினார்கள். எனக்கு விருது அளிக்கப்பட்ட தருணத்தில் எனது மகிழ்ச்சி அள்வில்லாமல் இருந்தது. என்னை பாராட்டிய அனைவருக்கும் என் இதய பூர்வ நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


தொடரும்
 
நடிகர் திலகத்தின் சுயசரிதை(101): பத்மஸ்ரீ, பத்மபூஷண் விருதுகள்

நடிகர் திலகத்தின் சுயசரிதை(101): பத்மஸ்ரீ, பத்மபூஷண் விருதுகள்​

டி.எஸ்.என்.: உங்களுக்கு அளிக்கப்பட்ட* எல்லா விருதுகளிலும் எது உங்களை பெருமை படச் செய்கிறது?

சிவாஜி: எனது கலைத்துறை சேவைக்காக எனக்கு பல விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. மத்திய அரசும் மானில அரசும் எனது நடிப்பு திறனை பாராட்டி பல புகழ் மாலைகளை குவித்திருக்கின்றன. ரசிகர் மன்றங்களும் பத்திரிகை குழுக்களும் எனது நடிப்பை பாராட்டி பரிசுகள் வழங்கியிருக்கின்றன. எனக்கு பிரெஞ்சு அரசாங்கத்திடமிருந்து விருதும் தாதா சாகேப் பால்கே விருதும் வழங்கப்பட்டிருக்கின்றன.

இருந்தும் நான் ஒரு நல்ல குடிமகன் என்று தெரிவு செய்து வழங்கப்பட்ட விருதுகள் என்னை பெருமைப் பட செய்கின்றன. அவை பத்மஸ்ரீ, பத்மபூஷண் விருதுகளாகும்.



பத்மஸ்ரீ விருது​

பத்ம பூஷண் விருது​


பெரியோர்களின் ஆசிகளாலும், பெற்றோர்களின் ஆசிகளாலும், மக்களின் ஆதரவாலும் கடவுள் கிருபையாலும் எனக்கு இந்த விருதுகள் கிடைத்தன.

தொடரும்..
 
Back
Top