நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சுயசரிதை (இறுதி பகுதி)

எனது பிறந்த நாள் பரிசாக எனது மகள் அளித்த சர்ப்ரைஸ் புத்தகம் டாக்டர் டி.எஸ். நாராயணசுவாமியின் " சிவாஜி கணேசன் ஒரு சுய சரிதம்" என்ற ஆங்கில மொழி புத்தகத்தை நான் அறிந்த தமிழில் மொழி பெயர்த்து இங்கு அளிப்பதில் பெரும் உவகை அடைகிறேன். சுவாரஸ்யம் தடைப் படாமல் இருக்க நீண்ட பகுதிகளை சுருக்கி இருக்கிறேன். இன்னும் ஒரு சில தினங்களில் இந்த புத்தகத்திலிருந்து சில புகைப் படங்களையும் தர இருக்கிறேன்


புத்தகம் முழுக்க திரு. டி.எஸ் என். கேள்விகள் கேட்க அதற்கு நடிகர் திலகம் பதிலளித்திருக்கிறார்.

சிவாஜியின் பூர்வீகம்

டி.எஸ்.என்.: உங்கள் பூர்வீகம மற்றும் பெற்றோர் மூதாதையர் இவர்களைப் பற்றி கூறுங்களேன்.

சிவாஜி: எனது பூர்வீகம் வேட்டைத்திடல் என்ற தஞசாவூர் ஜில்லாவைச் சேர்ந்த ஒரு வளமான கிராமம். இங்கு தான் எனது தகப்பனாரின் குடும்பம் வசித்து வந்தது. நான் பெரும்பாலும் எனது தாயாரால் வளர்க்கப் பட்டதால் அவரது குடும்பத்தைப் பற்றி நன்கறிவேன். எனது தாயார் ராஜாமணி அம்மாள் எனது பாட்டனார் சின்னசாமி கலிங்கராயரின் பதினோராவது குழந்தை. பாட்டனார் இந்திய ரயில்வேயில் ஓர் உயர் அதிகாரியாகப் பணியாற்றினார். அவர் மதுரை திருச்சி ஆகிய ரயில்வே லயன்களுக்கு பொறுப்பாளரக இருந்தாரென நினைக்கிறேன்.

டி.எஸ்.என்.: நீங்கள் எந்த வருடம் பிறந்தீர்கள்? உங்கள் பிறந்த தேதியைக் கூறமுடியுமா?

சிவாஜி: நான் பிறந்த நாளை சரியாகத் தெரியாது. பிறந்த ஆங்கில தேதி அக்டோபர் 1 1928. அன்று எனது தந்தையார் சுதந்திரப் போராட்டத்தில் கைதானார் அது எனது நினைவை விட்டு நீங்காமல் இருக்கிறது.

டி.எஸ்.என்.: உங்கள் பிறந்த தேதி பத்தாம் மாதமான அக்டோபரின் முதல் தேதி யாக இருப்பதாலும் உங்கள் ஜென்ம நட்சத்திரம் அஸ்வினியாக இருப்பதாலும் நீங்கள் எல்லா துறைகளிலும் முதலவராக இருப்பீர்கள் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

சிவாஜி: எனக்கு திருமணம் ஆனது மே மாதம் முதல் தேதி என்பதை நீங்கள் மறந்து விட்டீர்கள். நான் வாழ்க்கையில் முதல் இடத்தில் இருக்கிறேனோ இல்லையோ எனது வாழ்க்கையின் மிக முக்கியான நிகழ்வுகள் முதல் தேதியில் நிகழ்ந்துள்ளன.

டி.எஸ்.என்.: உங்களது உடன் பிறந்தவர்கள் எத்தனை பேர்?

சிவாஜி: எனக்கு மூன்று மூத்த சகோதரர்கள் உண்டு. அனைவருக்கும் மூத்தவர் திருஞான சம்பந்த மூர்த்தி இரண்டாமவர் கனக சபா நாதன் மற்றும் மூன்றாமவர் தங்கவேலு. எனக்கு கணேச மூர்த்தி என்று முதல் பெயர் இருந்தது. எனது தந்தையார் கைதானயுடன் எனது பாட்டனார் காலமானார். அதன் பின்னர் நாங்கள் திருச்சி பொன்மலைக்கு அருகிலிருந்த சங்கிலியாண்டபுரம் என்ற இடத்திலிருந்த எங்களது சொந்த வீட்டிற்கு வந்தோம்.

வளர்ந்த பருவம்

டி.எஸ்.என்.: திடீரென்று உங்கள் தந்தை கைதாகி பாட்டனாரும் காலமான பின் எப்படி உங்களது தாயார் ஒருவர் உதவியும் இன்றி குடும்பத்தை சமாளிக்க முடிந்தது?

சிவாஜி: அதைப் பற்றி கேட்காதீர்கள். நான் பட்ட கஷ்டங்களைப் போல் வேறு யாருக்கும் வரக்கூடாது. எனது தந்தையார் கைதானவுடன் எனது தாயார் சில பசுக்களை விலைக்கு வாங்கி பாலை விற்று எங்களை வளர்த்தார். எனது தாயாரின் பெயர் ராஜாமணி அம்மாள். ஆனால் அனைவரும் அவரை பால்காரம்மா என்று தான் கூப்பிட்டார்கள்.

எனக்கு மூன்று அல்லது நான்கு வயதாகும் போது எங்களது வீட்டின் எதிர் புறம் இருந்த கிருத்தவ மிஷன் பள்ளியில் என்னை சேர்த்தனர். எனக்கு நாலரை வயது இருக்கும்போது எனது தந்தையார் விடுதலை செய்யப் பட்டார். அப்போது தான் எனது தாயார் எனக்கு அவரை அறிமகம் செய்து வைத்தார். நான் எப்படி அந்த நிகழ்ச்சியை வருணிப்பது? அது ஒரு மிக உணர்ச்சி பூர்வமான நிகழ்ச்சி.

நாட்டின் விடுதலைக்காக போராடிய ஒருவரின் கஷ்டங்களையும் வேதனைகளையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். பலருக்கு சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி அவ்வளவாக அக்கறை இல்லை. தாம் நாட்டிற்காக என்ன செய்தோம் என்று கேட்காமல் இந்த நாடு நமக்கு என்ன செய்தது என்று கேட்கிறார்கள். நமக்கு சுதந்திரம் எளிதாக கிடைத்ததா? தண்ணீர் விட்டா வளர்த்தோம் சுதந்திரப் பயிரை. கண்ணீர் விட்டல்லவா நாம் அதை வளர்த்தோம்? நமது நாடு சுதந்திரம் அடைவதற்கு எத்தனை குடும்பங்கள் கஷ்டப் படடிருக்கின்றன. எங்கள் குடும்பம் ஒரு உதாரணமாக திகழ வில்லையா?

நாடக பிரவேசம் தொடரும்.........
 
Last edited:
நல்ல முயற்சி..!

அயர்ச்சியின்றி அள்ளித்தாருங்கள் மதுரை.. மன்றத்தின் கருவூலத் திரிகளில் ஒன்றாக இது விளங்கும்.. ஐயமில்லை.
 
தொடருங்கள்

பாராட்டுக்கள் அடைமழையாக இதோ
 
அன்பு மதுரைவீரன்,

கலைத்தாயின் தமிழ்த்தலைமகனைப் பற்றிய இத்தொடரை
மிக ஆர்வமாய் வரவேற்கிறேன்..

தடையின்றி இத்தொடர் முழுமை அடைய என் வாழ்த்துகள்..

கணேச மூர்த்தி - ஒரு பிறவியில் சொல்லி முடியாது அவன் கீர்த்தி!
 
எனது இந்த முயற்ச்சிக்கு ஆதரவளித்து உற்சாகமூட்டிய நண்பர்கள் ராஜா, இளசு ,mgandhi ,shibly ஆகியோரக்கு மனமார்ந்த நன்றிகளுடன் தொடர்கிறேன்.
_________________________________________________________________________

நாடக பிரவேசம்

டி.எஸ்.என்.: பள்ளிக் கூட நாட்களிலிருந்தே உங்களுக்கு நாடகங்களிலும் கலைத் துறையிலும் நாட்டம் இருந்ததா?

சிவாஜி: முழுமையாக இருந்தது. சொல்லப் போனால் எனக்கு கலைத்துறையின் மேல் விருப்பம் நிறைய இருந்தது. பள்ளி நாட்களில் மேடைகளில் பாடவும் நடிக்கவும் செய்திருக்கிறேன்.எனக்கு ஏழு வயதாக இருக்கும் போது ஒரு முக்கியமான நிகழ்ச்சி நடந்தது. கம்பத்தார் கூத்து என்ற வீதி ஓர நாடகங்கள் அப்போது நடை பெற்று வந்தன. கட்டபொம்மன் கதை இந்த நாடகங்களுடன் இணைந்திருந்தது. இந்த வீதி ஓர நாடகங்கள் எங்கள் வீட்டின் எதிர் புறத்திலேயே நடை பெற்றன.

டி.எஸ்.என்.: கம்பத்தார் கூத்து என்பது ஒரு வகையான நாடக கலையா அல்லது ஒரு குறிப்பிட்ட குழுவினர் நடத்திய நாடகத்தின பெயரா?

சிவாஜி: கம்பத்தார் கூத்து என்பது கட்ட பொம்மனைப் பற்றிய நாடகங்களையே குறிக்கும். கட்ட பொம்மன் கம்பளத்தார் வகுப்பைச் சேர்ந்த தலைவன். அவன் அவர்களது 47 வது அரசனாவான். பாண்டிய மன்னர்களிடம் ஒரு பலம் பொருந்திய மெய்க்காப்பாளன் இருந்தான் என்றும் அவன் பல பயங்கர கொள்ளையரை ஒடுக்கினான் என்றும் அதை பாராட்டி பாண்டிய மன்னன் அவனுக்கு பல மானியங்கள் வழங்கினான் என்றும் கூறுவர். வீர பாண்டிய கட்ட பொம்மன் அவனது வம்சா வளியில் வந்தவன். நான் சிறுவனாக இருந்த போது எப்படி கட்ட பொம்மன் பிரிட்டிஷ் காரர்களை எதிர்த்தான் என்ற கதைகளை கேட்டிருக்கிறேன்.

ஒரு நாள் எனது தந்தையுடன் கட்ட பொம்மன் நாடகங்களை பார்க்க சென்றிருந்தேன். அந்த நாட்களில் வீதி ஓர நாடக குழுக்கள் முக்கிய கதா பாத்திரத்தில் நடிக்கும் நடிகரை மட்டுமே உடன் அழைத்து வருவர். பார்வையாளர்களிடமிருந்து சில சிறுவர்களை தேர்வு செய்து சிறு வேடங்களில் நடிக்க வைப்பார்கள். அன்று நான் நாடகத்தைப் பார்க்க முதல் வரிசையில் அமர்ந்திருந்ததால் என்னைப் பிடித்து மேடையில் நடிக்க வைத்தாரகள். எனக்கு கொடுக்கப் பட்ட வேடம் ஒரு பரங்கி சிப்பாய். பார்வையாளர்கள் கை தட்டினார்கள் நானும் என்னைப் போன்ற சில சிறுவர்களும் பரங்கி சிப்பாய்களாக மேடையில் நடந்த போது. இது தான் எனது முதல் நாடக மேடை அனுபவம்.

நாடகம் முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் எனது தந்தை என்னை பளாரென்று கன்னத்தில் அறைந்தார். தெருக் கூத்தாடி என்று ஏளனமாக என்னை அழைத்தார். இது என்னை வெகுவாக பாதிக்கவே எனக்கு காய்ச்சல் வந்து விட்டது. நான் ஏன் ஒரு நடிகனாகக் கூடாது என்ற கேள்வி என் மனதில் எழுந்தது. மேலும் எனது தந்தையைப் போலவே எனக்கும் சுதந்திர தாகம் இருந்ததால் நான் ஏன் கட்டபொம்மனாக நடிக்கக் கூடாது என்ற எண்ணம் மனதில் தோன்றியது.

அச்சமயம் மதுரை ஸ்ரீ பால கான சபா என்ற யதார்த்தம் பொன்னுசாமியின் நாடக குழு திருச்சியில் நாடகங்களை நிகழ்த்தி வந்தது. நாடகம் முடிந்து அனைவரும் கிளம்ப ஆயத்தமாயினர். நான் அப்போது தெருவில் நின்று கொண்டு பார்த்துக் கொண்டிருந்தேன். சக்ரபாணி என்ற நடிகர் என்னைப் பார்த்து விட்டு என்னை அழைத்து நீ ஏன் இங்கு நின்று கொண்டிருக்கிறாய் என்று கேட்டார். நான் அவரிடம் நாடக குழுவில் சேர விரும்புவதாக கூறினென். அப்படியென்றால் உனக்கு பாட வேண்டியிருக்கும் என்றார். எனக்கு அந்த நாட்களில் நன்றாக பாட ஆடத் தெரியுமாதலால் அவருக்காக " பழனிவேல் இது தஞசம்" என்ற பாட்டை பாடினேன். உடனே என்னை நாடக குழுவில் சேர்த்துக் கொண்டனர். நாடக குழுவில் காக்கா ராதாகிருஷ்ணன் என்ற எங்களது பக்கத்து வீட்டு நண்பரும் இருந்தது எனக்கு சங்கடமாயிருந்தது. அவர் எனது வீட்டில் என்னைப் பற்றி சொல்லி அவர்கள் என்னை அடித்து கூட்டிச் சென்று விடுவார்களொ என பயந்தேன். அவரிடம் நான் வீட்டிற்குத் தெரியாமல் தான் நாடக குழுவில் நான் ஒரு அனாதை என்று கொல்லி சேர்ந்தாக ஒப்புக் கொண்டேன். குழு திருச்சியை விட்டு திண்டக்கல்லுக்கு இடம் பெயர்ந்த போது நானும் அவர்களுடன் சென்றேன். இப்படித்தான் எனது நாடக வாழ்க்கை ஏழு வயதில் துவங்கியது.

தொடரும்...
 
நல்ல முயற்சி மதுரைவீரன். நடிப்பின் இமயத்தினை அருகிருந்து தரிசித்த ஆனந்தம். தொடருங்கள். வாழ்த்துகள்.
 
இதுவரை படிக்காத விடயங்கள் மதுரைவீரன்! அவரே கூறியவை மிகவும் சுவைமிக்கதாகவே இருக்கின்றன. தொடருங்கள் நண்பரே.
 
மிக அருமையான படைப்பு...
வாழ்த்துக்கள்! தொடர்ந்து எழுதுங்கள்..

சிவாஜி எனும் நடிப்புலக அகராதி திரியில் கொடுத்திருந்தால் இன்னும் சந்தோஷப்பட்டிருப்பேன்........

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=17734
 
மிக அருமையான படைப்பு...
வாழ்த்துக்கள்! தொடர்ந்து எழுதுங்கள்..

சிவாஜி எனும் நடிப்புலக அகராதி திரியில் கொடுத்திருந்தால் இன்னும் சந்தோஷப்பட்டிருப்பேன்........

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=17734

மிக்க நன்றி நண்பர் Narathar

உங்கள் திரியில் நடிகர் திலகத்தின் நடிப்பாற்லைப் பற்றி அனைவரும் பங்கேற்க இயலும். இந்த திரியில் அவரின் நடிப்பாற்லை மட்டுமின்றி சொந்த வாழ்க்கையையும் பற்றி கூறுவதனால் தனியாகப் போடடேன். உண்மையில் சொல்லப் போனால் உங்கள் திரியைப் பார்த்து வந்த உந்துதலினால் நான் இம்முயற்சியை மேற் கொண்டேன.
 
முதற்க்கண் நன்றிகள் மதுரை அண்ணா,

பிரமாதமான பதிவு. தொடருங்கள்.
 
மிக்க நன்றி நண்பர் Narathar

உங்கள் திரியில் நடிகர் திலகத்தின் நடிப்பாற்லைப் பற்றி அனைவரும் பங்கேற்க இயலும். இந்த திரியில் அவரின் நடிப்பாற்லை மட்டுமின்றி சொந்த வாழ்க்கையையும் பற்றி கூறுவதனால் தனியாகப் போடடேன். உண்மையில் சொல்லப் போனால் உங்கள் திரியைப் பார்த்து வந்த உந்துதலினால் நான் இம்முயற்சியை மேற் கொண்டேன.

நன்றி உங்கள் அன்பான பதிலுக்கு.
இந்த திரிக்கு எனது திரியில் ஒரு லிங்க் கொடுக்கலாமா?
 
சுவையான தகவல்களுடன் அருமையான திரி.
மிக நன்றி மதுரை வீரன்.
 
நடிகர் திலகத்தின் சுயசரிதம் (முதல் நாடக வேடம்-பெண் வேடம்)

எனது இந்த முயற்ச்சிக்கு ஆதரவளித்து உற்சாகமூட்டி வரும் நண்பர்கள் சிவா.ஜி, ஓவியா, மன்மதன், பாரதி, மாதவர், கீழை நாடான்
Narathar மற்றும் அனைத்து மன்றத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளுடன் தொடர்கிறேன்.

__________________________________________________________________________

நடிகர் திலகத்தின் முதல் நாடக வேடம்-பெண் வேடம்

டி.எஸ்.என்.: வீட்டில் யாரிடமும் சொல்லாமல் நாடக குழுவினரிடம் தான் ஓர் அனாதை என்று சொல்ல எப்படி உங்களுக்கு தைரியம் வந்தது?

சிவாஜி: என்னைப் பொறுத்தவரை கட்டபொம்மன் நாடகத்தில் மெய் மறந்து விட்டேன். ஏழு வயது முதல் அந்த நாடகம் என் பனதில் நீங்கா இடம் பெற்று விட்டது. வீர பாண்டிய கட்ட பொம்மன் நாடகம் தான் எனக்கு பெயரையும் புகழையும் ஈட்டி தந்தது. எப்படியாவது நாடக குழுவில் சேர்ந்து விட வேண்டும் என்று தீர்மானித்தால் தான் நான் அனாதை என்று பொய் சொன்னேன். பொய் சொன்னது தவறு தான். ஆனால் சரி எது தவறு எது என்று தீர்மானிக்கும் வயதா அது?. எனது கனவை எப்படியாவது நிறை வேற்ற வேண்டும் அதனால் தான் நான் அவ்வாறு செய்தேன்.

நாடக குழுவில் சேர்ந்து திண்டுக்கல் சென்ற எனக்கு அங்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. எனது ஆர்வமோ அல்லது என்னுள் இருந்த சக்தியோ என்னை ஒரு நடிகனாக்கியது. எனது குருவின் பெயர் சின்ன பொன்னுசாமி படையாச்சி. என்னைப் பொறுத்தவரை ஒரு மறக்க முடியாத பெயர்.

டி.எஸ்.என்.: நீங்கள் நாடக குழுவின் பெயர் யதார்த்தம் பொன்னுசாமி கம்பெனி என்றல்லவா சொன்னீர்கள்?

சிவாஜி: நாடக குழுவின் பெயர் யதார்த்தம் பொன்னுசாமி நாடக கம்பெனி. கம்பெனியில் இரண்டு பொன்னுசாமி பிள்ளை இருந்தனர். ஒருவர் முதலாளி பொன்னுசாமி மற்றவர் ஆசிரியர் பொன்னுசாமி. ஆகவே அவர்களை பெரிய பொன்னுசாமி சின்ன பொன்னுசாமி என்று அழைத்தனர். எனது குரு சின்ன பொன்னுசாமி. அவர் தான் என்னை நடிப்புலகில் அடியெடுத்து வைக்க உதவினார். எனக்கு முதலில கற்றுக் கொடுக்கப் பட்ட கதாபாத்திரம் எது தெரியுமா? ராமாயணத்தில் வரும் சீதையின் கதாபாத்திரம் தான அது. "யாரென இந்த புருஷன் அறிகிலேன்" என்ற பாட்டை நான் பாட வேண்டும் அதோடு நடனமாட வேண்டும் பேச வேண்டும் சிரிக்க வேண்டும் ஏனெனில் இது ஒரு முக்கியமான காட்சி. சீதை ராமரை முதன் முதலில் சந்திக்கும் காட்சி. நான் இந்த காட்சியில் திறம்பட நடித்து காட்சி முடிந்து மேடைக்கு பின்புறம் சென்று ஒப்பனையைக் களையும் போது எனது குரு அங்கு வந்து என்னை செல்லமாக முதுகில் தட்டி நான் நன்றாக நடித்ததைப் பாராட்டினார்.

நான் ஒரு சிறந்த நடிகனாகி எனது பெற்றோரைக் காப்பாற்ற வேண்டும் என்று ஆசைப் பட்டேன். எனது முதல் நடிப்புக்கு கிடைத்த பாராட்டுக்களால் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. எனது நடிப்புத் தொழில் பல நல்ல கதாபாத்திரங்களினால் வெகுவாக முன்னேறியது. என்னை மாதிரி நாடக உலகில் ஏற்றம் கண்டது வேறு யாரும் கிடையாது என்று பெருமிதத்தோடு சொல்லுவேன்.

பெரும்பாலும் ஒருவர் பெண் வேடம் தரித்து நடிக்கத் துவங்கி விட்டால் அவருக்கு அதே மாதிரி வேடங்கள் தான் கிடைக்கும். நாளடைவில் அவரின் நடை உடை பாவனை பேச்சு எல்லாமே பெண்களைப் போல் ஆகிவிடும். என்னைப் பொறுத்த வரை இது நடக்கவில்லை ஏனென்றால் நான் பல விதமான கதா பாத்திரங்களை ஏற்று நடித்தேன். ராமாயணத்தில் மட்டுமே எனக்கு நான்கு வித கதாபாத்திரங்கள் கிடைத்தன. முதலில் சீதையாக நடித்து பாராட்டுக்களைப் பெற்றபின் பரதனாகவும் நடித்தேன். அந்த கதாபாத்திரத்திலும் எனது நடிப்பு நன்றாக அமைந்தது குறித்து மகிழ்ச்சி அடைந்தேன்.பின்னர் சம்பூர்ணராமாயணம் என்ற திரைப்படத்தில் பரதனாக நடித்தபோது அதைப் பார்த்த மூதறிஞர் ராஜாஜி என்னைப் பாராட்டி "பரதனைக் கண்டேன்" என்றார். இதை விட புகழ்ச்சி ஒரு நடிகனுக்கு கிடைக்க முடியாது. இது எனது குருவின் ஆசீர்வாதம் என்று கருதுகிறேன்.

நான் சூர்ப்பனையாகவும் நடித்தேன். சூர்ப்பனகை என்றவுடன் வெறும் அரக்கி என்று நினைத்து விடாதீர்கள். ராமரையும் லட்சுமணரையும் மயக்க ஒரு அழகு மங்கையாக உருவெடுத்தாள் அவள். நான் அந்த அழகு மங்கையாக நடித்தேன். அந்த நாட்களில் எனது தலைமுடி நீளமாக முழங்கால் வரை இருக்கும. நான் குறைந்த ஆடைகளணிந்து தலைமுடியை தொங்க விட்டுக் கொண்டு ஒரு அழகு பதுமையாக காட்சி அளித்தேன். ஷாம்பு ஹேர் ஆயில் விளம்பரங்களில் வரும் அழகு தேவதைகளைப் போல் இருந்தேன். நான் மேடையில் தலைமுடியை அவிழ்த்து அழகை வெளிப்படுத்தியதம் பார்வையாளர்கள் பல நிமிடங்கள் கை தட்டுவார்கள்.

டி.எஸ்.என்.: பிறகு வேறு எந்த கதாபாத்திரம் ஏற்று நடித்தீர்கள்?

சிவாஜி: நான் ராவணள் மகன் இந்தரஜித் ஆகவும் நடித்தேன். ஒரே நாடகத்தில் வேறுபட்ட காட்சிகளில் பரதன் இந்தரஜித் ஆக இரண்டு ஆண் கதாபாத்திரங்களிலும் சீதை சூர்ப்பனகையாக இரண்டு பெண் கதா பாத்திங்களிலும் நடித்தேன். இவ்வாறு வேறுபட்ட கதா பாத்திரங்களில் நடிக்க கற்றுக் கொடுத்த எனது குருவிற்கே எனது புகழ் அனைத்தும் சேரும். அவரது ஆதரவால் தான் எனது நடிப்புத் திறமை வளர்ந்து ஒரு நல்ல நாடக நடிகனாக பெயர் பெற்றேன்.

டி.எஸ்.என்.: நீங்கள் ஆண் பெண் வேடங்களில் மாறி மாறி நடிக்கும்போது உங்களது குரலை மாற்றிக் கொள்ள வேண்டியிருக்குமே இதற்காக விசேட பயிற்சி எதுவும் எடுத்துக் கொண்டீர்களா?

சிவாஜி: நான் இப்பொது உங்களுடன் பேசிக்கொண்டிருப்பது எனது சொந்த குரலில். ஆனால் ஒப்பனை தரித்து உடைகளை மாற்றிக் கொண்டவுடன் எனது குரல் அந்த கதா பாத்திரத்திற்கு ஏற்ற மாதிரி மாறிவிடும். நாடகங்களில் குரலை மாற்றிக் கொள்வது இயற்கை. மகரக்கட்டு என்ற ஒரு 10 லிருந்து 15 வயது சிறுவனின் பருவத்தில் குரல் உடைகிறது. நான் நடிக்கத் துவங்கிய ஏழு வயதில் எனது குரலில் எந்த மாற்றங்களும் தெரியாததால் வேடத்திற்கு தகுந்த மாதிரி குரலை மாற்றிக் கொள்வது எளிதாக இருந்தது எனக்கு. நான் நிறைய குரல் வள பயிற்சியை மேற் பொண்டதால் தான் எனக்கு சிம்மக்குரலோன் என்ற பட்டம் கிடைத்தது.

தொடரும்
 
Last edited:
இந்த திரியை நண்பர்கள் தொடர்ந்து வாசிக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் தொடருகிறேன்.
---------------------------------------------------------------

குருகுலம்

டி.எஸ்.என்.: நாடகப் பள்ளிகள் ஒரு குருகுலம் மாதிரி நடந்தன என்று சொல்கிறார்களே உங்கள் நாடகப் பள்ளியைப் பற்றி கூறமுடியுமா?

சிவாஜி: எனது காலத்து நடிகர்கள் அனைவரும் தேர்ந்த நடிகர்கள். டி.ஆர. மகாலிங்கம் மதுரை பால கான சபா வின் மெம்பராக இருந்தார்.அந்த கால்த்தில் நாடகங்களில் நன்கு பாடக்கூடியவர்கள் இரண்டு அல்லது மூன்று பேர் இருந்தனர். ஒருவர் மராத்தி பாடகர் பால கந்தர்வ மற்றவர் தமிழ் நாட்டைச் சேர்ந்த எஸ்.ஜி.கிட்டப்பா. டி.ஆர. மகாலிங்கம் இவர்களுக்கு ஒரு படி கீழே தான் இருந்தார். நான் அவருடய சக நடிகனாக இருந்தேன் என்று பெருமையுடன் கூறிக் கொள்கிறேன். எம்ஆர் ராதா வும எங்கள் குழுவில் இருந்தார்.

நாடகப் பள்ளிகள் ஒரு தலை சிற்நத குரு குலம். புராணங்களில் நாம் ராமர் பாண்டவர்கள் ஆகியோர் குரு குலத்தில் கல்வி கற்றனர் என்று கேள்விப் பட்டிருக்கிறோம். எனது குரு குலம் அவர்களது குரு குலத்திற்கு சற்றும் குறைந்தது இல்லை.

தினம் காலை ஏழு மணிக்கு எழுந்து குளித்து கடவுளைத் துதிப்போம். அதன் பின் முதல் பகுதியில் பாடவும் நடனமாடவும் பயிற்சி பெற்றோம். அதன் பின்னர் அன்று இரவு நடக்க விருக்கும் நாடகத்திற்கான வசனங்களை ஒத்திகை பார்ப்பது ஆகும். என்னை ஒரு புத்தகப் புழு என்பார்கள். ஏனெனில் நான் எப்போதும் நாடக நம்பந்தமான் புத்தகங்களை வாசித்துக் கொண்டிருப்பேன். எனக்கு நாட்டிய சாஸ்திரங்களில் கூறியுள்ளது போல் நடனமாடவும் பாடவும் தெரியும்.

இப்படி உரக்க பேசுவதிலும் நடனமாடுவதிலும் பாடுவதிலும் தீவிர பயிற்சி பெற்றோம் என்றாலும் அதற்கு தகுந்த உணவு எங்களுக்கு தரப்படவில்லை;. சாதம் சாம்பார் ரசம் மோர் இவைகளுடன் நல்ல சாப்பாடு எங்களுக்கு கிடையாது. ஏழை சிப்பாய்களைப் பொல் சாப்பிட்டாலும் ஒரு கம்பீரமான அரசனைப் போல் கர்ஜிக்க வேண்டும். எங்களது குரு குல வாழ்க்கையில் பெற்றோர்களைப் பார்க்க வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றோ அல்லது அவர்களுக்கு கடுதாசி போட வேண்டும் என்றோ கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது. குரு குலத்தில் நான் கஷ்டப் பட்டேன். ஆனால் அனைத்தும் எதற்காக? விடை என்னுடய சாதனைகளில் இருக்கிறது. என்மேல் நீங்கள் வைத்துள்ள மரியாதைக்கும் இந்த எழுபது வயதிலும் என்னை பேட்டி கண்டு எனது நினைவுகளை பதிவு செய்கிறீர்களே அதில் விடை இருக்கிறது. இதைத் தான் நான் வாசகர்களுக்கு கூற விரும்புகிறேன்.

டி.எஸ்.என்.: நீங்கள் வீட்டை விட்டு வெளியெ வந்த பிறகு எப்போதாவது உங்களுடய குடும்பத்தினரை சந்திக்க சீங்கள் முயற்சித்ததுண்டா?

சிவாஜி: நான் நாடக கமபெனியில் இருந்த போது எனது மூத்த தமையனார் திருஞான சம்பந்த மூர்த்தி காலமானார். காக்கா ராதாகிருஷ்ணன் அவர்கள் எப்படியோ கெஞ்சி கூத்தாடி வீட்டிற்கு செல்ல அனுமதி பெற்று சென்று வந்தார். அவர் திரும்பி வந்தவுடன் தான் எனக்கு என் தமையனார் காலமான செய்தி கிடைத்தது. நாடகங்களை நடத்துபவர்களுக்கு நான் இன்றியமையாதவனாக இருந்தேன். நான் விடுப்பில் சென்றால் எனது இடத்தில் இன்னொரு பையனைத் தயார் செய்ய வேண்டும். ஆகவே அவர்கள் என்னை தாஜா பண்ணி விடுப்பில் செல்ல விடவில்லை.

டி.எஸ்.என்.: நீங்கள் வீட்டை விடும்போது உங்களுக்கு ஏழு வயது. உங்கள் பெற்றோர்களிடம் சொல்லிக்காமல் வந்து விட்டீர்கள். பின் எப்போது அவர்களைப் பார்க்கும் வாய்ப்பு வந்தது?

சிவாஜி: நான் வீட்டை விட்டு வந்த பின் என் பெற்றோர்கள் என்னைத் தேடியிருப்பார்கள். அந்த காலத்தில் தகவல் தொடர்பு வசதிகள் மிக்க் குறைவு. காக்கா ராதாகிருஷ்ணன் அவர் வீட்டிற்கு சென்ற சமயம் என் பெற்றோர்களிட்ம் நான் இந்த நாடக குழுவில் இருப்பதாக கூறியிருக்கிறார். அதற்கு அவர்கள் " எங்கிருந்தாலும் அவன் நலமாக இருக்கட்டும்" என்றார்களாம். என்னை ஒரு நாள் பார்க்க முடியும் என்று ஆறுதல் அடைந்திருப்பார்கள்.
 
Last edited:
Back
Top