படித்ததில் பிடித்தது- நெறிமுறைகள்

mukilan

New member
படித்ததில் பிடித்தது

இனிய சொந்தங்களுக்கு வணக்கம். மன்றத்தில் நாம் தமிழால் இணைந்தோம். ஒவ்வொருவரின் படைப்புகளையும் மற்றவர்களிடம் காட்டி அவர்களின் விமர்சன உளிகளால் அழகிய சிலைகளாய் சமைத்தோம்.மன்றமானது தமிழ் பழகுதளமாய், அறியாதது அறியத்தரும் களமாய், நல்ல நட்பின் இல்லமாய் விளங்கி வருகிறது.

தமிழ் பயின்றதோடு மட்டுமல்லாமல் எங்கேனும் நாம் கண்ணுறும் அழகிய படைப்புகளை மன்றத்தின் மற்ற நண்பர்களுக்கு அறியத்தருவதிலும் மனம் மகிழ்ந்தோம். நாம் படித்தவற்றை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளும் பண்பு மிக உயர்ந்தது. :icon_b:

ஆனால் படைப்பாளிக்கு நன்றி சொல்லாமலோ, மூலத்தை குறிப்பிடாமலோ இங்கே பதித்தல் கடைத்தேங்காயை வழிப்பிள்ளையாருக்கு உடைத்தாற் போன்றது அல்லவா? நமது படைப்பை யாரேனும் அவ்வாறு செய்தால் நம் மனம் எத்தகைய துன்பம் அடையும்.

எனவே இனிமேல் நம்மில் எவரேனும் அடுத்தவர் படைப்பை பகிர்ந்து கொள்ள நினைக்கையில் அதன் படைப்பாளி யார், அந்தப் பதிப்பு எங்கே கண்ணுறப்பட்டது என்பதை தெளிவாக குறிப்பிட்டு படித்ததில் பிடித்தது பகுதியில் மட்டும் பதியுங்கள். வேறெந்தப் பகுதியிலும் பதியவேண்டாம் என மன்ற நிர்வாகம் சார்பில் உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

படித்ததில் பிடித்ததில் இடம்பெறவேண்டிவை:


பிறதளங்களில் வேறொருவர் பதிந்துள்ள படைப்புகள்- இவை கீழ்க்காணும் ஏதேனும் ஒன்றாக இருக்கலாம்.

கட்டுரைகள், கவிதைகள், நகைச்சுவைத் துணுக்குகள், கதைகள், விமர்சனங்கள்,

செய்திகள் (அப்படியே வெட்டி ஒட்டுவதானாலும், வெறும் தட்டச்சு செய்வதானாலும்)

இது படைப்பாளிகட்கு மரியாதை செய்வதற்கும் , காப்புரிமை மீறல் மற்றும் அறிவுத்திருட்டு போன்றவற்றிற்கு மன்றம் ஒரு களமாய் அமைவதைத் தடுப்பதற்கும் உங்களிடம் வைக்கப்பட்டுள்ள வேண்டுகோள்.

அதிகமாகப் படையுங்கள், நேர்மையுடன் பகிருங்கள்.
 
மிகவும் அவசியாமான ஒரு பதிவு முகில்.

தக்க தருணத்திற்க்கு கொடுத்து பலரின் அறிவு கண்களை திறக்க செய்துள்ளீர்கள்.

ஆனாலும் ஒரு விசயம், சிலருக்கு இதந்த பதிவை நூறு முறை பதிந்தாலும் அவர்களின் அலட்சிய போக்கிலே போய்க் கொண்டுதான் இருப்பார்கள்.
இதனால் நம் சுயமரியாதை கொஞ்சம் பாதிக்கும் என்று துளியளவும் வருந்துவதில்லை.


எப்படியாவது சில பதிவுகள் வாரி போட்டு பதிவு எண்ணிகைகளையும் அய்கேஸையும் சேகரிக்க வேண்டும் என்றும் சிலர் நினைக்கின்றனர். என்ன செய்ய :p


நான் மற்ற தளங்களின் பதிவை இங்கு அப்படியே வெட்டி ஒட்ட மாட்டேன்,

யாருடைய பதிவுகளையும் திருட மாட்டேன்,

மற்றவரின் பதிவுகளை என் பதிவுபோல் போட்டு அறிவுமணியாக காட்டிக்கொள்ள மாட்டேன்,

மற்றவரின் பதிவை உரிமைக்கொள்ள மாட்டேன் என்று உறுதியளிக்கிறேன்.
 
Last edited:
நன்றி முகிலன்.

நிச்சயம் இந்நெறிகாட்டலைப் பின்பற்றுவேன்.
 
அவசியமான வதிமுறைகள்..

கட்டுப்படுகிறேன்..
 
மிக அவசியமான நெறிகாட்டல். நிச்சயம் பின்பற்றுகிறேன். நன்றி முகிலன்.
 
சுட்டிக்காடியமைக்கு நன்றி முகிலன்.
எனது தவறையும் திருத்தி விட்டேன்.;)
 
அவசியமான நெறிமுறைகள்..
அவசியமெனக் கொண்டு பின்பற்றுவேன்..!!
:)
 
நன்றி,நல்ல யோசனை.
நீங்கள் சொன்னது போல் மற்றவர் உழைப்பையும்,படைப்பையும் திருடுவதை தவிர்ப்பது நன்றே.
நானும் இதை கடைப்பிடிப்பேன்.
 
நிச்சயம் நானும் இந்த நெறி முறைகளை பின்பற்றுவேன். நன்றி.
 
sms

:icon_rollout:முயலும் வெற்றிபெறும்
ஆமை வெற்றிபெறும்
ஆனால் முயலாமை
தோற்கும்
ஆகையால் கடின
ஹர்ட் வொர்க் வெற்றிபேரும்
 
அரிய சிந்தனையில் விளைந்திட்ட நன்முறைகள்.
ஆக்கத்திறனை போற்றுவோம் கேட்டு
திருட்டுக்கு வைப்போம் வேட்டு

கண்டிப்பாய்ப் பின்பற்றுவேன் முகிலன் அவர்களே!
 
கண் போல் கடை பிடிக்க வேண்டிய விஷயம்...

கண் போல் கடை பிடிக்க வேண்டிய விஷயம்...
கடைபிடிப்பேன் என்று உறுதியளிக்கிறேன்........
 
எனது படைப்புகளை தமிழ் மன்றத்தின் 'படித்ததில் பிடித்ததது' என்ற பகுதியில் மீள் பதிவு செய்ய திரு.பாரதி அணுகிய முறை என்னை மிகவும் கவர்ந்தது. திரு.முகிலன் இங்கு நெறி என்ற சொல்லை பயன் படுத்தியுள்ளார். நன்னெறியில் வாழும் போது நமக்கு என்றும் நிம்மதி.
நன்றி, வணக்கம்,
இன்னம்பூரான்
 
வாருங்கள் இன்னம்பூரான் அவர்களே.

உங்கள் கட்டுரையின் சுவையில் சொக்கி இருக்கும் எமக்கு உங்கள் வரவு பேருவகை தருகிறது.
 
Back
Top