தமிழ் நாட்டு பறவைகளின் பெயர்கள்..!!

தமிழகத்தில் உள்ளா 300க்கும் மேற்பட்ட பறவைகளின் பெயர்களில் எனக்கு கிட்டிய 68 பெயர்களின் பட்டியலை இங்கு தருகிறேன்..

திருமண வாழ்த்து மடலில் கிட்டியது தான்...


``````````````````````````````````````````````````````````````````````````
  1. முக்குளிப்பான்
  2. கூழைக்ககடா
  3. நீர்க்காகம்
  4. பாம்புத்தாரா
  5. கொக்கு குருகு
  6. நாரை
  7. அரிவாள் மூக்கன்
  8. பூசாரை
  9. வாத்து
  10. பருந்து கழுகு
  11. விரால்அடிப்பான்
  12. கைடுகள்
  13. கௌதாரி காடை
  14. மஞ்சல்கால் காடை
  15. நீர்க்கோழிகள்
  16. வரகுக்கோழி
  17. இலைக்கோழி
  18. மயில்உள்ளான்
  19. உப்புக்கொத்தி
  20. பேதைஉள்ளான்
  21. செங்கழுத்தனி
  22. நண்டுதின்னி
  23. கணகிலேடி
  24. கல்குருவி
  25. படல்காகம் ஆலா
  26. கல்கௌதாரி
  27. புறா
  28. கிளி
  29. குயில்
  30. கூகை
  31. ஆந்தை
  32. பக்கி
  33. உழவாரன்
  34. கொண்டை உழவாரன்
  35. தீக்காக்கை
  36. மீன்கொத்தி
  37. தேனீபிடிப்பான்
  38. பனங்காடை
  39. கொண்டலாத்தி
  40. இருவாயன்
  41. மரங்கொத்தி
  42. வானம்பாடி
  43. தகைவிலான்
  44. வாலாட்டி
  45. மின்சிட்டு
  46. சின்னான்
  47. வண்ணச்சிட்டு
  48. கிச்சான்
  49. பூங்குருவி
  50. சிலம்பன்
  51. கதிர்குருவி
  52. ஈப்பிடிப்பான்
  53. விசிறிவாலன்
  54. பட்டாணிக்குருவி
  55. பசையெடுப்பான்
  56. மலர்க்கொத்தி
  57. தேன்சிட்டு
  58. வெள்ளைக்கண்ணி
  59. காட்டுச்செந்தலையன்
  60. கூம்புஅலகன்
  61. சில்லை
  62. சிட்டு
  63. தூக்கணம்
  64. நாகணவாய்
  65. மாங்குயில்
  66. கரிச்சான்
  67. சாம்பல்தகைவிலான்
  68. காக்கை
<<<<<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>>>>>>

ஆதாரம்: தமிழ்நாட்டுப் பறவைகள் நூல்
எழுதியவர்: முனைவர் கா.ரத்தினம்.
 
Last edited:
பருந்து வேறு, கழுகு வேறு இல்லையா? அதேப்போல கூகையும், ஆந்தையும் ஒன்றுதானே...சந்தேகம் தீர்க்க யாராச்சும் வாங்களேன்.
 
ஆம் அண்ணா! கூகையும் ஆந்தையும் ஒன்றெனவே நானும் நினைக்கிறேன். அதோடு 12ம் எண் பறவையின் பெயர் கைடுகள்?? அது ஆங்கிலப் பெயர் அல்லவா. ஆள்காட்டி குருவி என ஒரு குருவி இருக்கிறது. இரட்டை வால் குருவி???

நன்றி தங்கையே!
 
பறவைகளின் தலைவனான ராஜாளியின் பெயரைக் காணவில்லையே..

கைடுகள், கொண்டலாத்தி ( கொண்டை லாத்தி...?) கணகிலேடி... வித்தியாசமான பெயர்கள்..!
 
வித்தியாசமான திரி...பூ கணக்கெடுப்பில் இறங்கிருச்சா?
பயனுள்ள திரி...அடுத்தது என்ன மீன் வகைகளா?

சுகந்தன் என்கிட்ட அக்கா..இதில வர்ற பறவைகள்ள ஆறு பறவைகளோட ரோஸ்ட் தான் சாப்பிட்டி இருக்கேன்...மத்ததெல்லாம் எப்படி இருக்கும்...சாப்பிட்டா நெஞ்செரிசல் வருமான்னு...கேட்டான்..எரிச்சல் வராது.. மரங்கொத்திய மட்டும் அலகோட சாப்பிட்டையானா...உள்ள போய் குத்தி...நெஞ்சோட்டை வரும்னேன்...சரியா பூ???
 
பருந்து வேறு, கழுகு வேறு இல்லையா?

ஆம் அண்ணா பருந்தும் கழுகும் வெவ்வேறு தான்.

இதோடு இவற்றின் படங்கள் கிடைத்தால் இணைக்கலாமே. வெறும் பெயர்களை வைத்து எப்படித் தெரிந்து கொள்வது. படங்கள் கிடைத்தால் கிடைத்தவர்கள் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

பகிர்தலுக்கு நன்றி பூமகள்.

தமிழ்நாட்டுப் பாம்புகள்னு ஒரு திரி ஆரம்பிக்கலாம் ரொம்ப நல்லாருக்கும். யவனிக்கா பாம்பு 65 போட்டுடலாமா?
 
பருந்துப் படத்தை கழுகுப் பார்வையில் சிக்கினால் தருகிறேன்.. அதுவரை ஒரு சிறு துளி.

பருந்து-கோழிக்குஞ்சை தூக்கும்
கழுகு-கோழியையே தூக்கும்.

பூவின் இலக்கியப் பதிவுகளிலுள்ள மணத்தை நானும் மகிழ்வுடன் முகர்கிறேன்.
 
அரிய தகவல்களை ஆர்வத்துடன் மன்றத்தில் பகிர்வதற்கு மிக்க நன்றி பூ. உறவுகள் சொல்வது போல படங்கள் கிடைப்பவர்களும் அறியத்தாருங்கள்.
 
அடேங்கப்பா....

இத்தனை பறவைகளா..??? (தேடிப்பிடிச்சு யாரு பெயர் வைத்தாங்களோ....????)
 
சுகந்தன் என்கிட்ட அக்கா..இதில வர்ற பறவைகள்ள ஆறு பறவைகளோட ரோஸ்ட் தான் சாப்பிட்டி இருக்கேன்...மத்ததெல்லாம் எப்படி இருக்கும்...சாப்பிட்டா நெஞ்செரிசல் வருமான்னு...கேட்டான்..எரிச்சல் வராது.. மரங்கொத்திய மட்டும் அலகோட சாப்பிட்டையானா...உள்ள போய் குத்தி...நெஞ்சோட்டை வரும்னேன்...சரியா பூ???
இதிலிருந்து சகலமானவர்களுக்கும் நான் தெரிவித்துக்கொள்வது என்னவென்றால் நான் தின்றது ஆறு மட்டும்தான்.. எங்க அக்கா தின்றது நூறு மட்டும்தான்..!! (இன்னுமிருந்தா சொல்லுங்கோ..):icon_rollout::icon_rollout::icon_rollout:
 
கோழி, வான்கோழி ஆகியவை இந்த லிஸ்டில் இல்லையே.
 
புறாவில் மணிப்புறா மாடப்புறா என்று இரண்டு இருக்கிறதே
 
இதிலிருந்து சகலமானவர்களுக்கும் நான் தெரிவித்துக்கொள்வது என்னவென்றால் நான் தின்றது ஆறு மட்டும்தான்.. எங்க அக்கா தின்றது நூறு மட்டும்தான்..!! (இன்னுமிருந்தா சொல்லுங்கோ..):icon_rollout::icon_rollout::icon_rollout:

அந்த ஆறு ஐட்டம்மில் காகமும் இருக்கிறதா?
 
அன்னப்பறவை என்று ஒன்று இருந்ததாக சொல்கிறார்களே.
 
பஞ்சவர்ணக்கிளி இந்த லிஸ்டில் இல்லையே
 
வல்லூறு..

கூகை வேறு ஆந்தை வேறுதான்.. (கூகை ஆந்தைப் போல நீயும் வெண்ணிலாவே, பகல் கூட்டினில் உறங்குவாயோ வெண்ணிலாவே.. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.)

மைனா
அன்னப்பறவை
பருந்து வேறு கழுகு வேறுதான்..

இருவாயனா இல்லை இருவாச்சியா?

அன்றில் பறவை
மயில்
வான்கோழி
தீக்கோழி( ஆஸ்டிரிட்ச் அல்ல இது, காட்டில் இருக்கும். உடலெல்லாம் புள்ளிப் புள்ளியாய் இருக்கு, வரகுக்கோழியோ??)


எதைச் சமைத்துக் கொடுத்தாலும் சாப்பிட நான் ரெடி..

யாருக்காவது சமையல் குறிப்பு வேணுங்களா?
 
Last edited:
பஞ்சவர்ணக்கிளி இந்த லிஸ்டில் இல்லையே
அதான் பஞ்ச வர்ணக் கிளியாச்சே... இலகுவில் கிடைக்குமா என்ன... :lachen001:
 
அருமையான அரிய தகவல்கள்....
நல்ல தமிழ் பெயர்கள்...
படமும் இருந்தால் நாமும் தெரிந்து கொண்டு, சிறுவர்களுக்கும் காட்டலாம்.
 
தமிழில் சிறிய பறவைகளுக்கு சில்லைகள், சிட்டுக்கள், குருவிகள் என பெயர் உள்ளதை போல ஊணுன்னும் பறவைகளில் பல பிரிவுகளை கொண்டு இருக்கிறது. அவைகள் முறையே வைரிகள், வல்லூறுகள், இராசாளி , பருந்துகள், கழுகுகள், பாறு என அவைகளின் வேட்டையாடும் விதத்தாலும், உடல் அமைப்புக்கு ஏற்றவாறும் வகைப் படுத்தப் பட்டுள்ளது. இதில் ஆந்தை இரவாடிப் பறவை... அது தனி இனமாகவே கருதப் படுகிறது. பகலிலும் வேட்டையாடும் ஆந்தைகளும் உண்டு. பகலில் ஆந்தைக்கு கண் தெரியாது என்பது பொய்யான கருத்து. ஆந்தைக்கு கருவிழி அமைப்பு பெரிதாக உள்ளதால் உள்வாங்கும் ஒளியின் அளவு அதிகமாகும் போது உருவம் தெளிவில்லாமல் தெரியும் வாய்ப்புக்கள் அதிகம். ஆந்தைகள் பொதுவாக காற்றின் அதிர்வு அலைகளை பின்பற்றியே பூச்சிகளையும், சிறிய பறவைகளையும் வேட்டையாடும்.
 
நல்ல தகவல் பரிமாற்றம் இரவி அண்ணா, இதுபோன்ற உங்கள் அனுபவப் பதிவுகள் தொடரட்டும்.
 
Back
Top