அபினவ் பிந்த்ரா..!
ஆம்.. இதுதான் 110 கோடி இந்தியரும் உச்சரித்துக் கொண்டிருக்கும் பெயர். இந்தியாவின் பெருமையை ஓரளவேனும் உயர்த்திய மந்திரவாதியின் பெயர்.
ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவின் பெயரில் முதல் தனிநபர் தங்கத்தை வென்ற அபினவ், அதிகம் பேசாதவர். அமைதியானவர்.
2002 ம் ஆண்டில் கேல் ரத்னா விருது பெற்ற பிந்த்ரா, 2006 ம் ஆண்டு துப்பாக்கி சுடுதலில் உலக வாகையர் பட்டம் வென்றவர். எனினும் பீகிங் ஒலிம்பிக்ஸில் அவரது வாய்ப்பு ஒன்றும் மிகப்பிரகாசமாக இல்லை.
கடந்த (ஏதென்ஸ்) ஒலிம்பிக்ஸில் ஏழாவது இடத்தையே பெறமுடிந்த அபினவின் தற்போதைய வெற்றி மயிர்க்கூச்செரியும் விதத்தில் அமைந்திருக்கிறது.
தகுதிச் சுற்றில் அபினவ் நான்காவது இடத்தையே பெற்றிருந்தார்..இறுதி அடிக்கு முன்புவரை ஹாக்கினென் கையே ஓங்கியிருந்தது. தனது இறுதி அடியில், ஹாக்கினென் மிகச் சாதாரணமான சுடுதல் மூலம் வெறும் 8 புள்ளிகள் மட்டுமே பெற்றார்.
அடுத்து அடிக்க வந்த நம் அபினவ், ஒரு முழுமையான சுடுதல் மூலம் 9.7 புள்ளிகள் பெற்றார். தற்போது, இரண்டாம் இடம் பிடித்திருக்கும் சீன வீரர், ஜூ, 10.9 புள்ளிகள் பெற்றால் முன்னிலை பெற்றுவிடலாம் என்ற
நிலையில் சுட வந்தார். 2004 ஒலிம்பிக் முதலே இப்பிரிவில் தங்கம் வெல்லவேண்டும் என்ற முயற்சியில், கடும் பயிற்சி எடுத்திருந்த ஜூ, தேவைப்படும் புள்ளிகளை குவிக்கமுடியாமல் போக...
மிகுதிக் கதை தற்போது உலகம் அறிந்ததே..!
செய்தியாளர் கூட்டத்தில் பதக்கர்கள் பகர்ந்தது...
அபினவ் * (தங்கம்) : நான் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று விவரிக்க இயலவில்லை.
ஜூ (வெள்ளி) : ( பெரும் கதறல்களுக்கு இடையே..) என் தாயகத்தில் தங்கம் வெல்லலாம் என்ற கனவு தகர்ந்துவிட்டது. நான் இறுதியாக சுட வந்தபோது பெரும் அழுத்தத்தில் இருந்தேன்.
ஹாக்கினென் (வெண்கலம்) : முதலில் இருந்து கடைசிவரை முன்னணியில் இருந்தால்தான் தங்கம் கிடைக்கும். இன்று எனக்கான நாள் அல்ல.
__________________
[media]http://www.youtube.com/watch?v=8GT42jMdgZo[/media]