ராஜா
New member
உலக அமைதியை வலியுறுத்தியும் நல்லொழுக்கத்தை வற்புறுத்தியும் மக்களை ஒன்றிணைக்க ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
பண்டைய ஒலிம்பிக் போட்டிகளின் பிறப்பிடம் கிரீஸ். முதல் நவீன ஒலிம்பிக் போட்டிகள் நடந்ததும் ஏதென்ஸில்தான். அது 1896 இல் தொடங்கப்பட்டது.
பெய்ஜிங் 2008 29 ஆவது ஒலிம்பியாட்! இந்த சின்னத்தில் தடகள "போஸ்' " ஒன்று இடம் பெற்றுள்ளது.
2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் மக்கள் சீன குடியரசுத் தலைநகரான பெய்ஜிங்கில் ஆகஸ்ட் 8, 2008 தொடங்கி ஆகஸ்ட் 24, 2008 வரை நடைபெறவுள்ளன. சீனப் பண்பாட்டில் 8ஆம் இலக்கம் இராசியாக கருதப்படுவதால், ஆரம்ப நிகழ்வுகள் மாலை 08:08:08 மணிக்கு நடைபெறும்.
உலகின் பெரும் விளையாட்டுத் திருவிழா ஒலிம்பிக்ஸ் துவங்க இன்னும் சில நாட்களே இருப்பதால் பெய்ஜிங் வரலாறு காணாத உற்சாகமும், விழாக்கோலமும் பூண்டுள்ளது.
இதுநாள் வரை ஒலிம்பிக்கில் அமெரிக்காவே அதிக அளவு பதக்கங்களை குவித்து தனிக்காட்டு ராஜாவாக விளங்கி வந்தது. சோவியத் யூனியன் அமெரிக்காவுக்கு சரியான சவாலாக விளங்கினாலும், அது சிதறுண்ட பிறகு போட்டியே இல்லாமல் இருந்த தனிக்காட்டு ராஜாவுக்கு, "தண்ணி காட்டும் ராஜா"வாக மக்கள் சீனக் குடியரசு உருவெடுத்துள்ளது. கடந்த ஏதென்ஸ் ஒலிம்பியாடில் இருநாடுகளுக்கும் இடையே இருந்த பதக்க வேறுபாடு மிகக் குறைவுதான்.
இம்முறை தன் சொந்த மண்ணில் தன்னம்பிக்கையோடு ஒலிம்பிக்கை எதிர்கொள்ளும் சீனாவை மிஞ்ச அமெரிக்கா தலையால் தண்ணீர் குடிக்க வேண்டியிருக்கும்..!
Last edited: