உருத்திராக்கம்

shivasevagan

New member
சிவமணி, அக்குமணிமாலை, கண்டிகை, தாழ்வடம் என்று உருத்திராக்கத்திற்கு பல பெயர்கள் உண்டு. திருஅடையாள மாலை என்பதும் இதுவே.

உருத்திராக்க மரம் கிழக்கு ஆசியா, மலேசியா, ஆஸ்திரேலியா, பசுபிக் தீவுகள் ஆகியவற்றில் நிறைய இருக்கிறது. இந்தியாவை ஓட்டிய நேபாளத்திலும் இவை இருக்கின்றன. இந்தியாவில் பீகார், வங்காளம், அஸ்ஸாம், மத்தியபிரதேசம், மகாராஷ்டிரம் ஆகியவற்றிலும் உருத்திராக்க மரம் இருக்கிறது.

செந்நெறியின் உடல், உண்மை உணர்த்தலாகிய திருவெண்ணீற்றுப்பூச்சு, உள்ளம், அனைத்துயிர்கள் மாட்டும் வைக்கும் கண்ணோட்டத்தின் அடையாளமாகிய சிவமணி. மணி என்பது கடவுள் மணி இதனையே கடவுள் கண்மணி என்பர். உயிர், மெய்யுணர்வு கைவரச் செய்துய்ய சிவனடியார்க்குச் சேர்ப்பிக்கும் 'சிவாய நம' என்னும் ஐந்தெழுத்து.

நீறு, சிவமணி, ஐந்தெழுத்து என்னும் மூன்றனுள் நடுவாகக் காணப்படும் சிவமணி காந்த ஆற்றலையும், மின் ஆற்றலையும் ஒருங்குடையது. அம்மணியினை அணிபவர்க்கு அவ்விருவகையாலும்

உயிர் ஆற்றல் பெருகும்
நோய் அணுகாது
உடற்பொலிவும் வளரும் பெருகும்
உடல் வலுவுண்டாகும்
உடல் வலுவுண்டாகவே உள்ளத்துரன் உண்டாம்
உள்ளத்துரன் உண்டாக நல்லொழுக்கம் பெருகும்
நல்லொழுக்கம் பெருகுதலால் நன்மையே புரிவர்.

அக்குறிப்புத் தோன்றும் உருவகமாகக் கடவுள் கண்மணி என்றனர்.
 
உருத்திராக்கம் செந்நீரைத் தூய்மை செய்யும், மூளை, மூச்சுப்பை, குருதிப்பை, குண்டிக்காய்ம் நரம்பு, நாடி முதலிய உள்ளுறுப்புக்கள் செவ்வையாக வேலை செய்யத்தக்க ஆற்றலைத் தந்து துணை புரியும். அங்ஙனம் செய்வதற்கு ஏற்றவாறு உடம்பில் பல்வேறு இடங்களில் அம்மணிகளை இடையறாது அணியப்படுதல் வேண்டும்.

"பரமசிவன் மலன் பக்தர்க்குச் சின்ன
முருவுடலிற் கண்டியு நீறும்"
-சைவ சமய நெறி 1922

சைவ சமயிகளுடைய சிவசின்னங்கள் விபூதி, உருத்திராக்கம் என்னும் இரண்டுமாம். இன்றைக்கு சைவ சமயிகள் முறையோடு பொருந்தாது பெயரளவிலாது விபூதி தரிக்கின்றனர். ஆனால் உருத்திராக்கம் தரிக்கும் சைவர்கள் நம் மத்தியில் குறைந்து கொண்டே வருகின்றனர். காரணம் அதன் மகிமையை அறியாது தரிக்க கூசியதே ஆகும். அப்படி கூச்சம் கொண்டோரை கூத்தபிரான் காண கூசுவார்.
 
இதை இந்தியாவில் நிறையபேர் அணியக்கண்டிருக்கிறேன். ஆனால் இதனால் எப்படி நோய்களை போக்கமுடியும். இதில் ஏதாவது வாசனை இருக்கிறதா?
 
இதை இந்தியாவில் நிறையபேர் அணியக்கண்டிருக்கிறேன். ஆனால் இதனால் எப்படி நோய்களை போக்கமுடியும். இதில் ஏதாவது வாசனை இருக்கிறதா?

அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க திரு. ஆரென் . இதை டெலி மார்க்கெட்டிங் வேற் பண்றாங்க.. ஆண்டவன் மாலையை கண்டவனெல்லாம் விக்கிறான்.. நமக்குப் புடிச்சிருந்தா போடலாம். ஆனா நோய் போவுது நொடி போவுதுன்னு நெனச்சா அது நம்ம மிஸ்டேக்.

ருத்திராட்ஷத்தை அழகா கட் பண்ணி செயினில கோத்து நகை செய்யறாங்க.. பார்க்க அவ்வளவு அழகா இருக்கும். அந்தக் கொட்டை மிக வடிவா இருக்கிறதால நல்லா ஷேப்புக்கு வளைஞ்சி கொடுக்கும்.

எங்கப்பா திருநீறு பூசினா காய்ச்சல் போகும்னு எனக்கு பூசிவிடுவாரு... அந்த நம்பிக்கையில காய்ச்சல் போயிடும்... அதுமாதிரிதான் இந்த ருத்திராட்சமும்...

என்னங்க சிவகேசவர் சாமி நான் சொல்றது?
 
இதை இந்தியாவில் நிறையபேர் அணியக்கண்டிருக்கிறேன். ஆனால் இதனால் எப்படி நோய்களை போக்கமுடியும். இதில் ஏதாவது வாசனை இருக்கிறதா?

காந்த ஆற்றல் உள்ளது உருத்திராக்கம் அதை இரண்டு காப்பர் காயின்களுக்கு நடுவே வைத்தால் சுற்றும் தன்மை உள்ளது. இந்த ஆற்றல் ஒவ்வொரு முக மணிக்கு தக்க மாறுபடும். அதைப் பொறுத்து அதன் மருத்துவ குணமும் இருக்கும்.
 
"பூண்பதற்கு கண்டியினைக் கூசியிடும் புல்லியரைக்
காண்தற்குக் கூசுமரன் கைத்து"
-சைவ சமய நெறி 138

மதுபானமும் மாமிச போசனமும் இல்லாதவராய், ஆசாரமுடையவராய் உள்ளவர் உருத்திராக்கம் தரித்தற்கு யோக்கியர் ஆவர். உருத்திராக்கம் தரித்துக் கொண்டு மதுபானம் மாமிச போசனம் முதலியவை செய்தவர் தப்பாது நரகத்தில் வீழ்ந்து, துன்பத்தை அநுபவிப்பர்.

ஆறுமுக சிவனாராகிய முருகவேளின் மறக்கருணைக் குட்பட்ட தாராகாசுரன் புத்திரர்களாகிய தாரகாக்ஷன், கமலாக்ஷன், வித்துன்மாலி என்னும் திரிபுராதியர்களாலே தேவர்கள் அடைந்த துன்பத்தை ஸ்ரீகைலாபதியிடம் முறையிட்ட போது பரமேஸ்வரர் ஆயிரம் தேவ வருஷம் தம்முடைய மூன்று திருக்கண்களை மலர்த்திக் கொண்டிருப்ப அவைகளிலிருந்து நீர் பொழிந்தது. சூரிய ருபமாகிய நெற்றிக்கண் பொழிந்த 12 உருத்திராக்க மரமும், சந்திரரூபமாகிய இடக்கண் பொழிந்த நீரிலே 16 உருத்திராக்க மரமும், அக்கினி ரூபமாகிய நெற்றிக்கண் பொழிந்த நீரிலே 10 உருத்திராக்க மரமும் உதித்தன. வலக்கண்ணினின்று கபிலநிற உருத்திராக்கமும். அதனின்று செந்நிற உருத்திராக்கமும், அதனின்று பொன்நிற உருத்திராக்கமும் தோன்றின. இடக்கண்ணினின்று வெண்ணிற உருத்திராக்கமும் தோன்றிற்று. நெற்றிக்கண்ணினின்று கருநிற உருத்திராக்கமும் தோன்றிற்று.
 
புது விஷயமாக இருக்கிறதே சிவசேவகன்... ருத்ராட்ஷம் சுற்றுமா ? ஆச்சரியதான் ...
 
உருத்திரன் + அக்ஷம் (கண்) = உருத்திராக்க்ஷம்

(ஈண்டு வரும் உருத்திரன் மூவரில் ஒருவர் அன்று சுத்த மாயா புவனம் வரையுஞ் சஞ்சரிக்கும் மகாருத்திரர்)

இயல்பான நேர்கோடுகளை முகம் என்று கணக்கிட்டு ஒன்று முதல் பதினாறு வரையுள்ள மணிகளை கண்டறிந்து அவைகளை அணியும் பலன்களையும் சைவ சமய நூல்கள் சிறப்பித்துச் சொல்லும்.

சைவசமயிகள் சந்தியாவந்தனம், சிவமந்திர செபம், சிவபூசை, சிவத்தியானம், சிவாலய தரிசனம், சிவ புராணம் படித்தல், சிவபுராணங்கேட்டல், சிரார்த்தம் முதலியவை செய்யும் காலங்களில் அவசியமாகியத் தரித்துக் கொள்ளல் வேண்டும். தரித்துக் கொள்ளாது இவை செய்தவருக்குப் பலன் அற்பம்.

ஸ்நானம் செய்யும் போது உருத்திராக்க மணியிற்பட்டு வடியும் நீர் கங்கா நீருக்கு சமமாகும்.
 
ஸிவசேகவன் ஜி

வணக்கம். இன்னோர் செய்தி .... விதைகளில், ருத்ராக்ஷம் ஒன்றிற்கே இயற்கையிலேயே துளை உண்டு. கோர்த்துக் கட்டிகொள்ள வசதியாக!

=== கரிகாலன்
 
Back
Top