காலத்தை வென்ற பாடல்களோடு... கமலகண்ணன்...

காலத்தை வென்ற பாடல்களின் தொகுப்பு...

இளையராஜா இசை உலகத்திற்கு வந்ததற்கு பின் பல பேரை திரை இசை கவர்ந்துள்ளது என்றால் அது மிகை இல்லை.

1976ல் தொடங்கி இன்று வரை மிகவும் விரும்பப்படுகிறது. அதை இரவு உணவு அருந்திவிட்டு பின் கேட்டால் உடன் தூக்கம் வந்துவிடும்.

அது போன்ற பாடல்களை எனது கவிதையையும் கலந்து படைத்தால் எப்படி இருக்கும் என்பதின் விளைவு இது.

இதற்கு சூரியன் பன்பலையின் திரு.ஜோதி பாசு அவர்களுக்கு மிக்க நன்றி...

முதல் பாடலாக

குங்கும சிமிழ் படத்தில் இருந்து

நினைவு தூங்கும் நேரம்

நமது நண்பர்களின் பதிலை பொறுத்து அடுத்த பாடல்கள் தொடரும்....

எனது குரல் நன்றாக இருக்கிறதா நண்பர்களே...
 
Last edited:
இசைஞானியின் இனிய பாடல்..!!
எஸ்.பி.பியின் இனிய குரலில் அப்பப்பா.. கேட்க கேட்க மெய் மறந்து இதமாய் உறக்கம் கண்களைத் தழுவுமே..!!

பகிர்ந்து கொண்ட கமல் அண்ணாவுக்கு மிக்க நன்றிகள்..!!

தொடருங்கள் கமல் அண்ணா.
 
மன்னிக்கவும் கமல் அண்ணா.
இப்போ தான் பதிவிறக்கி கேட்டேன்.
ஆரம்பத்தில் ஒலித்தது உங்களின் குரலா??
அசத்தல்..!! பாராட்டுகள்.
அழகிய தேன் குரலில் நிலவை தூங்க வைத்த இசை..!!

நன்றிகள் அண்ணா.
 
என்னால் பதிவிறக்க முடியவில்லை கண்ணா. சிலசமயம் உறுப்பினராக சேர்ந்து பதிவிறக்க வேண்டுகிறது. பலசமயம் எதுவுமே சொல்லுவதில்லை. வேறுதளங்களில் பதிவேற்றித் தரமுடியுமா? முயற்சிக்குப் பாராட்டுகள். நன்றாக இருக்கும் என்றே நம்புகிறேன்.
 
கேட்டேன் ரசித்தேன் பக்கம் வரத்துடித்தேன்.. எதுக்கென்று கேட்கின்றீர்களா.. அற்புதப்பாடலுக்கு அழகுதமிழில் முத்தாக முன்னுரை கொடுத்த உங்களுக்கு ஒன்று கொடுக்கத்தான். வானலையில் உங்கள் குரல் தவழ்ததாக அல்லது தொடர்பான துறையில் சம்பந்தப்பட்டு இருந்ததாக உங்கள் பதிவுகள் செப்பிய நினைவு. ஒரு சின்ன ஆலோசனை.. குரலில் மென்மை உள்ளது. இதமாக உள்ளது. பாடலுக்கு பொருந்துகிறது. இவ்வகைப் பாடல்களுக்கு முன்னுரை கொடுக்கும்போது "(B)பேஸ்" கொஞ்சம் அதிகரித்தால் இன்னும் சுகமாக பொருத்தமாக இருக்கும். தொடருங்கள் கமலக்கண்ணா.
 
சிறந்த செயல்வடிவம். தொடருங்கள் கமலகண்ணன் அவர்களே...
மிகுந்த பாராட்டுக்கள்...

உங்கள் கவிதை...
உங்கள் குரல் ஒலிக்கும்போது இசையின் ஒலிக்குறைப்பு...
இவை அருமையாக உள்ளன.
ஆனால்,
முன்னிசை, பாடலிசையுடன் சேரும்போது சற்றே முறிவடைந்து போவது தெரிகின்றது.
பாடலிசையுடன் ஒத்துழைக்கவில்லை. ஒருவேளை முன்பே பாடலிசையை மெலிதாகக் கலந்துவிட்டால் இயைந்து வரலாம்.
குறையாகச் சொல்லவில்லை. இன்னமும் சிறப்பாகத் தருவீர்கள் என்ற எதிர்பார்ப்புத்தான்.

பி.கு:
கமலகண்ணன் காலத்தை வென்ற பாடல்கள்
என்று வாசித்துவிட்டேன்.
இயலுமானால், விரும்பினால்,
காலத்தை வென்ற பாடல்கள் - கமலகண்ணன்
என்று மாற்றிவிடுங்களேன்.

நன்றி!
 
Last edited:
அமரன்;328614 said:
கேட்டேன் ரசித்தேன் பக்கம் வரத்துடித்தேன்.. எதுக்கென்று கேட்கின்றீர்களா.. அற்புதப்பாடலுக்கு அழகுதமிழில் முத்தாக முன்னுரை கொடுத்த உங்களுக்கு ஒன்று கொடுக்கத்தான். வானலையில் உங்கள் குரல் தவழ்ததாக அல்லது தொடர்பான துறையில் சம்பந்தப்பட்டு இருந்ததாக உங்கள் பதிவுகள் செப்பிய நினைவு. ஒரு சின்ன ஆலோசனை.. குரலில் மென்மை உள்ளது. இதமாக உள்ளது. பாடலுக்கு பொருந்துகிறது. இவ்வகைப் பாடல்களுக்கு முன்னுரை கொடுக்கும்போது "(B)பேஸ்" கொஞ்சம் அதிகரித்தால் இன்னும் சுகமாக பொருத்தமாக இருக்கும். தொடருங்கள் கமலக்கண்ணா.

நன்றி அமரன் உங்களின் பாராட்டு என்னை உற்சாகப்படுத்துகிறது.

இன்னும் பல படைப்புகளுடன் வருகிறேன்.
 
நன்றி திரு அக்னி. உங்களின் பாராட்டு மற்றும் ஆலோசனைக்கு நன்றி. நீங்கள் சொன்னவாறே தலைப்பை நீங்களே மாற்றி விடுங்களேன்...

தாங்கள் சொன்னது சரி சற்று உன்னித்து கவனித்தால் தெரிகிறது. அவ்வாறே மாற்றுகிறேன். நன்றி...
 
பூமகள்;328600 said:
மன்னிக்கவும் கமல் அண்ணா.
இப்போ தான் பதிவிறக்கி கேட்டேன்.
ஆரம்பத்தில் ஒலித்தது உங்களின் குரலா??
அசத்தல்..!! பாராட்டுகள்.
அழகிய தேன் குரலில் நிலவை தூங்க வைத்த இசை..!!

நன்றிகள் அண்ணா.

மிக்க நன்றியம்மா மிக்க நன்றி...
 
கேட்டேன் கமலக்கண்ணன்....பாடலுக்கு முன்பான உங்கள் கவிதை வரிகள்..உங்களின் குரலில்...அருமையாக உள்ளது.அமரனின்,அக்னியின் யோசனைகளுக்கு செயல் வடிவம் கொடுத்தீர்களானால்...மேலும் சிறப்பாக இருக்கும்...தொடருங்கள்...வாழ்த்துகள்.
 
மிக்க நன்றி சிவா.ஜி அவர்களே... மீண்டும் வருவேன் பல பாடல்களோடு...
 
ணீர் குரலுக்கு கமலகண்ணன்..
காந்தக பாடலுக்கு கமல.....
ண்டேன்....ரசித்தேன்..
ரவொலிகள் கேட்குதா...
மலகண்ணன் மிக அருமை..
 
முதகானம் மிகவும்

ருமையோ அருமை

டுத்த பாடல் எப்போது
 
Back
Top