அற்புத மருத்துவம் வாங்கோ!!!

தங்கவேல்;325452 said:
அனு, எனக்கு முறுங்கை கீரை என்றால் உயிர். ஆனால் அம்மணிக்கோ அதை உறுவி எடுத்து செய்து தர சோம்பல். உங்களின் பதிவை காட்டியாவது கிடைக்குமா என்று பார்க்க வேண்டும்.

ஓ அப்படியா சங்கதி!!
என் குறிப்பை பார்த்து செய்ய சொல்லுங்கள் தங்கவேல் நண்பரே!!
என் நன்றி உங்களுக்கு..!!
 
நாகரா;325471 said:
அருகம்புல், பூண்டு, பீட்ரூட், முருங்கை இவற்றின் அருங்குணங்கள் பற்றிய தகவல்களுக்கு மிக்க நன்றி அனு. அனுவின் அற்புத மருத்துவம்ம்ம்.... இனிதே தொடரட்டும். யாம் நோயின்றி வாழ அது உதவட்டும்ம்ம்ம்....

நன்றி நாகரா..!!
ஆகா ஆச்சிரியம் மற்றவர்கள் ஆக்கங்களில் பார்ப்பது..!!!!
மிக்க நன்றி தொடரட்டும் உங்கள் ஆன்மிக பயணம்.!!!
 
விஷம் இறங்க...

விஷம் இறங்க...

கரிசலாங்கண்ணி இலையை இடித்து சாறு பிழிந்து ஒரு அவுன்ஸ் மோரில் கலந்து குடித்தால் பாம்புகடி விஷம் உள்பட எந்த விஷ கடியானாலும் விஷம் இறங்கும்.

விஷம் முறிக்கும் பிரமத்தண்டு!

பிரமத்தண்டு, அடிபாகத்தில் இருந்து நுனிப்பாகம் வரை சாம்பல் நிறத்தில் பூத்தாற்போல இருக்கும். இலைகள் சொரசொரப்போடு இலைகளின் ஓரங்களில் மிகவும் கூர்மையான முட்கள் அமைந்திருக்கும். காம்பில்லாமல் பல மடல்களாலான உடைந்த இலைகள் இருக்கும். பளிச்சிடும் மஞ்சள் நிறப் பூக்களையும் கடுகு போன்ற விதைகளையும் உடைய நேராக வளரும் சிறு செடி இனமாகும். இதன் வேர்கள் ஒரு அடி வரை செல்லக் கூடியது. பால் மஞ்சள் நிறமாக இருக்கும். இலைகளின் மீது வெண்ணிற பூச்சு தென்படும். கோடைக் காலத்தில் வெயில் கொடுமையால் சருகாகக் காய்ந்து அழிந்துவிடும். இலை, பால், வேர், விதை மருத்துவக் குணம் உடையது. நோயை முறித்து உடலைத் தேற்றவும், நல்ல தூக்கத்தையும் கொடுக்கும். தமிழகம் முழுதும் தரிசு நிலங்களிலும், ஆற்றங் கரைகளிலும், சாலை ஓரங்களிலும் தானாகவே வளர்கிறது.
வேறு பெயர்கள்: குறுக்குச் செடி, குடியோட்டிப் பூண்டு, குருக்கம், ததூரி, குடிவோட்டுப் பூண்டு, பிறத்தியுபுசுப்பி, பிரம்மதண்டி, வனமாலி, வாராகுகா, சுவாறகு, முகிக்கதசத்தை, ரசதூடு, பசயந்தனி, சாதலிங்கத்தை குருவாக்கி, கிறுமி அரி.

ஆங்கிலத்தில்: Argemone mexicana Linn, Papaveraceae

மருத்துவ குணங்கள்:

பிரமத் தண்டு இலைச் சாறை பத்து மில்லியளவு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட்டுவர சொறி, சிரங்கு, மேக ரணங்கள், குட்டம் குணமாகும்.

பிரமத்தண்டு இலைச் சாறை தேள் கொட்டிய இடத்தில் தடவ கடுப்பு நீங்கும்.

பிரமத்தண்டு இலைச் சாறு 30 மில்லியளவு குடிக்கக் கொடுத்து கடிவாயில் அரைத்துக் கட்ட பேதியாகி பாம்பு விஷம் இறங்கும்.

பிரமத் தண்டு இலையை அரைத்துக் கட்டிவரக் கரப்பான், பேய்ச் சொறி, சிரங்கு, உள்ளங்கால், கை, பாதங்களில் வரும் புண்கள் குணமாகும்.

20 பூக்களை எடுத்து நீரில் ஊற வைத்து குளித்து வர 50 நாட்களில் கண் நோய் குணமாகும்.

பிரமத்தண்டு பால் 1 துளி கண்ணில் விட்டு வரக் கண் வலி, சதை வளர்தல், கண் சிவத்தல், அரிப்பு, கண் கூச்சம், நீர் வடிதல், கண் எரிச்சல் குணமாகும்.

இலை சூரணம், விதை சூரணம் சேர்த்து மிளகளவு 2 வேளை தேனில் கலந்து சாப்பிட்டு வர சயம், இருமல், நுரையீரல், சளி இருமல் குணமாகும்.

பிரமத்தண்டின் மூலச் சாம்பல் மிளகு அளவு எடுத்து சிறிது தேனில் 2 வேளை சாப்பிட்டு வர இரைப்பிருமல் (ஆஸ்துமா), காசம், கப நோய், நுரையீரல் நோய் குணமாகும்.

பிரமத் தண்டின் மூலச் சாம்பலால் பல் தேய்த்து வர பல் ஆட்டம், பல் சொத்தை, ?ழ்வடிதல், பல் கரைதல் குணமாகும்.

பிரமத்தண்டின் வேரை நிழலில் உலர்த்தி காய வைத்து இடித்துப் பொடியாக்கி சுண்டைக்காய் அளவு வெந்நீரில் சாப்பிட மலப் புழுக்கள் வெளியேறும்.

பிரமத்தண்டு விதைகள் முழுவதையும் நீக்கிவிட்டு செடிகள் முழுவதையும் சுத்தம் செய்து சாறு பிழிந்து 12 வயது வரை 1/2 தேக்கரண்டி அளவிலும் அதற்கு மேல் 1 தேக்கரண்டியளவிலும் குடிக்கக் கொடுக்க எல்லா விதமான விஷங்களும் பேதியாகி முறிந்துவிடும். அதிகம் பேதியானால் எலுமிச்சைச் சாறு கொடுக்கலாம். மிகவும் களைப்பாக இருந்தால் அரை அரிசி (குருணை) உணவு கொடுக்கலாம். இதைப் பாம்பு கடிக்கு மட்டும் கொடுத்தால் நல்லது. மற்ற விஷங்களுக்குக் கடிவாயில் சாற்றை விட்டு வந்தால் விஷம் தலைக் கேறாமல் முறியும்.

பிரமத் தண்டின் விதையை எடுத்து வந்து நீர்விட்டு அரைத்து கட்டியின் மேல் ஒரு புளிய இலை களத்துக்குப் பூசிவிடவும். 2 மணிக்கு ஒரு முறை புதிதாக செய்து வர கட்டி தானாக உருண்டு பழுத்து உடைந்து விடும்.

பிரமத் தண்டின் விதையை பொடி செய்து இலையில் சுருட்டிப் பீடி குடுப்பது போல புகையை இழுத்து வெளியில் விடப் பல்வலி, பற் சொத்தை, புழுக்கள் வெளியேறும்.


-அனு
 

கீழாநெல்லி
முல்லைத்தமிழ்




இது வெப்பமண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடியினத்தை சேர்ந்தது ஆகும். இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் காணப்படுகிறது. சுமார் ஒரு அடி உயரம் வரை வளரும் தன்மைஉடையது. இதன் இலையின் அடிக்காம்பில் வரிசையாக காய்கள் காய்ப்பதால் கீழ்காய்நெல்லி என தமிழர் பெயரிட்டு அழைத்தனர். பேச்சு வழக்கில் கீழாநெல்லி, கீழ்வாய் நெல்லி, கீட்காநெல்லி எனவும் அழைக்கின்றனர்.

தொன்றுதொட்டே தமிழர் மருத்துவத்தில், மஞ்சள்காமாலை நோய்க்கு இம்மூலிகையை பயன்படுத்தி வந்துள்ளனர் என்பதனை இன்றும் கிராமத்து மக்களின் வாய்ச் சொல்லிலும், பயன்படுத்துதலிலுமிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது.

இந்தியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுகூடங்களில் இம்மூலிகை பல்வேறு விதங்களில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

தாவரவியல் பெயர்: பைலாந்தஸ் அமாரஸ்
குடும்பம்: யூஃபோர்பியேசியே


கீழாநெல்லியானது ஒவ்வொரு மொழியிலும் கீழ்கண்டவாறு அழைக்கப்படுகிறது.

இந்தி: ஜராமலா, நிரூர், ஜங்லி யாம்பலி
வங்காளம்: புய்யாம்லா, சதாஹஸிர்மனி
குஜராத்தி: போன்யா அன்மலி
கன்னடம்: கிலநெல்லிக்கிடா, நெலநெல்லி
தமிழ்: கீழாநெல்லி, கீழ்க்காய்நெல்லி
மலையாளர்: கீழாநெல்லி, கீர்க்காநெல்லி
தெலுங்கு: நெல உசிரிகா
பீகார்: முய்யாரா, முலிகோஆ, காந்தாரா
ஓரியா: புய் ஆவோலா, பேடியான்லா.

சமஸ்கிருதம்: பூமியாம்லகி, தாமலகீ


இதன் முழுப்பகுதியும் நேரடியாகவே மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

இதன் பயன்கள்:


மஞ்சள் காமாலை, மூத்திர நோய்கள், குடல்புண், தொண்டை நோய்கள், வயிற்றுவலி, வயிற் றோட்டம், முறைசுரம், அதிக உஷ்ணம், கண்நோய்கள், மாதவிடாய்க் கோளாறுகள், பசியின்மை, தோல் நோய்கள், தீராத அழுகல் புண்கள், புரைகள், வீக்கம், குருதிவடிதல் போன்ற பல நோய்களுக்கும் கீழாநெல்லியானது சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.

கீழ்காய்நெல்லியில் பைல் நிரூலின், நார் செக்குரினின், 4-methoxy secyrinine, நிர் பைலின், தேலிக் ஆஸிட், எல்லாஜிக் ஆசிட், ஹேலிக் ஆஸிட் போன்ற 50-க்கும் மேற்பட்ட வேதிப் பொருட்கள் இருப்பதனை அறிவியல் ஆய்வுகள் மூலம் கண்டறிந்துள்ளனர்.

நவீன மருந்தியல் ஆய்வுகளின் மூலம், கீழாநெல்லியானது காளான் நோய்கள், புற்றுநோய்கள், இறுக்க நோய்கள் போன்றவைகளுக்கு எதிராக செயல்படுவதை கண்டுபிடித்துள்ளனர். மேலும் இம்மூலிகைக்கு, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும் தன்மையுடையதெனவும் கல்லீரலை பாதுகாக்கும் தன்மையுடையதெனவும் பல்வேறு ஆய்வுகள் மூலம் தெளிவுபடுத்தி உள்ளனர்.

கீழாநெல்லியில் காணப்படும் ஹைப்போ பைலாந்தின், பைலாந்தின் போன்ற வேதிப் பொருட்கள் மீனுக்கும் தவளைக்கும் மட்டும் நச்சுதன்மையை யூட்டுவதாக ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால், இவ்வேதிப் பொருளானது, மனிதர்களுக்கும மற்ற விலங்குகளுக்கும எந்தவித நச்சுத்தன்மையையும், பக்க விளைவுகளையும் ஏற்படுத்துவது இல்லை எனவும் வெளிப்படுத்தி உள்ளனர்.

உண்ணும் அளவு: சாறு 10-20 மி.லி. ஒரு நேரத்துக்கு பயன்படுத்தலாம். தூள் : 3-6 கிராம்.

பயன்படுத்தும் முறைகள்


1. கீழாநெல்லி சமூலம் - கரிசலாங்கண்ணி, தும்பை - சீரகம் - பொன்னாங்கண்ணி இவைகளை சம அளவு எடுத்து காய்ச்சிய பசும்பால் அல்லது தேங்காய்ப்பால் விட்டு நன்றாக அரைத்து புன்னைக்காய் அளவு காலை மாலை மேற்கண்ட பாலில் ஏதாவது ஒன்றில் 7 நாட்கள் கொடுக்க மஞ்சள் காமாலை நோய் தீரும்.

வயதிற்கேற்ப மருந்தின் அளவை குறைத்து சிறுபிள்ளைகளுக்கும் கொடுக்கலாம். மருந்து சாப்பிடும் காலங்களில் புளி, புகை, புகையிலை, காரம், கொழுப்பு நீக்கிய மோர்சாதம், பால் சாதம், சாப்பிடுவது நல்லது. உப்பு வறுத்து சேர்க்கவும்.

2. கீழ்காய் நெல்லி சமூலம் - சீரகம், மஞ்சள் காரைவேர்பட்டை மூன்றும் சமஅளவு எடுத்து நன்றாக அரைத்து பசும்பால் அல்லது தேங்காய் பால் 300 மி.லி. கலக்கி தினம் காலை மாலை குடிக்க மஞ்சள்காமாலை நோய் குணமாகும்.

3. கீழா நெல்லி சமூலம், பேரம்மான் பச்சரிசி, சிற்றம்மான் பச்சரிசி, கரிசலாங்கண்ணி, வல்லாரை, பொன்னாங்கண்ணி இவைகளை சமஅளவு எடுத்து நன்றாக அரைத்து 3 நாள் 6 நேரம் எருமைத் தயிரில் கலந்து கொடுக்க இரத்தக்காமாலை உடனே குணமாகும்.

4. கீழா நெல்லியும் - கரிசலாங்கண்ணியும் சமஅளவு சேர்த்து நெல்லிக்காயளவு பாலில் சாப்பிட்டுவர பாண்டு, சோகை, இரத்தக் குறைவு மாறும்.

5. மாதவிடாய் அளவுக்கு மீறி போய்க்கொண்டிருந்தால் கீழ்க்காய் நெல்லி, அத்திப் பட்டை, அசோகப்பட்டை, அரசம் பட்டை, நாவல் பட்டை இவைகளை சமஅளவாக எடுத்து நன்றாக தூள்செய்து வைத்துக் கொண்டு தினம் ஒரு கரண்டி வீதம் தேன், வெந்நீர், பால் ஏதாவது ஒன்றில் மாறிமாறி சாப்பிட்டு வர கர்ப்பசாய நோய்கள் அனைத்தும் மாறி வெள்ளைப்பாடும் தீரும்.

6. கீழ்காய் நெல்லியை நன்றாக அரைத்து சொறி சிரங்கு படைகளில் போட உடனே மாறும்.

7. கீழாநெல்லியும் மஞ்சளும் சேர்த்து உடலில் தேய்த்து சில நிமிடம் ஊறவிட்டு குளித்து வர தோல் நோய்கள் வராமல் தடுப்பதோடு வந்தநோய்கள் அனைத்தும் தீரும்.

8. கீழ்க்காய் நெல்லியை நன்றாக மென்று பல்துலக்கி வர பல்வலி என்பது பக்கத்திலும் அண்டாது.

9. கீழாநெல்லிப்பொடி, நெல்லிக்காய்பொடி, கரிசாலைப் பொடி மூன்றையும் சமஅளவு எடுத்து தேனில் உண்டுவர அடிக்கடி வரும் சளித் தொல்லை, இரத்தக்குறைவு, இரத்தசோகை மாறி எதிர்ப் பாற்றல் பெருகும்.

10. கீழ்க்காய்நெல்லிச்சாறு, இளநீர், நெல்லிக்காய் சாறு, கரிசலாங் கண்ணி சாறு, பொன்னாங்கண்ணி சாறு இவைகள் ஒருலிட்டர் வீதமும், எலுமிச்சம்பழச்சாறு அரை லிட்டரும், பசும்பால் 5லிட்டரும், தூய நல்லெண்ணெய் (அ) தேங்காய் எண்ணெய் 5 லிட்டரும், மதுரம், கொட்டம், நற்சீரகம், மாயக்காய், கிராம்பு, ஏலம், நற்சந்தனம், வலம்புரி, சடமாஞ்சில் ஆகியவை வகைக்கு 40 கிராம் வீதம் வாங்கி, நன்றாக இடித்து பசும்பால் விட்டு அரைத்து சாறுகள், எண்ணெய், பால் எல்லாவற்றையும் எண்ணெய்ச் சட்டியில் விட்டு அரைத்த மருந்தையும் சேர்த்து, சிறுதீயாக எரித்து மருந்து முதிர் மெழுகு பருவம் வந்ததும் எண்ணெயை வடித்து கொள்ளவும்.

தினமும் இதை தலையில் தேய்த்து தண்ணீரில் குளித்து வந்தால் கண்நோய்கள், பித்த நோய்கள், மேக நோய்கள், மேக உஷ்ணம், வறட்சை, கணை, பெரும்பாடு, காமாலை நோய்கள் தீரும். மஞ்சள் காமாலை நோயாளிக்கு இது சிறந்த மருந்தாகும்.


நன்றி :புதிய தென்றல்(வாழ்வியல் வழிகாட்டி)
 
னு மிக மிக

ரிய படைப்பு நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

தை நாம்தான் கடைபிடிக்கனும்

தற்கு மிக அருமையாக மருத்துவத்தை தொகுத்து தந்தமைக்கு

ன்பான நன்றிகள் அனு...
 
அப்பப்பா எத்தனை குறிப்புகள் அத்தனையும் முத்துக்கள் நன்றி தொடருக தொண்டு
 
சத்தான பப்பாளி​

- ஆனந்த், கே.எஸ். ராமு
அவர்களுக்கு என் நன்றி..
ஆதாரம் :புதிய வழிகாட்டி(தென்றல்)

தமிழிலே "முற்றத்து முல்லைக்கு மணம் இல்லை" என்றொரு பழமொழியுண்டு. அது முல்லைக்கு மட்டுமல்ல. பல்வேறு விஷயங்களில் இதனை நாம் பார்க்க முடியும். அப்படி புறக்கணிக்கப்பட்ட பழவகைகளில் ஒன்றுதான் பப்பாளி. மிக மலிவான விலையில் கிடைக்கும் மிக சத்துவாய்ந்த இந்த கனியானது தன் தகுதிக்கேற்ற இடஒதுக்கீட்டைப் பெறவில்லை என்பது தான் சோகம்.

பப்பாளி எல்லா சூழ்நிலையிலும் நன்கு வளரக்கூடிய பழப்பயிர். தானாகவே வளரக்கூடியது, மிக குறைவான கவனிப்பே போதுமானது இந்த மரம். ஆனால் அது தரும் பலனோ மிக அதிகம். ஆனாலும் நோயாளிகளைப் பார்க்க செல்பவர்கள் கூட ஆரஞ்சு, ஆப்பிள் போன்ற விலை அதிகமான, பப்பாளியை விட சத்துக்குறைவான கனிகளைத்தான் வாங்கி செல்கிறார்களே தவிர, பப்பாளியைக் கவனிப்பாரில்லை.

பப்பாளியின் அறிவியல் பெயர் - Carica papaya. இது Caricaceae குடும்பத்தைச் சேர்ந்தது. பனைபோல பருத்து உயர்ந்து வளர்ந்தாலும் முருங்கையைப் போலவே பலமற்ற மரம் இது. எளிதில் முறிந்துவிடும் தன்மைகொண்ட இம்மரமானது, சரியான சூழலில் 20 ஆண்டுகளுக்கு மேல் பலன் தரக்கூடியது.


மீண்டும் தொடரும்..
 
'இஞ்சி'யின் வல்லமை

நாம் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பொருட்களில் மருத்துவ தன்மைகள் நிறைந்து காணப்படுவதில் இஞ்சிக்கு தனி இடம் உணடு. அதை உகந்த முறையில் பயன்படுத்தினால் பல்வேறு நோய்கள் குணமாகும் என்பது ஆயுர்வேத மருத்துவர்களின் கருத்து. இதோ உங்களுக்காக சில குறிப்புகள்

ஜீரண சக்தியும் ஞாபக சக்தியும்

இஞ்சியை தினமும் உணவில் கலந்து உட்கொள்வதால், நாம் உட்கொள்ளும் உணவு எளிதில் ஜீரணமடையும். இதனால், வயிற்றுக் கோளாறு தவிர்க்கப்படுகிறது. அத்துடன், ஞாபக சக்தியை அதிகரிக்கச் செய்யும் வல்லமையும் இஞ்சிக்கு உண்டு.

வயிற்றுவலி

குடலில் உண்டாகும் கிருமிகளை அழிக்கும் திறம் கொண்ட இஞ்சியை சாறாக்கி அதில் சிறிது உப்பு கலந்து பருகினால் மலச்சிக்கல், வயிற்றுவலி போன்றவை இருந்த இடம் தெரியாமல் மாயமாகும். அதோடு, கல்லீரலையும் சுத்தம் செய்து ஆரோக்கியத்துக்கு வழிவகை செய்கிறது இஞ்சி.

பித்தம் போக்க...

பித்தம் அதிகமானல் தலைசுற்றல் உள்ளிட்ட இலவச இணைப்புகள் வந்து நம்மைத் தொல்லைப் படுத்தும். அதுபோன்ற சமயங்களில் இஞ்சியைக் கொண்டு தயாரிக்கப்பட்ட சுக்குத் தூளை தேனில் கலந்து உண்டால் மிகுந்த நண்மை உண்டாகும்.

இவை மட்டுமின்றி பசியைத் தூண்டுவது, ஜலதோஷத்தைப் போக்குவது, தொண்டை வலியைப் போக்குவது உள்ளிட்ட பல மருத்துவ குணங்களைத் தன்னகத்தேக் கொண்டுள்ளது இஞ்சி.
 
சூரிய சிகிச்சை செய்வோமா!!

சூரிய சிகிச்சை செய்வோமா?​


தற்போது ஐரோப்பிய நாடுகளில் சூரிய சிகிச்சை மிகவும் பிரபலமாகி வருகின்றது. சுற்றுலா தலங்களில் கடற்கரை ஓரங்களில் நடைபெறும் சூரியக் குளியல் என்பது வேறு. சூரிய சிகிச்சை என்பது வேறு. சூரிய சிகிச்சை என்பது முறையான மருத்துவ அறிவியல் பூர்வ அடிப்படையினால் ஆனது ஆகும்.

இயற்கை சிகிச்சை முறைகளில் ஒரு முக்கிய பகுதியாக சூரிய சிகிச்சை முறை இருந்து வந்தது. ஆனால் இன்று அலோபதி, சித்தா, ஆயுர்வேதம், யுனானி என அனைத்து முறை மருத்துவர்களும் சூரிய சிகிச்சை அவசியத்தை வலியுறுத்துகின்றனர்.

குளிர் நாடுகளில் கட்டிட வடிவமைப்பாளர்கள் பொறியாளர்கள் மருத்துவர்கள் ஆகிய மூன்று வகையினரும் உள்ள குழுக்களின் மேற்பார்வையில் கண்ணாடிக் கட்டங்கள் மருத்துவமனையில் கட்டப்படுகின்றன. கண்ணாடி சூரியனின் ஒளிக் கதிர்களை கட்டடத்துக்குள் உட்புக அனுமதிக்கின்றது. நோயாளிகளை குளிரில் இருந்து காக்கின்றது. மேலும் சூரிய சிகிச்சையும் நடைபெறுகின்றது. ஆறாத புண்களுக்கு அநேக இடங்களில் சூரிய சிகிச்சை சிறந்த பயன் அளித்துள்ளது. காலை வெயில் சூரியனுடைய கதிர்களில் அவை மிகவும் சக்திவாய்ந்த பகுதியாக உள்ளன. சூரியனுடைய கதிர்களில் அவை மிகவும் சக்திவாய்ந்த பகுதியாக உள்ளன. இவற்றை மீறி ஊதாக்கதிர்கள் என்றும் புற ஊதாக் கதிர்கள் என்றும் இயற்பியலார் அழைக்கின்றனர். இவை மின்காந்தக் கதிர்வீச்சு ஆகும். நிறமாலையில் ஊதா நிறத்திற்கு அப்பால் இதன் கதிர்கள் உள்ளன. இவற்றைக் கண்ணால் காண இயலாது. இவற்றைப் பாதரச ஆவி விளக்குகள் கொண்டு பெறலாம். அலை நீள எல்லையில் இக் கதிர் வீச்சு ஒளிக்கதிர்களுக்கும் எக்ஸ்கதிர்களுக்கும் இடையே உள்ளது.

சூரிய வெளிச்சத்தை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்பதே சூரிய சிகிச்சையின் மையக்கருத்தாகும். காலை சூரிய வெளிச்சம் மனித உடம்பிற்கு சிறந்த ரத்த விருத்தியாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சூரிய ஒளியில் வைட்டமின் டி தவிர ஏராளமான மருத்துவ இயல்புகள் உள்ளன. அவற்றை நோய் தீர்க்க பயன்படுத்துவதே சூரிய சிகிச்சையின் நோக்கமாகும். எனினும் மேற்கத்திய நாடுகளில் மக்களின் தோல்களில் நிறமி வேறுபாடுகள் இருப்பதால் சூரியக் கதிர்களின் கடுமையான தாக்கம் தோல்களில் அலற்சியை சில சமயங்களில் ஏற்படுத்துகின்றது.


நம்ம ஊருல நாம செய்ய முடியும்..
ஆனால் அதற்கு இடம் இல்லையே!!
அப்ப இடம் தான் முக்கியமா?
 
அருமையான தகவல் நன்றி அனு உங்களை தவிர வேறு யாராலும் மிக்க உபயோகமான செய்தி அனு அவர்களே...
 
கமலகண்ணன்;333641 said:
அருமையான தகவல் நன்றி அனு உங்களை தவிர வேறு யாராலும் மிக்க உபயோகமான செய்தி அனு அவர்களே...

அப்டின்னா....?
 
நன்றி கமலகண்ணன் அவர்களே..!!
நன்றி ராஜா அவர்களே!!
தொடர்ந்து வாருங்கள்...
நல்ல தகவல் யார் தந்தா என்ன?
நன்றி...
 
சோயாபீன்ஸ் பற்றிய குறிப்புகள்

சோயா பீன்ஸ்

உடல் ஆரோக்கியங்களை நமக்கு வழங்கும் சக்தி கொண்ட உணவுப்பொருள் என்பது முக்கியமானது. நம்பமுடியாத நல்ல விஷயங்களை நமக்குக் கொடுக்கிறதா சோயா பீன்ஸ் (Soybeans)?
என்ன இருக்கிறது?


சோயாவில் அனைத்து வைட்டமின் "பி" வகைகளும் இருக்கின்றன. குறிப்பாக தயாமின் (Thiamin Thiamin), நியாசின் (Niacin), போலிக் ஆசிட், ரைபோபிளேவின் (Riboflavin) போன்றவை அதிகமாக இருக்கின்றன. இவை இருதயம், கல்லீரல் செயல்பாடுகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

தானிய வகைகளிலேயே சோயாவில்தான் அதிக புரோட்டின் இருக்கிறது. 100 கிராம் சோயாவில் 43 கிராம் புரோட்டின் கிடைக்கிறது. இந்த புரோட்டினில் நம் உடலுக்குத் தேவையான அடிப்படை அமினோ அமிலங்கள் அனைத்தும் இருக்கின்றன. (இந்த அமினோ அமிலங்களை நம் உடல் தானாகவே உருவாக்கிக்கொள்ள முடியாது). மாமிச புரோட்டினுக்கு இணையாக வரக்கூடிய ஒரே ஒரு சைவ புரோட்டின் சோயா பீன்ஸ்தான்.

சோயாவில் கொழுப்பு குறைவாகவே இருக்கிறது. 100 கிராமில் 20 கிராம் கொழுப்புதான் இருக்கிறது.

சோயாவில் கார்போஹைட்ரேட் (Carbohydrate) அளவும் குறைவுதான். 100 கிராமில் 30 கிராம்தான்.

சோயாவில் நல்ல நார்ச்சத்து இருப்பதால் தளர்ந்த சோர்வடைந்த இருதயத்திற்கு சோயாவின் பாதுகாப்பு அபரிமிதமானது.

சோயா ஒரு இயற்கையான ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட். இதில் லெசித்தினும், வைட்டமின் "ஈ" யும் சேர்ந்து இருக்கிறது.

மினரல்கள் சோயாவில் நிறைய இருக்கின்றன.மக்னீஷ?யம் (magnesium) 280 மி.கி.,கால்சியம் (calcium) 277 மி.கி., பாஸ்பரஸ் 704 மி.கி. இருக்கிறது. இதனால் சோயா சுலபமாக எலும்புகளுக்கும், பற்களுக்கும் பாதுகாப்பு வழங்கும். தவிர, சோயாவில் இருக்கும் இரும்புச்சத்து இரத்தத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

சோயா மூலம் கிடைக்கும் நேரடியான பலன்கள் என்ன?

1. உறுதியான எலும்புகள் உங்களுக்கு நிச்சயம் தொடர்ந்து நீங்கள் சோயா பால் குடிப்பதால். சோயாவில் கால்சியம் குறைவாக இருந்தாலும், சோயாவில் இருக்கிற தாவர ஹார்மோன் எலும்புகளின் தேய்மானத்தையும், உதிர்வையும் தடுக்கும் சக்தி கொண்டது.

2.மெனோபாஸ் (Menopause) பிரச்னைகளைத் தடுக்கும் ஆற்றல் சோயாவுக்கு உண்டு. இதில் இருக்கிற ஐசோ பிளேவினாஸ் பெண் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜன் போல செயல்படும் சக்தி கொண்டது. இது அற்புதமாக மெனோபாஸ் நிலையின்போது ஏற்படும் பிரச்னைகளைத் தவிர்க்கும் சக்தி கொண்டது.

2. இருதயத்தின் சக்தியைக் கூட்டுவதில் சோயா அபாரமாகச் செயல்படும். இரத்தக் குழாய்களின் இளகுத் தன்மையை அதிகரித்து, கொலஸ்டிரால் அளவைக் குறைத்து, இரத்தக் குழாய்களுக்குள் அடைப்புகள் ஏற்படாமல் பாதுகாக்கும்.

4. சோயா சில வகை புற்றுநோய்களைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது. தினசரி 25கி. நீங்கள் நல்ல ஆரோக்கியமாக இருந்தால் போதும். ரிஸ்க் இருக்கிறது என்றால், 50 கி. எடுத்துக்கொள்ளுங்கள். இது ப்ராஸ்டேட் கான்ஸர் உருவாக்குகிற என்ஸைமைத் தடுக்கும் சக்தி கொண்டது. பெண்களுக்கு கர்ப்பப்பை கான்ஸர் வராமல் தடுக்கும்.

5. சோயாவின் உணவுப்பொருள் தகுதி மற்றவற்றைவிட அதிகம். இயற்கையாகவே இருக்கிற ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட், வைட்டமின் ''ஈ'' லெசித்தின் போன்றவை கெட்ட கொலஸ்டிராலைக் குறைத்து இருதயப் பாதுகாப்பில் ஈடுபடுகின்றன.

சோயாவில் ஐசோபிளேவோன்கள் இருக்கிறது என்கிறீர்களே? அப்படி என்றால் என்ன?

இவற்றை தாவர ஹார்மோன்கள் என்று சொல்கிறார்கள். இவை நம் உடல் ஹார்மோன் போலவே செயல்படும் திறன் கொண்டவை. சோயாவில் இருக்கும் இந்த ஐசோபிளேவோன்கள் பெண்களின் முக்கிய ஹார்மோனான ஈஸ்ட்ரோஜன் போல செயல்படும் சக்தி கொண்டது. பருவ வயதில் அதிக சோயாவை எடுத்துக்கொள்வதால் பிற்காலத்தில் வரும் மார்புப் புற்றுநோய்கள் தடுக்கப்படும் என்று உறுதி சொல்லப்படுகிறது.

சோயா புரோட்டின் கடைகளில் கிடைக்கிறது. வாங்கும்போது இதில் கவனிக்க வேண்டியது என்ன?


கடைகளில் சோயா புரோட்டின் இரண்டு விதங்களில் கிடைக்கும்.

1. சோயா புரோட்டின் கான்ஸ்ஸென்ட்ரேட்: இதில் 70 சதவிகித புரோட்டின் இருக்கும். இது சுலபத்தில் கரையாது. நிறைய முயற்சி செய்து கரைக்க வேண்டி இருக்கும். சுலபத்தில் ஜீரணமாகக் கூடியது. குழந்தைகளுக்கு, கர்ப்பிணிகளுக்கு, பால் கொடுக்கும் பெண்களுக்கு, வயதானவர்களுக்கு இந்த வகை நிறைய உதவும். இதில் சில சிக்கல்களும் இருக்கின்றன. முதலில் சுவை சிலருக்குப் பிடிக்காத மாதிரி இருக்கும். இரண்டாவது சிலருக்கு காற்று வெளியேறிக்கொண்டே இருக்கும். மூன்றாவது இதில் ஐசோபிளேவினேன்கள் அளவு குறைவாக இருக்கும். இதனால் மெனோபாஸ் பிரச்னைக்காக சாப்பிடும் பெண்களுக்கு இந்த சோயா புரோட்டின் கான்ஸ்ஸென்ட்ரேட் உதவாது.

2. சோயா புரோட்டின் ஐசோலேட்: இதில் புரோட்டின் அளவு 90 சதவிகிதம் இருக்கிறது. கூடவே அத்தனை அடிப்படை அமினோ அமிலங்களும் உள்ளன.

சோயாவில் எந்தக் கெடுதலும் இல்லையா?

இருக்கிறது. வயிற்றில் ஜீரணத்திற்கு உதவும் டிரிப்சின் என்கிற என்ஸைமின் வேலையைத் தடுப்பதில் சோயா ஈடுபடுகிறது. ஆக இதைத் தடுக்க சோயாவை நல்ல சூட்டில் வேக வைக்கவேண்டும். தவிர உடலில் இரும்புச்சத்து கிரகிப்பை சோயா தடுக்கிறது. இதனால் இரத்த சோகை உருவாகலாம். இதைத் தடுக்க வைட்டமின் "சி" நிறைந்த பழங்களைச் சாப்பிடுங்கள்.

சோயாவை எப்படி எடுத்துக்கொள்ளலாம்?

சோயா பல விதங்களில் கிடைக்கிறது. உங்கள் விருப்பத்திற்குப் பயன்படுத்தலாம். சிலவற்றை கீழே கவனியுங்கள்.


1. சோயாபீன்: இது மஞ்சள் மற்றும் பழுப்பு நிறங்களில் பெரிய மணிகளின் அளவில் கிடைக்கும். உலர்ந்த சோயா பீன்களை காற்றில் புகாத டப்பாக்களில் வையுங்கள். இரண்டு கப் சோயா பீன்களைத் தயாரிக்க, ஆறு கப் தண்*ரில் இரவு முழுக்க ஊற வையுங்கள். பின் காலையில் வடித்து, கழுவி, ப்ரஷர் குக்கரில் மறுபடியும் 6 கப் தண்*ர் ஊற்றி 40 நிமிடத்திற்கு குறைந்த சூட்டில் வேக வையுங்கள். இதற்குப் பின்பே உப்பு தேவை என்றால் சேர்க்கவும். முன்பே சேர்த்தால் சோயாபீன்கள் மென்மையாவதை உப்பு தடுக்கும்.

2. சோயா பால்: தினசரி பாலைத் தவிர்த்துவிட்டு 200 மி.லி. சோயா பாலுக்கு மாறிவிடலாம். நீங்களே தயாரிப்பதில் அந்த வாசனை உங்களை குடிக்கவிடாமல் தடுக்கும். கடைகளில் கிடைக்கிற சோயா பால் நல்ல சாய்ஸ்.

3. டெக்ஸ்டர்ட் சோயா: இதுவும் கடைகளில் கிடைக்கும். பார்ப்பதற்கு மாமிசத் துண்டுகள் போலவே இருக்கும். உணவில் சேர்த்துக்கொள்ளலாம். வழக்கமான கறிகளுக்குப் பதில் இந்த வகை சோயாவை பயன்படுத்தலாம். இதில் 70 சதவிகித புரோட்டின் இருக்கிறது. மிகக் குறைந்த கொழுப்பு, நிறைய நார்ச்சத்து மற்றும் ஐசோபிளேவினோன்கள் இருக்கின்றன. தேவைப்பட்டால் இதில் கொஞ்சம் வினிகர் அல்லது எலுமிச்சைச் சாறு பிழிந்து ஈரப்படுத்திக்கொள்ளலாம்.

4. டோபு: பார்ப்பதற்கு வெண்ணெய் மாதிரி இருக்கும். இது சோயாவை, ஜிப்ஸம் என்கிற கால்சியம் கோயாகுலன்ட் சேர்த்து கர்டிலிங் செய்து தயாரிக்கப்படுகிறது. புரோட்டின், வைட்டமின் "பி" நிறைந்தது. அரை கப்பில் 10.1 கி. புரோட்டின் இருக்கும். இது சாதாரண பாலில் 5.1 தான் இருக்கும். சோயா பால் மாதிரி இல்லாமல் இதில் கால்சியம் சேர்ந்து இருக்கும்.

குளிர்பதனப் பெட்டியில் ஒரு பௌல் தண்*ரில் போட்டு வைத்துவிடலாம். ஒரு வாரம் கெடாமல் இருக்கும்.

5. சோயா எண்ணெய்: மற்ற எண்ணெய்களைப் போல இல்லாமல் சோயா எண்ணெயில் எந்த ஒரு சிறு கெடுதலும் இல்லை. இயற்கையான ஆன்ட்டி ஆக்ஸிடென்டுகள் நிறைந்து இருப்பது இரத்தக்குழாய்களுக்கும், இருதயத்திற்கும் நன்மை செய்யும்.

6. சோயா சாஸ்: சோயாவை ஃபெர்மென்ட் செய்து உருவாக்கப்படும் இந்த சாஸ் பழுப்பு நிறத்தில் இருக்கும். மற்ற சாஸ் போலவே இதைப் பயன்படுத்தலாம். இதன் ஒரு குறை, இதில் ஐசோபிளேவினோன்கள் குறைவான அளவிலேயே இருக்கும். 100 கிராம் சாஸ?ல் 1.6 மி.கிதான் இருக்கும். கூடவே உப்பு அதிகம் கலந்திருக்கும். கவனம் தேவை.

சோயா வகை - ஐசோபிளேவினோன்
உணவு அளவு - (100 கிராமுக்கு)

1. சோயா பீன் - 200 மி.கி.

2. சோயா பால் - 35 மி.கி.

3. டெக்ஸ்டர்ட் - சோயா 92.7 மி.கி.

4. சோயா சாஸ் - 1.6 மி.கி.


நன்றி :தமிழ் வெப்சைட் (கூடல்)
 
சிங்கையிலிருந்து தஞ்சை வந்தும் மிக அற்புதமான தகவல்களை அள்ளித்தரும் நீங்கள் மிகவும் அற்புதம்தான் நீங்கள்...

உங்களின் அனைத்து பிரச்சனைகளும் முடிந்து சுகமாக உங்களின் வாழ்வை நீங்கள் தொடங்க இருக்கும் அற்புதமான வாழ்விற்கு எனது வாழ்த்துக்கள் அனு...
 
Last edited:
Back
Top