அற்புத மருத்துவம் வாங்கோ!!!

அருகம்புல்லின் பயன்கள்

தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடிக்க வேண்டும். இதை கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்துக் குடிக்க வேண்டும். குடித்த 2 மணி நேரத்திற்குப் பிறகு மற்ற உணவு வகைகள் சாப்பிடலாம்.

அருகம்புல் சாறு குடிப்பதனால் ஏற்படும் பலன்கள்

நாம் எப்பொழுதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.
இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும்.
வயிற்றுப் புண் குணமாகும்.
இரத்த அழுத்தம் (பீ.பி) குணமாகும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும்.
நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி ஆகியவை நீங்கும்.
மலச்சிக்கல் நீங்கும்.
புற்று நோய்க்கு நல்ல மருந்து.
உடல் இளைக்க உதவும்
இரவில் நல்ல தூக்கம் வரும்.
பல், ஈறு கோளாறுகள் நீங்கும்.
மூட்டு வலி நீங்கும்.
கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும்.
நம் உடம்பை தினமும் மசாஜ் செய்தது போலிருக்கும்.

-அனு:icon_b:
 
Last edited:
பூண்டில் மருத்துவம்...


பூண்டு... நமது அன்றாட சமையலில் பயன்படும் ஒரு பொருள். இதில் சுவை மட்டும் அல்ல...

இந்த பூண்டின் மருத்துவ பயன்கள் பற்றி...

* பூண்டையும் உப்பையும் சேர்த்து கசக்கி சாறெடுத்து தடவ அளுங்கு, மேல்தோல் சரிவு குணப்படும்.

* காது மந்தமாக இருப்பவர்களுக்கு தொடர்ந்து பூண்டு சாறினை காதில் ஊற்றி வரலாம்.

* பூண்டு சாறினை வலிப்பு வருகிற குழந்தைகளுக்கும், இருமல், சளி தொந்தரவு இருப்பவர்களுக்கும் கொடுத்து வர மெல்ல மெல்ல குணம் பெறலாம்.

* இரைப்பு, இருமல், வயிற்றில் பூச்சி இருப்பவர்களுக்கு பூண்டு சாறுகளை சில துளிகள் உள்ளுக்கு சாப்பிட கொடுக்க குணம் எளிதில் கிடைக்கும்.

* டான்ஸ?ல் என்கிற உள்நாக்கு வளர்ந்திரப்பவர்கள் - அந்த வளர்ந்த உள்நாக்கு சதை வளர்ச்சியின் மீது தடவ பூண்டு சாறினை தடவி குணம் கிடைக்கும்.

* அஜீரணம், வயிற்றுப்புசம் போன்ற பாதிப்பிருந்தால் வெள்ளைப் பூண்டுடன் மிளகு, கையாந்துரையை அரைத்து உண்ணலாம்.

* பூண்டை பாலில் வேகவைத்து சாப்பிட கொழுப்பு (கொலஸ்ட்ரால் குறையும்) ரத்தக் கொதிப்பு, ஹைபவர் டென்ஷன் போன்ற பாதிப்புள்ளவர்களுக்கு பூண்டு நல்ல மருந்து.

* பூண்டு பல மருத்துவ நன்மை கொண்டு இருப்பினும் கூட மூலம், பௌத்திரம், பாதிப்பு இருப்பவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏன் எனில் பூண்டு ஒரு வெப்ப உண்டாக்கி. எனவே மூல பௌத்திர பாதிப்புகளை அதிகப்படுத்தி விடும்.
 
பீட்ரூட்டின் மருத்துவ பயன்கள்...


பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகும்.

பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வடர சிறுநீரகங்களும் பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.

பீட்ரூட் சாறுடன் படிகாரத்தை பொடியாக்கி சேர்த்து கலந்து உடலில் எரிச்சல், அரிப்பு உள்ள இடங்களின் மேல் தடவ எரிச்சல் அரிப்பு மாறும்.

தீப்பட்ட இடத்தில் பீட்ரூட் சாறைத் தடவினால் தீப்புண் கொப்புளமாகாமல் விரைவில் ஆறும்.

பீட்ரூட் கஷாயம் மூலநோயை குணப்படுத்தும்.

பீட்ரூட் கூட்டு மலச்சிக்கலை நீக்கும். இரத்த சோகையை குணப்படுத்தும்.

பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமானத்தைக் கூட்டும்.

பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டுவர இரத்தத்தில் சிவப்பணக்கள் உற்பத்தியாகும்.

பீட்ரூட்டை வேக வைத்த நீரில் வினிகரைக் கலந்து சொறி, பொடுகு, ஆறாத புண்கள் மேல் தடவி வர அனைத்தும் குணமாகும்.
 
உங்கள் பகிர்தலுக்கு நன்றி அனு

ம்ம் நன்றி நாரதரே..!!
நான் தொடர்ந்து தர ஆசைப்படுகிறேன்..!!
அனைவருக்கும் பயன்படட்டுமே..!!
ம்ம் என் நன்றி!!
:)
 
அனு;325014 said:
ம்ம் நன்றி நாரதரே..!!
நான் தொடர்ந்து தர ஆசைப்படுகிறேன்..!!
அனைவருக்கும் பயன்படட்டுமே..!!
ம்ம் என் நன்றி!!
:)

அனு;325017 said:
ம்ம் நீங்களும் பல தரலாமே யவனிகா..!!
ம்ம் நன்றி!!!

அதென்ன கொஞ்சம் ஓவராகவே "ம்ம்ம்" காரமிடிகின்றீர்கள்????

குறைத்துக்கொள்ளலாமே? இதற்கு ஒரு மருந்தும் இல்லையா?
 
ம்ம் நன்றாக இருக்கிறது. ஆனால் அருகல்புல்லை எங்கே போய் தேடுவது.
 
அதென்ன கொஞ்சம் ஓவராகவே "ம்ம்ம்" காரமிடிகின்றீர்கள்????

குறைத்துக்கொள்ளலாமே? இதற்கு ஒரு மருந்தும் இல்லையா?

நல்லது நாரதா..
அன்பாக உள்ளவங்களிடம் பேசும்போது நான் அப்படிதான் பேசுவேன்
என்ன செய்வது பழக்க தோசம்..
ஆகா வந்துடார்யா நாரதர் அந்துடாரு.!!
 
ம்ம் நன்றாக இருக்கிறது. ஆனால் அருகல்புல்லை எங்கே போய் தேடுவது.

எங்க இருக்கிங்க ஆரென்..!
நான் வேணுமுனா ஊரிலிருந்து கொண்டு வர சொல்லுரேன்..
காசுக்குதான் வாங்கனும் ஆரென்..!!
 
முருங்கையின் மருத்துவப் பயன்கள்

முருங்கையின் மருத்துவப் பயன்கள்

இது ஒரு சத்துள்ள உணவு, இது உடல் வலிமையைக் கொடுக்க வல்லது. இது சுபாவம் சூடு. ஆதலால் சூட்டுடம்புக்கு ஆகாது.
இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும். கோழையை அகற்றும், முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய உணவாகும்.
இது, நெய் சேர்த்து சமைப்பது நல்லது.

சாதாரணமாக எல்லா வீட்டுக் கொல்லைகளிலும் தென்படும் முருங்கை மரத்தை மருத்துவ கொக்கிஷம் என்றே கூற வேண்டும். எண்ணற்ற வியாதிகளுக்கு ஏன்?
அநேகமாக எந்த வியாதிக்குமே, பலவகைகளில் மருந்தாகிறது.

முருங்கை மரத்தை விதையிலிருந்தும் அதன் கிளைகளை வெட்டி நட்டும் உற்பத்தி செய்யலாம்.
இதில் ஒட்டுச் செடிகூட உண்டு என்றால் உங்களுக்கு வியப்பாயிருக்கும். அந்த ஒட்டு வகையில் நல்ல சதைப்பற்றான சுவையான காய்கள் கிடைக்கும். நீண்ட காய்களை காய்க்கக் கூடியதாகவும் அதிக பலனை தரக்கூடியதாகவும் வளரும்.
முருங்கை மரத்தில் பட்டை, கீரை, காய், விதை, பிசின் அனைத்துமே பயன்படுகின்றன.

முருங்கைப் பட்டையை நீர் விட்டு அரைத்து வீக்கங்களுக்கும் வாயு தாங்கிய இடங்ளுக்கும் போடுவது வழக்கம்.
முருங்கை இலையை உருவிய பின் காம்புகளை நறுக்கிப் போட்டு மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் உண்ண, கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கி சிறு நீரைப் பெருக்கும்.

முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்பு சத்து இவை இருக்கின்றன. இந்த இலைகளை நெய்யில் பொரித்துச் சாப்பிட்டால், ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப்படும். தோல் வியாதிகள் தீரும்.

முருங்கைப் பட்டை, உலோகச் சத்துக்கள் நிறைந்தது. உணவில் கலந்து உண்டால் நரம்புக் கோளாறுக்கு ஒரு நல்ல மருந்து.
முருங்கைக் காயை தென்னாட்டில் தான் அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். வட நாட்டில் இதை அதிகமாகச் சமைத்து உண்பதைக் காண்போம்.

கடுமையான ரத்த, சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் இந்த வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக் காய் கை கண்ட மருந்து. முருங்கைக் காயை வேகவைத்து கொஞ்சம் உப்பு சேர்த்துச் சாப்பிடலாம். இதை உண்டதும் ஒரு தம்ளர் எருமை மோர் சாப்பிடுவது சீரணத்துக்கு உதவி செய்கிறது.

முருங்கை மரத்தின் மருந்து சக்தியை அறிந்தோ அறியாமலோ நாம் அடிக்கடி முருங்கைக்காயை உணவாகக் கொள்கிறோம். முருங்கைக்காய் சாம்பார் பலருக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாயிற்றே!
முருங்கைக் காய்ச் சாம்பார் சுவையாக இருப்பதோடு அல்லாமல், மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண்நோய் இவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.

-அனு
 
Last edited:
அறிஞர்;325412 said:
அருமையான தகவல்கள்....

அருகம்புல் பவுடராக கிடைக்கிறதா...
ஓ கிடைக்குமே..
அறிஞர் நல்ல நாட்டுமருந்து கடைக்கு சென்று பவுடரைக் கேளுங்கள்..
நன்றி அறிஞர் அவர்களே!!
 
அனு, எனக்கு முறுங்கை கீரை என்றால் உயிர். ஆனால் அம்மணிக்கோ அதை உறுவி எடுத்து செய்து தர சோம்பல். உங்களின் பதிவை காட்டியாவது கிடைக்குமா என்று பார்க்க வேண்டும்.
 
அருகம்புல், பூண்டு, பீட்ரூட், முருங்கை இவற்றின் அருங்குணங்கள் பற்றிய தகவல்களுக்கு மிக்க நன்றி அனு. அனுவின் அற்புத மருத்துவம்ம்ம்.... இனிதே தொடரட்டும். யாம் நோயின்றி வாழ அது உதவட்டும்ம்ம்ம்....
 
எலுமிச்சம் பழம்

எலுமிச்சம் பழத்தை ஒரு சர்வரோக நிவாரணி என்று சொல்லலாம். அந்தளவுக்கு நோய்கள் வராமல் தடுத்து உடல் நலத்தை காத்துக் கொள்ள என்னென்ன பொருட்கள் அவசியம் தேவையோ, அவைகள் அனைத்தும் இந்த பழத்தில் இருக்கின்றன.

ரத்தக் கொதிப்பைத் தடுப்பதில் எலுமிச்சம் பழம் மிக முக்கிய பங்காற்றுகிறது. மேலும் கெட்ட ரத்தத்தை தூய்மைப்படுத்துவதற்கு எலுமிச்சம் பழத்தை விட மேலான ஒன்று கிடையாது. முக்கிய வைட்டமின் சத்தான வைட்டமின் சி, எலுமிச்சம் பழத்தில் நிறைய இருக்கிறது. எலுமிச்சையில் இருக்கும் சிட்ரிக் அமிலம் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. அதனால் தொற்று நோய் கிருமிகளின் தாக்குதலில் இருந்து உடலை கண்போல பாதுகாக்கிறது.

எலுமிச்சம் பழ ரசத்தை சாப்பிட்டால் மண்*ரல் வீக்கம் பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.
எலுமிச்சம் பழத்தின் சாற்றை தேனில் கலந்து சாப்பிடுவது ஒரு சத்து மிக்க டானிக் ஆகும்.
உடலுக்கு வேண்டிய உயிரூட்டத்தையும், ஒளியையும் எலுமிச்சம் பழத்தின் மூலம் மனிதர்கள் பெற இயலும்.

இத்தனை நன்மை செய்யக்கூடிய எலுமிச்சம் பழத்துக்கு மலத்தை கட்டக்கூடிய குணமும் உண்டு. ஆனாலும் தேன் சேர்த்து உண்டு வந்தால் மலக்கட்டு நீங்கி விடும்.
 
Last edited:
ஸ்ரீ;325302 said:
அருமையான குறிப்புகள் அக்கா. நன்றி

நன்றி ஸ்ரீ..!!!
வாருங்கள் நீங்களும் பக்கேடுத்துக்கொள்ளுங்கள்..!!
நல்ல பல அரிய தகவல் தாங்க ஸ்ரீ..!
 
Back
Top