பொன்மொழிகள்

அன்பை அபகரிப்பதில் திருடனாய் இரு!
அறிவைப் பெருக்குவதில் பேராசைக்காரனாய் இரு!
முன்னேற முயற்சிப்பதில் பிடிவாதக்காரனாய் இரு!
கர்வம் கொள்வதில் கஞ்சனாய் இரு!
எதிர்ப்பை வெல்வதில் முரடனாய் இரு!

-அனு
 
வாவ் சூப்பரான பொன்மொழி...
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் அக்கா...
அனுக்கா அப்படியே
இன்னும் கொஞ்சம் பெரிய தலைகளோட நல்ல பொன்மொழிகளையும்
தொடர்ந்து தாங்களேன்....
 
முடிவாக கஞ்சம் பேராசை கொண்ட பிடிவாத முரட்டுத் திருடனாக இருக்கச் சொல்லுறீங்க........!! :)
 
ஓவியன்;321231 said:
முடிவாக கஞ்சம் பேராசை கொண்ட பிடிவாத முரட்டுத் திருடனாக இருக்கச் சொல்லுறீங்க........!! :)
அக்கா எவ்ளோ நல்ல கருத்து சொல்லியிருக்காங்க....
அதைபோய்
எப்பிடி இப்பிடி வில்லங்கமாவே யோசிக்கிறீங்க..... :eek: :eek:
 
அனு அதோடு இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்

அன்பைத்தருவதில் வள்ளலாக இருங்கள்
புறம் கூறுவதில் ஊமையாய் இருங்கள்
கோள் மூட்டுபவரிடம் செவிடராய் இருங்கள்
தீயவை நிகழுகையில் குருடராய் இருங்கள்
 
Last edited:
மலர்;321229 said:
வாவ் சூப்பரான பொன்மொழி...
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் அக்கா...
அனுக்கா அப்படியே
இன்னும் கொஞ்சம் பெரிய தலைகளோட நல்ல பொன்மொழிகளையும்
தொடர்ந்து தாங்களேன்....

நன்றி மலர்...
ம்ம் விரைவில் தருகிறேன்..
தொடர்ந்து வருக...
 
ஓவியன்;321231 said:
முடிவாக கஞ்சம் பேராசை கொண்ட பிடிவாத முரட்டுத் திருடனாக இருக்கச் சொல்லுறீங்க........!! :)

ஓ அவ்வளவுதான் உங்க கணிப்பு..
நல்லதை நல்லதாக பாருங்கள்..
ம்ம் என் நன்றி
 
மலர்;321232 said:
அக்கா எவ்ளோ நல்ல கருத்து சொல்லியிருக்காங்க....
அதைபோய்
எப்பிடி இப்பிடி வில்லங்கமாவே யோசிக்கிறீங்க..... :eek: :eek:

நன்றி மலர்..
மனிதர்கள் பலவிதம் அதில் சில இப்படி....
(சும்மா)
 
சிவா.ஜி;321244 said:
அன்பைத்தருவதில் வள்ளலாக இருங்கள்
புறம் கூறுவதில் ஊமையாய் இருங்கள்
கோள் மூட்டுபவரிடம் செவிடராய் இருங்கள்
தீயவை நிகழுகையில் குருடராய் இருங்கள்

நன்றி சிவா.ஜி
ம்ம் என் வாழ்த்துக்கள்..
 
அனு அக்கா:icon_b:

பொன்மொழி நல்லாதான் இருக்கு

ஆனா ஏட்டு சுரைக்காய் கரிக்கு உதவுமா ?
:icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout:
 
மலர்;321229 said:
வாவ் சூப்பரான பொன்மொழி...
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் அக்கா...
அனுக்கா அப்படியே
இன்னும் கொஞ்சம் பெரிய தலைகளோட நல்ல பொன்மொழிகளையும்
தொடர்ந்து தாங்களேன்....

உங்களுக்குத்தான் தலைக்கணம் அதிகமாக இருக்கிறதே. இன்னும் எதற்கு.
 
ஓவியன்;321231 said:
முடிவாக கஞ்சம் பேராசை கொண்ட பிடிவாத முரட்டுத் திருடனாக இருக்கச் சொல்லுறீங்க........!! :)

எப்படிங்க உங்களால் இப்படியெல்லாம் யோசிக்க முடிகிறது.

ஹீம், இப்படி யோசித்தும் நீங்கள் அடுத்தவாரம் மாட்டிக்கொள்ளப் போகிறீங்கள். அந்த விஷயத்தில்மட்டும் எப்படிங்க கோட்டை விட்டீர்கள். விதி யாரை விட்டது என்கிறீர்களா?
 
ஜெகதீசன்;321428 said:
அனு அக்கா:icon_b:

பொன்மொழி நல்லாதான் இருக்கு

ஆனா ஏட்டு சுரைக்காய் கரிக்கு உதவுமா ?
:icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout:

நன்றி ஜெகதீஸா...
நீங்கள் சொல்வது உண்மைதான்..
நீங்களும் பழமொழிகள் தாரளமாக இங்கு தரளாம்..
 
தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளாத பெண்ணை
வேறு யாரும் காப்பாற்ற முடியாது.
 
எல்லார் இடத்திலும் தெய்வம்உண்டு,
ஆனால் எல்லாரும் தெய்வத்திடம் இல்லை
 
உங்களிடம் அறிவொளி இருந்தால்
அந்தத் தீபத்திலிருந்து மற்றவர்கள் மெழுகுவத்திகளை ஏற்றிக்கொள்ளட்டும்.
 
எல்லாமே இழந்துவிட்டோம் என்று தோன்றும் போது
ஒன்றை மறவாதீர்கள்--அது எதிர்காலம் ஒன்று இருப்பதுதான்
 
Back
Top