மியூச்சுவல் பண்ட்
பங்கு சந்தையில் முதலீடு செய்து லாபம் பார்க்க எல்லோருக்கும் ஆசையாக இருக்கும்.ஆனால் அதற்கு உண்டான டெக்னிக்கல் நுண்ணறிவு,நேரம் செலவிடுதல், திட்டமிடுதல்,பாலோ-அப்,எல்லோருக்கும் செய்ய முடிவதில்லை.இதனை செய்து கொடுத்து அதற்குண்டான ஒரு தொகையை நம்மிடம் இருந்து பெற்றுக் கொள்வதால் இருவருக்கும் லாபம் கிடைக்கும், இதுதான் மியூச்சுவல் பண்டின் சாராம்சம். நம் சிறிய முதலீடு கூட இன்னும் சிறு சிறு யூனிட் என்று பிரித்து ஷேர் மார்கெட்டில் உள்ள பங்குகளில் முதலீடு செய்ய படுகிறது.பங்குகளில் முதலீடு செய்வதால் உள்ள ரிஸ்க் இதிலும் உண்டு,எனினும் நம் முதலீட்டில் ஒரு பகுதி, கடன் பத்திரங்களில் முதலிடு செய்யப்படுவதால், பங்குச் சந்தையின் இறக்க காலத்திலும். நம் முதலீட்டுத் தொகை பாதுகாக்கப்படுகிறது.