தற்பொழுது ஸ்ரீபெரும்புதுரில் உள்ள நோக்கியா கம்பெனியில், ஒரு நாளைக்கு 4,00,000 (4லட்சம்) மோபைல் தாயாரிக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு இது 6,00,000 மாக உள்ளது.
உலகின் முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனமான நோக்கியா நிறுவனம், தனது வாடிக்கையாளர்களின் இண்டநெட் இணைப்பு சேவையைக் கருத்தில் கொண்டு, லினெக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்தை புதிய போன்களில் வழங்குவது குறித்து யோசித்து வருகிறது.
இதன்மூலம் இண்டநெட் இணைப்புடன் கூடிய போன்கள் விற்பனையை அதிகரிக்க நோக்கியா திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
செல்போன்களில் தற்போது லினெக்ஸ் ஓ.எஸ். வெற்றிபெற்றுள்ள நிலையில், சந்தையில் லினெக்ஸ் போன்களின் மாடல்களை அதிகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
விமக்ஸ் போன்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு லினெக்ஸ் போன்களை வழங்க நோக்கியா முடிவு செய்திருப்பதாக அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறினார்.
உலகளவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிசர்ச் இன் மோஷன் (ரிம்) நிறுவனத்தின் புதிய அறிமுகமான பிளாக்பெரி போல்ட் (Blackberry Bold) செல்போன் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. ரிம் நிறுவனம் இதுவரை அறிமுகப்படுத்திய பிளாக்பெரி செல்போன்கள் வரிசையில், 'பிளாக்பெரி போல்டு' போனில் மட்டுமே மிகத் தெளிவான, வெளிச்சம் மிக்க வண்ணத்திரை உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதில் உள்ள வண்ணத்திரை 480x320 ரெசல்யூஷன் கொண்டது என்பதால் படங்கள் அனைத்தும் மிகத் துல்லியமாக தெரியும் என ரிம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒருங்கிணைந்த ஜிபிஎஸ், வை-ஃபை, பிரவுஸர் மற்றும் மல்டிமீடியா வசதிகளை உள்ளடக்கிய இந்த நவீன பிளாக்பெரி செல்போனில், 624 மெகா ஹெர்ட்ஸ் பிராசசர் இருப்பதால் மின்னஞ்சல், வீடியோக்கள், இணையதள பக்கங்களை வெகு விரைவாக பதிவிறக்கம் (டவுன்லோட்) செய்ய முடியும் என்பது கூடுதல் சிறப்பம்சமாக கருதப்படுகிறது.
கனடா நாட்டு நிறுவனமான ரிசர்ச் இன் மோஷன் (RIM) தயாரிக்கும் பிரபல ப்ளாக்பெரி செல்போன் விரைவில் டச்-ஸ்கிரீன் வசதியுடன் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதுதொடர்பாக ஐடி இதழ் ஒன்றில் வெளியாகியுள்ள செய்தியில், நடப்பு நிதியாண்டின் 3ம் காலாண்டில் டச்-ஸ்கிரீன் வசதியுள்ள ப்ளாக்பெரி அறிமுகப்படுத்தப்படும் என்றும், இது வெரிசோன் (அமெரிக்கா) மற்றும் வோடாபோன் (பிறநாடுகளில்) நிறுவனங்களின் வாயிலாக விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இதுகுறித்து ரிம் நிறுவனம் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது.கடந்த பிப்ரவரி மாதம் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய ரிம் நிறுவன துணை முதன்மை நிர்வாகி ஜிம் பல்ஸில்லி, வாடிக்கையாளர்கள் விரும்பினால் டச்-ஸ்கிரீன் (Touch screen) வசதியுடையை ப்ளாக்பெரி செல்போனை ரிம் நிறுவனம் அறிமுகப்படுத்தும் என்றார்.
தொடுதிரை (டச்-ஸ்கிரீன்) வசதியுள்ள ப்ளாக்பெரி செல்போன் அறிமுகப்படுத்தப்பட்டால், அது ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன் சாதனத்திற்கு கடும் சவாலாகவும், போட்டியாகவும் விளங்கும் என இத்துறை வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை உள்ளடக்கிய புதிய செல்போனை மோட்டரோலா நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்டீரியோ புளூடூத்-4 மற்றும் கிரிஸ்டல் டால்க் தொழில்நுட்பங்களை கொண்ட இந்த செல்போனுக்கு மோடோரோகர் யு-9 (MOTOROKR U9) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
25 மெகாபைட் நினைவகத் திறன் கொண்ட இந்த புதிய போனில், மைக்ரோசாப்ட் விண்டோஸ் மீடியா பிளேயர் 11 மென்பொருளையும் இயக்கும் வசதியும் உள்ளது சிறப்பம்சமாக கருதப்படுகிறது.
மேலும் 4 மெகாபைட் நினைவகத் திறனுடைய மெமரி கார்டையும் இந்த போனில் பயன்படுத்த முடிவதால் ஏராளமான புகைப்படங்கள், பாடல்களை பதிவு செய்ய முடியும் என மோட்டரோலா தெரிவித்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன் சாதனங்களுக்கான கிரிக்கெட் செய்தி வழங்கும் சேவையை பிரபல இணையதளமான கிரிக்இன்ஃபோ (Cricinfo) அறிமுகம் செய்துள்ளது.
இதன்படி ஐ-போன் உரிமைதாரர்கள், கிரிக்கெட் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்வதுடன், ஸ்கோர்கார்ட், போட்டி அட்டவணை, செய்திகள், புகைப்படங்கள், நிபுணர்களின் கருத்துகள் உள்ளிட்டவற்றையும் அறிய முடியும்.
ஈஎஸ்பிஎன் (ESPN) கட்டுப்பாட்டில் உள்ள கிரின்இன்ஃபோ இணையம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த புதிய வசதியை, சிம்பியன் வகை போன்கள், பிளாக்பெரி, விண்டோஸ் மொபைல் வசதியுள்ள ஸ்மார்ட் போன்ஸ் ஆகியவற்றிலும் பெற முடியும் என்பது இச்சேவையின் சிறப்பம்சமாக கருதப்படுகிறது.
செல்போன் மற்றும் மொபைல் பயன்பாட்டிற்கான அதிவேக ஒரு ஜிகாபைட் மெமரி சிப்-ஐ தயாரித்திருப்பதாக தென் கொரியாவின் ஹைனிக்ஸ் செமிகண்டக்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.
உலகின் 2-வது மிகப்பெரிய சிப் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் ஹைனிக்ஸின் இந்த சிப் ஆனது, விநாடிக்கும் சுமார் 800 மெகாபைட் டேட்டாக்களை திரட்டும் என்றும், தற்போது சந்தையில் கிடைக்கும் சிப்களை விட புதிய சிப் டேட்டாவை பெறும் திறன் அதிவேகமானது என்றும் அந்நிறுவனம் வெளியிட்ட தகவல் தெரிவிக்கிறது.
மொபைல் பயன்பாடுகளின் விரிவான தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் இந்த சிப் இருக்கும் என்றும், வேகமான செயல்பாட்டு திறனுக்காகவும், அதிவேக மெமரிக்காகவும் இது பயன்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய சிப்களை அதிகளவில் ஹைனிக்ஸ் தயாரிக்கும் என்றும், நடப்பு நிதியாண்டின் 4ம் காலாண்டில் இவை விற்பனைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
mig33 யில் பல ஆயிரக்கணக்கான சாட் றூம்கள் உள்ளன அத்துடன் msn,yahoo,google talk மற்றும் Aim போன்ற சகல மெசெஞ்சர்கள் மூலமும் சாட் பண்ணலாம் அத்துடன் போட்டோகள் போன்றனவும் ப்ரிமாறலாம் சகலதும் இலவசம். காலும் பண்ணலாம் ஆனால் அதற்க்கு கட்டனம்.