ஓவியன்;257603 said:மோகன் இந்த திரியிலுள்ள புகைப் படங்கள் கோவில்களாக இருந்தாலும் நாம் ஒரு தனிப்பகுதியை புகைப் படங்களுக்கென ஒதுக்கியிருப்பதால் இந்த திரியை ஆன்மிகப் பகுதியிலிருந்து இங்கே மாற்றுகின்றேன்................
நன்றி ஓவியன். அதுபோலவே சானியா, சச்சின் திரியை நகர்த்திவிடுங்கள். அதுவும் புகைப்பட தொகுப்பு தான்.
ஓவியன்;257828 said:நம் புகைப் படக்களஞ்சியம் தொடர்பான விதிகளில் பிரபல்யங்களின் தனிப்பட்ட படங்களைத் தவிர்க்க வேண்டும் என்பது ஒன்றாக இருந்தாலும் இந்த திரிகள் இரண்டும் செய்திகளை உள்ளடக்கியவை என்பதனாலும் பழைய திரிகள் என்பதனாலும் இந்த பகுதிக்கு இடம் மாற்றுகிறேன் மோகன்.
ஒரு சந்தேகம் ஓவியரே, அறிஞர் பிரபல்யமானவர்களின் தனிப்பட்ட படங்களைப் பதிப்பதை தவிருங்கள் அதாவது Personal Pictures or Privacy breach pictures என்று நினைக்கிறேன். பிரபல்யங்களின் படங்கள் தானே புகைப்பட களஞ்சியத்தின் சிறப்பு.
சந்தேகத்தை தீர்த்து வையுங்களேன். நன்றி.
ஓவியன்;260014 said:Personal Pictures என்பது சரியே மோகன், அத்துடன் பிரபல்யமானவர் என்பதற்காக எவ்வித செய்திகளையும் உள்ளடக்காமல் அந்த பிரபல்யமானவரின் படங்களை இங்கே பதிப்பதையும் தவிர்க்க வேண்டும், பிரபல்யமான ஒரு நடிகரின் படங்களை இணையத்தில் இருந்து பெற்று யாராவது இங்கே பதிக்கத் தொடங்கினால் இந்தப் பகுதியின் நோக்கம் என்னவாகும்.........?
கோயில் படங்கள் அனைத்தும் அருமை மோகன் நண்பரே!