உபுண்டு 11.04 வெளியீடு

ஐபஸ் மூலம் உபுண்டு 10.4 ல் பாலினியை புகுத்த முடிகின்றது. 11.04 இல் அந்த கட்டளையை பயன்படுத்தும்போது கோப்புக்கள் இல்லையென்றை பதில் வருக்கின்றது. 11.04 இல் எவ்வளவு முயன்றாலும் ஆங்கிலமும் சீனமொழியும்தான் தோன்றுகின்றது.
 
அன்பு வியாசன்,
நானும் ஒரு மடிக்கணினியில் 11.04ஐ நிறுவினேன். ஐபஸ் மூலம் தமிழ் தட்டச்சுவதில் (ஃபோனடிக் முறை) எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் 11.04 நிறுவும் போது சில பிரச்சினைகளைக் கொடுக்கிறது. அதைப்பற்றி ஆராய நேரம் சரியாகி விடுகிறது. விரைவில் எல்லாம் சரியாகும் என நம்புகிறேன்.

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=22784 இத்திரியை நீங்கள் படித்திருப்பீர்கள் என்றே நம்புகிறேன். அதில் மயூரன் 11.04ல் பாமினி முறை தட்டச்சு இயங்குவதாக கூறி இருக்கிறார். எனக்கு பாமினி முறை தட்டச்சு தெரியாததால் என்னால் சரியாக பதிலளிக்க இயலவில்லை. நீங்களும் மீண்டும் ஒரு முறை பொறுமையாக திரி முழுமையும் படித்துப்பாருங்கள்.

வேறு முறை இருக்கிறதா என அறிய நானும் முயற்சிக்கிறேன்.
 
பாரதி அவர்களே

sudo apt-get install m17n-db m17n-contrib ibus-m17n5 இந்த கட்டளையை வழங்கும்போது கோப்புகள் இல்லை என்கின்ற பதில் கிடைக்கின்றது. அதன்பின் ஐபஸ் கட்டளையை வழங்கி உள்ளீடு செய்ய முயலும்போது அங்கே ஆங்கிலமும் சீன மொழியும்தான் தோன்றுகின்றது மற்றைய மொழிகள் எதுவுமே காணப்படவில்லை. அங்கு சீனமொழியை தெரிவு செய்ய முடியும்.
பாலினியை தரவிறக்கி சேர்த்துக்கொண்டாலும் ஐபஸ்சில் தமிழ் மொழி காணப்படாமையால் பாலினியையும் தெரிவு செய்யமுடியவில்லை. நீங்கள் உங்கள் கணனியில் முயன்று பாருங்கள் IBUS inbut க்கு போகும்போது மற்றைய மொழிகள் தோன்றுகின்றதா என்று
நட்புடன் வியாசன்
 
கடந்த முறை நிறுவிய போது, கணினி இயங்கத்தொடங்கியதும் இற்றைப்படுத்தி இருந்தேன். அதனால் காரணமாக எனக்கு தட்டச்சு முறையில் எந்தப்பிரச்சினையும் இல்லை,

இன்று உங்களுக்காகவே மீண்டும் மடிக்கணினியில் உபுண்டு 11.04 ஐ மீள நிறுவினேன். அதில் நீங்கள் கூறியபடி ஐபஸ்..ஸில் பார்த்த போது சீன மொழி மட்டுமே இருந்தது. தமிழ் இல்லை!

வழிகளை தேடினேன்.
1. சிஸ்டம் - அட்மினிஸ்ட்ரேசன் - சினாப்டிக் பேக்கேஜ் மேனஜரை இயக்கினேன். கடவுச்சொல்லைக் கொடுத்து உள்ளே புகுந்தேன். தேடும் பெட்டியில் tamil என்று தட்டச்சி தேடினேன். ஜினோம்-மில் நிறுவ வேண்டிய தமிழ்ப்பொதிகளை தேர்வு செய்தேன். அப்ளை - பொத்தானை அழுத்தினேன். பொதிகள் நிறுவப்பட்டன.

2. டெர்மினலைத் திறந்து
sudo apt-get install ibus-m17n

என்ற கட்டளையைத் தந்தேன். பொதிகள் நிறுவப்பட்டன.

3. ஐபஸ்ஸை மீள இயக்கினேன்.
Preferances - Input Method - Select an Input Method என்பதில் இப்போது பல மொழிகளுடன் தமிழும் நிறுவப்பட்டிருந்தது.
அதில் இருந்து தமிழ் ஃபோனடிக் முறையை தேர்ந்தெடுத்து நிறுவினேன்.
இதை அதிலிருந்துதான் தட்டச்சிப்பதிக்கிறேன்.

நீங்களும் முயற்சி செய்து பார்த்துவிட்டு சொல்லுங்களேன்.
 
தெரியாத தேவதையைக் காட்டிலும் தெரிந்த பிசாசே மேல் என்ற பழமொழிக்கேற்ப நமக்கு விண்டோஸ் எக்ஸ் பி-யே கதி!
 
விண்டோஸ் XP சர்வீஸ் பேக் 3 மற்றும் விண்டோஸ் 7 நன்றாக உள்ளது.
 
தெரியாத தேவதையைக் காட்டிலும் தெரிந்த பிசாசே மேல் என்ற பழமொழிக்கேற்ப நமக்கு விண்டோஸ் எக்ஸ் பி-யே கதி!

நண்பரே நீங்கள் எப்படி எக்ஸ்பீயை கற்றுக்கொண்டீர்கள்? நீங்கள் பிறக்கும்போதே தெரியுமா? அதுபோலத்தான் இலவசமாக லட்டு கொடுக்கின்றார்கள் எடுத்து திங்கமுடியாது என்கின்றீர்கள். அத்துடன் இன்னொரு லட்டும் கிடைக்கின்றது உங்கள் வேறு தேவைகளுக்காக மென்பொருட்களும் இலவசமாக கிடைக்கின்றது. உ+மாக டிவிடி கொப்பி வீடியோ எடிட்டிங் இன்னும்பல லட்டு வேணுமா வேண்டாமா எங்கிறது உங்கள் முடிவு
 
உண்மைதான் நண்பர் வியாசன்..!
ஆனால் நாம் சில விஷயங்களை பழகி விட்டால் விலக மனம் இருந்தாலும் சோம்பேறித்தனம்.. பின்னர் வேறு பல காரணங்களும் உள்ளன.

உதா.. எனது வேலை முழுவதும் அவுட்லுக் எக்ஸ்ப்ரெஸ்-இல் தான் நடக்கிறது.. பழைய கோப்புக்கள் முழுவதும் - 5- 6 வருடங்களின் சேமிப்பு.. இது விண்டோஸ்-7 இல் கூட வேலை செய்யாது. இதற்கு இணையான புதிய லட்டு இருந்தாலும் அதைப் படித்து பழைய சேமிப்புகளை மாற்றுவது பெரிய வேலைதானே..!

இத்தனைக்கும் உபுண்டு (எந்த வெளியீடு என்று தெரியவில்லை) எனதுகணினியிலேயே உள்ளது.. ஆனால் இதுவரை உள்ளே கால் விட அவகாசம் கிடைக்க வில்லை.. உந்துதலும் இல்லை.. காரணம் ஓரளவுக்கு சோம்பேறித்தனம்..!
 
அன்பு நண்பரே,
எந்த வெளியீடு என்று தெரியாத, இதுவரை பயன்படுத்தாத லினக்ஸை கணினியிலேயே வைத்திருப்பதால் என்ன பயன்..?

சரி.. நல்லது. விண்டோஸ் 7 -இல் வேலை செய்யாது என்று நீங்கள் கூறும் அவுட்லுக் எக்ஸ்பிரஸ் மடல்களை இலவசமாக கிடைக்கப்பெறும் லினக்ஸ் தண்டர்பேர்ட்டில் எப்படி மாற்றுவது என்பதற்கான வழிமுறை இங்கே இருக்கிறது.

[http://www.howtoforge.com/importing_outlook_express_into_thunderbird_evolution
 
Back
Top