உபுண்டு 11.04 வெளியீடு

அன்பு நண்பர்களே,

இன்று 10.10.10 அன்று உபுண்டுவின் மாவேரிக் மீர்கட் 10.10 (Maverick Meerkat 10.10) வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்கு முந்தைய வெளியீடுகளிலும் இது மேம்படுத்தப்பட்டிருப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. எப்படியாயினும் உபுண்டு என்ற சொல்லே போதும் என்ற அளவிற்கு ஆகிக்கொண்டிருக்கிறது.

இதை நிறுவுவதைக் குறித்த யூட்யூப் காணொளிக் காட்சி இதோ:

[media]http://www.youtube.com/watch?v=xat76mgzCI0[/media]


கையடக்க நெட் கணினிக்கான பதிப்பு10.10 -ம் இன்றே வெளியிடப்பட்டிருக்கிறது.
அதை சோதிக்க வேண்டி பதிவிறக்கம் செய்து கொண்டிருக்கிறேன்.

சோதிக்க / நிறுவ விரும்புபவர்கள், இலவசமாக உபுண்டுவை பதிவிறக்க செல்ல வேண்டிய முகவரி:

Code:
 http://www.ubuntu.com
நாளைய உலகை ஆளப்போகும் லினக்ஸைக் கற்றுக்கொள்ளுங்கள்.
 
Last edited:
ஆயிரம் நன்றிகள் பாரதி தரவிறக்கம் செய்துகொண்டிருக்கின்றேன். தனியாக ஒரு கணனியில் நிறுவப்போகின்றேன். அதன்பின் உங்கள் உதவிதேவை
 
நல்லது வியாசன். உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன். நிறுவும் சமயத்தில் இணையத்தில் இணைந்திருப்பீர்கள் என்றால் இன்னும் நன்று. எனக்குத்தெரிந்ததை கூற காத்திருக்கிறேன்.
 
Last edited:
பகிர்வுக்கு நன்றி அண்ணா,

அண்ணாவ் விசாயனை விராடனா மாற்றிட்டீங்க :)
 
பகிர்வுக்கு நன்றி அண்ணா,

அண்ணாவ் விசாயனை விராடனா மாற்றிட்டீங்க :)

நீங்க வியாசனை விசாயனா மாத்தினதுமாதிரி மாத்தியிருப்பார்!!! :lachen001:
 
பிழையை சுட்டிக்காட்டியதற்கு நன்றி ஆதன். இப்போது சரி செய்து விட்டேன்.:icon_b:
 
நன்றி நன்பரே... நானும் எவ்வாறு நிறுவவது என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்... தக்க சமயத்தில் உங்கள் பதிவு பயணுள்ளதாக இருந்தது..

நன்றி
 
பாரதி 11.04 அற்புதமாக இருக்கின்றது. விண்டேசுக்கு பை பை குட்பை

தலைவா தகவலுக்கு நன்றிகள்.............
 
பாரதி 11.04 அற்புதமாக இருக்கின்றது. விண்டேசுக்கு பை பை குட்பை
............
உங்கள் அன்றாட பயன்பாட்டிற்கு எப்படி இருக்கிறது என்பதைக் குறித்து நேரம் கிடைக்கும் போது எழுதுங்களேன் வியாசன்.
 
கண்டிப்பாக பாரதி சிறிது கற்றுக்கொள்ளவேண்டியுள்ளது அதன் பிறகு தெரிவிக்கின்றேன்
 
ஒயின் வைத்து போட்டாசாப் பணன்படுத்துகையில் பல ஷாட்கட் கீகள் வேலை செய்யவில்லை - உதவி தேவை....
அதே போல் உபுண்டு-வில் பாமினி பாண்டுபோல் யூனி கோடில் தட்டச்சு செய்ய உதவி தேவை...
NHM Writer Install செய்தும் பலனில்லை....
Ubuntu வில் தமிழ் யூனிகோடு லேஅவுட் மட்டுமே உள்ளது... இது பாமிணியிலிருந்து பல கீ வித்தியாச மாக உள்ளதால்....
இந்த 2 பிரட்சனைக்கும் உதவிதேவை....
 
உபுண்டு சிலகாலமாக பாவித்து வருகின்றேன். உடனடியாக எனக்கு தெரிந்த ஒரு விடயம் தரவிறக்கம் அதிவேகமாக நடைபெறுகின்றது. உபுண்டு தரவிறக்க நிலையத்தில் இலவசமாக ஏராளமான மென்பொருட்கள் இலவசமாக கிடைக்கின்றது. எதற்கு வேண்டுமானாலும் மென் பொருட்கள் கிடைக்கின்றது. இணையத்தில் கிடைத்த ஒரு வழிமுறை மூலம் வைன் மென்பொருளை உபுண்டுவில் பதித்து அதன் மூலம் பல தேவையான மென் பொருட்களை இணைத்து வைத்துள்ளேன். சாதாரணமாக Winamp ஐ பதிக்க முடியவில்லை. இணையத்தில் கிடைத்த வழி மூலம் பல விண்டேசிற்கான மென் பொருட்களை சுலபமாக பதிக்க முடிகின்றது.

இதற்கெல்லாம் காரணம் நண்பர் பாரதி கொடுத்த ஊக்கம் என்றால் மிகையாகாது. ஆனால் எனக்கு ஒரு விடயம் மட்டும் முடியவில்லை. கீமென் என்ற மென் பொருளை மட்டும் பதிக்க முடியவில்லை. இதற்கு பாரதி ஒரு வழி கண்டுபிடிக்காமல் இருந்துவிடுவாரா

சொற்பகாலங்கள் போதும் மைக்கிரோசொவ்ற்றுக்கு விடைகொடுக்க

உங்கள் சந்தேகங்களுக்கு என்னால் முடிந்த உதவிகள் செய்ய காத்திருக்கின்றேன். ஆனால் நானும் கத்துக்குட்டிதான்.

பாரதியுடன் இணைந்து லினக்ஸ் பெருங்கடலில் நீச்சலிடுவோம்
 
ஆனால் எனக்கு ஒரு விடயம் மட்டும் முடியவில்லை. கீமென் என்ற மென் பொருளை மட்டும் பதிக்க முடியவில்லை.

அன்பு வியாசன்,
ஐபஸ்-ஐ பயன்படுத்தவில்லையா...?

கீழ்க்கண்ட திரியைப் படியுங்களேன். உங்களுக்கு உதவும்.
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=22784
 
நன்றி அன்பு நண்பர் பாரதி இப்போது தமிழை பாமுனி முறையில் தட்டமுடிகிறது. அதிலும் ஒரு சிறியகுறை இருக்கின்றது. தட்டச்சு விசைப்பலகை சுவிஸ்முறையில் பாவிப்பதற்கு வழி இருக்கின்றதா? நீங்கள் பல இடங்களில் தேடி உதவிகளை செய்கின்றீர்கள். எவ்வளவு சிரமங்களுக்கிடையில் உங்கள் நேரத்தை எங்களுக்காக செலவு செய்கின்றீர்கள். நன்றி என்பது சிறிய வார்த்தை . அதை சொல்லாவிடின் மனசுக்கு கவலையாக இருக்கும்
 
அன்பு வியாசன்,

ஆங்கிலத்திற்கு பொருத்தருள்க.

In operating system menu, go to Menu/Preferences//Keyboard/Layouts/ and click on Add.

நாடுகள் மற்றும் அவற்றின் விசைப்பலகைகள் தொகுப்பைக் காண்பீர்கள். அவற்றில் உங்களுக்கு விருப்பமான நாடு மற்றும் விசைப்பலகையை தேர்ந்தெடுங்கள்.

Country: சுவிட்சர்லாந்து
Variants: de அல்லது de-ch

தற்போது என்னிடம் லினக்ஸ் நிறுவப்பட்ட கணினி இல்லாததால் என்னால் சோதிக்க இயலவில்லை. நீங்கள் பார்த்து விட்டு சொல்லுங்கள்.

(ஒரு வேளை எழுத்துக்கள் சரியாக வரவில்லை எனில் கீழே தரப்பட்டிருக்கும் சுட்டிகளில் கடைசியாக இருக்கும் சுட்டியில் இருப்பவற்றை படித்துப்பாருங்கள். அது ஜப்பானிய மொழிக்கான வழிமுறை; இருப்பினும் உங்களுக்கு உதவும் என்றே நம்புகிறேன்.)

வேறு சில சுவாரசியமான தகவல்களும் கிடைத்தன. நேரம் கிடைக்கும் போது பொறுமையாக படித்துப்பாருங்கள்.

Code:
 [URL]http://www.dotkam.com/2007/06/25/custom-keyboard-layout-in-ubuntu-or-just-linux-2/[/URL]
 
[URL]http://larsmichelsen.com/open-source/german-umlauts-on-us-keyboard-in-x-ubuntu-10-04/[/URL]
 
[URL]http://forums.linuxmint.com/viewtopic.php?f=42&t=75792[/URL]
 
அன்புடன் செந்தில்

நண்பரே ,நான் இன்னும் லினக்ஸ் இல் நுழையவே இல்லை .. ஆனாலும் ஆர்வமாய் இருக்கிறேன் (சற்றே பயமாகவும் ).அடிப்படையில் நான் ஒரு electronics engineer ,PLC ,microcontroller program களை
செய்து கொண்டிருக்கிறேன் , லினக்ஸ் இல் நுழைய நீங்கள் உதவுகிறேர்களா?
 
பாரதி இருக்க பயமேன். பழகுங்கள் நண்பரே லினக்ஸ் பெருங்கடலை பாரதி என்ற தோணியிலேறி கடக்கமுடியும்.

பாரதி நீங்கள் தந்த இணைப்பின்படி நல்ல பலன் கிடைத்தது


:080402cool_prv::080402cool_prv:
 
நண்பரே ,நான் இன்னும் லினக்ஸ் இல் நுழையவே இல்லை .. ஆனாலும் ஆர்வமாய் இருக்கிறேன் (சற்றே பயமாகவும் ).அடிப்படையில் நான் ஒரு electronics engineer ,PLC ,microcontroller program களை
செய்து கொண்டிருக்கிறேன் , லினக்ஸ் இல் நுழைய நீங்கள் உதவுகிறீர்களா?
எளிதுதான் நண்பரே. லினக்ஸ் குறித்த தமிழ்ப்புத்தகம் மன்றத்தில் இருக்கிறது. பதிவிறக்கி படியுங்கள்.


பாரதி நீங்கள் தந்த இணைப்பின்படி நல்ல பலன் கிடைத்தது

:080402cool_prv::080402cool_prv:
ஆஹா... நல்ல சேதி!
வாழ்த்துகிறேன்.
 
Back
Top