மீனாகுமார்
New member
இதோ சிறிய மாற்றங்களுடன் புத்தக வடிவில்....
யாவர்க்கும் திருக்குறள்
http://www.tamilmantram.com/vb/downloads.php?do=file&id=170
யாவர்க்கும் திருக்குறள்
http://www.tamilmantram.com/vb/downloads.php?do=file&id=170
மிகவும் பயனுள்ள செயல்...மீனாகுமார்;276672 said:இதோ சிறிய மாற்றங்களுடன் புத்தக வடிவில்....
அக்னி;276903 said:இந்தச் சுட்டியை முதற்பதிவில் இணைத்துவிடுமாறு கேட்டுக் கொள்கின்றேன்...
கௌரவிப்பாக 2000 iCash.
அடுத்து என் மனதில் நிற்கும் சில குறள்களைக் காண்போம்.
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.
பொறாமை, ஆசை, சினம், தீமைதரும் கடுஞ்சொல் இந்த நான்கையும் நீக்கி இடைவிடாமல் நிற்பதே அறமாகும்.
அறத்தை ஏன் கடைப்பிடிக்க வேண்டும் ? அறத்தை கடைப்பிடிப்பதே சான்றோர்களின் செயலாகும்.
அறத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்தால் நம் வாழ்வும் நம்மைச் சுற்றியிருப்பவர் வாழ்வும் சிறப்பாக இருக்குமென்று வள்ளுவர் கூறுகிறார். ஆகவே தான் அறத்தைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.
அறம் என்பது நேரடியாக ஒரே பொருளைக்குறிப்பதாக இல்லை. அறம் என்பது பலவற்றைக் குறிக்கும் சொல்லாகும். அறன் என்பது பற்றி பல குறள்களில் குறிப்புகளைக் காணலாம்.