தேசிய மேம்பாட்டில் அணு சக்தியின் மகத்தான பங்கு-1

முகவுரை:

1996 ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்து 50 ஆண்டுகளை பூர்த்தி செய்வதை கொண்டாடும் வகையிலும், அணுசக்தியின் நற்பயன்களை முற்றிலும் தமிழில்

எடுத்துரைக்கும் வகையிலும், பாபா அணு ஆராய்ச்சி நிலையத்திலும், கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி நிலயைத்திலும் பணியாற்றும் தமிழ் விஞ்ஞானிகளையும்

மற்ற தமிழன்பர்களையும் ஒருங்கிணக்கும் நோக்கிலும் "இந்திய தேசிய மேம்பாட்டில் அணு சக்தியின் மகத்தான பங்கு" என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கு ஒன்றை

அர்ங்கேற்றுவதற்கு நான் அரும் பாடு பட்டேன். அணுசக்தி நகர் கலை மன்றம் என்ற அமைப்பின் பொதுக்குழுவில் இதற்கான விண்ணப்பத்தை பிரேரத்தேன்.

கலைமன்றத்தின் பொருளாதார நிலை சீர் குலைந்திருப்பதை நிமிர்த்த இந்த கருத்தரங்கு உதவும் என்று சுட்டி காட்டினேன். பல வாதங்களுக்கு பிறகு என்னை காரியதரிசியாக

கொண்டு ஒரு குழு அமைக்கப்பட்டது. அன்றிலிருந்து இரவு பகலாக உழைத்து கருத்தரங்கு வெற்றிகரமாக அரங்கேறியது. அணுசக்தி துறையின் தலைவர் டாக்டர் சிதம்பரம்

அவர்களின் தலமையில் 300க்கும் மேற்பட்ட தமிழன்பர்களும் விஞ்ஞானிகளும் பங்கேற்றனர். மும்பை தமிழ் சங்கங்களிருந்தும் நண்பர்கள் பங்கேற்றனர். மும்பையிலிருந்து

வெளியாகும் 'மராத்திய முரசு' என்ற தமிழ் தினசரியில் ஒரு பக்க கட்டுரை ஒன்று கருத்தரங்கப் பற்றி வெளியானது.

அந்த கருத்தரங்கில் அணுசக்தியை பற்றிய உரைகளை ஒரு புத்தக வடிவில் கொண்டு வருவது எனது நெடு நாளைய கனவாயிருந்தது. இரண்டு வாரங்களுக்கு முன் மும்பை

பாபா அணுசக்தி நிலையத்திற்கு சென்ற எனக்கு அந்த உரைகளின் கையெழுத்து பிரதிகள் கிடைத்தன. அவைகளை மன்றத்தில் பதிவு செய்யவுள்ளேன்.

இதற்கு உங்கள் ஆதரவை வேண்டுகிறேன்.
________________________________________________________
________________________________________________*_________________________
முதல் உரையாக "பாபாவின் பெருங் கொடை" என்ற கவிதையை பதிவு செய்கிறேன். கவிதயை வழங்கியவர் க.ரா. பாலசுப்ரமணியன், கலபாக்க*ம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சிகூடத்தை சேர்ந்த தேர்ந்த விஞ்ஞானி

பாபாவின் பெருங் கொடை


பாபா படைத்த பெர்ஞ்செல்வமென்போம் இப்
பாரில் பலர் வியக்க செயல்படுவோம்

அணுவை பிளந்து ஆற்றல் பெருவோம்
அதனை வளர்த்திட ஆய்வுக்கூடங்கள் பல அமைப்போம்
உணவைப் பெருக்கி உறுதொழில் வளர்த்திட*
ஊரெங்கும் மின்கூடம*மைப்போம் மிடி யொழிப்போம்

யுரேனியக்கனி குடைந்தெடுப்போம் பின்பு
யொரு பதம் செய்தே உலோகம் படைப்போம்
தோரியக் கனிதனை தென்கடல் மண்ணினின்று
வீரிய அமிலமிட்டு விண்டெடுப்போம் விலை கொள்வோம்

ஜீர்கோனிய்ச்ம் செய்வோம் சுத்த ஜெர்மேனியம் செய்வோம்
மார்கோனிய கலையினிலே மாறுதல் பல செய்வோம்
பகுத்துமின்னால் படைப்போம் புது நீரில் கன நீர்
விடுத்தனை வேறுமுறையும் காண்போம்

அணுச்சிதவு பற்றி ஆய்வு செய்தே
அதன் வரலாறிங்கு வரைந்து வைப்போம்
கதிரியக்கம் கணக்கிட கருவிகள் செய்தே
காத்திடுவோம் குவலய மதன் கொடுமையினின்றி

தனிமம்குணம் காண தனி விடுதிசமைப்போம்
தனித்தெடுக்க பலமுறைகள் வகுப்போம் கை
உறைப்பெட்டிகள் செய்வோம் உகந்த உடைகள் செய்வோம்
நிறைக்காண நல்கருவிகள் செய்வோம்

உலோகக் கலைகென்றே ஓர் கூடமைத்து
உண்மை நிலையறிய சோதனை சேர்ப்போம்
அணுவுலை அங்கங்கள் ஆற்றம்பெற*
ஆய்வுசெய்வோம் அன்றி ஓய்வு செய்யோம்

போற்றிடும் இயற்பியல் புதுமையான கணிதம்
ஏற்றிடும் வேதியியல் ஏனைய சாத்திரம்
சாற்றிடும் சகல இனங்கள்
பெற்றிடுமேற்ரம் எம்மிடம் என்றும்

ஆறடி யென்றிருந்தால் ஐந்தடி யென்றளப்பாரை
ஓரணு பிழையாது ஓர்தொழில் புரிவதற்கே
காரணமாயிருந்த கட்டாய தரக்கோட்பாடு
பூரணம்பெறும் பொன்றியெம்மால்

காமாக்கதிர் கொண்டு கான்சரொழிப்போம்
கழனியிலிட்டதை கறிகாய்வளர்ப்போம் உவர்
கடல் நீரினையே கலம் கொண்டு கன்னலாக்க*
காய்ச்சிகள் செய்வோம் கருவிகள் செய்வோம்

கதிரியக்க கொடுமையாய்ந்தே காப்புமுறை வகுத்தோம்
கதிரியக்க கடுமை குறைய கான்க்ரீட்திரை எடுத்தோம்
கழிவுப்பொருள்தமை கண்னாடியாக்கி கடலடியில்
ஊழிவரை ஊமை சிறைவைப்போம்

காற்றிலலப்போம் கடல் நீரில் அளப்போம்
ஊற்றிலும் தேடுவோம் உடல்கூற்றிலும் தேடுவோம்
வேற்றுப்பொருள்கள் உற்ற நிலை யளந்து
கூற்றுவன் மனம்கோண்ச் செய்வோம்.

தொடரும்...
 
அப்துல் கலாம் மறைவு இத்திரியை காண தூண்டியது.

மதுரை மைந்தனுக்குப் பாராட்டுக்கள்.
 
Back
Top