மன்றம் வந்து பல மாதங்கள் இவரைப் பற்றி பெரிதாக ஒன்றும் அறிந்திராத நாட்களில், அவ்வப்போது பதிக்கும் பதிவுகள் இவரின் தனித்தன்மையை உரக்க பறை சாற்றியது. அன்பு முகில்ஸ் என இளசுவால் பரிவோடு அழைக்கப்படும் இவர், உண்மையிலேயே ஒரு அன்புப் பெட்டகம். நல்ல உள்ளத்துக்கு சொந்தக்காரர். இன்னும் நெருக்கமாக வேண்டுமென்ற அடங்காத ஆவலை என்னுள் ஏற்படுத்தியவர். என்றும் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்.