mania
Reaction score
0

Profile posts Latest activity Postings About

  • நல்ல மனிதர்...

    இவரோடு ஒன்றிரண்டு முறை தொலைபேசியில் உரையாடி உள்ளேன்.

    ஐவரணி மூலம் எனக்கு அறிமுகமானவர். பிரதீப்பின் காலை அடிக்கடி வாருபவர்! நகைச்சுவை உணர்வு உள்ளவர்!

    மொத்தத்தில் சொல்லப்போனால்
    தலைபோல வருமா?
    நம்ம தலைபோல வருமா?
    வாழ்க்கையில் நாம் கோடி நபர்களே சந்திக்கிறோம், அனைவரும் நம் மனதில் இடம் பெறுவது இல்லை. பார்த்த சில நொடிகளிலே கவரக்கூடியவர். வார்த்தைக்கு வார்த்தை நகைச்சுவை. அவர் நகைச்சுவையாக பேசினாலும் அழகு, சோகமாக பேசினாலும் அழகு. ஒரே பிரச்சனை, என்னை விட பெரியவராக இருக்கிறார், அதனால் மரியாதை கருதி தூரம் நிற்கிறேன். அவர் மட்டும் முப்பது வயதுக்குள் இருந்தால், எதைப்பற்றியும் கவலைப்படாமல் தினமும் அவர் வீட்டிற்க்கு சென்று அவரின் மூக்கையே பார்த்துக் கொண்டு இருப்பேன். Really i admire him and love him very much, gem of a person. i love you thala
    ஒரு மனிதரால் எப்படி ஒவ்வொரு எழுத்திலும் நகைச்சுவை புகுத்தி எழுதமுடியும்?

    தல'யால் முடியும்.

    மணியா அவர்களுடன் பேசும்போது மட்டுமல்ல, எனது அலைபேசியில் அவரது

    எண்களைக் காணும்போதெல்லாம் எனது உதடு சிரிப்பெனும் பொதுமொழி பேசும். அவரை சந்தித்த சில நிமிடங்களிலிருந்து இறுதி நொடி வரை சிரித்து சிரித்து வயிறெல்லாம் புண்ணாகி,

    என் வாழ்வில் என்னை அப்படி யாரும் தொடர்ந்து சிரிக்க வைத்ததில்லை... எந்த ஒரு மன்ற நண்பர்கள் வந்தாலும் என்னை மறக்காமல் அழைத்து பேச வைப்பார்... அவர் அதிகம் உலவிய காலங்களில் நான் வரவில்லையே என்று இன்று நினைத்து வருத்தப்பட்டிருக்கிறேன்.

    எள்ளலும் துள்ளலும் மிகுந்தவர், பார்ப்பதற்கும் பழகுவதற்கும் இனிமையானவர், எளிமையானவர், மீண்டும் ஒருமுறை அவரைக் காண நேரிட்டால் நிச்சயம் அவரிடம் நஷ்ட ஈடு கேட்பேன்.... சிரித்து சிரித்து வயிறைப் புண்ணாக்கியதற்கு...
    எங்கள் தலை,
    என்றும் எங்களுக்கு தலை,
    தோற்றத்திலும் இளமை
    பேச்சிலும் இளமை,
    நகைச்சுவையிலும் இளமை,
    உங்கள் அனுபவம் எங்களுக்கு
    வழிகாட்டல்.

    மனோ.ஜி
    தலை... பதிவுகளில் துள்ளல்.. காமெடி வள்ளல்...
    தலைபோல வருமா?
    நம்ம தலைபோல வருமா?

    நான் சந்தித்த மன்றத்தின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர். அவரை சந்திப்பதற்கு முன் அவர்பால் இருந்த மரியாதை அவரை சந்தித்த பின்னர் பல மடங்காகியது!!!

    அந்த கல கல பேச்சு
    கன்னியமான அனுகுமுறை
    பாசமான விசாரிப்புக்கள்
    அப்பப்பா.... சொல்லிக்கொண்டே போகலாம்

    மீண்டும்

    தலைபோல வருமா?
    நம்ம தலைபோல வருமா?
    தல...
    நகைச்சுவை என்பது ஒரு வரம்... அந்த வரத்தை நிரம்பவே பெற்றவர் நம்ம தலை.... நிறைய கற்க்கலாம், கற்ற வேண்டும் இவரிடம் இருந்து...
    தலை என்றும் தலை தான்.! அவரின் குணத்திற்கும், உயர்ந்த நகைச்சுவை உணர்விற்கும் இல்லை விலை தான்..!! அன்பிலும், நட்பிலும் "மணியா"னவர்.!! அண்ணன் உடையான் அனைவருக்கும் அஞ்சான்..!!
    மன்றத்துல ரொம்ப நெருக்கமானவர் யாருன்னு கேட்டா...
    சில பேரை சொல்வேன்..

    ரொம்ப ரொம்ப நெருக்கம்னு திரும்பவும் கேட்டா
    தலையைத்தான் சொல்வேன்..

    ராஜாவின் ஒரு திரியில் கவிதா கேட்ட கேள்வி :

    இவ்வளவு வயது வித்தியாசம் இருந்தும் எப்படி இவ்வளவு நெருங்கிய
    நண்பர்களாக இருக்கீங்க..?

    நாங்க சந்திக்கும் போதும் சிந்திக்கும் போது இரண்டு பேருக்கும்
    ஒரே வயது ஆகி விடுகிறது.. அதாவது ஒரு வயது ஆகி விடுகிறது.

    தலை மன்றம் வந்தாவே கலகல..
    உதிர்த்த முத்துக்களோ பலபல..

    மன்றத்திலேயே அதிக நபர்களை நேரில்
    சந்தித்தவர் நம்ம தலைதான்.


    தல போல வருமா ? தல போல வருமா !!
    என் அன்பான தல. இவர் போல் இவர் மட்டுமே உண்டு. குதூகலம், குழந்தை மனம், ஈர்க்கும் அன்பு, எல்லாரையும் அரவணைக்கும் பண்பு.. பழைய பாடல்கள், வசனங்கள் மனதில் உறங்கும் ரசனைச் சுரங்கம். நகைச்சுவைக்கு ஒரு மைல்கல். என் அன்புக்குரிய, மதிப்புக்குரிய தலை - எங்கள் பெருமிதச் சின்னம்!
    பெயரைப் பார்த்தாலே சிரிப்பு தானா வரும். என்றும் இளமை என்பதை விட முதுமையில் குறும்பு.. முதுமை வயசில் இல்ல.. அறிவுல.. என்றுமே என் தல.
    அனைவரின் மதிப்பிற்கும், பாசத்திற்கும் உரியவர். அனைவராலும் தலை எனப்போற்றப்படுவர். மணியாவின் கலாய்ப்பு மன்றத்தில் இருந்தால்.. மன்றத்தில் ஒரு புதுப்பொலிவு இருக்கும்.
    அன்பால் என்றுமே மார்க்கண்டேயனாக வீற்றிருக்கும் பாசத்திற்குரிய மணியா அண்ணாவிற்கு வணக்கம்.
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top