அடுத்தவர் பிம்பங்களை அறிந்துகொள்ள முயலும் முன்னர் நாம் யோசிக்க வேண்டும் அப்படி என்னை யோசிக்க வைத்தவர் லொள்ளுவாத்தியார்...
சில விவாத பதிவுகள் அனைவரின் ஒப்புதல் பெற்று ஒரு பக்கமாக சென்று கொண்டிருக்கும்பொழுது வாத்தியார் அதற்கு எதிர்பக்கம் வாதாடுவார்... சிலசமயம் இரண்டு பக்கமும்.. நல்ல அனுபவசாலி.. வெளிப்படையான மனிதர். லொள்ளு அதிகம் இவருக்கு... கோவை குசும்பு ரொம்ப ஓவர்..
சில சமயங்கள் இவர் வாத்தியாரோ என்ற எண்ண வைப்பார். நல்ல கவிஞர்.. கற்பனை மிகுந்த சிரிப்பு கதாசிரியர், கலகல பதிவுகளுக்கு சொந்தக்காரர்... சில கலகப் பதிவுகளுக்கும்....
இத்தனை காலமாகியும் மன்றம் ஒருவரை மட்டுமே இன்னமும் சந்திக்கவில்லை (நேராக) கேட்கவில்லை (தொலைபேசி வாயிலாக) என்றால் அது வாத்தியார் மட்டுமே!! தன் பிம்பம் உடையக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பவர்...
தொடருங்க சார்.....