மோகன்... பல்துறை ஞானி.
இவர் உண்மையிலேயே புத்தகம் படிக்கிறாரா அல்லது இவருக்குத் தானாகவே அறிவு ஊறுகிறதா என்ற ஐயம் ஏற்பட வைக்கிறார்.
சிறந்த கவிஞர், ஒவ்வொரு கவிதைகளும் சமுதாயம் எனும் தோலை ஊசிபோல் குத்துகின்றன. தத்துவார்த்தங்கள் நிறைந்த கதைகளை எளிமையாக வழங்குபவர், மிகச்சிறந்த கதாசிரியர், தனக்குத் தெரிந்ததை அனைவருக்கும் தெரியப்படுத்தும் நல்லுள்ளம் கொண்டவர். மோகன் ஒரு அறிவுச்சுரங்கம்,
ஷீ-நிசி சொல்வதைப் போல எந்த தலைப்பு கொடுத்தாலும் பேசக்கூடிய தகுதி பெற்றவர்.. எனக்கு இணையத்தில் MySql Database குறித்த சந்தேகங்களைத் தெளிவாக விளக்கியவர். இன்று தொழில்நுட்பம் குறித்த எந்த ஒரு சந்தேகம் என்றாலும் மோகனிடம் கேட்கலாம்.