kulakkottan - 09-08-2012 05:05 PM View Conversation Report
"யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்"
திரைப்படப்-பாடல்களும்-தமிழ்-இலக்கியமும் என்ற திரியில் நீங்கள் இட்ட கவிதையில் உள்ள வரி இது !
தயவு செய்து இவ்வரிகளின் சொல் பிரிப்பு அர்த்தம் கூற முடியுமா?
என்னால் விளங்கி கொள்ள முடிய வில்லை !
உங்கள் கேள்வியை அந்த திரியிலேயே கேட்டிருக்கலாமே குளக்கோட்டன்.
யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.
யாயும்-என் தாயும்,
ஞாயும் – உன் தாயும்,
யார் ஆகியரோ – யாருக்கு யார் உறவினர்,
எந்தையும்- என் தந்தையும்,
நுந்தையும் – உன் தந்தையும்,
எம்முறை – எந்த முறையில்,
கேளிர்- உறவினர்,
யானும் நீயும் –நானும் நீயும்,
எவ்வழி – எந்த உறவின் வழியாக,
அறிதும்- அறிந்து கொண்டோம்?
செம்புலப் பெயல் நீர் போல-செம்மண் நிலத்தில் பெய்த மழை நீர் போல, அன்புடை நெஞ்சம் – அன்பான நெஞ்சங்கள்,
தாம் – தாமாக