எப்படி மதிப்பிட முடியும் இவரை?
ஒரு கவிஞராகவா?, நல்ல அனுபவசாலியாகவா, முதிர்ந்த எண்ணமுடைய இல்லத்துறவியாகவா? ரசனை மிகுந்த நகைச்சுவையாளராகவா? தொழில்துறைகளில் இண்டு இடுக்கிலும் அறிவை வளர்த்தவராகவா? எப்படி மதிப்பிட முடியும்?
ஒருசிலரால் மட்டுமே குழந்தையாகவும் பெரியவராகவும் மாறி மாறி இருக்கமுடியும்.. அது இவருக்கு இருக்கிறது.. இருப்பது சிங்கையில் என்றாலும் தமிழுக்கு இவரது முன்னோர்கள் ஆற்றிய தொண்டு அளப்பரியது. பண்பு, பணிவு, அமைதி, உதவி, முன்னேற்றம், நட்பு, மரியாதை என்று பல தட்டுக்களில் நின்று தன்னை உயர்த்திக் கொண்டவர்... இவையெல்லாவற்றையும் விட, அவரது எளிமை!!!!!
எப்படி இவர் உடனடி கவிஞராக மாறினார் என்பது எனக்கு இன்றும் விளங்காத புதிர்.. ஒரு சில கவிதைகளில் அவர் தெளித்திருக்கும் வாழ்வியல் அனுபவங்கள்... உலகம் எத்தனை நாட்கள் சுற்றினாலும் மாறாதவை.... ஆரென் அண்ணா!!!! க்ரேட் அண்ணா!!!