அறிஞர்..
எனது முதல் மன்ற நண்பர். அவரின் படபட பேச்சு, வசீகரிக்கும் சொல்லாற்றல், மன்றம் கட்டியாளும் ஆளுமை என பல விசயங்கள் என்னில் அவரைக் கவர்ந்துள்ளன. தலைவன் சிறப்பாக இருந்தால் தலைமையும் அதனைச் சுற்றியிருக்கும் கூட்டமும் சிறப்பாக இருக்கமுடியும். ஒரு மிகச்சிறந்த தலைவனாக அறிஞரை உணர்கிறேன். புதியவர்களை இழுத்து, பழையவர்களை அன்புடன் உபசரித்து, வெகுநாட்கள் கழித்து வந்தால் உறவினர் போல் நடத்தி, இந்த மன்றத்தின் அனைத்து நட்புகளுக்கும் காரணமாக ஒரு உறவின் பாலமாக விளங்குகிறார் அறிஞர்..
இருமுறை நேரில் கண்டு பேசிய நான் பாக்கியசாலி!! மறுமுறையும் காணநேரிட்டால் அது முதல் முறை கண்டது போலத்தான் இருக்கும்...