இதயம்.. மெகாஜாஃபர்
மிக வெளிப்படையான மனிதர். தட்டச்சு செய்ய இவருக்கு எப்படி நேரம் கிடைக்கிறது என்பதே வியக்கும் விசயம். மன்றத்தில் குறைந்த பதிவுகளில் அதிக எழுத்துக்கள் எழுதியவர்களில் இவர் ஒருவர்தான் என் கண்ணுக்குத் தெரிகிறார்..
நல்ல கவிஞர், கவிதாரசிகர், மிகச்சிறந்த நகைச்சுவை எழுத்தாளர், விவாத அரங்குகளில் மிக முதன்மையானவர், எழுத்துக்களையும் கருத்துக்களையும் அங்குலம் அங்குலமாக விமர்சித்து எழுதும் பண்பாளர்,
இதயம் போன்றவர்கள் பேசினால் அப்பேச்சுக்களில் ஒரு அர்த்தம் இருப்பதாக உணரலாம். எந்த தட்டிலும் இறங்கி ஏறி பேசக்கூடிய இவரது திறமை கண்டு மிகவும் வியந்துள்ளேன்.
சமீப காலமாக பதிவுகள் ஏதும் இல்லாவிடினும், முந்தைய பதிவுகளின் தாக்கம் இன்னமும் இருப்பதென்னவோ உண்மைதான்... விரைவில் பணிப்பளு தீர்ந்து மன்றம் வருவாராக..