கவிச்சமர் (மதுரை)வீரன். கருத்துக்களை தருவதில் அசகாயசூரன். அறிவியல் குழைத்து ஆக்கங்கள் தருவதில் சுஜாதாவின் வழித்தோன்றல். இவரைப் போன்றவர்கள் இருக்கும் மன்றத்தில் நானும் இருக்கின்றேன் என்பதில் பெருமை கொள்கிறேன்.
மதுரை மண் தந்த நல்ல விஞ்ஞானி. விஞ்ஞானத்தையும் தமிழையும் எப்படியாவது ஒன்றாக கலந்து கவிதை... கதை கொடுக்கவேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவர். மன்றத்தில் என்றும் இணைந்து கலக்க வாழ்த்துக்கள்.