பகுத்தறிவை பக்குவமாய் கவிதைகளில் சொல்லுவதில் வித்தகர். பணிவும், பண்பும், அன்பும் நிறைந்தவர். அழகான கவிதைகளின் படைப்பாளி. என் இதயத்தில் என்றும் நெருக்கமாய் இருக்கும் ஜீவன்..!
சிந்தனைகளை சொற்களில் செதுக்குவதிலும் குறீயிடுகளை உள்ளடக்கி குறையின்றி கவிதையை பிரசவிப்பதிலும் குறிப்பிடத்தக்கவர்..!! சமூக அக்கறைக்கொண்ட சீர்திருத்தவாதி... யதார்த்தத்தை ஏற்ற இறக்கமின்றி கவிதைகளில் எள்ளிநகையாடுவது இவருக்கு கைவந்த கலை..!!
அற்புதமான படைப்பிலக்கியங்களை உருவாக்கக்கூடிய ஒப்பற்ற ஆற்றல் கொண்ட அன்பு இளைஞர். உயர் ஞானமாகிய பிற உயிர் பேணல் தத்துவத்தினை மிக அனாயசமாக எழுத்துக்களில் வடிக்கும் ஒப்பற்ற திறமைக்குச் சொந்தக் காரர். பொழுது போக்குத் தகவல்களை மட்டும் தாங்கியிருக்கும் கவிதைகளைத் தராது எதார்த்தமான விஷயங்களை உயர் தமிழ் நடையில் நம்மைச் சுற்றியுள்ள சமூக அவலங்களை நிஜமான அக்கறையோடு வார்த்தைகளில் கொண்டு வரும் திறமைபடைத்த இளைஞர். இயல்பாகப் பழகும் சுபாவம் கொண்டவராக இருப்பவர் என்பது அனைவரிடத்தும் பண்புடன் கொள்ளும் தொடர்பைக் கொண்டு அறிய முடிந்தது. தாய் மண்ணை நேசிக்கும் உயர் குணம் கொண்ட ஹஸன் என் அன்புக்குரிய மனங்கவர்ந்த நல்லிளைஞர். வாழ்க பல்லாண்டு