Profile posts Latest activity Postings About

  • விசாலமான தன் அனுபவ அறிவை அன்பு கலந்த வரிகளில் அனைவருக்கும் அளிக்கும் சிந்தனை செம்மல். ஊக்கப்படுத்துவதில் முதல்வர்.
    அனைவரின் மீதும் அன்பு, பொதுவுடமை, பகுத்தறிவு, சமூக நலன் போன்ற நற்குணங்களின் ஒட்டுமொத்த உருவம். மனதில் தோன்றியதை வெளிப்படுத்தும் தூய உள்ளம். நல்லவர்களை மற்றும் நல்லவற்றை ஊக்குவிக்கும் பண்பு ஆகியவை நான் இந்த அன்பு அண்ணனிடம் இருந்து கற்க நினைக்கும் குணங்கள்..!!
    சமூக அக்கறையுடன் மனிதாபிமானத்தை போற்றும் அன்பு அண்ணல்..!! ஆழ்ந்த மொழியறிவு, சிந்தனையோட்டம், கருத்து பறிமாற்றம் என எதிர்கால சந்ததிக்கு வழிகாட்டியாய் விளங்கும் கலங்கரை விளக்கம்..!! வாழ்த்தும் அளவு வளரவில்லை நான்... அதனால் வணக்குகிறேன் ஐயாவை...!!
    சான்றோரென்று இளசண்ணாவும், உச்சி மலைத்தேன் என்று அன்பு நண்பன் அமரனும் சொன்னப்பிறகு ஐயாவைப் பற்றி வேறென்ன புகழ.. மன்றத்து பேராசன்களில் ஐயாவும் ஒருவர்.. அவரின் மாணவர்களில் நானும் ஒருவன் என்றுச் சொல்வதில் பெருமையடைகிறேன்.. உங்களின் வழிகாட்டுதல்கள் எங்களுக்கு நிச்சயம் தேவை ஐயா..
    இவருக்கு சூட்ட எந்த மாலையும் என்னிடம் இல்லை. உச்சி மலைத்தேன் துளித்துளியாக சொட்ட ஆவென்று அண்ணாந்து வாய்வாங்கும் நிலையில் நான். சின்னவர் பெரியவர் என்ற பாகுபாடின்றி பழகும் இனியவர். இளையோருக்குச் சரியான வழிகாட்டி.
    நன்றி திரு அறிஞர், திரு இளசு. ஒரு நாளும் மன்றம் வருவதை தவிர்ப்பதில்லை. அனைவரது திரிகளையும் தவறாது படிக்கிறேன். பங்கெடுப்பு சற்று குறைவானதற்கு புதிய செய்திகளை அதிகம் தரும் நம் மன்ற உறவுகளின் பங்களிப்பை கவனித்து வருவதுதான். தொடர்ந்து வேகம் இல்லாத விவேகமான பங்களிப்பை நிச்சயம் தர விரும்புகிறேன்.
    நான் மிக மிக மதித்துப் போற்றும் மன்றச் சான்றோர். செய்வன மட்டுமல்ல - சொல்வனவும் திருந்தச் சொல்லும் சிந்தனைச் செல்வர். இவர் மன்றத்தின் பேறு..
    அருமையான நண்பர், குடும்பத்தலைவர். மத சம்பந்தப்பட்ட கருத்து, கவிதைகளில் கலக்கினார். ஆரம்பத்தில் இருந்த வேகத்தை மீண்டும் காண விரும்புகிறேன்.
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top