Profile posts Latest activity Postings About

  • நான் நேரில் சந்தித்த மன்ற சொந்தங்களுல் ஒருவர்.....

    அவரது படைப்புக்களை மிஞ்சும் வகையில் மிக இனிமையாஅனவர், அன்பானவர்.

    அவரது வெற்றிப்பயணம் தொடர இந்த அண்ணாவின் வாழ்த்துக்கள்
    இலக்கிய வாசம் இனிய சகோதரர்.! சொல்லாலும், செயலாலும் மற்றவர்களை மகிழ்விக்கும் வித்தை தெரிந்த மந்திரவாதி. கொள்கையில் கொண்ட உறுதி மாறா கோமான்.! அன்பில் அள்ளி அள்ளி வழங்கும் சீமான்.! இவரின் நட்பில் இனிமை அதிகம்..!!
    செல்வா, உள்ளத்தில் உள்ளதெல்லாம் வெளிப்படும் நேரத்தில் மிகப் பெரிய எழுத்தாளராகும் சாத்தியம் இருக்கிறது. அன்பும் அறிவும் கண்ணியமும் உள்ளவர். கொஞ்சம் அனுமத்தனம் உண்டு. இரண்டு வகையிலும் தான்.
    என் ஆருயிர் நண்பர்களில் ஒருவன்.. இவன் வேறு நான் வேறல்ல என்னுள் ஒருமையானவன்..
    என் மூன்றாண்டுகால மன்றப் பயணத்தில் என்னொடு முதன்முதலாக அலைபேசியில் தொடர்புகொண்ட மன்ற உறவு...! முதல் பேச்சிலேயே நட்பை விதைத்து கண்ணியத்தோடு கரிசனையும் காட்டியவன்...! செல்வா.. செல்லாதே...வா!
    அருமையான படைப்பாளி.. குறுகிய காலத்தில் பலரை கவர்ந்தவர். மன்றத்தில் செல்வாவிற்கு தனி இடம் இருக்கிறது. எதிர்கால வேலைகள் பல காத்திருக்கிறது.
    மிகக்குறுகிய காலத்திலேயே மன்றத்தில் ஈடுபாடு கொண்டு வழங்கி வரும் வழிகாட்டுதல்கள் மிகவும் அருமையானவை. தன்னுள்ளே மிகச்சிறந்த கலைஞரை மறைத்து வைத்துக்கொண்டு திரியும் பெரும் செல்வம் இவர். ஏன் முடியாது, ஏன் கூடாது என்ற கேள்விகளை எழுப்பி விடை காண முயலும் விடா முயற்சிக்காரர். இவர் உறவு எனக்கு கிடைத்த அரிய வரவு!

    என்றும் எங்களுடன் இணைந்திருங்கள் செல்வா.
    பழகிய முதல் நாளிலியே
    பக்கத்து வீட்டு தோழனாய் முடிவானவன்
    பழரசப் பதிவுகளால் வடிவானவன்.
    தமிழ் மன்றில் மின்னிதழை மலர வைத்த ஒளிக் கீற்று...!!

    அன்பையும் பண்பையும் ஒரு சேரப் பதிவுகளிலும் பேச்சுக்களிலும் காட்டும் என் அன்பு நண்பன்..!!
    கலாச்சார மிச்சங்களை நினைவலைகளால் கட்டி இழுத்து பத்திரப்படுத்தும் நல்ல படைப்பாளி...

    நல்லவற்றை கூர்ந்து அலசி ரசிக்கும் நல்ல சுவைஞன்..

    என் அன்புக்குரிய செல்லத்தம்பி - செல்வா தம்பி!
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top