என் உடன்பிறவா தங்கை. பாசப் பொன்சித்திரம். இயல்பாய் இந்த இளம் வயதில் இல்லாமலிருக்கும் எல்லாமும் இருப்பவர். சமூக அக்கறை, உயிர்களிடத்திலான பரிவு, மென்மையான உள்ளம் அனைத்தும் ஒருங்கே பெற்ற தங்க மங்கை. நினைத்தவுடன் அற்புத கவி புனையும் ஆற்றல் கொண்ட கவிமகள் இந்த பூமகள்.
மன்றத்தின் வேகப்புயல்..! மன்றத்தில் அதிக மனங்களை
தன் புதுமை படைப்புகளால் கொள்ளை கொண்டவர்..!
பின்னூட்டம்கொடுப்பதிலும் மன்றத்தில்
அனைத்து பகுதிகளிலும் புகுந்து விளையாடுவதிலும்
குறும்பு செய்வதிலும்...! நகைச்சுவையிலும் கெட்டிக்காரர்
என்றும் எனது நல்ல நண்பி..! தங்கை... அக்கா..
(எதுவோ..?)
மன்றத்தில் எனக்கு கிடைத்த இனிய தங்கை.! பெயருக்கேற்றார் போல் குணத்தால் மென்மை, பணிவு, பாசம்..!! ஆழ்ந்து பேசினால் அறிவை கொண்டு ஆளை சாய்த்துவிடும் புத்திசாலி. பகுத்தறிவு பேசும் பாரதி கண்ட புதுமை பெண்.!!
மன்றில் நான் வியக்கும் மற்றுமொரு படைப்பாளி. கதையாயினும் கவிதையாயினும் நகைச்சுவையாயினும் தனக்கென தனிப்பாணி வகுத்து வாழ்பவர். படங்களை வைத்துக் கொண்டு இவர் உருவாக்கும் நகைச்சுவைகளுக்கு இரசிகன் நான்.
மன்றம் வந்த நாளி்லிருந்து என் உள்ளம் கொள்ளை கொண்ட என் அன்பு மகள்.
பூ உச்சரிக்கும் போதே மென்மை தொற்றிக் கொள்கிறதே. பூவால் இந்த நாறும் மணம் கொண்டது. எழுத்தின், கவிதையின் தீவிரம் பாரதியின் புதுமைப் பெண் இவரைக் கொண்டுதான் புனையப்பட்டதோ என்று சிந்திக்க வைக்கும். அதீத இங்கிதமும், நாகரீகமும் இவ் அன்புக் குழந்தையின் அசையாச் சொத்து. வாழ்க பல்லாண்டு.