இனிய திசைகளின் பார்வையில் நெருப்பு நிலா
மலரின் மென்மையை
நாகரிகத்தோடும்
நளினத்தோடும்
நவில்வதும்
தீயின் வன்மையைக்
குமுறலோடும்
கொந்தளிப்போடும்
பொங்குவதும்
கேப்டன் யாசீன் அவர்களுக்கு
இயல்பாய்
இயைந்து வந்திருக்கிறது.
இசைந்து வரும்
உவமைகள்
ஆற்றொழுக்காகப் பவனி வரும்
எதுகை மோனைகள்
சுகம் தரும்
தென்றலாக உலவி வரும்
மொழிநடை ...
இவையே
கேப்டன் யாசீன் அவர்களின்
நெருப்பு நிலா.
இலக்கிய ஆர்வலர்கள்
சுவைக்க வேண்டிய
இனிய நூல்
நெருப்பு நிலா.
படியுங்கள்
பரப்புங்கள்.
நெருப்பு நிலா பெற
கேப்டன் யாசீன்
9500699024