சிவா.ஜி

Profile posts Latest activity Postings About

  • 25ம் தேதி அன்று பேசிக்கொன்டிருக்கும்பொழுது இணைப்பு இழந்ததாலும் என்னுடய நடை பேசியில் ISD வசதி இல்லாததாலும் பேச முடியவில்லை. மன்னிக்கவும்.
    ஜெயந்த்.
    25ம் தேதி அன்று பேசிக்கொன்டிருக்கும்பொழுது இணைப்பு இழந்ததாலும் என்னுடய நடை பேசியில் இச்ட் வசதி இல்லாததாலும் பேச முடியவில்லை. மன்னிக்கவும்.
    ஜெயந்த்.
    சார், படித்ததில் பிடித்தது பகுதியில் ஒரு படம் இட்டுள்ளேன் தவறாக இருந்தால் மாற்றிவிடவும்.-அன்புடன்ரவி
    ரொம்ப நன்றி.
    எனக்கு இலக்கிய/இலக்கண தமிழ் தெரியாது.
    எழுதப்பிடிக்கிறது. அதனால் எதார்த்தம் தான் வருகிறது.
    சிவா அண்ணா...!

    எவ்வளவு திறமையை உள்ளுக்குள் வைத்துக்கொண்டு எல்லா விதத்திலும் கலக்கும் சகலகலா வல்லவர்...

    அனைவரின் படைப்புகளையும் உண்மையாய் சிலாகித்துப் பேசும் நல்ல குணம் உங்களுக்கு....

    என்றும் நீங்கள் நலமுடன் வாழ இந்தத் தங்கையின் வாழ்த்துக்கள்....!!
    எதையும் மறைக்கா இதயம் கொண்ட சிவா..!
    மன்றத்தில் என்னை வியப்பில் ஆழ்த்திய சிலரில் இவரும் ஒருவர்.
    எப்படி முன்னேறுவது என்பதை இவரின் சுயசரிதையில் கற்றுக்கொள்ளலாம்.
    கடந்த வந்த பாதையின் கடினம் புரிந்து, அப்படிப்பட்ட நிலை மற்றோருக்கு வரக்கூடாதென்றெண்ணி, திட்டமிட்டு உழைத்துக்கொண்டிருக்கும் மனதுக்கு சொந்தக்காரர்.

    நீங்கள் எண்ணியவை கைக்கூடி, எந்நாளும் ஏற்றம் பெற்று புகழுடன் நீடூழி வாழ்க என்று வாழ்த்துவதைத் தவிர வேறொன்றும் தோன்றவில்லை.
    என்னுடைய அன்பு அண்ணன்,

    நான் பார்த்தது வரை மன்றத்தை உரிமையுடன் நேசிக்கும் ஒரே உறவு. என்னை வடித்த, மிக முக்கியமானவர். இவரின் முகம் பார்த்தது இல்லை ஆனால் அகம் (மனது) நன்றாக தெரியும். என்னை அதட்டி இருக்கிறார், பாராட்டி இருக்கிறார், மறைமுகமாக தாக்கி இருக்கிறார், கொஞ்சி இருக்கிறார், கோபப்பட்டு இருக்கிறார், ஆறுதல் கூறி இருக்கிறார், சங்கடபடுத்தி இருக்கிறார், மகிழ்வித்து இருக்கிறார்,


    இதை விட ஒரு தந்தை மகனுக்கு என்ன செய்து விட முடியும்.
    சிவா.ஜி.

    ஒரு சிலர் மட்டுமே சொன்னது சொன்னபடி இருப்பார்கள். சிவா.ஜி அண்ணாவும் அப்படித்தான். அடுத்தவர் வாழ்வை எண்ணி உண்மையிலேயே நோகும் மனதுடையவர். இளவயதினர் போலவோ, முதியவர்கள் போலவோ இவரது எண்ணங்கள் மாறி மாறி ஆட்டம் காண்பிக்கும்.

    சிறந்த கவிஞர், கதாசிரியர், திகில் கதைகளை திடுக்கிடும் திருப்பங்களுடன் அதிரவைக்கும் முடிவுகளுடன் தருவதில் கெட்டிக்காரர், படைப்புகளுக்காக அவற்றின் தரத்திற்காக சிரத்தையுடன் உழைப்பவர், வசீகரமான எழுத்தாளர், மிகச்சிறந்த கற்பனாவாதி, உலகம் சுற்றும் வாலிபன்.

    இவரை நேரில் சந்திக்கும்போது இன்னொரு அறிஞரை சந்தித்த சந்தோசம் மேலிட்டது. எந்த வயதினருடனும் ஒத்துப் போய் நட்பும் நண்பர், சமூக அக்கறையுள்ள சிந்தனையாளர், இப்படி பல்வேறு திறமைகள் உள்ளடக்கி வைத்திருந்தாலும் எளிமை மாறாதவர். தன்னடக்கம் மிகுந்தவர்...

    சிவா.ஜி... இன்னமும் எந்த ஒரு கட்டுக்குள்ளும் அடக்கமுடியாத படைப்பாளி.
    அண்ணனின் பல திறமைகளை விட அவரிடம் நிரம்பி வழியும் மனிதாபிமானம்தான் எனக்கு மிகவும் பிடித்தது.
    வாழ்க்கையின் அனுபவங்களையும், சந்திக்கும் சுவாரசியமான/சுவாரசியமற்ற மனிதர்களை படிப்பதிலும் சிவா.ஜி அண்ணாவிற்கு நிகர் அவரேதான். எழுத்தாளுமை, கற்பனைதிறம், நகைச்சுவை எள்ளல் என பரந்துபட்ட பல திறன்களை உள்வைத்தும் தளும்பாத நிறைகுடம். மன்றத்தில் சமகாலத்தில் இருப்பது எனக்குப் பெருமிதம். அக நக கிடைத்து நட்பான அண்ணன் இவர்.
    இந்தப் பல்துறை வல்லுநரின் இரசிகன் நான்..!
    கவிதை கட்டுரை கதை என்று எத்தளத்திலும் கலக்கும் சகலகலா வித்தகர்.. நேசமிகு பாசமிகு அண்ணன்.. எதையும் படைக்கும் வல்லமையுள்ளவர்..
    நல்ல நண்பர்.
    யதார்த்த கதாசிரியர். கதையெழுத அவர் தேர்ந்தெடுக்கும் களங்களும் அவருடைய உழைப்பும் வியக்க வைக்கின்றன.
    மற்றவர்களை ஊக்கப்படுத்துபவர்.
    மன்றத்தில் இவரைப் போன்ற நண்பர்களுடன் உறவாட வாய்ப்பு கிடைத்தது உண்மையிலேயே எங்கள் அதிர்ஷ்டம் தான்.
    மன்றத்தில் இளைஞர்களுக்கு மிகபிடித்த ஒரு அண்ணன்..!
    ரசனையான தன் எழுத்துகள் மூலம், கதை கவிதைகள் தந்து மிக அதிக மணங்களை வசியபடுத்திய மொழித் திறம் கொண்டவர், பின்னூட்டம் இடுவதில் வித்தகர், என்னை அருகில் இருந்து தலையில் குட்டி
    செல்லம் கொண்டாடுவது போல் நினைத்துக்கொள்ளும் என் பாசமிகு அண்ணன்,
    மற்றவர்களை ஊக்கபடுத்துவதிலாகட்டும் உதவுவதிலாகட்டும் இவருக்கு நிகர் இவரேதான்..!! இளைய தலைமுறை சிந்தனைகளுடன் எளிதில் ஒத்துப்போகும் முதிர்ந்த படைப்பாளி..!! சிறுநிகழ்வையும் நினைவில் வைத்து இருக்கும் ஞாபக பெட்டகம்...!! மொத்தத்தில் எங்க அண்ணன் ஒரு "குளோபல் பர்சன்"..!! முக்கியமா சூரியஒளியில சிவாண்ணா வெளியில வந்தா சூரியனே கூச்சப்படுறதைதான் பொறுக்க முடில்ல...!!ஹி...ஹி...!!
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top