Profile posts Latest activity Postings About

  • நகைச்சுவை உணர்வோடு நல்ல குணம் கொண்ட நல்மனிதன்...
    பென்ஸ், பெஞ்சமின்

    செவியினில் சொல் நுழையும் பொழுதினில் குறுநகை பூக்கும் என் முகம்.

    மனவியல் படித்த மணாளர், உள்மனதில் உலவி ஒவ்வொருவர் மொழி அறிந்தவர். பென்ஸ் எழுதியது கொஞ்சம்தான். அந்த கொஞ்சத்தில் இருந்து விரிகிறது மனதாளுமை ஒரு புள்ளியாக இருந்து பிரபஞ்சம் விரிந்ததைப் போன்றே. பென்ஸ் மன்றத்திற்குக் கிடைத்த ஒரு மனமருத்துவர். பிளந்து துண்டாகியிருக்கும் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளியெனும் மாத்திரையால் மன்றநலம் காப்பவர்.

    பென்ஸ் அருமையான கவிஞர். மிகச்சிறந்தவை அவரது கவிதைகள்.

    பென்ஸை எப்படி ரசிப்பேன்?

    சொட்டச் சொட்ட நனைந்து அதை தாயிடம் மறைக்கும் குழந்தை போல, வம்பில் மாட்டிவிட, மறைந்தோடும் பொழுதும்,அங்க அங்கங்களாய்ப் பிரித்து உள்ளுணர்ந்து பொருளெழுதி பதிவிட்டு முடித்தபின்னும் தேங்கி நிற்கும் எழுத்துப் பிழைகளைக் கண்ட பொழுதும், முடிவற்று நீண்டு விவாதிக்கும் எழுத்துக்களுக்கு உடனடி ரண சிகிச்சை அளித்து ஒழுகும் சீழ்கட்டிகளை வெட்டியெடுக்கும் (நன்றி: இளசு) மருத்துவராய் நிமிர்ந்து நிற்கும் போதும், அனிருத் எனும் பெயர் கண்டால், வாலியைப் பார்த்து பயமுறும் இராவணன் போன்று மயங்கியோடும் அந்த துள்ளல் கண்டும், இளசுவுக்குப் பின் இவரோ இவருக்குப் பின் இளசுவோ இணைந்து ஒத்த உணர்வாய் ஒட்டிக் கொள்ளும்போதும்....

    ///பென்ஸ்.... நீங்கள் எழுதிய நாலாயிரம் பதிவுகளும் ரசிக்கத்தக்கன... உங்கள் வார்த்தைகளுக்கு என்றுமே நான் ரசிகன்.... ///

    கண்ணீர்காலங்களாய் கரைந்துருகி எழுதிய பொழுதும் சரி, காதல் கவிதைகளாய் கோவில் குறியீடுகளை அடக்கி வடித்தபொழுதும் சரி, ஒரு சமூக கவிதை என்றதும் ஓடிவந்து படித்து முத்தமிடும்பொழுதும் சரி... பென்ஸுக்கு ஈடு பென்ஸ் மட்டுமே!~

    நேரில் காணத் துடிதுடித்துக் கொண்டிருக்கும் எத்தனையோ பேருள் நான் முதன்மையானவன்..

    மன்றத்தில் இருவர் எழுதினால் அது ஒரு எழுத்தேயானாலும் படிப்பேன்..... அதில் ஒருவர் இளசு, மன்றவர் பென்ஸ்...
    நாகர்கோவில் தந்த நல்முத்து.! பிரச்சினைகளை மனோரீதியாக அலசுவதில் மன்னர்.! இவரின் இத்தகைய அணுகுமுறையால் என்றும் வாழ்க்கையில் வின்னர்..!! மன்றத்தவரை அணுகும் பண்பு, எடுக்கும் நிலைப்பாடுகள் சிறப்பானவை. இவர் மன்றத்தின் பெருமைகளில் ஒருவர்.!!
    மன்றம் தந்த அண்ணன்களில் ஒருவன்.

    உள அகழ்வாளன் மட்டுமல்ல - என்
    உள அகல் விளக்கும் இவனே..
    மாறன் என் மனசாட்சி - கலைஞர்!
    இனிய பென்ஸ் எனது மனசாட்சி - இளசு!

    அலைவரிசைகளின் இனிய இணைப்பிசை.. அருமை..அபூர்வம்..ஆனந்தம்!
    நல்ல தோழன்.. மன்றத்தின் பொறுப்பில் பென்ஸ் பணி இன்றியமையாதது... சில நேரத்தில் கட்ட பஞ்சாயத்து என்றால் நினைவில் வருவார்.
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top