அக்னி

Profile posts Latest activity Postings About

  • பாராட்டுகளுக்கு நன்றி நிச்சயம் என் குறைகளை களைய முயற்சி செய்கிறேன் நண்பரே ( இதுதான் நான் வர்ணனை ரீதியில் எழுதிய முதல் எழுத்துக்கோர்வை என்பதையும் சொல்கிறேன் ) எனவே உங்கள் போன்ற வழிகாட்டிகளின் மூலம் இன்னும் சிறப்பாக முயற்சி செய்கிறேன் கொஞ்சம் தொடர்பு தொட்டும் தொடாமலும்...
    கவனித்திருந்தால் ... என்று குறிப்பிட்டுள்ளீர்கள் இதன் அர்த்தப்பாட்டை சரியாக புரிந்துக்கொள்ளமுடியவில்லையே கொஞ்சம் தயை கூர்ந்து புரியவைக்க முடியுமா?
    அக்னி..

    பெயரைப் போன்றே ரெளத்திரம் தெறிக்கும் கவிதைகளுக்குச் சொந்தக்காரர்.. புலம்பெயர்ந்து பல இன்னல்களை அனுபவத்தவர். நல் மனதுக்காரர், உதவுவதில் முதன்மையானவர்.

    இளசு அண்ணாவின் பின்னூட்டத்திற்குப் பிறகு நான் அதிகம் விரும்பும், எதிர்பார்க்கும் பின்னூட்டம் இவருடையது. பின்னூட்டங்களில் இளசுவுக்கு வாரிசு என்றுகூட சொல்லலாம்.

    கேட்காமல் உதவி செய்வதிலும், மன்றத்தின் அதீத ஈடுபாட்டிலும் இவர் எப்படிப்பட்டவர் என்பதைத் தெரிந்துகொள்ளலாம். நண்பர்களுக்கு நம்மால் ஏதும் சிற்றுதவியேனும் செய்யவேண்டும் என்ற எண்ணமுடையவர்..

    அக்னி எனது உற்ற நண்பர். என்னருகில் அவர் இருந்திருந்தால் மிகச்சிறந்த நட்பினைப் பெற்று என்னை உயர்த்திவிட்டிருப்பார் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை...

    மெல்ல மெல்ல அக்னியை மன்றமும் மன்றத்தை அக்னியும் தாங்கி வருகிறார்கள்...
    இவருடனான என் நட்பு, எப்போது நினைத்தாலுமே என் மனம் உற்சாகமாகிவிடும். சுறுசுறுப்புக்கு மறுபெயர் இந்த அக்னி. உதவுவதில் கொஞ்சமும் தயக்கம் காட்டாத பெரு மனசுக்காரர். திறனாய்வதில் இவருக்கு நிகர் இவரே. மன்ற சொத்துகளில் தவிர்க்கமுடியாத முத்து.
    மன்றம் வந்த புதிதில் கண்டு நான் மலைத்து போன படைப்பாளிகளில் அக்னியும் ஒருவர்.. வார்த்தை நயத்தில் எழுத்தில் நடையில் சொற்களை பிளந்து பொருள் புதிது சொல்லும் விதத்தில் அழகியல் வழியும் அக்னி துளிகளில் என்னை மயங்க வைத்தவர்..
    அந்த மையல் போதையில் மீளாமல் நாங்கள் திளைத்திருக்க மேலும் மேலும் கவிதை மது எங்கள் மனக்குவளையில் நிரப்புங்கள் அக்னி..
    மன்றத்திலிருப்பவர்களிலேயே... கரத்திற்கும் வாய்க்கும் பூட்டுப் போடாமல் நான் உரையாடும் ஒரே நண்பன். சின்னச் சின்ன சண்டைகளிலிருந்து பெரிய பெரிய விசயங்கள் பேசுவது வரை எங்களிருவருக்கும் தடைகளே கிடையாது. ரெண்டு பேரும் இராக்கோழிகள். அப்புறம் சொல்லவா வேண்டும். அரட்டைக்கும் அறுவைக்கும். உன்னோடு பேசுவது இனிய அனுபவம் தான் எப்போதும் எனக்கு. என்னுள்ளத்தில் எப்போதும் உயர்ந்த இடமுண்டு உனக்கு.
    உதட்டளவில் இவன் பழக்கம் இராது - இவன்
    இதயத்தில், பழகும் விதத்தில் மாசு இராது..

    என்குறுஞ்செய்தி : இன்ன திரியை இங்கே நகர்த்த வேண்டும். மறந்து வெளியே வந்துட்டேன்.. செய்திடு.
    அவன் அழைப்பு : நானும் வெளியே.. போனதும் செய்திடுவேன்..

    செய்தும் விடுவான்..
    இதை விட வேறு என்ன தேவை
    இவன் மன்ற ஈடுபாட்டினைச் சொல்ல..
    அக்னி.. என் இதயத்தடாகத்தின் நிரந்தர செந்தாமரை..

    தழலும் புனலுமாய் மாறி மாறி அல்லவைக்கும் நல்லவைக்கும் இயங்கும்
    நன்னெஞ்சுக்காரன்.. என் மனதுக்கு நெருங்கிய அன்புக்காரன்..

    அக்னியின் அண்ணன் என்பதில் தனிக்கர்வம் எனக்கு..
    வாழ்வில் நான் படித்துக்கொண்டிருக்கும் மிகச்சிறந்த வாழ்வியல் சம்பவங்களைத் தந்து கொண்டிருப்பவர்; வாழ்வில் இடையறாது உழைத்து முன்னேறிக்கொண்டிருக்கும் அன்பாளர்.
    மன்றத்தில் இனிய சகோதரர்களில் ஒருவர். மனம், குணம் முகிழ்ந்தவர். அன்பிலும் பண்பிலும் வெல்பவர்.
    கவிதையில் அனைவர் மனங்களையும் மயக்குபவர். மன்றத்தில் இவரின் எழுத்துகளின் விசிறிகள் அதிகம்.
    தொடருங்கள் அக்னி அண்ணா. :)
    நல்ல நண்பர்... மன்றத்தின் உயர்வுக்கு அக்னியின் பங்கு முக்கியமானது. பொறுப்பில் இருந்து பலரை கவந்தார். அக்னி சிறகுகள் மன்றம் முழுவதும் பறக்கட்டும்.
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top