Profile posts Latest activity Postings About

  • :)அன்புடையீர் ebook பகுதியில் இரண்டு கொடுத்துள்ளேன் approve செய்து உதவுங்கள்
    வணக்கம்.
    சத்திய சாயியின் பொன்மொழிகள் சிலவற்றை, சனாதன சாரதி புத்தகத்திலிருந்து தொகுத்து வழங்கலாம் என்று, ' சாரதி வகுத்த நல்வழி ' என்ற புதுத் திரி ஆரம்பித்திருக்கிறேன்.

    'பகவான் சத்திய சாயியின் உயிர் பிரிந்தது' திரியில் நான் பதித்துள்ள பாபாவின் சிந்தனைகளையும், முடிந்தால், இதனுடன் இணைத்துவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
    நன்றி
    வணக்கம்,

    படித்ததைப் பகிர்கிறேன் என்ற திரியில் நான் கொடுத்துள்ள சிறுவர்களுக்கான் பாடல்களை, நேயர் விருப்பத்திற்கேற்ப, தயவு செய்து, ' சிறுவர் பாடல்கள் ' என்ற பகுதிக்கு மாற்றிவிடவும்,

    நன்றி
    எனக்கு யாரும் எதிரிகள் என்று சொல்ல மாட்டேன் ஏனென்றால் நான் என்னுடய கல்வி நேரத்தில் படிக்காமல் காடோடியா திரிந்த காலத்தில் உங்களை போல நண்பர்கள் தான் எனக்கு அறிவுரை கூறி படிக்க வில்லை என்றால் எதாவது வேலய படி என்று என்னுடய நண்பர்கள் சொன்னார்கள் நான் எனது அக்கா ,அத்தான் ,இருவரும் மும்பையில் இருந்தார்கள் அவர்களிடம் சென்று தான் நன் இப்பொது செய்யும் இந்த பிரிண்டிங் டெக்னாலெஜி படித்து வொர்க் பண்றேன் என்னுடய நண்பர்கள் அப்பொது எனக்கு இந்த அறிவுறைகள் சொல்லாமல் என்னிடம் வாங்கி சாப்பிட்டுட்டு போய் இருந்திருந்தால் இப்போது நான் உங்கள் முன்னிளையில் இப்படி ஒரு நண்பனா வந்திருக்க மாட்டேன் இன்று நான் துபாய்ல வொர்க் பன்ற அளவுக்கு நான் உயர்ந்துவுள்ளேன்.......நான் எனது வீட்டில் செல்லபிள்ளையா வளர்ந்தனால் இந்த மன்றதில் வந்தவுடனே நான் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற ஆவலுடன் பதிப்புக்கள் அனைத்தும் சொந்தமா இல்லாமல் காப்பி அடித்து போட்டேன் .இப்பொது தான் அது தவறு என்றும் புரிந்து கொண்டேன் ...............நன்றி......
    அமரன், நான் முதன் முதலில் PM அனுப்பிய தமிழ் மன்ற நண்பர். அமரன் என்று நினைத்தால், ரொம்ப சாந்தமாய், அனைவருடனும் பேசுவாரே அவர் தானே இவர்னு தோணும். இவரிடம் பேசும்போது கொங்கு வாடை வரும், அவர் எனக்காக அப்படி பேசினாரா என்று தெரியாது. But really nice guy... கண்டிப்பாய் நம்பலாம்.
    உங்கள்
    நட்பு சோலையில்
    எனக்கு இடம்
    அளித்த...
    உங்களுக்கு...
    நன்றிகள்....
    அமரன்

    மன்றத்தின் நடுநிலை நோக்காளா்.... பிழைகளை எடுத்துக்கூறும் நல்லதொரு நண்பன்.
    நான் கண்டு வியந்த படைப்பாளி மற்றும் மன்றத்தின் உழைப்பாளி
    பணிமத்தியிலும் மன்ற நலன் விரும்பும் ஒரு மனிதா்.
    என்னிடம் இவரைப்பற்றி வார்த்தைகளால் சொல்வதற்கொண்றுமில்லை என்றநி்லை.


    முயன்றால் முடியாததொன்றுமில்லை இவரிடம் கற்கலாம்
    அமரன்..

    நரன், நக்கீரன், பின் அமரன்.

    ஜப்பான்காரர்கள் அதிவேக ரயில் உருவாக்கி பயணத்தைக் குறுக்கியது போல, இந்த ஈழத்தமிழர் அதிவேகமாக சிந்தனைகளில் புதுமையை நாட்டி, குறுகிய காலத்தில் பெரும் கவிஞராக விளங்கியவர். சில சமயங்கள் இவரது சிலவார்த்தைகளைக் கண்டு வியந்து போவேன். அதேசமயம் இவரது மன்ற உழைப்பு கண்டும் வியந்துள்ளேன்.

    ஒவ்வொரு திரிகள் ஆயிரம் பதிவுகளைக் கண்டு வெற்றிநடை போடும்பொழுது அதற்குப் பின்புலமாக அமரன் இருப்பார் எனலாம். ஒவ்வொரு மின் இதழ் வெற்றிகரமாக வெளிவரும்போது அதற்கு மிகமுக்கிய காரணமாக அமரன் இருப்பார்.

    அமரன் = மன்றத்தூண்
    நடுநிலையான விமர்சகர், இது ஒன்றே போதும் அவரைப் பற்றி தெரிந்துக் கொள்ள
    அன்பின் அமரனைப்பற்றி நான் என்ன சொல்ல?
    நம்மவர்கள் அனைத்தையும் சொல்லிவிட்டார்கள்.
    இருந்தும் என்சார்பில் ஒரே சொல்லில்..........

    அன்பானவர்!!!
    மன்றத்தில் முதல் முதலாய் உரையாடிய அன்பு நன்பர். இத்தனை சிறிய வயதில் மிகப்பெரிய பக்குவமடைந்தவர். வார்த்தை சித்தர். சரியான ஒருவரிடம் மிகச் சரியான பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார்களென திருப்தி படவைக்கும் நல்ல பொறுப்பாளர். வித்தியாசக் கதைக்களனில் பிரகாசிப்பவர். என்றும் இணைந்திருக்கவேண்டுமென்பதே என் அவா.
    தமிழ்த் தாயின் மடியில் தவழ்ந்தவர்..! மிக பக்குவப்பட்ட மனிதர்..,
    மன்றதிர்க்கு வரும் புதியவர்களை ஊக்குவிக்கும் தலையாய பணியை இன் முகத்துடனே செய்யும் இனியவர்.., புதியவர்களின் பதிவுகளுக்கு
    பின்னூட்டம் இடுவதிலிருந்து.. பிழைகளை சுட்டி காட்டி.. அவர்களின் தமிழை
    வெளிக்கொனரும் அற்புதர்..! மன்றத்தின் அனைத்து நிலைகளிலும் இருக்கும்
    திறனாளர்..! என்னை பலமுறை அருகில் இருந்து ஆரவணைத்தது போல்..
    தந்த ஊக்குவிப்புகள் ஏராளம்...! இவரின் அழகு பின்னூட்டம் காணவேண்டி
    பல நேரம் பதிவுகள் இட்டதெல்லாம் உண்மை...!
    என் அன்பு அண்ணனும் கூட..!
    உயர்ந்த சிந்தனை, உண்மையை மட்டும் பேசும் பண்பு மிகவும் பிடித்தவை. இவரின் படைப்புகளை புரிந்து கொள்ளும் அறிவு வேண்டும் என்று எண்ண வைப்பவர். என்னை அன்பில் பின்னி எடுப்பவர். தன் எழுத்தால் எல்லோருக்கும் தண்ணி காட்டுபவர்..!!!
    குறிப்புணர்தல் - இந்த நற்குணத்தை உணர்ந்த தம்பி அமரன். தெள்ளிய சிந்தனை. நல்ல வாக்கு வன்மை கொண்டவர்.
    நான் வியந்து பார்க்கும் படைப்பாளி..

    திறமைசாலி..

    நான் காணத்துடிக்கும் நண்பன்..
    நான் சந்திக்க ஏங்கிக்கொண்டிருக்கும் ஒரு நபர்.....நல்ல பொறுப்பாளர்......அனைவரையும் அவர் எழுத்தால் எளிதாக கவருபவர்....
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top