இங்கே கிளிக் செய்யவும்,இதில் சொடுகவும்,என்பதில் கிளிக் செய்தால் அது இணையத்துடன் இணைந்து விடுகிறது, அது எப்படி? ஏதொ ஒரு திரியில் பார்த்தேன்,மன்ற கடலில்முத்து எங்கே இருக்கிறது.அல்லது தாங்களே!! சொல்லிவிடுங்கள்
am wanathi.studied Bsc, Bed.interested all god creatures.exspecially ocean,moon,birds.so my poetry are based like that.am nt writen any books.jus said at the time.so some mistakes are there.so regret that.anyway thnx a lott... to read.
பெயரைப் போல அன்பு மிகுந்தவர்.. உள்ளதை உள்ளதாக, அல்லத அல்லதாக சொல்லத் தெரிந்த திறந்த மனதுக்காரர். இந்த வெளிப்படையான மனதுக்காரருக்கும் எனக்கும் ஏனோ ஒரு மெல்லிய துளை இருப்பது வேடிக்கைதான்.
ஸ்கைப்பில் சிலமுறை பேசியிருக்கிறேன். அவருக்கு ஞாபகம் இருக்கிறதோ என்னவோ எனக்குத் தெரியாது. ஒருமுறை அவரது கண்ணாடி அணிந்த புகைப்படம் ஒன்றைக் காண நேர்கையில் ஓவியா சொல்லுவதைப் போல ஜமிந்தார் என்ற வார்த்தை எவ்வளவு பொருத்தம் என்பதை உணர்ந்தேன்.
அன்புரசிகன் - உண்மையிலேயே அவரது அன்பிற்கு நாங்கள் ரசிகர்கள்..
பெயரே சொல்லுமே என் தம்பி ஒரு அன்புச் சுரங்கமென்று. பாச இளவல், தன் வீரியம் மிகுந்த எழுத்துக்களால், கதை என்றே சொல்லமுடியாத, காலத்துக்கும் அழியாத எழுத்துக்களை பிரசவிக்கும் எழுத்தாளர்.
உருவத்தில் உள்ளூர் நாட்டாமை.! குணத்தால் குழந்தை..!! தன் பெயரைக் கொண்டே அவரின் அன்பிற்கு அனைவரையும் இரசிகனாக்கும் இனிய சதியின் காரணகர்த்தா..! நான் சந்திக்க நினைப்பவர்களில் ஒருவர். எத்தனை அடிவாங்கினாலும் நல்லவன் போல் நடிப்பவரல்ல, உண்மையிலேயே நல்லவர்..!!!
பழகுவதற்க்கு மிகவும் இனிமையானவர்..!! பெயர் பொருத்தம் சிலருக்குதான் சரியாய் அமையும்... அது இவருக்கு மிக பொருத்தமாகவே அமைந்திருக்கிறது..!! நான் கண்ட தமிழ்பற்றாளர்களில் ஒருவர்..!!
அன்புக்கு ரசிகன் இந்த அன்புரசிகன்.. மிக ஜாலியாக உரையாடக்கூடியவர். தப்புன்னா தப்பு, சரின்னா சரி. மனதில் தோன்றுவதை மறைக்காமல் வெளிப்படுத்தக்கூடியவர். இது மிகப்பெரிய பலம்...
எத்தனை பிரச்சினைகள் இருந்தாலும் அத்தனையும் தூசியாக கருதி, சிறப்பாக செயல்படக்கூடிய அருமையான நண்பர். கொஞ்சும் யாழ்ப்பாணத்தமிழில் இவர் கதைப்பதைக் கேட்டாலே ஆனந்தம்தான். அன்பு உண்மையிலும் மிகவும் அன்பானவரே! இவருடைய கதைகளுக்கு ரசிகன் நான்.