ஷீ-நிசி

Profile posts Latest activity Postings About

  • தோழரே வணக்கம்

    எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் வரும்‘
    மதுரை மரிக்கொழுந்து வாசம் என்ர பாடலின் வரிகள் தேவை.எவரேனும் உதவினால் நல்லது
    சந்திரன்
    ஷீ-நிசியின் கவிதைகளுக்கு முதல் ரசிகன்..... ஆதவன்..

    மன்றம் வருவதற்கு முன்பே சிறு மோதலில் உண்டான நட்பு.. மன்றம் வந்தபின்னர் இறுக்கமாகி இன்னமும் தொடர்கிறது.

    ஷீ-நிசியின் கவிதைத் தரத்தை எத்தனை தூரம் சொல்லலாம்?

    ஒவ்வொரு கவிதைக்கும் காலமெடுத்து செதுக்கி, ஒன்றை விட மற்றொன்று சிறந்தது என்று சொல்லும்படியாக வரித்து, தனக்குள்ளே கவிஞனை விட்டு உலவி, வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து..... ஒரு கவிதையின் தரத்திற்கு உழைப்பு முக்கியம் என்பதை நமக்கு உணர்த்துபவர்.

    காட்சியழகுக் கவிஞர் என்று இளசு அண்ணாவால் பாராட்டப்பெற்ற இவரது கவிதைகள், நம் கண்முன்னே நிறுத்துகிறது காட்சிகளை... கவிதையின் எளிமையும் புதைந்திருக்கும் எண்ணங்களும் படிக்கும் நம்மை ஒரு உயர்தளத்திற்கு உயர்த்துகின்றன.

    காதல் கவிதைகள் எத்தனையோ படித்ததுண்டு.. இவரது தனிபாணி.. மெல்ல வருடிவிடும் காதலியின் கைவிரல் போல ஒவ்வொரு வார்த்தைகளையும் நமக்குள் அடுக்கி முத்தமிடுகிறார். கண்கள் அகலாமல் கவிதை பார்த்துக் கொண்டிருக்கும் காதலர்களாக வாசகர்கள்...

    இவரது கவிதைகள் புத்தகமாக வெளியிட்டாலொழிய இவரைப்பற்றி மற்றவர்கள் அறிவது கடினம்.
    நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே எனக்கூறத் தயங்காதவர்..!
    நான் நேசிக்கிற ரசிக்கிற எழுத்துக்களின் சொந்தக்காரர்.. மன்றக் கவிஞரிகளில் என்னை மிகவும் கவர்ந்தவர்..
    தனக்குள்ளே பல திறமைகளை புதைத்து வைத்திருக்கும் கவிஞர்..

    பல நேரங்களில் நம்மை வருடும் கவிதைகள்
    சில நேரங்களில் சூறாவளியாய் வீசும்..

    சீமான் கையால் விருது வாங்கிய இந்த
    கவிஞர் மென்மேலும் புகழ் பெற இந்த நண்பனின் வாழ்த்துகள்.

    ஆள் பார்க்க அமைதியான டைப்.. ஏமாந்துடாதீங்க..
    பேசினாத்தான் தெரியும்..எவ்வளவு கலகலப்பானவர் என்று...!!
    அழகியல் என்றால் அடியேனுக்கு நினைவுக்கு வரும் முதல் நபர் கவிஞர் ஷீ-நிசிதான்..!! பூ கட்டுவது போல் சொற்களையும் கருத்துக்களையும் கவிதைகளில் கலந்து கட்டுவதில் இவருக்கு நிகர் இவரேதான்..!! ஒரே வருத்தம் இப்போதெல்லாம் அடிக்கடி இக்கவிஞர் கவிதை எழுதுவதில்லை என்பது மட்டும்தான்...!!
    அழகு, தூய்மை, நேர்த்தி, முழுமை,இனிமை - இவை ஷீ-நீசி என்றால் என் மனதில் வரும் படிமங்கள். இவரை அறிந்ததை பெரிய நன்னிகழ்வாய் எண்ணும் இவரின் ரசிகன் நான்.
    மென்மையானவர். பண்பானவர். காட்சிகளை சொல்லோவியமாய் வரைவதில் வல்லவர். நல்ல நண்பர்.
    மன்றத்து கவிஞர்...
    கவித்துறையில் முன்னேறிக்கொண்டிருக்கும் இளைஞர்...
    நல்ல நண்பர்..
    இன்னும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துக்கள்
    ஷீ-நிசி,
    மன்ற கவிஞர்களில் முதல் வரிசையில் முத்தானவர்.

    இவரின் படைப்புகள் சொல்லும் இவரின் வல்லமை.

    சிறந்த மனித நேயமும் பண்பும் கொண்ட நல்ல மனிதர்.

    இவரின் சமீபத்திய சாதனை கண்டு அகம் மகிழ்பவர்களில் நானும் ஒருத்தி.

    மேன்மேலும் உயர வாழ்த்துகள் ஷீ. :)
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top