• நகைச்சுவையில் அரசர்
    ரவுசுலே ........ராஜா
    எனக்கு இணையத்தில் கிடைத்த வாழ்நாளில் மறக்கமுடியாத சொத்து ராஜா அப்பா. என்னை அன்போடு இளவரசி என்று அழைக்கும் அன்பானவர்...என்றும் உங்களுக்கு மகளாய் இருப்பதில் பெருமையடைகின்றேன். உங்களை நேரில் காணும் அந்த நாளுக்காய் காத்திருக்கின்றேன்..கிடைத்த பாக்கியத்தை தவறவிட்டதில் இன்னமும் வருந்திக்கொண்டும் இருக்கின்றேன்.என் விடயத்தில் நல்லதே மட்டும் எண்ணும் என் அன்பு உள்ளம் அப்பா நூறாண்டு காலம் வாழ்ந்து எம்மை மகிழ்விக்க இறையிடம் வேண்டுகின்றேன்.
    மன்றத்தில் மிகச்சிறந்த கவிதை எழுதச் செய்தவர்கள் பலருண்டு, சிறந்த கதைகள் எழுதவைத்த ஆசான்கள், பதில் பதிவுகள், விமர்சனங்கள், என அத்தனை அம்சங்களையும் கற்றுக் கொடுத்தவர்கள் எத்தனையோ பேருண்டு..

    ஆனால்

    மன்ற நண்பர்களின் மனதைப் படிக்க வழி செய்த ஒரே மனிதர்,

    சுடர் ஓட்டங்கள், ஆ பத்து, ஜமாபந்தி, என்று உள்ளங்களைப் படிக்கும் திரிகளை எழுப்பி, தன்னிடம் இத்தனை இருக்கிறதா என்று அனைவரும் அவரவரை வியக்க வைத்தவர்..

    கலக்கல் பக்கங்கள், ரவுசு பக்கங்கள், கிறுக்கு / நறுக்கு கேள்விபதில்கள் என்று மறுபக்கம் சிரிப்புகளை அள்ளித் தெளித்து வலி தாங்கும் நண்பர்களுக்குத் துயர் தீர்க்கும் மருந்தாக விளங்கியவர்..

    ஒருமுறை பேசியிருக்கிறேன்.. நேரில் கண்டுவிட ஆசையும் படுகிறேன்.

    தெள்ளத்தெளிவான மனமும், குழந்தை போன்ற சிரிப்பும் சிந்தனையும் மிகுந்த உள்ளமும் கொண்ட ராஜா அண்ணா என்றுமே என் பார்வையில் நம்பர் ஒன் தான்..
    உள்ளதை உள்ளதென்றும், இல்லாததை இல்லாததென்றும் சொல்லுங்கள் என்ற பைபிள் வாசகத்திற்கு ஏற்ப வாழும் சில மனிதர்களில் நான் கண்டவர்களில் இவரும் ஒருவர். நகைச்சுவை திறமை அதிகம் கொண்டவர். எனக்கு மிகவும் பிடித்தவர்.
    வியந்து பார்க்கும் உயர்ந்த மனிதர். இவரால் கோபப்படவே முடியாதோ என நினைக்க வைக்கும் அன்பான ஆதுரமானவர். நகைச்சுவையை தன் இரத்தத்திலே பெற்றவர். இவரிடம் படிக்க எத்தனையோ உள்ளது. என்றும் இப்படியே எங்களுடன் இருக்க வேண்டுமென வேண்டிக்கொள்கிறேன்.
    இருக்கும் சூழல் மறந்து நான் சிரிக்க நீங்கள்தான் காரணம்.

    உங்கள் வீடு எவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்கும்? என நான் பல நாட்களில் எண்ணுவதுண்டு.

    நீண்ட ஆயுளையும், நல்ல தேகாரோக்கியத்தினையும் இறைவன் உங்களுக்கு தரவேண்டும் என பிரார்த்திக்கின்றேன்.
    எத்தனையோ படைப்பாளிகளை பார்த்துள்ளேன்.
    இவரைப் போல ஒருவரை எங்கும் பார்த்திலேன்.
    சிந்தனை வீச்சு... நகைச்சுவைப் பேச்சு.. அன்பே மூச்சு..
    காயப்பட்டாலும் காயப்படுத்தியவனை காயப்படுத்தாத குணம்..
    இவர் அண்ணாவாக கிடைத்ததில் எனக்குப் பெருமை.
    என் அன்புக்கும் மதிப்புக்குமுரிய நல்லவர். நகைச்சுவையில் அரசர். மன்ற ஆர்வத்தில் முன்னவர். போற்றத்தகும் நற்குணங்களுக்கு உரியவர்...

    மிக முக்கியமான மன்றத்தூண்களில் ஒருவர்..
    ராஜா என்றாலே ரவுசு என்ற நியாபகம் தான் மனதில் வருகிறது.. பலரை சிரிக்க வைக்கும் நல்ல அண்ணன்.
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top